Meine Blog-Liste

Samstag, 16. Februar 2019

2. சூரியனார்கோவில்

Worldkovil.com  · 

2. சூரியனார்கோவில்

முனைவர் .இரா.கார்த்திகேயன் சூரியனார்கோவில்
609804நாகை மாவட்டம் .
தமிழ் நாடு
பதிவு -உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
16.02.2019
-------------------------------------------------------------------------
சூரியனார்கோவில்
நவக்கிரங்கள் ஒன்பதுக்கும் தலைவனாய் அருள் பாலித்து வரும் சூரியனுக்கு அமையப்பெற்ற திருத்தலம் சூரியனார் கோவில் ஆகும்.நவக்கிரங்களில் சந்திரன்,அங்காரகன்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,இராகு,கோது,ஆகியவற்றுக்கு தனித்தனியான கோயில்கள் காணப்படுகின்றன.ஆனால் ,இத்திருத்தலம் மட்டுமே எல்லா கிரங்களுக்கும் அதிபதியாக விளங்கும் சிவசூரியபெருமான் மிகுந்த பெயருடன் விளங்குகிறது
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரி வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.திருமங்கலக்குடிக்கு வடகிழக்கே அரை கிமீ தொலைவிலும்,ஆடுதுறைக்கு வடக்கில் 2கி.மீ தொலைவிலும்,சுக்கிரன் தலம்உள்ள கஞ்சனூர்க்கு மேற்கே3கி.மீதொலைவிலுமாக இருக்கிறது.
இராஜகோபுரம்
ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.இராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது.உயரம் 50அடி,ஐந்து கலசங்களைக்கொண்டுள்ளது.
இக்கோபுரத்தில் புராணச்செய்திகளைக்காட்டும் சுதை (சுண்ணாம்பு)சிற்பங்கள் அழகாக க்காட்சி தருகின்றன. இராஜகோபுரத்தைக்கடந்து போனால் ஆலயத்தின் உள்ளே கொடிமரம்,பலிபீடம்,சூரியபெருமான் வாகனம்( குதிரை)உள்ளன.வலப்புறம் திரும்பிச்சென்றால் கோள்வினை தீர்த்த விநாயகர் இருக்கிறார்.
திருமணக்காட்சி
கர்ப்பகிரத்தில் சிவசூரியபெருமான்,திருமணக்கோலத்தில் சாயாதேவி,உஷாதேவி ஆகியோருடன் நின்ற கோலத்தில் காட்சித்தருகிறார்.எதிரே குருபகவான் எழுந்தருளியுள்ளார்.கர்ப்பகிரகத்தை ஒட்டினாற்போல தெற்கு வாசல்படி வழியாக வந்தால் சனி,புதன்,செவ்வாய் ,சந்திரன்,கேது,சுக்கிரன்,ராகு ஆகியகிரங்களுக்கு சிறு,சிறு கோவில்கள் அமைந்திருக்கிறது.தேஜஸ்சண்டேசசுவரு
கர்ப்பகிரகத்தில் சிவசூரியபெருமான் ,திருமணக்கோலத்தில் சாயாதேவி,உஷாதேவி ஆகியோருடன் நின்றகோலத்தில் காட்சித்தருகிறார்.எதிரே குருபகவான் எழுந்தருளியுள்ளார்.கர்ப்பகிரகத்தை ஒட்டினாற்போல தெற்கு வாசல்படி வழியாக வந்தால் சனி,புதன்,செவ்வாய்,சந்திரன்,கேது,சுக்கிரன்,ராகு,ஆகிய கிரகங்களுக்கு சிறு,சிறு கோவில்கள் அமைந்திருக்கிறது. தேஜஸ்சண்டேசுவரருக்கு வடக்கு பிரகாரத்தில்கோவில் உள்ளது.அர்த்தமண்டபம் வழியாகச்சென்றால் விசுவநாதர்,விசாலட்சியை வழிபடலாம்.

இத்தலத்தில் மட்டும் நவக்கிரகங்கள் ஆயுதம் ,வாகனம் இல்லாமல் காட்சியளித்து,பக்தர்களின் துன்பங்களை நீக்கி நல்லருள் புரிந்து வருகின்றனர்.என்பது ஐதீகம்.
இக்கோயில் பழமையும் பெருமை வாயந்தது.தேவாரப்பாடல்கள் பாடப்பட்ட தலம் .இது திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்சொந்தமானது.
முன்பு ,நவநாயகர்களுக்கு தனித்தனி செங்கற்கோயில்கள் இருந்தன. சோழமன்னனான முதலாம்குலோத்துங்கன் ,இவற்றை கருங்கல்லாக மாற்றி அமைத்தான் என்று கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.மற்றொரு கல்வெட்டு தரும் செய்தி சோழருக்குப்பின்னர் விஜயநகர மன்னர்கள்இங்குள்ள சுற்றுக்கோயில்கள் ஸ்தாபனமண்டபம் போன்றவற்றை க்கட்டினர்என்பதாகும்.திருவாவடுதுறைஆதீனத்தின் ஆதரவால் இக்கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ,திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
இத்தலம் திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரால் பதிகம் படப்பெற்றது.
இத்தல இறைவனான சிவசூரியபெருமானை வழிபட மிகவும் ஏற்றநாள் ஞாயிற்றுக்கிழமைதான். இக்கோவிலில் நான்கு கால பூசை.காலை ஏழரை மணிக்கும் ,மதியம் பன்னிரண்டரை மணிக்கும் மாலை 6மணிக்கும் ,இரவு எட்டரை மணிக்கும் பூசை நடைபெறும்.பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவது நல்லது.
திருவிழா
ஆனி கடைசிச்செவ்வாயும்,ஆனி,கார்த்திகை மாதங்களில் முதல் ஞாயிறும் விழாகக்கொண்டாடப்படுகிறது.புராட்டாசி மாதம் ஒன்பது நாள் நவராத்திரி விழாவும் ,ஐப்பாசி மாதம் அன்னாபிசேக திருவிழாவும்,கார்த்திகை சோமாவர விழாவும் உண்டு.தைமாதம் அட்டமி தீர்த்தவரி பத்து நாள் நடக்கும். இதன் சிறப்பு திருக்கல்யாண உற்சவம்.
மாசி மாதம் மகாசிவராத்திரியும் நவக்கிரகங்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் ,மற்றும் குருப்பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி முதலியவையும் இங்கு விசேஷமாகும்
திருத்தல அமைவிடம்
இத்தலம் கும்பகோணம் மயிலாடுதுறை ,ஆடுதுறை ,அணைக்கரை ,திருப்பனந்தாளிலிருந்து பேரூந்து வசதி உள்ளது. பேரூந்தில் வருவேர் திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி ,வடக்கிழக்கே அரை மைல் நடந்து போனால் சூரியனார் கோவிலை அடையலாம்
நன்றி.. அடுத்து திருவேள்விக்குடி ஆலயம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்