Meine Blog-Liste

Mittwoch, 13. Februar 2019

காஞ்சிபுரம் அருகே உருவாக்கப்பட்டுள்ள 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தி சிலையும்.



சிவாயநம
காஞ்சிபுரம் அருகே உருவாக்கப்பட்டுள்ள 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தி சிலையும்.
சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையையும், 32 அடி உயர நந்தியையும் சென்னையிலிருந்து 68 கிமீ தூரத்தில் (காஞ்சியிலிருந்து 9 கிமீ) உள்ள "வேடல்" என்ற கிராமத்தில் உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ளார்.
இந்த சிவன் பீடத்தின் அடியில் தஞ்சையில் இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது போல் அஷ்டதிக்க பாலகர்களின் உருவங்கள் உள்ளன.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள அஷ்டதிக்க பாலகர்கள் சிலைகளைப் புதுப்பிக்க
முடியவில்லை. அது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் சிவன் பீடத்தில் இந்த சிலைகளை உருவாக்கியுள்ளோம் என்றார் ஸ்தபதி சுப்பையா.
இதற்கு அருகாமையில் காஞ்சி மஹா பெரியவரின் உருவப்பட கண்காட்சியும் பக்தர்கள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. [காலை 9 ம்ணிக்கு பிறகுதான் இது திறக்கப்படுகிறது]
காஞ்சி மஹாவாமிகளின் புகைப்படங்கள் (சுமார் 20000) அழகாக வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு இடத்தில் பாகவதம், மஹாபாரதம், இராமாயண காட்சிகள் எல்லாம் பொம்மைகளாக செய்து வைக்கப்பட்டுள்ளன . மின்சாரத்தை துவக்கினால். ஒவ்வொரு காட்சியில் இருந்த பொம்மையும் அந்தந்த லீலைக்கு தகுந்தாற்போல் இயங்கும் . கண்ணன் பிறப்பு, காத்யாயனி கம்சனை மிரட்டுவது, வெண்ணை திருடுவது, பல அசுர வதங்கள், என ஒன்று கூட விடாமல் அனைத்தும் உள்ளன.இப்படியே ராமாயணமும், பாரதமும் ---விஸ்வாமித்திரருடன் ராம, லக்குவர்கள், அனுமன் தசக்ரீவனை அடிப்பது, பாரதத்தில் அர்ஜீனன் வெல்வது, பாகவத அம்ருதமதன காட்சி எல்லாம் மிக அருமை. கோடை விடுமுறையில் எங்கெல்லாமோ குழந்தைகளை அழைத்து செல்கிறோம். இங்கு அழைத்து சென்றால் குழந்தைகளும் மிக சந்தோஷப்படுவார்கள். மிக்க பயனும் உண்டு. பலரும் பயன் பெற வேண்டி, மிக அழகாக, காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்கள் இதை நிர்மாணித்திருக்கிறார்கள். சென்று பயன் பெறலாமே
அன்பே சிவம்
நன்றி -
Thilagam Amma an ஆன்மீக களஞ்சியம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்