தமிழ் நாடு திருத்தலங்கள்
3. திருவேள்விக்குடி
முனைவர்.இரா.கார்த்திகேயன்
அலைப்பேசி0091 6381742484
பதிவு .பி.எஸ்.இராஜகருணா
17.02.2019
திருவேள்விக்குடி
திருவேள்விக்குடி பரிமளசுகந்தி உடனாய மணவாளேஸ்வரர் ஆலயம்
இவ்வூரின் பெயர்க்காரணம்
சிவபெருமானது திருமணவேள்வி நடந்தத்திருத்தலம் என்பதால் (திரு) வேள்விக்குடி என்றுபெயர் பெற்றது.ஈஸ்வரிக்குக்கங்கனதாரனம் செய்தபடியால் ,கெளதுகா பந்தனந்சேஷ்த்திரம் என்ற பெயரும் உண்டு.தற்கால வழக்குப்பெயர்,திருவேள்விக்குடி என வழங்குகிறது.
இத்தலம் அமைவிடம்
நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலத்திற்கு வடகிழக்கே,3கிலோ மீட்டர் தூரத்தில், அஞ்சலாறிலிருந்து கிழக்கே1/2கிலோமீட்டர் தூரத்தில் ,காவிரியின் வடகரையில்,23ஆவது தலமாக அமைந்துள்ளது.
இறைவன்,இறைவி பெயர்கள்
1. கெளதுகேஸ்வரர்,கெளதுகேஸ்வரி
2. மணவாளேஸ்வரர்,பரமள சுகந்த நாயகி
இத்தலம் பற்றியநூல்,பழமை,பெருமை
இத்தலம் பற்றி அறிய நூல் ஏதும் இல்லை(குத்தாலம்)திருத்துருத்திப்புராணத்தில் இத்தலம் பற்றி 17 பாடல்கள் உள்ளன. அவற்றின் தலைப்பு 35ஆவது திருவேள்விக்குடி படலம் ஆகும். இத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது.இந்தத்தலத்தினைத்திருஞானசம்பந்தர்,சுந்தரர் பாடியுள்ளனர்.இத்தலத்து இறைவன்,பகலில் திருவேள்விக்குடியிலும்,இரவில் (திருத்துருத்தி)குத்தாலத்திலும் எழுந்தருளி இருப்பதாகப்பதிகங்கள் கூறுகின்றன.
முதல் பிரகாரத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மன் கோவிலின் பின்புறத்தில் ஈசானத்தில் நவக்கிரமாக ஈஸ்வரனே அமர்ந்துள்ளார். எடுத்துக்காட்டி மண்டபத்தில் ஆடல் அரசன் தனிக்கோவிலிலும்,அதன் எதிர்புறம் தெற்குப்புற வாயிலில்,கெளதுகேஸ்வரர்,தனிச்சன்னதியும் உள்ளன.
இக்கோவிலின் முன்புறம்,ஈசானத்தில் அக்னி தீர்த்தம்,(யாக குண்டம்) கோவிலின் பின்புறம்,கெளதுகா பந்தன தீர்த்தமும்(சிவகங்கை) உள்ளன.
இத்திருக்கோவில் ,ஊரின் நடுவேமுதல் பிரகாரத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மன் கோவிலின் பின்புறத்தில் ஈசானத்தில் நவக்கிரமாக ஈஸ்வரனே அமர்ந்துள்ளார். எடுத்துக்காட்டி மண்டபத்தில் ஆடல் அரசன் தனிக்கோவிலிலும்,அதன் எதிர்புறம் தெற்குப்புற வாயிலில்,கெளதுகேஸ்வரர்,தனிச்சன்னதியும் உள்ளன.
இக்கோவிலின் முன்புறம்,ஈசானத்தில் அக்னி தீர்த்தம்,(யாக குண்டம்) கோவிலின் பின்புறம்,கெளதுகா பந்தன தீர்த்தமும்(சிவகங்கை) உள்ளன.,கிழக்கு நோக்கி இருக்கிறது. கர்ப்பகிரகம்,அர்த்தமண்டபம்,மகா மண்டபம்,எடுத்துக்காட்டி மண்டபம்,நான்கு பாகுபாடுகளையும்,இரண்டு பிரகாரங்களையும் உடையது.முதலில் நம்மை வரவேற்பது மூன்று அடுக்கு கோபுரம், அர்த்தமண்டப வாயில் நான்கு கைகளையுடைய துவார பாலகர்கள் உள்ளனர். முதல் பிரகாத்தில்,தென்முகக் கடவுள்,கிழக்கு நோக்கி,வலஞ்சுழி விநாயகர், வள்ளி,தெய்வனை சமேத சுப்பிரமணியர்கோதண்டராமர், கஜலட்சுமி ,விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. சுவாமிகோஷ்டத்தில் பிள்ளையார், நடராஜர் மணக்கோலம்.அகத்திய அரசகுமாரன்,சிவனை வழிபடுதல்,சங்கர நாராயணர்,லிங்கோத்பவர்,வலபாக அர்த்த நாரீஸ்வரர்,பிர்மா,சண்டிகேஸ்வருக்கு ஈசன் அநுக்கிரமூர்த்தி,பிச்சாடனர்,அரசகுமாரி தோழியுடன் சிவபூசை செய்யும் சிலாரூபங்களும் உள்ளன.
தலவரலாறு
பார்வதிதேவி ,பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள் கிழமை விரதம் இருந்து,மணலில் வரித்து பூசை செய்துவந்தார்.17ஆவது திங்கள் கிழமை ஈசன் தோன்றி ,கங்கனம் கட்டி வேள்வி செய்து,மணம் புரிந்துக்கொண்டார்.
தலச்சிறப்புகள்
1.பிர்மா திருமணம் செய்து வைத்தத்திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
2 அரசகுமாரன் ஒருவனுக்குக்கிரகங்கள் தோஷம் நீங்கி,ஈசன் திருமணம் செய்து வைத்தத்திருத்தலம் ஆகும்.
3அகத்தியர்,வாதாபியை கொன்றதனால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்ற திருத்தலம்.
4. தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர் அக்னி தீர்த்தில் நீராடி,ஈசனை வழிபட்ட திருத்தலம்
5. ஈசன் இங்கு தன் வலபாகத்தை ஈஸ்வரிக்குக்கொடுத்துள்ளார்.
6.பிள்ளையார் திருமணச்சடங்கில் இங்கு தன்னைத்தானே பூசை செய்து கொடுத்துள்ளார்.
7. திருமணத்தலம் என்பதால், கொடி மரமும்,நவக்கிரகமும் கிடையாது.
8 நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் ,ஈசானத்தில் உள்ள ஈஸ்வரனுக்கு 48அகல் தீபம் ஏற்றி ,அர்ச்சனையும் செய்து வழிபட்டால்,நலம் கிடைக்கும்.
இத்தலத்துடன் தொடர்புடைய பிற தலங்கள்
1.தேரழந்தூர் சொக்காட்டான் விளையாடி பசு சாபம் நீங்கப்பெற்றது.
2. கோமல் ,மாந்தை பார்வதி பசுவாக மேய்ந்தத்தலங்கள்
3. திருக்குளம்பியம்.- பசுவான பார்வதியின் குளம்படிபட்டு, ஈசன் காளையுரு கொண்டு விரட்டிய தலம்
4. திருவாவடுதுறை- இத்தலத்தில் உள்ள குளத்தில் பசுவாகிய பார்வதி இறங்கி பெண் உருவப்பெற்றதிருத்தலம்.
5. திருத்துருத்தி _(குத்தாலம்)_பரத மகரிஷியின் வளர்ப்பு மகள் பார்வதி,ஈசனை நினைந்து தவம் புரிந்த திருத்தலம்.
6. திருவீழிமிழலை_- பந்தல் கால் நடப்பட்ட திருத்தலம்.
7 திருவேள்விக்குடி- திருமணம் புரிந்த திருத்தலம்.
8 குறுமுளைப்பாடி- பாலிகை கரைத்த திருத்தலம்.
9. மேலத்திருமணஞ்சேரி- ( எதிர்கொள்பாடி)_. தேவர்கள்,அகத்தியர்,ஈசன், ஈஸ்வரியை திருமணக்கோலத்துடன் எதிர்கொண்டு அழைத்தத்திருத்தலம்.
10. திருமணஞ்சேரி-(மணம் மகிழ்ந்த சேரி) -வரவேற்புத்தலம், தேவர்களுக்கும்,பூலோகத்தவர்க்கும் காட்சி கொடுத்த திருத்தலம்.
11. பந்தநல்லூர்- திருமண நலுங்கு செய்த திருத்தலம்.
12. திருக்குரங்காவல்- சிவன்,பார்வதி,வாலி பூச
பூசை செய்த திருத்தலம்.
13. திருச்சத்திமுற்றம்- சிவலிங்கத்துடன் பார்வதி தேவி ஆரத்தழுவிய காட்சி.
பின் குறிப்பு
திருவேள்விக்குடியில் கடைகள் ஏதும் இல்லாத காரணத்தால்
,திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ,குத்தாலத்தில்
இறங்கி,அர்ச்சனைப்பொருள்கள் வாங்கி கொண்டு,ஆட்டோ அல்லது
டாக்சில்யில் தான் வரவேண்டும்.இவ்வூருக்கு பேரூந்து வசதி அரிதாக
உள்ளது. மயிலாடுதுறை வழியாக திருப்பனந்தாள் செல்லும் 20 நம்பர்
பேரூந்து , செல்வம் பேரூந்து ஆகியன இத்தலத்தலத்தின் பேரூந்து
நிறுத்தத்தில் நின்று செல்லும்.
இத்தலத்தில் இறைவனை வேண்டினால் திருமணத்தடை,நவக்கிரக
தோஷம்,வணிகத்தில் ஏற்றத்தாழ்வு,நோய்பிணி நீங்கும் என்பது தல
வரலாறாகும்.
அர்ச்சனைப்பொருள்கள்.
குங்குமம்
பூமாலை
காட்டியப்பூ
தேங்காய்
வாழைப்பழம்
வெற்றிலைப்பாக்கு
சூடம்
திரிநூல்
நல்லண்ணை
ஊதுபத்தி
இத்தலம் பற்றிய அறிய
முனைவர்.இரா.கார்த்திகேயன்
அலைப்பேசி 6381742484
..........................................................
Keine Kommentare:
Kommentar veröffentlichen