Meine Blog-Liste

Samstag, 16. Februar 2019

>> சங்கு, சக்கரம் மகிமை <<
காக்கும் கடவுள் என்று கருதப்படும் மஹாவிஷ்ணு துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் செய்ய தேவையான ஆயுதங்களையும் தரித்திருக்கிறார். அவை #பஞ்சாயுதங்கள் என அழைக்கப்படுகின்றன.
பாஞ்சஜன்யம்,கௌமேதகி, சார்ங்கம், நந்தகி, சுதர்சனம் ஆகியவை அவை.
இவற்றில் சங்கு,சக்கரம், இந்த இரண்டுமே வைணவ சமயத்தின் மிக முக்கிய சமயச் சின்னங்களாகத் திகழ்கின்றன.
வைணவர்களாகப் பிறந்தவர்கள் ஸ்மாச்ரயணம் என்னும் பஞ்சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்.
அந்த பஞ்ச சம்ஸ்காரங்களில் ஒன்று - சங்கு, சக்கரம் இவற்றின் இலச்சினைகளை நெருப்பில் காய்ச்சி சீடனது வலது தோளில் சக்கரப் பொறியையும் (சுதர்சனர்) இடது தோளில் சங்குப் பொறியையும் (பாஞ்சஜன்யர்) மந்திரம் சொல்லி அழுத்தி அடையாளம் இட வேண்டும். இதற்கு தாபசம்ஸ்காரம் எனப் பெயர்.
>> சக்கரம்
திருமாலின் வலக்கரத்தில் குடிகொண்டுள்ள தெய்வமே சுதர்சனர் எனப்படுகிறார்.
பஞ்சாயுதங்களுக்கும் அரசனாகத் திகழும் சுதர்சனம் ஹேதிராஜன், சுதர்சனராஜன் சக்கரத்தாழ்வார் என்றெல்லாம் போற்றப்படும் தெய்வமாக - சின்னமாகத் திகழ்கிறது.
ஸ்ரீசுதர்சனரே முலவராக எழுந்தருளியுள்ள ஆலயம் - குடந்தெயில் உள்ள ஸ்ரீசக்கரபாணி திருக்கோயிலாகும். நமது பாரத தேசத்தின் விடுதலைக்குப் பின்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியக் கொடியில் உள்ள சக்கரத்தை பகவான் ஸ்ரீ சிருஷ்ணரின் கையில் உள்ள சக்கரதாயுதமே என்று வர்ணித்தவர்கள் உண்டு. தர்மத்தைக் காக்க அதர்மத்தை ஒடுக்க வல்ல அந்த சக்கரதாயுதம் தானே உண்மையான தர்ம சக்கரம்.
>> சங்கு
பாஞ்சஜன்யத்தின் ஒலியே அதர்மவாதிகளின் அடிவயிற்றைக் கலக்கும் சக்தி படைத்திருக்கிறது. ஆனால் அதே ஒலி தர்மத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது.
இந்த சங்கு - பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தனது குரு சாந்தீபனி மஹரிஷியின் காணாமல் போன புதல்வனை மீட்டு வரும் போது கொண்டு வந்த அதிசய சங்கு.
இந்த சங்கு செய்த பாக்கியத்தை கோபிகைகள் பொறாமை உணர்வோடு வர்ணித்துள்ளனர். ஆம்ஸ ஸ்ரீகிருஷ்ணரின் இதர மதுரத்தை அனுபவிக்கும் பாக்கியம் இந்த சங்குக்குத் தானே உள்ளது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்