Meine Blog-Liste

Freitag, 15. Februar 2019

பட்டீச்சரம் - தேனுபுரீஸ்வரர் கோவில்

பட்டீச்சரம் - தேனுபுரீஸ்வரர் கோவில்



சோழர்கள் காலத்தில் பிரதிஷ்டை செய்த இத்தல துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். திருவலஞ்சுழி, பழையாறை, மேற்றளி, திருச்சத்திமுற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியை விலகியிருக்குமாறு சொல்லி அருளிய சிறப்புடையது. இங்குள்ள ஐந்து நந்திகளும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன. காமதேனு பசுவின் மகள் பட்டி பூஜித்ததால் பட்டீச்சரம் என பெயர் ஏற்பட்டது. வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயாஹத்தி தோஷத்தை இராமர் இந்த இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டார். இராமேஸ்வரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. இங்கும் இராமலிங்கச் சந்நிதியும், கோடி தீர்த்தமும் உள்ளது. பராசக்தி தவம் செய்து வழிபட்ட ஸ்தலம். மேதாவி முனிவரின் சாபத்தால் நாய் வடிவம் பெற்ற தர்மசர்மா என்ற அந்தணன் ஞானவாவியில் நீராடி சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான். **************************************************************** இக்கோயிலுக்கு அருகில் உள்ள 56 கோயில்கள்:- I. கும்பகோணம் to திருவைக்காவூர் 1. திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது 2. திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 3. சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (முருகரின் நான்காவது படை வீடு) திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 4. புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில் (திவ்ய தேசம்) சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 5. ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் (திவ்ய தேசம்) புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. 6. இன்னம்பூர் - எழுத்தறிநாதர் திருக்கோவில் (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 7. திருப்புறம்பயம் - சாட்சிநாத சுவாமி திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 8. திருவிசயமங்கை - விஜயநாதர் கோவில் (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. 9. திருவைக்காவூர் - வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. * * * * * II. கும்பகோணம் to திருந்துதேவன்குடி 1. ஒப்பிலியப்பன் கோயில் (திவ்ய தேசம்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. 2. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது. 3. தேப்பெருமாநல்லூர் - விஸ்வநாதசுவாமி திருக்கோயில் திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 4. திருபுவனம் - கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில் (சரபேஸ்வரர் கோயில்) தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 5. திருவிசைநல்லூர் - சிவயோகிநாத சுவாமி கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 6. திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் திருக்கோயில் (நண்டாங் கோயில்) (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. * * * * * III. கும்பகோணம் to திருவாவடுதுறை 1. திருவிடைமருதூர் - மகாலிங்கேசுவரர் கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது 2. தென்குரங்காடுதுறை - ஆபத்சகாயேஸ்வரர் கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 3. திருமங்கலக்குடி - பிராணநாதேஸ்வரர் கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 4. சூரியனார் கோயில் - சிவசூரியப் பெருமான் கோயில் திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. 5. கஞ்சனூர் - அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்) (தேவாரப்பாடல் பெற்ற தலம்) சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 6. திருக்கோடிகாவல் - திருக்கோடீஸ்வரர் கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 7. திருவாவடுதுறை - மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. * * * * * IV. கும்பகோணம் to ஊத்துக்காடு 1. தாராசுரம் – ஐராவதீஸ்வரர் திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 2. பழையாறை – சோமேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 3. பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் * * * * * (பதிவில் காணும் கோயில்) (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. 4. திருசத்திமுத்தம் – சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது. 5. ஆவூர் (கோவிந்தகுடி) – பசுபதீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. 6. ஊத்துக்காடு - காளிங்கநர்த்தனர் திருக்கோயில் ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. * * * * * V. கும்பகோணம் to திருக்கொள்ளம்புதூர் 1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் - (முல்லைவனம்) விடியற்கால வழிபாட்டிற்குரியது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. 2. திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில் (பாதிரி வனம்) காலை வழிபாட்டிற்குரியது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 3. ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி) பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்) உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 4. ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (திருஇரும்பூளை) பூளைவனம் மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது 5. திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில் (வில்வவனம்) அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. * * * * * VI. கும்பகோணம் to நாதன் கோயில் 1. சிவபுரம் - சிவகுருநாதசுவாமி திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. 2. சாக்கோட்டை (கலயநல்லூர்) - அமிர்தகலசநாதர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. 3. கருவளர்ச்சேரி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் (குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்) சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 4. மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. 5. கீழக்கொருக்கை – பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில் (அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்) மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 6. நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) - ஜெகந்நாத பெருமாள் திருக்கோயில் (திவ்ய தேசம்) கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. * * * * * VII. கும்பகோணம் to கபிஸ்தலம் 1. திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் - (தேவாரப்பாடல் பெற்ற தலம்) கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது 2. பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 3. பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் - 108 சிவலிங்க கோயில் பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 4. கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் - (திவ்ய தேசம்) பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. * * * * * VIII. கும்பகோணம் to குடவாசல் 1. அழகாபுத்தூர் - ஸ்வர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயில் போகும் வழியில் இருக்கிறது. திருநறையூர் என்ற ஊரின் முன்னால் அழகாபுத்தூர் உள்ளது 2. திருநறையூர் - சித்த நாதேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் கோயில் உள்ளது. 3. நாச்சியார்கோவில் - திருநறையூர் நம்பி திருக்கோயில் (திவ்யதேசம்) சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. 4. ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) நாச்சியார்கோயிலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. 5. திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில் (திவ்யதேசம்) ஆண்டான் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. 6. திருச்சேறை – சாரபரமேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) சாரநாதப்பெருமாள் கோயிலில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது. 7. நாலூர் – பலாசவனேஸ்வரர் திருக்கோயில் சாரபரமேஸ்வரர் கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. 8. திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) நாலூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. 9. குடவாசல் - கோணேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருநாலூர் மயானத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. * * * * * IX. கும்பகோணம் to திருப்பாம்பரம் 1. திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. 2. திருவைகல் மாடக்கோவில் - வைகல்நாதர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. 3. கோனேரிராஜபுரம் - உமா மஹேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருவைகல் மாடக்கோயிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. 4. திருவீழிமிழலை - வீழிநாத சுவாமி திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) கோனேரிராஜபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. 5. திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருவீழிமிழலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. * திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும். இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன. நம் தமிழ்நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம். கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம். 
மிக்க நன்றி.ancienttemplesintamilnadu/photos

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்