Meine Blog-Liste

Sonntag, 24. Februar 2019

kavadi 31.07.2016 ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா காவடி

மகப்பேறு தரும் மரகதவள்ளி உடனாய அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில்

மகப்பேறு தரும் மரகதவள்ளி உடனாய 
அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில்
தமிழ் நாடு 
23.02.2019
முனைவர்.இரா.கார்த்திகேயன்
பதிவு -உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
மகப்பேறு தரும் மரகதவள்ளி உடனாய அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில்




பெண்களுக்கு நீண்டகாலம் மகன்,மகள் இல்லையே என்ற வருத்தத்தை நீக்கும்,கவலை விலகும்.ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் நவரத்தினக்கற்களை வைத்து பூசை செய்து வந்தால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது வரலாறாகும்
தலவரலாறு
இத்தலம் பென்னி நதியாம் காவிரி பாய்ந்து வளங்கெழிக்கும் தஞ்சை மாவட்டம் ,திருவிடைமருதூர் தாலுக்காவில் திருவெண்ணெய் எனும் கதிரைமங்கலத்தின் அருகில் அழகிய சிற்றூர் சிவபுராணி ஆகும்

தலமைவிடம்

இத்தலம் காவிரியாற்றின் வடக்கே யும், திருலேக்கியில் அமையப்பெற்ற சுந்தரஸ்வரர் கோவிலிருந்து 1கி.மீ தூரத்திலும்.திருப்பனந்தாளில் அருள்பலித்து வரும் அருள்மிகு செஞ்சடையப்பர் ஆலயத்திலிருந்து தெற்கே 2கி.மீ தூரத்திற்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது.
தலச்சிறப்பு

இத்தலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு தஞ்சையாண்ட முதலாம் குலேத்துங்கன் சோழனால் கட்டப்பட்டதாகவும்.இக்கோவில்செங்கற்கோவில் அதனால் கோச்செங்கணால் கட்டப்படிருக்கலாம்.ஆனால் மாடக்கோவிலாகும்.


தல விருட்சம்
இத்தலத்தின் தல மரம் வில்வமாகும்.

தல மகிமை
திருமணமாகியும்,நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்தில் அருள்பலித்து வரும் மரகதவள்ளி அம்பாளை பிரததேஷம் அன்று தம்பதிகள் இருவரும் 108முறை சுற்றி வந்து அம்பாள் அபிஷேக பாலை பருகினால் குழந்தைப்பாக்கியம் கிட்டும் என்பதும்.இத்தல இறைவனை அவரவர் பிறந்த ராசி தினத்தில் நவரத்தினக்கற்களை வைத்து வழிப்பட்டால் செல்வம் உண்டாகும்.என்பது தலவரலாறு

தல விழாக்கள்
இத்தலத்தில் உள்ள இறைவனை மகா சிவராத்திரி அன்று ஆறுகால பூசையும்108 தீபம் {ஏற்றுவர் மார்கழி மாதம் திருபச்சம் மற்றும் கார்த்திகை சோமவர வழிபாடுகள் நடைபெறும் ..மாத பிரதோஷம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும் இறையன்பர்கள் தினசரி மதியம் அன்னதானம் நடை பெறும்.
பேருந்து வழித்தடம்

இத்தலத்திற்கு மயிலாடுதுறையிலிருந்து 10எண் பேருந்தில் பயணம் செய்யலாம்.








ஸ்ரீ அனுமன் சாலிசா (தமிழாக்கம் )


ஸ்ரீ அனுமன் சாலிசா (தமிழாக்கம் )
Devakottai Dolphin AR Ramanathan

ஸ்ரீ அனுமன் சாலிசா (தமிழாக்கம் ) !அனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராமசரிதமனசாவை விட இந்த பாடல்கள் சிறப்பானவை என்று கூறப்படுகிறது. இதில் உள்ள நாற்பது பாடல்களும் தனி தனியாக ஒரு வரத்தினை நல்குகிறது.

ஸ்ரீ அனுமன் சாலிசா (தமிழாக்கம் )
ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே! உலகத்தின் ஒளியே வானரர் கோனே. (1)
ராமதூதனே! ஆற்றலின் வடிவமே! அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே..(2)
மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே! ஞானத்தை அருள்வாய், நன்மையை தருவாய். (3)
தங்க மேனியனே, பட்டாடை அணிபவனே! மின்னும் குண்டலமுடன் அலைமுடியும் கொண்டவனே. (4) இடி,கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே! முஞ்சைப் பூணூல் தோ ளணிவோனே! (5)
சிவனின் அம்சமே ! கேசரி மகனே! உனதொளி வீரத்தை உலகமே வணங்குமே! (6)
பேரறி வாளியே! நற்குண வாரியே! ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே! (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்! ராமனின் புகழை கேட்பது பரவசம்! (8)
நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்! கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்! (9)
அசுரரை அளித்த பெரும்பல சாலியே ! ராம காரியத்தை முடித்த மாருதியை ! (10)
சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்! (11)
ராமன் உன்னை பெரிதும் புகழ்ந்து பரதனைப் போல நீ உடனுறை என்றார்! (12)
ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன் பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்! (13)
சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும் ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும் (14)
எமன், குபேரன், திசைக் காவலரும், புலவரும் உன் பெருமை தனை சொல்ல முடியுமோ? (15)
சுக்ரீவனுக்கு அரசை அளித்திட ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்! (16)
உன் அறிவுரையை வீடணன் கொண்டதால் அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்! (17)
தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்! (18)
வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ! (19)
உலகினில் முடியாக் காரியம் யாவையும் நினதருளாலே முடிந்திடும் எளிதாய்! (20)
ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ! நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி! (21)
உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்! காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்! (22)
நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்! மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்! (23)
பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ! மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை! (24)
நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்! பலமிகு நின்திரு நாமம் சொல்லிட! (25)
தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்! மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே! (26)
தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும் ராமனின் பணிகளை நீயே செய்தாய்! (27)
வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்! அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்! (28)
நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்! நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்! (29)
ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே! தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே! (30)
எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும் கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்! (31)
ராம பக்தியின் சாரமே நின்னிடம்! என்றும் அவனது சேவகன் நீயே! (32)
நின்னைப் பற்றியே ராமனை அடைவார்! தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்! (33)
வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்! ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்! (34)
மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும் அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்! (35)
துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்! வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே! (36)
ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி! விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்! (37)
நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்! (38)
அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம் சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்! (39)
அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான் அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே! (40)
இந்து மதத்தை சார்ந்த பலரும் தற்போது தினம்தோறும் ஹனுமான் சாலிசா பாடலை துதிக்க துவங்கி உள்ளனர். தினம் தோறும் துதிக்க முடியாதவர்கள் அனுமனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமைகளில் துதிக்கின்றனர். இதை ஜெபிக்கும் பக்தர்கள் அனுமன் மீது எந்த அளவிற்கு பக்தியை கொண்டுள்ளனரோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 40 பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பில் 38 வது பாடலை கவனித்தோமானால், எவர் ஒருவர் இதை தொடர்ந்து 100 நாட்கள் 100 முறை ஜெபிக்கிறாரோ அவருக்கு பிறப்பு இறப்பற்ற நிலை உருவாகும் அதோடு மகிழ்ச்சியான வாழ்வு உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அனுமனை போற்றும் எத்தனையோ பாடல்களும் மந்திரங்களும் இருந்தாலும் அனுமன் சாலிசா தான் மிகவும் சக்தி மிக்கதாக கருதப்படுகிறது. இந்த பாடல்கள் உருவானதற்கு பின்பு ஒரு அற்புதமான வரலாறும் உள்ளது. டெல்லியை முகலாயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது துளசிதாசரை மன்னர் சந்தித்தார். அப்போது துளசிதாசர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் புகழை மன்னரிடம் கூறினார். அதோடு ராம தரிசனம் குறித்தும் அவர் பல தகவல்களை கூறினார். இதனை கேட்ட மன்னம், ராமன் தனக்கு தரிசனம் தர வழி செய்யும்படி துளசிதாசரிடம் கேட்டார். அதற்கு துளசிதாசர், உண்மையான பக்தியை வெளிப்படுத்தினால் மட்டுமே ஒருவருக்கு ராமதரிசனம் கிடைக்கும் என்று கூறினார். அதை ஒப்புக்கொள்ளாத மன்னம், துளசிதாசரை சிறையில் இட்டான்.
சிறையில் இருந்தபடியே துளசிதாசர் அனுமன் சாலிசா என்னும் இந்த 40 பாடலையும் எழுதி அதை ஜபிக்க துவங்கினார். உடனே டெல்லி நகரம் முழுக்க குரங்குகள் சூழ்ந்தன. மக்களாலும் மன்னனாலும் குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறையில் இருக்கும் துளசிதாசரிடம் இது குறித்து மன்னம் உரையாடினான். அப்போது துளசிதாசர், இது வானர படைகளின் ஒரு சிறு பகுதியே. படை முழுவதும் வந்த பிறகு ராமன் வருவார் உமக்கு தரிசனம் தருவார் என்றார். இதை கேட்டு அதிர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து துளசிதாசரை விடுவித்தான். உடனே குரங்குகள் அனைத்தும் அங்கிருந்து சென்றன. அனுமன் சாலிசா மந்திரம் தோன்றிய விதத்தில் இருந்தே அதன் சக்தியை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அனுமன் சாலிசா ஸ்தோத்திரம் அதை தினமும் பாராயணம் செய்பவர்கள் பலர் அதன் தெய்வீக சக்தியை உணர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகள் துணை
ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவடிகள் துணை

Samstag, 23. Februar 2019

Sathiyasekar Baskarjayaraman

உள்ளங்கையில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மி !
உள்ளங்கையில் விழித்தால் லக்ஷ்மி கடாக்ஷம்; சுக்ரயோகம்! அழுக்குத்துணி, கிழிந்த ஆடை உடுத்தினால் சுக்ரதோஷம்!
சுக்ர பகவானைப் பற்றிய விவரங்களைப் பார்த்து வருகிறோம். வாழ்வில் சுக்ர யோகத்தைத் தந்தருளும் சுக்ர பகவானை இன்னும் பார்ப்போம்.
திரைப்படம், நடிகர், நடிகைகள், கலைஞர்கள் என இவர்கள் சுக்ரனின் ஆதிக்கம் உள்ளவர்களே.
நடனம், நாட்டியம், கலையரங்கம்,திரையரங்கம், உயர் மது விடுதிகள், உயர் மதுபானங்கள், மன மகிழ் மன்றங்கள் ஆகியவையும் சுக்ரன் வாசம் செய்யும் இடங்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
மேற்கண்ட தொடர்பு உடைய தொழில் செய்பவர்கள் சுக்ரனின் அருட் பார்வையால்தான் அவற்றைத் தொடர முடிகிறது. அதில் கொழித்து வருவதும் சுக்ரனின் பேரருளால்தான்! ஆனால் கூடவே ஒரு கிரகம் இதற்கு தொடர்பு கிரகமாக இருக்கிறது. அது... அது ராகு பகவான்.
ஆம், ராகு தொடர்பு இருந்தால், மதி மயக்கும் ஆடம்பர விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சரி... நீச சுக்ரன் பெண்களின் ஜாதகத்தில் என்ன மாதிரியான பலன்கள் தரும்?
அவசர முடிவுகளை எடுக்க வைக்கும். பேராசைகளை உருவாக்கும். திருமணம் முதலான எந்த விஷயத்திலும் அவசர முடிவு எடுத்து காலம் முழுவதும் மன உளைச்சலோடு வாழ வைக்கும்.
எதிலும் திருப்தி இல்லை என்ற மன உளைச்சலைத் தரும். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சமூகத்தில் அவப்பெயர்தான் கிடைக்கும். களங்கம் உண்டாக்கும். காதல் எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
தான் செய்வது தவறு என்பதைக் கூட உணரமாட்டார்கள் இவர்கள். எல்லாரிடமும் சகஜமாகதான் பழகுவார்கள். ஆனால் அதைத் தவறாகப் பார்ப்பார்கள் எல்லோரும்!
சரி, இவர்களுக்கு என்ன பரிகாரம்?
துர்கை வழிபாடு, அதிலும் "விஷ்ணு துர்கை" வழிபாடு மிக மிக முக்கியம். துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அளப்பரிய நன்மைகளைத் தரும்.
"கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்றார் அவ்வையார். ஆக வறுமை என்பது நம் வாழ்வில் வரக்கூடாது என்றால் நாம் என்ன மாதிரியான வழிபாடுகள், பூஜைகள், சம்பிரதாயங்கள், நியமங்களைக் கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?
நமது உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே காலையில் தூக்கத்திலிருந்து எழும்போது, உங்கள் உள்ளங்கையில் விழித்திடுங்கள்.
இரண்டு கைகளையும் பரபரவென தேய்த்து உள்ளங்கையால் உங்கள் இரு கண்கள் மீதும் ஒற்றி எடுங்கள். காரணம் கண்கள் இரண்டும் தாமரை மலருக்கு ஒப்பானது. தாமரையில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். தூக்கம் என்னும் நித்ராதேவி நம்மை விட்டு அகல மெலிதான இளஞ்சூட்டுடன் அவளை அப்புறப்படுத்தவே இதைச் செய்கிறோம். செய்யவேண்டும்.
எனவே உள்ளங்கையில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியின் முகத்தில் விழிப்பதும் தாமரையில் வாசம் செய்யும் லக்ஷ்மிதேவியை, தாமரைக்கு நிகரான கண்களை ஒற்றிக்கொண்டு எழுந்திருப்பதும் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். தரித்திர நிலையில் இருந்து நம்மையும் நம் வீட்டையும் மாற்றியருளும்!
அடுத்து... எக்காரணம் கொண்டும் துவைக்காத ஆடை, முதல் நாள் அணிந்த ஆடைகளை உடுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அந்த சிரசின் பிரதானம் முகம்.
அகத்தின் அழகைக் காட்டுவது முகம். எனவே எப்போதும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
"நீறில்லா நெற்றி பாழ் " என்பார்கள். எனவே, வெறும் நெற்றியோடு இருக்காதீர்கள். திருநீறை நடு நெற்றியிலும், குங்குமத்தை புருவ மத்தியிலும் இட வேண்டும். இதெல்லாம் முகத்தில் லக்ஷ்மி கடாட்சத்தை தரும்.
வீட்டை அழகுபட வைத்துக் கொள்வது லக்ஷ்மி வாசம் செய்யும் வழிகளில் ஒன்று. காலை மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி தூப தீபம் காட்டுங்கள். தெரிந்த பக்திப் பாடல்களை பாராயணம் செய்யுங்கள். அஷ்டோத்திரம், நாமாவளி முதலானவற்றை மெல்லிய இசையில் ஒலிக்கவிடுங்கள். அதைக் கேட்டபடி இருப்பதும், வீட்டில் அந்த இசையும் வரிகளும் வியாபித்திருப்பதும் மிகுந்த அதிர்வுகளை உண்டாக்கும்!
வலம்புரிச் சங்கு இருக்கும் வீட்டில் வறுமை இருக்காது என்கிறது சாஸ்திரம். வலம்புரிச் சங்கில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். முறையாக வலம்புரிச் சங்கை பூஜித்து வாருங்கள். செல்வ வளம் பெருகும்.
வெற்றிலை, துளசி, வில்வ இலை, சாமந்திப்பூ, வெண்தாமரை, நெல்லிக்கனி இவை எல்லாவற்றிலும் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். இதில் ஏதாவது ஒன்றை பூஜை வேளையில் வைத்து வழிபடுங்கள்.
இயலுமெனில், ஏகாதசி விரதம் இருப்பது மிகுந்த பலன்களைத் தரும். ஏகாதசியில் விரதம் மேற்கொண்டு, துவாதசி அன்று ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு விரதத்தை முடியுங்கள். ஸ்ரீமகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பாள் என்பது உறுதி!
முகம் பார்க்கும் கண்ணாடியும் லக்ஷ்மியின் அம்சம்தான். அதனால் தான் உடைந்த அல்லது விரிசல் விழுந்த அல்லது ரசம் போன கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது என்றும் அதை வீட்டிலேயே வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் சொல்லிவைத்தனர்.
’’எல்லாம் சரிதான். ஆனா, சுக்ரனைப் பற்றி சொல்றேன்னு சொல்லிட்டு, லக்ஷ்மியைப் பத்தி விவரிச்சிக்கிட்டே இருக்கீங்களே...’ என்று கேட்கிறீர்கள்தானே!
காரணமும் தொடர்பும் இருக்கிறது.
சுக்ரனின் அதிதேவதை ஸ்ரீ மகாலட்சுமி.
ஆக சுக்ரனின் அருளைப் பெறவேண்டுமென்றால், மகாலக்ஷ்மியை வழிபடவேண்டும்.
விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம், ஸ்ரீசூக்தம், லலிதா சகஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்ரம், துர்கா அஷ்டோத்ரம் முதலானவற்றை பாராயணம் செய்து வாருங்கள். லக்ஷ்மியின் அருள் கடாட்சம் நம் மீது அருவியெனப் பாய்ந்தோடும்.
வீட்டில் பூஜையறையில் வெள்ளியிலான ஏதாவதொரு பொருளை பயன்படுத்துங்கள், குறைந்த பட்சம் குங்குமச் சிமிழில் குங்குமம் நிரப்பி அந்தக் குங்குமத்தை இட்டு வாருங்கள்.
ஏன் தெரியுமா? வெள்ளி - சுக்ரனின் உலோகம்.
ஆண் பெண் யாராக இருந்தாலும் இடுப்புக்கு மேல் தங்க ஆபரணங்களையும், இடுப்புக்கு கீழ் வெள்ளி ஆபரணங்களையும் அணியவேண்டும். அப்படி அணிவதே உத்தமம். அதுவே சிறப்பு.
தங்கம் குருபகவான் - வெள்ளி சுக்ர பகவான். குரு பேரின்பம் - சுக்ரன் சிற்றின்பம். அதனால்தான் இடுப்புக்குக் கீழே வெள்ளியிலான அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என அணிகிறோம்', வெள்ளியானது சிற்றின்ப உறுப்புக்களைத் தூண்டி விடும்.
சுக்ரனின் முழு அம்சமும் குணமும் பொருந்தியவர் கொங்கணர் சித்தர். மலையை தங்கமாக மாற்ற முயற்சித்தவர். சிவபெருமானால் தடுக்கப்பட்ட்டார். திருமலை திருப்பதிக்கு அவரை அனுப்பி அருளினார் சிவனார். திருமலையில் கொங்கணர் ஜீவ சமாதி அடைந்தார். ஒருவகையில் திருமலையின் பெரும் செல்வத்துக்கு காரணம் கொங்கண சித்தர் என்றும் சொல்லுவார்கள்.
எனவே திருமலை திருப்பதிக்குச் சென்று வந்தால் பொருளாதார தேக்க நிலை மாறி செல்வந்தர் ஆகும் வாய்ப்பு உண்டாகும்.
கண் பார்வை கோளாறுகளுக்கும் சுக்ரனே காரணகர்த்தா.
ஒளி கிரகங்கள் - சூரியன், சந்திரன், விடிவெள்ளி என்னும் சுக்ரன்.
இன்னொரு விஷயம்... சுக்ரனுக்கு ஒரு கண் கிடையாது. ஆகவேதான் சுக்ரன் ஆட்சி ,உச்சம், நீசம் என்ற எந்த நிலையில் இருந்தாலும் பார்வைக் கோளாறைத் தருவார்.
பார்வை பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் உடல் சூடு. சுக்ரன் குளிர்ச்சி அம்சம். எனவே உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே பார்வை கோளாறிலிருந்து தப்பிக்கலாம்.
சுக்ரன் எல்லா செல்வங்களையும் உங்களுக்கு அருளுவார்.
சுக்ரனின் அருட்பார்வை வேண்டுமானால், மகாலக்ஷ்மியை வணங்குங்கள்.
மகாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷம் வேண்டும் என்றால் சுக்ர பகவானை வழிபடுங்கள்.
கவலையே வேண்டாம்... உங்களுக்கு சுக்ர யோகம் கிடைப்பது உறுதி!
அன்பு குழந்தைகள் அனைவருக்கும் அச்சர்யா பாபாஜியின் ஆசீர்வாதங்கள்🙋‍♂🙋‍♂🙋‍♂

கடவுள் படையல் சாப்பிடுவார? /guruji and student /Create master.....Gott

Mittwoch, 20. Februar 2019

மாத்தளை அருள்மிகு முத்துமாரி அம்மன்.-ஆடீரூஞ்சல்.

மாத்தளை அருள்மிகு முத்துமாரி அம்மன்~*" 
மிடல் பொருவுமேரு கிரிதனக் கொப்பாக
விளங்கிய பொற் சிகரமதின் மேலன்பாகக்
கடன் மதித்துமங்குலங்கள் படிந்துமாரக்
கவின் செய்த கோவையென வழகுகூரப்
படமிகுத்த உம்பர் காளரங்கள் போலப்
பகரரிய பலசுடர்கள் பரிந்து காலத்
திடமிகுத்த அவையாகு மரங்கத் தேறிச்
சிவகாமி மாரி அம்மை ஆடீரூஞ்சல்.
,,,,,
கண்ணகன் ஞாலந்தப் பாய்வயிரங் காலாய்க்
கருதுமாணிக்க உத்ரக்கவின் செய்பாலய்ப்
பண்ணமைந்த நவவச்ரப் பறளையாகிப்
பதுமரா கத்திடை யேபருமல் தேக்கி
வண்ணமைந்த மரகத நற்றகடு தாவி
வளமிகுந்த மண்டபத்தின் மகிழ்வாய் தேவி
விண்ணமையும் பன்னகமப் பதியை ஆண்டு
மேவு கவுமாரி அம்மை ஆடீரூஞ்சல்.
,,,,,,,,,
பார் வாழ்க மறை வாழ்க சைவம் வாழ்க
பகரரிய பலதொண்டர் நாளும் வாழ்க
ஏர்வாழ்க மங்கையர் கற்பினிது வாழ்க
வின்பமுடனரசர் செங்கோல் நாளும் வாழ்க
தாரனைய பன்னகமத் துள்ளோர் வாழ்க
தருகவி சொன்னோர் கிளைகள்
தளிர்த்தேவாழ்க
நேரனைய அம்மை சிவாலயமும் வாழ்க
நிறை மாரியருள் வாழ்க ஆடீரூஞ்சல்.
,,,,,,,
பேர் கொண்ட அறிஞரும் கலைஞரும் சேரும்
சீரிய பண்ணாகமம் பதியது ஓங்கும்
கார் கண்ட மயிலென மகிழ்வுடன் அடியார்
உன் பாதம் பணிந்திட ஊக்கமாய் அருள்வாய்
ஏர்முதல் தொழில்களும் எம் மண்ணில் ஓங்கிட
சூலங்கொள் கரத்துடனே கருணையருள்வாய்
தேர் கொண்ட நாயகி பாரிலே அருள
மாரியம்மா பள்ளி எழுந்தருளாயே
^^^^^^^^^^^^^^^^^^^^
மாசியாம் திங்கள் மகத்தினில் நீயோ
மாசில்லா இரதம் தனில் பவனியும் வருவாய்
தேசுடன் உன்முகம் அருளினை பரப்பும்
தேவியே உன்வரம் தேவையை நிறைக்க
காசியும் கங்கையும் போன்ற நதியாம்
மாவலி கங்கையோ உன்னைத் தாலாட்ட
நேசமாய் அடியார்க்கள் வாழ்வது சிறக்க
நாயகியே பள்ளி எழுந்தருளாயே.
^^^^^^^^^^^^^^^^^^^^^
பொன்னிலங்கு ஈழமதன் மத்திய மலைநாட்டில்
தொன்று தொட்டுப் புகழ்படைத்த மாத்தளையின் பண்ணாகமம்
என்றுரைக்கும் ஊரினிலே எழுந்தருளி வந்த அம்பாள்
என்றும் எமக்கருள் புரிவாள் ஏற்றிடுவோம் அவள் தாளை
^^^^^^^^^^^^^^^^^^^^
அஞ்சலென அபயகரம் காட்டி நிற்கும் அம்மையவள்
பஞ்சரதப் பவனியிலே முதன் முதலில் வந்தவளாம்
செஞ்சொற் கவிஞர்களால் பாடல் பெற்ற தலமதுவாம்
கெஞ்சி நிற்கும் அடியவரின் பஞ்சமதைப் போக்கிடுவாள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீரால் வளஞ் பெறும் மண்ணாம்
மாத்தளை என்னும் ஒரு பதியில்
பரோர் போற்றும் பழம் பெருங் கோயில்
முத்துமாரி தலத்தில்
தேரோ ஐந்தும் பவனி இன்று
வருவதை நாம் வாழ்த்தி
ஊரார் இணைந்து மாத்தளையில்
பல்லாண்டு கூறுதுமே
''தாயேயாகி வளர்தாய் போற்றி போற்றி எமைக்காக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மையே போற்றி போற்றி''

Sonntag, 17. Februar 2019

ஸ்ரீ காலபைரவ அஷ்டகம்



ஸ்ரீ காலபைரவ அஷ்டகம் - இன்று 17/2/2019 ஞாயிறு பிரதோஷ பூஜை சிவ ஆலயத்தில் தரிசித்த பின்னர் பைரவர் சந்நிதியில் மறக்காமல் ஸ்ரீ காலபைரவ அஷ்டகம் சொல்லி பைரவர் அருள் பெற்று வளமுடன் வாழுங்கள் !ஸ்ரீ காலபைரவர் திருவடிகள் துணை வேணும் வைரவமூர்த்தி துணை 
ஸ்ரீ காலபைரவ அஷ்டகம் 
தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்.
வ்யால யஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்.
நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
பானு கோடி பாஸ்வரம் , பவாப்தி தாரகம் பரம்.
நீலகண்ட மீப்சிதார்த்த தாயக்கம் திரிலோஷனம்.
கால கால மம்புஜாக்ச மக்ஷ சூழ மக்ஷரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
சூல தண்ட பாச தண்ட பாணி மாதி காரணம்.
ஷ்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம்.
பீம விக்ரமம் பிரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
புக்தி முக்தி தாயக்கம் பிரசஷ்த சாரு விக்ரகம் ,
பக்த வத்சலம் சிவம். சமஸ்த லோக விக்ரகம்.
விநிக்வணன் மனோக்ன ஹேம கிண்கிணி லசத் கடீம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
தர்ம சேது பாலகம் த்வ தர்ம மார்க்க நாசகம்.
கர்ம பாச மோச்சகம் சுஷர்ம தாயக்கம் விபும்.
சுவர்ண வர்ண சேஷ பாச ஷோபிதாங்க மண்டலம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
ரத்ன பாதுக பிரபபிராம பாதயுக்மகம்.
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்.
ம்ருத்யு தர்ப்ப நாசனம் கராலடம்ஷ்ற்ற மோக்ஷனம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்.
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்.
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
பூத சங்க நாயகம் , விசால கீர்த்தி தாயகம்.
காசி வாச லோக புண்ய பாப ஷோதகம் விபும்.
நீதி மார்க்க கொவிதம் புராதனம் ஜகத்பதிம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
காலபைரவாஷ்டகம் படந்தி யெ மனோகரம்.
ஞான முக்தி சாதகம் விசித்ர புண்ய வர்த்தனம்.
சோக மோக தைன்ய லோப கோப தாப நாசனம்.
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி சந்நிதிம் த்ருவம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே
ஒம் ஸ்ரீ காலபைரவர் திருவடிகள் துணை 
வேணும் வைரவமூர்த்தி துணை

சிவனது 63 உருவத்திருமேனி

காரை சங்கர்
சிவனது 63 உருவத்திருமேனி
1. சந்திரசேகரர்
2. உமாமகேஸ்வரர்.
3. ரிஷபாரூடர்
4. நடராஜர்
5. கல்யாணசுந்தரர்
6. பிட்சாடனர்.
7. காமதகனார்
8. கால சம்ஹாரர்
9. திரிபுராந்தகர்
10. சலந்தரர்.
11. கஜாசுர சம்ஹாரர்
12. தக்க்ஷ யக்ஞவதர்.
13. ஹரியர்த்தர்.
14. அர்த்தநாரீஸ்வரர்.
15. கிராதகர்.
16. கங்காளர்.
17. சண்டேச அநுக்கிரஹர்
18. நீலகணடர்.
19. சக்ரப்ரதர்.
20. விக்னப்ரசாதர்.
21. சோமாஸ்கந்தர்.
22. ஏகபாதர்.
23. சுகாசனர்.
24. தட்சணாமூர்த்தி.
25. லிங்கோத்பவர்.
26. ரிஷபாந்திகர்.
27. அகோரவீரபத்ரர்.
28. அகோராஸ்ரமூர்த்தி.
29. சக்ரதானஸ்வரூபர்.
30. சிவலிங்கம்.
31. முகலிங்கேஸ்வரர்.
32. சர்வஸம்ஹாரர்
33. ஏகபாத திரிமூர்த்தி.
34. திரிபாதமூர்த்தி
35. ஜ்வரஹரேஸ்வரர்.
36. ஊர்த்துவதாண்டவர்
37. வராக் ஸம்காரி .
38. கூர்மஸம்ஹாரி.
39. மச்சஸம்ஹாரி.
40. சரபேசர்
41. பைரவர்.
42. சார்த்துலஹரி.
43. லகுளீசர்.
44. சதாசிவர்.
45. உமேசர்.
46. புஜங்கலளிதர்
47. புஜங்கத்ராசர்.
48. கங்காதரர்.
49. கங்காவிசர்ஜனர்.
50. யக்ஞேஸ்வரர்
51. உக்ரர்
52. ஆபதோத்தாரணார்
53. ஷேத்ரபாலர்
54. கஜாந்திகர்
55. அச்வாரூடர்
56. கௌரீவரப்ரதர்
57. கௌரீலீலா சமன்விதர்
58. கருடாந்திகர்
59. பிரம்ம சிரச்சேதர்
60. ரக்தபிக்க்ஷா ப்ரதானர்.
61. சிஷ்யபாலர்
62. ஹரிவிரிஞ்சதாரணர்
63. சந்தியா நிருத்தர்.

. திருவேள்விக்குடி


தமிழ் நாடு  திருத்தலங்கள்
3. திருவேள்விக்குடி
முனைவர்.இரா.கார்த்திகேயன்
அலைப்பேசி0091  6381742484
பதிவு .பி.எஸ்.இராஜகருணா 
             உலகக்கோவில் 
            17.02.2019


திருவேள்விக்குடி
திருவேள்விக்குடி  பரிமளசுகந்தி உடனாய மணவாளேஸ்வரர் ஆலயம்
இவ்வூரின்  பெயர்க்காரணம்
சிவபெருமானது  திருமணவேள்வி நடந்தத்திருத்தலம் என்பதால் (திரு) வேள்விக்குடி என்றுபெயர் பெற்றது.ஈஸ்வரிக்குக்கங்கனதாரனம் செய்தபடியால் ,கெளதுகா பந்தனந்சேஷ்த்திரம் என்ற பெயரும் உண்டு.தற்கால வழக்குப்பெயர்,திருவேள்விக்குடி என வழங்குகிறது.
இத்தலம் அமைவிடம்
நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகில் உள்ள  குத்தாலத்திற்கு  வடகிழக்கே,3கிலோ மீட்டர் தூரத்தில், அஞ்சலாறிலிருந்து கிழக்கே1/2கிலோமீட்டர் தூரத்தில் ,காவிரியின் வடகரையில்,23ஆவது தலமாக அமைந்துள்ளது.
இறைவன்,இறைவி பெயர்கள்
1. கெளதுகேஸ்வரர்,கெளதுகேஸ்வரி
2.  மணவாளேஸ்வரர்,பரமள சுகந்த நாயகி
இத்தலம் பற்றியநூல்,பழமை,பெருமை
இத்தலம் பற்றி அறிய நூல் ஏதும் இல்லை(குத்தாலம்)திருத்துருத்திப்புராணத்தில் இத்தலம் பற்றி 17 பாடல்கள் உள்ளன. அவற்றின் தலைப்பு 35ஆவது  திருவேள்விக்குடி படலம் ஆகும். இத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது.இந்தத்தலத்தினைத்திருஞானசம்பந்தர்,சுந்தரர் பாடியுள்ளனர்.இத்தலத்து இறைவன்,பகலில் திருவேள்விக்குடியிலும்,இரவில் (திருத்துருத்தி)குத்தாலத்திலும் எழுந்தருளி இருப்பதாகப்பதிகங்கள் கூறுகின்றன.
முதல் பிரகாரத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மன் கோவிலின்  பின்புறத்தில் ஈசானத்தில் நவக்கிரமாக ஈஸ்வரனே  அமர்ந்துள்ளார். எடுத்துக்காட்டி மண்டபத்தில் ஆடல் அரசன் தனிக்கோவிலிலும்,அதன் எதிர்புறம் தெற்குப்புற வாயிலில்,கெளதுகேஸ்வரர்,தனிச்சன்னதியும் உள்ளன.
   இக்கோவிலின் முன்புறம்,ஈசானத்தில் அக்னி தீர்த்தம்,(யாக குண்டம்) கோவிலின் பின்புறம்,கெளதுகா பந்தன தீர்த்தமும்(சிவகங்கை) உள்ளன.

திருக்கோவிலின் அமைப்பு முறை

இத்திருக்கோவில் ,ஊரின் நடுவேமுதல் பிரகாரத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மன் கோவிலின்  பின்புறத்தில் ஈசானத்தில் நவக்கிரமாக ஈஸ்வரனே  அமர்ந்துள்ளார். எடுத்துக்காட்டி மண்டபத்தில் ஆடல் அரசன் தனிக்கோவிலிலும்,அதன் எதிர்புறம் தெற்குப்புற வாயிலில்,கெளதுகேஸ்வரர்,தனிச்சன்னதியும் உள்ளன.
   இக்கோவிலின் முன்புறம்,ஈசானத்தில் அக்னி தீர்த்தம்,(யாக குண்டம்) கோவிலின் பின்புறம்,கெளதுகா பந்தன தீர்த்தமும்(சிவகங்கை) உள்ளன.,கிழக்கு நோக்கி இருக்கிறது. கர்ப்பகிரகம்,அர்த்தமண்டபம்,மகா மண்டபம்,எடுத்துக்காட்டி மண்டபம்,நான்கு பாகுபாடுகளையும்,இரண்டு பிரகாரங்களையும் உடையது.முதலில் நம்மை வரவேற்பது  மூன்று அடுக்கு கோபுரம், அர்த்தமண்டப வாயில் நான்கு கைகளையுடைய துவார பாலகர்கள் உள்ளனர். முதல் பிரகாத்தில்,தென்முகக் கடவுள்,கிழக்கு நோக்கி,வலஞ்சுழி விநாயகர், வள்ளி,தெய்வனை சமேத சுப்பிரமணியர்கோதண்டராமர், கஜலட்சுமி ,விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. சுவாமிகோஷ்டத்தில் பிள்ளையார், நடராஜர் மணக்கோலம்.அகத்திய அரசகுமாரன்,சிவனை வழிபடுதல்,சங்கர நாராயணர்,லிங்கோத்பவர்,வலபாக அர்த்த நாரீஸ்வரர்,பிர்மா,சண்டிகேஸ்வருக்கு ஈசன் அநுக்கிரமூர்த்தி,பிச்சாடனர்,அரசகுமாரி தோழியுடன் சிவபூசை செய்யும்  சிலாரூபங்களும் உள்ளன.

தலவரலாறு


பார்வதிதேவி ,பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள் கிழமை விரதம் இருந்து,மணலில் வரித்து பூசை செய்துவந்தார்.17ஆவது திங்கள் கிழமை ஈசன் தோன்றி ,கங்கனம் கட்டி வேள்வி செய்து,மணம் புரிந்துக்கொண்டார்.
தலச்சிறப்புகள்

1.பிர்மா திருமணம் செய்து வைத்தத்திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
2  அரசகுமாரன் ஒருவனுக்குக்கிரகங்கள் தோஷம் நீங்கி,ஈசன் திருமணம் செய்து வைத்தத்திருத்தலம் ஆகும்.
3அகத்தியர்,வாதாபியை கொன்றதனால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்ற திருத்தலம்.
4.  தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர் அக்னி தீர்த்தில் நீராடி,ஈசனை வழிபட்ட திருத்தலம்
5. ஈசன் இங்கு தன் வலபாகத்தை  ஈஸ்வரிக்குக்கொடுத்துள்ளார்.
6.பிள்ளையார் திருமணச்சடங்கில் இங்கு தன்னைத்தானே பூசை செய்து கொடுத்துள்ளார்.
7.   திருமணத்தலம் என்பதால், கொடி மரமும்,நவக்கிரகமும் கிடையாது.
8 நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் ,ஈசானத்தில்  உள்ள ஈஸ்வரனுக்கு  48அகல் தீபம் ஏற்றி ,அர்ச்சனையும் செய்து  வழிபட்டால்,நலம் கிடைக்கும்.

இத்தலத்துடன் தொடர்புடைய பிற தலங்கள்

1.தேரழந்தூர்  சொக்காட்டான் விளையாடி பசு சாபம் நீங்கப்பெற்றது.
2.  கோமல் ,மாந்தை பார்வதி பசுவாக மேய்ந்தத்தலங்கள்
3.  திருக்குளம்பியம்.- பசுவான பார்வதியின் குளம்படிபட்டு, ஈசன் காளையுரு கொண்டு  விரட்டிய தலம்
4.   திருவாவடுதுறை- இத்தலத்தில் உள்ள  குளத்தில் பசுவாகிய பார்வதி இறங்கி பெண் உருவப்பெற்றதிருத்தலம்.
5.  திருத்துருத்தி _(குத்தாலம்)_பரத மகரிஷியின் வளர்ப்பு  மகள் பார்வதி,ஈசனை நினைந்து தவம் புரிந்த திருத்தலம்.
6.  திருவீழிமிழலை_- பந்தல் கால் நடப்பட்ட திருத்தலம்.
7  திருவேள்விக்குடி- திருமணம் புரிந்த திருத்தலம்.
8  குறுமுளைப்பாடி- பாலிகை கரைத்த திருத்தலம்.
9.  மேலத்திருமணஞ்சேரி-  ( எதிர்கொள்பாடி)_. தேவர்கள்,அகத்தியர்,ஈசன், ஈஸ்வரியை திருமணக்கோலத்துடன் எதிர்கொண்டு அழைத்தத்திருத்தலம்.
10.    திருமணஞ்சேரி-(மணம் மகிழ்ந்த சேரி) -வரவேற்புத்தலம்,   தேவர்களுக்கும்,பூலோகத்தவர்க்கும் காட்சி கொடுத்த  திருத்தலம்.
11.  பந்தநல்லூர்-  திருமண நலுங்கு செய்த திருத்தலம்.
12. திருக்குரங்காவல்-  சிவன்,பார்வதி,வாலி பூச
பூசை செய்த திருத்தலம்.

13.  திருச்சத்திமுற்றம்-  சிவலிங்கத்துடன் பார்வதி தேவி ஆரத்தழுவிய காட்சி.

பின் குறிப்பு

திருவேள்விக்குடியில் கடைகள் ஏதும் இல்லாத காரணத்தால் 

,திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ,குத்தாலத்தில்  

இறங்கி,அர்ச்சனைப்பொருள்கள் வாங்கி கொண்டு,ஆட்டோ அல்லது 

டாக்சில்யில் தான் வரவேண்டும்.இவ்வூருக்கு பேரூந்து வசதி அரிதாக 

உள்ளது. மயிலாடுதுறை வழியாக திருப்பனந்தாள் செல்லும்  20 நம்பர் 

பேரூந்து , செல்வம் பேரூந்து  ஆகியன இத்தலத்தலத்தின்  பேரூந்து 

நிறுத்தத்தில் நின்று செல்லும்.

இத்தலத்தில் இறைவனை வேண்டினால் திருமணத்தடை,நவக்கிரக 

தோஷம்,வணிகத்தில் ஏற்றத்தாழ்வு,நோய்பிணி நீங்கும் என்பது தல 

வரலாறாகும்.

அர்ச்சனைப்பொருள்கள்.

குங்குமம்

பூமாலை

காட்டியப்பூ

தேங்காய்

வாழைப்பழம்

வெற்றிலைப்பாக்கு

சூடம்

திரிநூல்

நல்லண்ணை

ஊதுபத்தி

இத்தலம் பற்றிய அறிய

முனைவர்.இரா.கார்த்திகேயன்

அலைப்பேசி 6381742484


..........................................................






சிவராத்திரி யமமகிமை /ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் .J.P


ஆசியன்

ஐரோப்பாவில்