(குறிப்பு . அனைத்து விழாக்களையும்
https://www.youtube.com/user/Worldkovil காணலாம் .)
என்னப்பன் முருகனுக்கு முதல் வணக்கம்
இன்று உலகெலாம் பரந்து வாழும் ஆன்மீக உறவுகளுக்கு
இலங்கையில் இருந்து அழகிய உயரிய திருவிழாக்களை தந்து
கொண்டு இருக்கும் இணுவையம்பதி தம்பி துரை அபிராமி மணாளன்
சிறந்த படப்பிடிப்பை எண்ணி மகிழ்கிறேன் .. அவருடைய ஒரு வீடியோ
பதிவு பார்த்தேன் . இந்தியாவை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் அனுப்பி
இருந்தார். மிகவும் நேர்த்தியாக இருந்தது .உடனே அவரிடம் தொடர்பு
கொண்டேன் . அப்பொழுது இணுவில் பரராஜா சேகரப்பிள்ளையார் திருக்கோவில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது உலகக்கோவிலுக்கு வீடியோ படம் பதிவு செய்து தர முடியுமா என கேட்டபோது ஓ ம் என்று சொன்னார் .இன்றுவரை தொடர்ந்து என்னோடு இணைத்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் . நான் வேலைக்கு சென்றாலும் அவருக்காக தொடர்ந்து ஊக்கம் கொடுத்து இருவரின் கடுமையான வேலையே
இன்று உலக ஆன்மீக மக்கள் மனதில் தம்பி துரை அபிராமி மணாளன்
மிக சிறந்த ஒரு சாதனை படைத்து இருக்கிறார் . கொடியேற்றம் . முதல்
தீர்த்தம் வரை தொடர்ந்து இணுவைக் கந்தனின் பெரும் புகழை உலகுக்கு தந்த தம்பி துரை அபிராமி மணாளன் குடும்பத்தினருக்கு அவர் தம் நண் பர்கள் . ஆலய குருமார்கள் . ஆலய அறங்காவலர்கள் . அனைவருக்கும்
வாழ்க வளமுடன்
தமிழன்புடன்
பி.சி.இராஜகருணா
உலகக்கோவில்
02.07.2019
Keine Kommentare:
Kommentar veröffentlichen