கணபதி சரணம்
ஞானப் பொருளே கணநாதா
நன்மைகள் தந்திடும் கணநாதா
ஞானப் பொருளே கணநாதா
சக்தி மைந்தனே கணநாதா
காத்தருள்வாய் கணநாதா
கருணை மிகுந்த கணபதியே
உன் தாள் பணிந்தேன் எழுதுகிறேன்
காப்பாய் எந்தன் நூலினை யே
கணநாதா ஓம் கணநாதா
சக்தியின் மைந்தா கணநாதா
ஞானப் பொருளே கணநாதா
காப்பாய் காப்பாய் கணநாதன்
தமிழ் ஈழ முருகதாசன்
26.03.2019
*முருகனின் அபூர்வ
ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்..*
ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்..*
தனமுதல் அழைத்து வரும் *ரஹாரத்தாலே*
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் *ஹகாரத்தாலே*
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் *ணகாரத்தாலே*
சகலமுமே மோஹிக்கும் *பகாரத்தாலே*
சகலரையும் ஸ்தம்பிக்கும் *வகாரத்தாலே*
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.
மேற்கண்ட மந்திரம் *அகஸ்தியர்* அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும்
முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.
முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.
*ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்
பிரயோகம்:-*
பிரயோகம்:-*
1. *சரஹணபவ* - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
2. *ரஹணபவச* - என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன்
கூடிய வளவாழ்வு உண்டாகும்.
கூடிய வளவாழ்வு உண்டாகும்.
3. *ஹணபவசர* - என தொடர்ந்து ஜெபித்து வர பகை,பிணி நோய்கள் தீரும்.
4. *ணபவசரஹ* - என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும்
துன்பங்கள் நீங்கும்.
துன்பங்கள் நீங்கும்.
5. *பவசரஹண* - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும்
மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
6. *வசரஹணப* - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால்
வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
முருகனின் 16 வகைக் கோலங்கள்
1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள்
வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர்
திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர்
திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை
ஆண்டவர் திருவடிவம் இது.
ஆண்டவர் திருவடிவம் இது.
3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.
சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப்
பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன்
கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன்
கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி,
சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும்
இவரது திருவுருவம் உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும்
இவரது திருவுருவம் உள்ளது.
6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை,
சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர்
ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர்
ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும்.
கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத்
தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம்
ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.
கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத்
தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம்
ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.
8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில்
அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட
சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட
சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.
திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
10. தாரகாரி : தாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான்
இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும்
திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும்
திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
11. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும்.
பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
12. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி
பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும்.
காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய
இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.
13. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில்
அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர்
முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர்
முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
14. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும்
தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர்,
திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர்,
திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
15. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம்
அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது
திருவுருவம் உண்டு.
அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது
திருவுருவம் உண்டு.
16. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம்
பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு
இன்பமான வாழ்வு அளிப்பவர்
பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு
இன்பமான வாழ்வு அளிப்பவர்
ஈஸ்வர பட்டம் பெற்றவர்களாவர்.
விக்னேஸ்வரர், சனீஸ்வரர், ராவணேஸ்வரன், சண்டிகேஸ்வரர்
ஆகிய நால்வர் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்றவர்களாவர்.
ஆகிய நால்வர் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்றவர்களாவர்.
ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள திருப்பேணுபெருந்துறை
(திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் கோயிலில் உள்ள
முருகப் பெருமான், பிரணவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
(திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் கோயிலில் உள்ள
முருகப் பெருமான், பிரணவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
சிவன் எல்லாம் அறிந்தவராக இருக்க, சிறியவனாகிய தான்,
தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி வருத்தம்
கொண்டார் முருகன். எனவே, அவர், இத்தலத்தில்
லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு மன அமைதி பெற்றார்.
தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி வருத்தம்
கொண்டார் முருகன். எனவே, அவர், இத்தலத்தில்
லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு மன அமைதி பெற்றார்.
சிவன் அவருக்கு காட்சி தந்து, நீயும் நானும் ஒன்றே எனக்கூறி
மைந்தனை தேற்ற, மனம் தெளிவடைந்தார் முருகன். எனவே
, பிரண வேஸ்வரர் என்று பெயர் பெற்றார். திக்குவாய் உள்ளவர்கள்
இந்த முருகனை வேண்டிக்கொண்டால் மனஆறுதல் கிடைக்கும்
என்பது நம்பிக்கை. எனவே இத்தல முருகனை "தந்தை பட்டம்
பெற்ற தனயன் என அழைக்கின்றனர்

திருப்புகழ் 886 மரு
உலாவிடும் (சப்தஸ்தானம்)
உலாவிடும் (சப்தஸ்தானம்)
( சப்தஸ்தான ஸ்தலங்கள் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை,
திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்
மற்றும் திருவையாறு, )
திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்
மற்றும் திருவையாறு, )
தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன ...... தனதான
......... பாடல் .........
மருவு லாவிடு மோதி குலைப்பவர்
சமர வேலெனு நீடு விழிச்சியர்
மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர்
மதன னோடுறழ் பூச லிடைச்சியர்
இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்
மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே
சருவி யாரையும் வாவெ னழைப்பவர்
பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே
சலச மேவிய பாத நினைத்துமுன்
அருணை நாடதி லோது திருப்புகழ்
தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே
அரிய கானக மேவு குறத்திதன்
இதணி லேசில நாளு மனத்துடன்
அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
உழவர் சாகர மோடி யொளித்திட
அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே
திருவின் மாமர மார்ப ழனப்பதி
அயிலு சோறவை யாளு துறைப்பதி
திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி
பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி
திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் ... நறுமணம் உலவும் கூந்தலை
வேண்டுமென்றே அவிழ்ப்பவர்கள்,
சமர வேல் எனு(ம்) நீடு விழிச்சியர் ... போருக்கு உற்ற வேல் என்று
சொல்லத் தக்க நீண்ட கண்களை உடையவர்கள்,
மனதிலே கபடு ஊரு பரத்தையர் ... உள்ளத்தில் வஞ்சனை
ஊர்கின்ற வேசியர்கள்,
ரதி கேள்வர் மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் ... ரதியின்
கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும்*, போருக்கு ஏற்றதுமான
இடையை உடையவர்கள்,
இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர் ... இளைஞர்களின்
அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற மார்பகங்களை உடையவர்கள்,
மதுர மா மொழி பேசு(ம்) குணத்தியர் ... இனிமையான பெரிய
பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள்,
தெரு மீதே சருவி யாரையும் வா என அழைப்பவர் ... தெருவில்
கொஞ்சிக் குலாவி யாரையும் (வீட்டுக்கு) வரும்படி அழைப்பவர்கள்,
பொருளிலே வெகு ஆசை பரப்பிகள் ... பொருள் பெறுவதிலேயே
மிக்க ஆசை பரந்துள்ள மனத்தினர்கள்,
சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே ... எல்லா விதமான
வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய வேசியரை நான்
நெருங்காமல்,
சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன் அருணை நாடு
அதில் ஓது திருப்புகழ் ... தாமரையை ஒத்த உனது திருவடியைத்
தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே ... மனம் குளிர
மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள்
புரிவாயாக.
அரிய கானகம் மேவும் குறத்தி தன் இதணிலே சில நாளு(ம்)
மனத்துடன் அடவி தோறுமெ வாழ் இயல் பத்தினி
மணவாளா ... அருமையான (வள்ளி மலைக்) காட்டில் இருந்த
குறப்பெண்ணின் பரண் மீது சிறிது காலம் மனம் வைத்து, (சந்தனக்காடு,
சண்பகக் காடு முதலிய) பல காடுகள் தோறும் வாழ்ந்து உலவிய பத்தினி
வள்ளியின் காதல் கணவனே,
அசுரர் வீடுகள் நூறு பொடிப் பட உழவர் சாகரம் ஓடி
ஒளித்திட அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட
நினைவோனே ... அசுரர்கள் இருப்பிடம் யாவும் பொடியாக, அசுரப்
படை வீரர்கள் கடலுள் ஓடி ஒளிந்து கொள்ள, தேவர்களின்
பொன்னுலகத்தில் பொன் மழை மிகப் பொழிய நினைந்து உதவியவனே,
திருவின் மா மரம் ஆர் பழனப் பதி அயிலும் சோறவை
ஆளு(ம்) துறைப் பதி ... லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள்
நிறைந்த திருப்பழனம் [1] என்னும் தலம், உண்பதற்குரிய
திருச்சோற்றுத்துறை [2] என்ற தலம்,
திசையில் நான் மறை தேடிய முன் குடி ... திசைகள் தோறும்
நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய
திருவேதிக்குடி [3] என்ற தலம்,
விதி ஆதிச் சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி ...
பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்)
கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் [4] என்ற தலம்,
பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு
திருப்பதி பெருமாளே. ... தாமரையில் வாழும் நாயகனான சூரியன்
பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி [5] என்ற தலம்,
திருநெய்த்தானம் [6], திருவையாறு [7] என்ற தலங்களுடன், ஏழு
திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்**) வாழ்கின்ற பெருமாளே.
மங்களம் ஜெய மங்களம் முருகனுக்கு விஜயமங்கலம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen