தமிழ் நாடு
ஆக்கம்/ .படம்
முனைவர்.இரா.கார்த்திகேயன்
பதிவு -உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
02.03.2019

இத்திருத்தலம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்த மானதாகும்.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர் ஆலயம் .தென்குரங்காடுதுறை (ஆடுதுறை).
சுவாமி:அருள்மிகு ஆபத்சாகஸ்வரர் அம்பாள்:அருள்மிகு பவளக்கொடியம்மை

இக்கோவில் அமைப்பு
இத்தலத்தின் எதிர்புறம் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது.இக்குளத்தைக் கடந்து சென்றால் விண்ணைமுத்தமிடும் மிகப்பெரிய இராஜகோபுரம் அமைந்துள்ளது.இராஜகோபுரத்தில் ஏழு மாடங்களுடன் சுதை வேலைப்பாடுகளுடன்அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தையடுத்து வெளிப்பிரகாரத்தில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த விநாயகர் சன்னதியும்,நந்தியப்பெருமான் காட்சித்தருகிறார்.இதனைக்கடந்து சென்றால் சிற்ப வேலைப்பாடுகளுடன் சிறிய மகாமண்டபம் காணப்படுகிறது.இதனுள் விநாயகர் சன்னதியும்அமைந்துள்ளது.நேராக சென்றால் கருவறையில் ஆபத்சாகஸ்வரர் லிங்க வடிவில்காட்சித் தருகிறார்.

இத்தலத்திற்கு இன்னொரு வரலாறு உண்டு.இத்தலதிற்கு வடக்கே காவிரியாறு வளங்கொழிக்கிறது.முன்னொருக்காலத்தில் வணிகன் ஒருவனின் மனைவி இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்டு வந்தாள்.அவளுக்கு குழந்தைப்பேறு இல்லாமையால் வருந்தினாள். எப்பெருமான் அருளால் மகப்பேறு அடைந்தாள்.அந்நிலையில் பெருமானை வழிபட்டு வரும்போது நள்ளிரவுநேரம் திடீரென்று காற்றுடன் மழை பெய்ந்தது.காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்தப்பெணுக்கு மகப்பேறு ஏற்பட வலி உண்டானது.அப்போது எம்பெருமான் பெண் உருவெடுத்து அப்பெணுக்கு பிரசவம் செய்தார்.மறுநாள்அவள் கணவன் அழைத்துச்சென்றான் என்பது தலவரலாறாகும்.

தல விருட்சம்
இத்தலத்திற்கு பவளமல்லி தலத்தின் விருட்சமாகும்
திருத்தலச்சிறப்பு:
இத்திருக்கோயிலில் விற்றிருந்து அருள்பலித்து வரும் பவளக்கொடியம்மை தன்னை நாடிவரும் ஆண் மற்றும்பெண் என இருபாலரும் தன்மனம்,மொழி,மெய்யால் வணங்கி வந்தால் திருமணம்,மகப்பேறு பெறலாம்.
தீர்த்தம்
சூரியத்தீர்த்தம்,சந்திரன் தீர்த்தம்
இத்தலத்தின் மூர்த்தி,தீர்த்தம்,எனக்கொண்டது.தீர்த்தம் பொன்னி நதியான காவிரி பாய்ந்து நன்செய்,புன்செய் ஆகிய இரண்டும் வளங்கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் கும்பகோணத்திலிந்து கிழக்கே 15கி.மீ தூரத்திலும்,மயிலாடுதுறையிலிருந்து மேற்கே26 தூரத்திலும், திருப்பனந்தாள் தெற்காக10கி.மீ தூரத்திலும். காவிரியாற்றின் தென்க்கரையில் நடுவில்அமைந்துள்ளது.இத்தலத்தில் பவளக்கொடி உடனாய ஆபத்சாகஸ்வரர் வரும் பக்தர்கு அருள்பலித்து வருகின்றனர்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen