Meine Blog-Liste

Freitag, 7. September 2018

உலகிலேயே_உயர்ந்த_தாரக_மந்திரம்_இதுதான்.

#உலகிலேயே_உயர்ந்த_தாரக_மந்திரம்_இதுதான்.
ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்து கொண்டிருந்தனர். எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலில் போட்டன. ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது. ஆஞ்சநேயர் அந்தப்பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார், மனதிற்குள் ராம நாமம் ஜபித்தபடி...
ராமபிரானும் இதை கவனித்து கொண்டிருந்தார். அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது. நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கி போட்டால் என்ன என்று கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலில் போட்டார். அந்தக் கல் மற்றக் கற்களின் மேல் சரியாக அமரவில்லை. அது தண்ணீரில் அடித்து சென்று விட்டது.
ராம பிரானுக்கு வருத்தம். இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே! இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று வருத்தப் பட்டார்.
ஆஞ்சநேயர் அருகில் வந்தார். அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். இருந்தார். ஆஞ்சநேயா! நான் செய்ததை பார்த்து விட்டாயா? எனக்கு ஒரு கல்லை போட கூட தெரியவில்லை, என்னை நினைத்து வெட்கமாக இருக்கிறது என்றார்.
அதற்கு ஆஞ்சநேயர், பிரபு! எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமானை ராம் ராம் என்ற உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே கற்களை தூக்கி போட்டன. அவை சரியாக அமர்ந்தது. தாங்கள் ராமனாகவே இருந்தாலும், ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களின் மேல் அமர்ந்திருக்கும் என்றாராம்.
ராம நாமம் அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம். ஸ்ரீராமரின் பெயரை இடைவிடாமல் உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்திலும் ராமனை காணலாம். எல்லா துன்பங்களிலிருந்தும் விடு படலாம்.
#ஸ்ரீராமஜெயம்! #ஸ்ரீராமஜெயம்!
#ஸ்ரீராமஜெயம்!

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்