Meine Blog-Liste

Sonntag, 23. September 2018

வராஹி தேவி, ஒம் நவசக்தி நாயகி ஆலயத்தில்

photoby .worldkovil rajakaruna
 Ohm navasakthi nayaki ampal Germany Gartenbau Georg Reifig) Hohenhorst 98 . 48341 altenberge Germany
வராஹி தேவி,  ''சர்வம் சக்தி மயம்''  புகழ்   அருள் மிகு ஒம் நவசக்தி நாயகி ஆலயத்தில்   வராஹி தேவி  எழுந்தருளி  இருக்கிறாள் . புலம்பெயர் திரு தலங்களில் வராஹி தேவியை    ஒம் நவசக்தி நாயகி ஆலயத்தில்  வழிபட்டால்  உங்கள்  துன்பங்கள்  விலகி ஆனந்த வாழ்வு பெறலாம் .இன்று 23.09.2018 முதன் முதலாக  காட்சி தருகிறாள் உலக மக்களுக்கு  இந்த பதிவை தருவதில்
உலகக்கோவில் சிறப்பு பெறுகிறது .
வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.

எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.

வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள்.

Samstag, 22. September 2018

இந்து கடவுள்களின் அற்புதங்கள்

பலரும் அறியாத
இந்து கடவுள்களின் அற்புதங்கள்

1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )

8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.

23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.

25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

Freitag, 21. September 2018

புரட்டாதிச் சனி

கிருஸ்ணா சர்மா
புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிழமை அதிகாலையில் துயில் நீத்து,தூய நீராடி ஆசாரமாக சனிபகவானுக்கு எண்ணெய்சுட்டி, நீலமலர்மாலை என்பன சார்த்தி வழிபடுவர்.
புராணக்கதை தொகு
சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும்.
இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.
அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.
இராவணனின் மகன் இந்திரசித்து இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரசித்து பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.
விரதமுறை தொகு
சனீஸ்வரன் தானியம் எள், வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.
ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறு பதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்.

Donnerstag, 20. September 2018

நவகிரகங்களில் இருந்து சக்தி வெளிப்படுவது உண்மை தான்

நவகிரகங்களில் இருந்து சக்தி வெளிப்படுவது உண்மை தான் என நிரூபித்த விஞ்ஞானி
“சூரிய” குடும்பத்தில் 9 கோள்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நவ கோள்களும் இந்த பூமியில் இருக்கும் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற உண்மையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரத நாட்டின் சித்தர்களும், வானியல் அறிஞர்களும் அறிந்தனர். ஆனால் இந்த உண்மை பற்றி கடந்த நூற்றாண்டில் தான் மேலை நாட்டு ஆய்வாளர்கள் அறிந்தனர். அதைப் பற்றி இங்கு சிறிது காண்போம்.
இந்த நவகிரகங்களும் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக உண்டானது என்பது நமது நாட்டின் மெய்ஞ்ஞானிகளும் இன்றைய நவீன விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உண்மையாகும். ஆக இந்த நவகோள்கள் ஒவ்வொன்றும், ஓரு விதமான கதிர்வீச்சை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இந்த நவ கோள்களின் “கதிர்வீச்சு சக்தி” பல ஆயிரம், லட்சம் கிலோமீட்டர்கள் கடந்து, இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரின் மீதும் தனது ஆற்றலை செலுத்துகிறது. இது அந்த உயிரினத்தின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கிரகங்களை பற்றி 1920 ஆம் ஆண்டுகளில் “சிஜெவ்ஸ்கி” என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆராய்ந்து சில உண்மைகளைக் கண்டுபிடித்தார். அதன்படி சூரியனில் எந்த ஓரு வருடத்தில் வெடிப்பு ஏற்படுகிறதோ அந்த வருடங்களில் பூமியின் பல பகுதிகளில் மனிதர்களுக்கிடையே போர்கள் ஏற்படுகிறது எனவும், அது போல் “செவ்வாய் கிரகம்” ஓரு குறிப்பிட்ட அமைப்பில் வரும் வருடங்களில் உலகின் மிக சிறந்த “போர்வீரர்களும், தளபதிகளும்” பிறப்பதாக கண்டுபிடித்தார். சிஜெவ்ஸ்கியின் இந்த ஆய்வு முடிவு மறுக்க இயலாத படி இருந்தன.
ஆனால் அப்போது “ரஷ்ய” அதிபராக இருந்த “ஸ்டாலின்” சிஜெவ்ஸ்கியின் இந்த ஆய்வு முடிவு தங்களின் “கம்யூனிச” கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக கூறி, சிஜெவ்ஸ்கியின் ஆய்வு முடிவுகளை மறைத்து, சிஜெவ்ஸ்கியை ரஷ்யாவின் “சைபீரியா” பகுதியில் சிறையில் அடைத்தார்.
1953 ஆம் ஆண்டு ஸ்டாலின் இறந்த பிறகு விடுதலை செய்யப்பட்ட சிஜெவ்ஸ்கி சில மாதங்களிலேயே இறந்து போனார். பிறகு அவருடைய ஆய்வுகளை பற்றி ஆராய்ந்த பிற மேலை நாட்டு விஞ்ஞானிகள் அவரது முடிவுகள் உண்மை என்று ஏற்றுக்கொண்டனர்
நவகிரகங்களின் தாக்கம் மனிதர்களின் வாழ்வில் பிரதிபலிக்கிறது என்பதை தமிழர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து அதன் படி ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கினார். நவீன விஞ்ஞானமோ அதை சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளது. அறிவியலிலும் ஜோதிடத்திலும் மேலோங்கி இருந்த தமிழர்களின் அறிவாற்றல் மழுங்கடிக்கப்பட்டதா இல்லை எப்படி அந்த அறிவு தொடர்ச்சி அறுந்தது என்பதை இறைவன் மட்டுமே அறிவார்.

சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் முறையும்

கோவில்களில்
சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல்வல்லான் மற்றும் சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கிக் காட்சியளிப்பார்கள்.சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார்.சிவ வழிபாட்டின்போது பெறும் பூமாலை,பரிவட்டம் முதலிய சிவபெருமானுக்கு அணிவித்த பொருட்களை சண்டேசுவரர் சன்னதியில் சேர்த்து, “சிவதரிசனப்பலனைத் தர வேண்டும்” என்று அவரைப் பிரார்த்தித்து, அங்கு தரப்படும் திருநீற்றை அணிய வேண்டும் என்பது சமயநூல்களின் விதி.

சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் முறையும்
இதை அறியாத பலர்,தமது ஆடைகளில் உள்ள நூல் இழைகளையும் நூல் திரியையும் சண்டேசுவரர் சன்னதியில் எடுத்துப் போடுகின்றனர்.இது பெரும் தவறு.
சண்டேசர்,இடையறாத தியானத்தில் இருப்பவர்.அவரிடம் நமது வருகையையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கும் வகையில் அவரது சன்னதியில் நின்று மெள்ள(கை)த் தட்டுதல் வேண்டும்.இதைப் புரிந்து கொள்ளாமல் சண்டேசரைச் ‘செவிட்டுச் சாமி’ என்றும், கைகளைப் பெரிதாகத் தட்டியும்,சொடுக்கவும் செய்தால் அவரது அருள் கிடைக்கும் என்று கூறுவது தவறு.சண்டேசர் சன்னதியை முழுமையாக வலம் வரக்கூடாது.சந்நிதிக்கு வலப்புறமாகச் சென்று சண்டேசரைத் தரிசித்துவிட்டு, வந்த வழியே(அரை வட்டமாக) திரும்ப வேண்டும்.பக்தர்களுக்கு அனுமதி அளித்து,அவர்களை கோவிலுக்குள் அனுப்பும் அதிகாரம் உடையவர் நந்திதேவர்.அது போல,சிவபுண்ணியப் பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் சண்டேசருக்கு உண்டு.

சிலர் ‘சண்டேசர் சன்னதி இடுக்கில் உள்ளது;சென்று தரிசிக்கச் சிரமமாக உள்ளது’ என்றும் அவரைத் தரிசிக்காமலேயே கோவிலை வலம் வருவர்;இவரை அவசியம் வலம் வர வேண்டும்;
கோவிலில் முதலில் விநாயகரையும்,நிறைவாக சண்டேசரையும் வழிபட்டால்தான் சிவ வழிபாடு முழுமையடையும்.சிவாலயத் திருவிழாக்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்னும் திருவீதியுலா நிகழும்.அப்போது,கணபதி,முருகன்,சிவன்,அம்பிகை எனும் வரிசையில் சண்டேசர் இறுதியாக வருவார்.

கேதார கௌரி விரத பாடல்


கேதார கௌரி விரத பாடல்

காப்பு

முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.

வேண்டுதற் கூறு

காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே

காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்

சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளிதாயே

கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே

சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்

பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்

அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்

விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!

ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா

காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே

காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே

காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்

சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா

காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்

பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி

சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை

இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு

பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர

ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்

சனி மஹா பிரதோஷம்

சனி மஹா பிரதோஷம்
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.
யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும்.
அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது
ஐதீகம்.
எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும்.
சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது........
அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும்,
தோஷங்கள் நீங்குகிறது.
எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.
எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.
அதுவும் வரும் சனிக்கிழமை.........
சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம்.
ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம்வரும் சனிக்கிழமை 22.09.2018 ,பிரதோசம்..
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.
யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும்.
அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது
ஐதீகம்.
எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும்.
சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது........
அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும்,
தோஷங்கள் நீங்குகிறது.
எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.
எனவே, பிரதோஷ

கர்மா }

{ கர்மா } எங்க நிலத்தில் நெல் விதைத்தேன் நெல்லுடன் பில்லும் பூண்டும் சேர்ந்து வருகிறது ... இந்தபூமியில் இப்போது நீ விதை விதைத்தாய் இதற்க்குமுன் வேறொருவன் விதைத்தான் அதற்க்குமுன் இன்னொருவன் விதைத்தான் ஆனால் எப்போதும் புல்லும் பூன்டும் சேர்ந்தே முளைக்கும் .காரணம் என்ன...? அங்கு மண்னில் ஏற்கெனவே தேவையற்ற விதைகள் மண்னில் புதைந்திருக்கின்றது பல்லாயிமாண்டு காலங்களாய் அது இருக்கின்றது ...மனிதனோ சிறிது காலமாகவேதான் விதைக்கிறான்.. மனிதனுக்கு தேவையானவைகளை மனிதன் விதைத்துக்கொள்கிறான் ஆனால் மற்ற ஜீவன்களுக்கு யார்விதைப்பது ஆடு மாடு பறவை பூச்சியினங்கள் வாழ அதற்க்கு தகுந்தாற்போல் புல்லும் பூன்டும் செடி கொடியும் உன்டானது ..அதுமட்டுமில்லாமல் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உன்டாகும் நோய்களுக்கு மருந்தாக தாவரங்கள் உருவானது... மனித வாழ்க்கையும் அப்படித்தான் நன்மையை செய்தாலும் தீமைகள் வந்துசேரும் அது எப்படி நேருகின்றது ஏன் உருவாகின்றது ... ஒரு நன்மை செய்யும்போது ஒரு தீமை தானகவே உன்டாகும் . உன் முன்னோர்கள் செய்தது சிறிதளவு நீ அறியாது செய்வது தானகவே தவறு நேரும்படியாகுவது இப்படியாக கர்மவினை பல முறையில் தோன்றுகிறது ..ஒருவன் பசியை நீக்குவது நன்மையே அவனுக்கு மாமிசஉனவு தானம் செய்தால் அதுவே பெரும் பாவமாகின்றது இப்படியாக தீமைகள் உருவாகி துன்பமனுபவிக்க நேரிடுகின்றது ...நன்றி நமசிவாய கந்தர்மலை சித்தர்.

Dienstag, 18. September 2018

Sonntag, 16. September 2018

புண்ணியம் தரும் புனித புரட்டாசி

புண்ணியம் தரும் புனித புரட்டாசி
‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள்.
அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும்அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து,இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள்.
இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால்இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர்.
புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும் போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும்பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு.
நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம்பெறுவது கன்னி ராசியில்.எனவேதான சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள்.
அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி
என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன்.
இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன்பெயர் பெற்ற காரணமும் இதுவே. இதன் மூலம் அரியும், சிவனும் ஒன்று என்றகருத்து நமக்கு நன்றாக புலப்படுகிறது.
எனவேதான் புரட்டாசி மாதத்தில் சைவ, வைணவ பேதம் இன்றி பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவினை தவிர்த்து சைவஉணவினையே உட்கொள்கின்றனர்.
அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால் புரட்டாசி மாதத்தில் பகல்பொழுதினில் காற்றினில் ஈரப்பதம் குறைந்து உஷ்ணமாக உணர்வோம். அதோடு வெயிலும் கடுமையாக இருக்கும்.
இந்த நேரத்தில் அசைவஉணவினை உட்கொள்வதால் வயிறு சார்ந்த உபாதைகளுக்கு ஆளாவோம் என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் அசைவத்தை புரட்டாசியில் தவிர்த்தனர் என்றும் சொல்வார்கள்.
புரட்டாசி மாதத்தை ஒட்டிய காலகட்டத்தில்
சுக்கிரன் என்ற கோள் கன்னியில் வந்து அமர்வார். மருத்துவ ஜோதிடத்தில் சுக்கிரனை கண்பார்வைக்கு உரிய கோள் என்பார்கள். சுக்கிரன் கன்னி ராசியில் நீசபலத்துடன் அமர்வதாலும்,சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெறுவதாலும் இந்த நேரத்தில் கண்நோய் சார்ந்த உபாதைகள் மனிதர்களை தாக்குவதையும் பார்த்திருப்போம்.
‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படும் ஒருவித கண்நோய் பெரும்பாலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நம்மைத் தாக்குவதை அனுபவ பூர்வமாகக் கண்டி ருப்போம். சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து சந்திரனின்தீட்சண்யமும் இணையும் காலத்தில் நல்லமழை பெய்யும் என்பது ஜோதிட விதி.
இதனால்தான் பகல்பொழுதில் கடும் வெயில் காய்ந்தாலும், புரட்டாசி மாத இரவு நேரத்தில் அதிகமான மழையும் பெய்கிறது. ஒரே நாளில் மாறுபட்ட தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ளும் மனிதன் அதற்கேற்றவாறு தனது உடல்நிலையையும் பராமரிக்க வேண்டி உள்ளது. அதனாலேயே உணவுப் பழக்க வழக்கத்திலும் கட்டுப்பாடு என்பது அவசியமாகிறது.
மகாவிஷ்ணுவின் அம்சம் புதன் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறு இருக்க புரட்டாசியில் புதன்கிழமைதானே முக்கியத்துவம் பெறவேண்டும், மாறாகசனிக்கிழமை சிறப்பு பெறக் காரணம்என்ன?
பொதுவாக பெருமாளின் அடியவர்கள் மீது சனி பகவான் தனது முழு தாக்கத்தையும்
காண்பிப்பதில்லை, மேலும் புரட்டாசி சனிக்கிழமை அன்று அவரது வீரியம்
குறைந்திருக்கும் என புராணங்கள் உரைக்கின்றன.
சனிக்கிழமையில்பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான்
புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது.
புரட்டாசியில் வரும் அமாவாசை, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் 15 நாட்களை மஹாளய பட்சம் என்று சொல்வார்கள்.‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது,பெரியப்பா, பெரியம்மா,சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன்,சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நண்பன் என நாம்அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்பநினைவிற்குக்கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்ததண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில்இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த 15 நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுப நிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள்சாந்தி பெறும் என்பது நம்பிக்கை.
15 நாட்களும் முடியவில்லை என்றாலும்,மஹாளய அமாவாசை நாளில்
மட்டுமாவது முன்னோர்களின் நினைவாக விரதம்இருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர்,ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம்செய்வதால் புண்ணியம் கிட்டும்.
இதற்கும் மகாபாரதக்கதை ஒன்று ஆதாரமாகச்சொல்லப்படுகிறது. தானதர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன்இறந்த பிறகு சொர்க்கலோகம் சென்றானாம். அங்கே அவன் செய்த தான தர்மங்களின் பலனாகதங்கமும், வெள்ளியும், இதரரத்தினங்களும் மலை மலையாகக் கிடைத்ததாம். ஆனால், அவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும்
கிடைக்கவில்லை.
காரணம் இதுதான் - அவன்எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்தபோதிலும் தான் வாழ்ந்த காலத்தில்அன்னதானம் மட்டும் செய்திருக்க வில்லை.தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின்அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்பவந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும்,முதியோர்க்கும் அன்னதானம்செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரியகடன்களை எள்ளும் தண்ணீரும்இறைத்து பூர்த்தி செய்து மீண்டும்சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
அந்த 14 நாட்களுடன் இறுதி நாளான அமாவாசையையும் சேர்த்து மொத்தம்15 நாட்களும் மஹாளய பட்சம்என்று அழைக்கப்படுகிறது. பிரதி மாதம்
வருகின்ற அமாவாசை என்பது சூரிய, சந்திரனின் சேர்க்கையைக் குறிக்கும்.
பிதுர்காரகனான சூரியனும், மாதுர்காரகனான சந்திரனும்விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி இராசியில் ஒன்றிணையும்போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. பிறமாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர்.
ஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள் மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். பிதுர்காரியம் முடிந்தவுடன் தேவகாரியம் துவங்கும் என்பதை உணர்த்தும் வகையில் மஹாளய அமாவாசைக்கு மறுநாளில் இருந்து நவராத்திரி என்றழைக்கப்படும் அம்பிகைக்கு உரிய திருவிழாவானது வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.
நவராத்திரியின்இறுதியில் வரும் ஆயுதபூஜை விழா எத்தனை மகத்துவம் வாய்ந்தது என்பது நாம் அறிந்ததே. இவ்வாறு தெய்வத் தினையும், முன்னோரையும் ஆராதனை செய்து புண்ணியம் தேடுவதால் புரட்டாசி என்பது புனிதமான மாதமாக நம்மால் கொண்டாடப்படுகிறது என்றால் அது மிகையில்லை.
இந்த வருடம் வரும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மிகவும் அரியதாகும். 4.10.2018 அன்று பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதியும், பெருமாளின் திருநட்சத்திரமான திருவோணமும், மூன்றாவது சனிக்கிழமையும் ஒன்றாக இணைந்து வருகிறது.
இந்த நாளில் வீடுகளில் மாவிளக்கு மாவு இட்டு பூஜை செய்வதோடு அருகிலுள்ள ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன்
கூட்டுப் பிரார்த்தனை செய்ய நாடு நலம் பெறும், நாமும் வளமடைவோம்.

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் ' 7ம் நாள் உற்சவம்

அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் 'விளம்பி' வருட மகோற்சவத்தின் 7ம் நாள் உற்சவம்



thiruvanamalai pillaiyar திருவண்ணாமலை பிள்ளையார்


thiruvanamalai pillaiyar திருவண்ணாமலை பிள்ளையார்


https://youtu.be/qkBHg1z82q8

Samstag, 15. September 2018

வெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி


பைரவர் 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.

வெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி
பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். தினமும் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

01. ஓம் பைரவனே போற்றி
02. ஓம் பயநாசகனே போற்றி
03. ஓம் அஷ்டரூபனே போற்றி
04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
05. ஓம் அயன்குருவே போற்றி

06. ஓம் அறக்காவலனே போற்றி
07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
09. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
15. ஓம் உக்ர பைரவனே போற்றி

16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

21. ஓம் எல்லை தேவனே போற்றி
22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23. ஓம் கபாலதாரியே போற்றி
24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25. ஓம் கர்வ பங்கனே போற்றி

26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
29. ஓம் கருமேக நிறனே போற்றி
30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33. ஓம் கால பைரவனே போற்றி
34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37. ஓம் காசிநாதனே போற்றி
38. ஓம் காவல்தெய்வமே போற்றி
39. ஓம் கிரோத பைரவனே போற்றி
40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

41. ஓம் சண்ட பைரவனே போற்றி
42. ஓம் சட்டை நாதனே போற்றி
43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
47. ஓம் சிக்ஷகனே போற்றி
48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

51. ஓம் சிவ அம்சனே போற்றி
52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53. ஓம் சூலதாரியே போற்றி
54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
55. ஓம் செம்மேனியனே போற்றி

56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63. ஓம் நவரச ரூபனே போற்றி
64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67. ஓம் நாய் வாகனனே போற்றி
68. ஓம் நாடியருள்வோனே போற்றி
69. ஓம் நிமலனே போற்றி
70. ஓம் நிர்வாணனே போற்றி

71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72. ஓம் நின்றருள்வோனே போற்றி
73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74. ஓம் பகையளிப்பவனே போற்றி
75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
78. ஓம் பால பைரவனே போற்றி
79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
80. ஓம் பிரளயகாலனே போற்றி

81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
82. ஓம் பூஷண பைரவனே போற்றி
83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
84. ஓம் பெரியவனே போற்றி
85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

86. ஓம் மல நாசகனே போற்றி
87. ஓம் மகோதரனே போற்றி
88. ஓம் மகா பைரவனே போற்றி
89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
90. ஓம் மகா குண்டலனே போற்றி

91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92. ஓம் முக்கண்ணனே போற்றி
93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
94. ஓம் முனீஸ்வரனே போற்றி
95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98. ஓம் ருத்ரனே போற்றி
99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
100. ஓம் வடுக பைரவனே போற்றி

101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

Donnerstag, 13. September 2018

நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா 14.09.2018 வெள்ளிக்கிழமை

இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா 14.09.2018 வெள்ளிக்கிழமை இன்று துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெறும்.
23.09.2018 ஞாயிற்றுக்கிழமை ரதோற்ஸவப் பெருவிழாவும்
24.09.2018 திங்கட்கிழமை தீர்த்தோறஸவமும் இடம்பெறும்.
சீரார்ந்த நீர்வை வளஞ் செறிந்த பதியதனிற்
கோயில் கொண்டே ராஜசிம்மாசனமீதமர்ந்த
ஏரார்ந்த அரசகேசரிப்பிள்ளை யாரருளை
வேண்டியின்று
ஊர் கூடி பெருவிழாவாய்
பேரார்ந்த கொடியேற்ற விழாவெடுத்திடவே
செம்பாட்டில் உறைபவரே
நேரார்ந்த நன்னெறியில் நிலைபெறவே போற்றுகின்றோம்
அருள்வீர் பிள்ளையா

ரே

கந்த சஷ்டி கவசம் .பாடல். முருகன் படம்

https://youtu.be/PyGpQow2JF0

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்


விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்

கணபதியின் பிறப்பு:

ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின் தொட ர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒருசக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன்கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரை க் கணங்களின் அதி பதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெ ருமான். கணபதியைத் தம்மீது அமர்த்தி ப் பட்டாபி ஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவ ன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை திருஞான சம்பந்தர் பின்வருமாறு அருளிச் செய்துள்ளார்:

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது,
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே!

விநாயகர் அவதாரம்:

விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவிதான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளேவிடாதே என்று கூறிச் சென்றாள். அப் போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண் டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானை யின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங் காமல் எவரும் எது செய்தாலு ம் அது விக்னம் அடையும். நீயே யாவ ருக்கும் தலை வன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனு ம் அவ ன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவ ன்.

ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.

என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவ-பராசக்தி வணங்கு வதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

பிள்ளையார் என்பது ஏன்?

தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியை ச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மா மியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறு குழந்தைகளை பிள்ளை யார் என்று யாரும் சொல்வதில்லை. விதி விலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோ ம். சிவபார்வதி யின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப் படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா இவரைப் பற்றி?

உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் விநாயகருக்குரியது மூலா தாரம்!

விநாயகரை அருகம்புல்லால் பூஜிக்க உகந்த நாள் அஷ்டமி! உல கின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் விநாயகர் பற்றிய குறிப்பு இடம் பெற் றுள்ளது!

விநாயகப் பெருமானை இந்து சமயத் தின் முழு முதற்கடவுளாக மாற்றி யவர்கள்- குப்தர்கள். திருவரங்கத் திருமாலின் ஏகாந்த நித்திரைக் கோல த்தை முதன் முதலில் தொழுதவர்கள் கணபதி யும், அகத்திய ரும்!

மதுரைத் திருத்தலம் அருகிலுள்ள திருபுவனத்தில் தேங்காய் பிள்ளை யார் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவரின் இயற்பெயர் விசாலாட்சி விநாயகர்!

பதினொரு விநாயகர்கள் உள்ள திருத்தலம் திருப்பாசூர்! இவர்கள் வாசீஸ்வரர் கோயிலில் ஒரு சன்னதியில் உள்ளனர்.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் உள்ள நெல்லிக்கனி விநாயகருக்கு, நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுவர்!

÷ஷாடச (பதினாறு) விநாயகர்களில் முதலாமானவர் பால கணபதி!

விநாயகர் வழிபாடு தமிழருக்கு உரியதென மறைமலையடிகள் குறிப்பி டுகிறார்.

கி.மு 6-ஆம் நூற்றாண்டு நூலான தத்ரேய ஆரண்யத்தில் யானைக் கொம்புடைய இறைவன் எனக் குறிக்கப்படும் கடவுள், விநாயகர்!

ஆவணி மாத சிறப்பு

கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாகப் பின்பற்றப்படுகிறது. முழு முதற்கட வுளான விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி ஆவணியில் கொண்டாடப்படுவதன் அடிப்படையில் இவ்வாறு பின்பற்றுகின்றனர். கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம், இதே மாதத்தில் கொண்டா டப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இம் மாதத்தில் நவக் கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.

விநாயகரால் விளைந்த நன்மைகள்:

கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண் டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா? காகரூப மாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினா ரே! கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீ ரங்க நாதர் நமக்குக் கிடைத்திருப் பாரா? அவரது விக்ரகம் இலங்கைக் கல் லவா போயிருந்திருக்கும். கீழே வைக்கக்கூடாது என்ற நிபந்தனை யுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்க நாதர் விக்ரகத்தை விபீஷணனுக் குக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்த போது மாலை நேரமாகி விட்டது. மாலைச்சந்தி கர்மங்க ளைச் செய்ய வேண்டுமே என விபீ ஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந் தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தை க் கையில் வைத்தி ருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென் றான். அவன் திரும்பிவந்து பெற்றுக் கொள்வதற்குள் அதைத் தரையி ல் வைத் துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலை கொண்டு விட்டது. விக்ரகத்தைப் பெயர்த் தெடுக்க எவ்வளவோ முயன்றா ன் விபீஷ்ணன். ஆனால் இயல வில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போ ய் குட்டினான். பின்னர் உண்மை யறிந்து வணங்கிச் சென்றான். அவ்வாறு கோயில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். திருச்சி மலைமீதிருக் கும் உச்சிப் பிள் ளையாரே இந்தத் திருவிளையா டல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காண லாம்.

இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளை யார் இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம் பெற்று, அவரிட மிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொ ண்டிருந்தான். அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாய கரிடம் ஆத்ம லிங்கத்தைத் தர, அதைத் தரை யில் வைத்துவிட்டார் விநாயகர். அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோ கர்ணம் அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலா ம். பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள். ஆனால் விக்னயந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதே வி சிவனையும் கணப தியையும் நினை க்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார். அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது.

விநாயகர் மூஷிக வாகனர் ஆனது எப்படி?

விநாயகரின் சிறப்பான வாகனம் மூஞ்சுறு (எலி) தான். மூஞ்சுறு எப்படி விநாயகருக்கு வாகனமானது. விநாயகப் பெருமானைப் போற்றி வண ங்கும் கிரவுஞ்சன் என்னும் கந்தர்வ இளைஞன் ஒரு வன் பூலோ கத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒரு வரின் மனைவியைக் கண்டு மோகித்து அவளின் கரங்களைப் பற்றி இழுத்தான். அதைக் கண்டு கோபங் கொண்ட முனிவர், மண்ணைத் தோண்டி வளையில் பதுங்கும் மூஷிகமாக மாறக் கட வாய் என சாபமி ட்டார். அதனால் மூஷிகமாக (எலி) மாறி பரா சர முனிவரின் ஆசிரமத்தில் புகுந்து எல்லா வற்றையும் கடித்துக் குதறி நாசம் செய்த தோடு அங்குள்ள மரங்களின் வேர்களைத் துண்டித்து விழச் செய்தும் அட்டகாசம் செய்த வண்ணம் இருந் தான். அச்சமயம் அபினந்தன் என்ற மன்னன் ஒரு யாகம் செய் தான். இந்திரன் தன் பதவிக்கு பங்கம் வராதிருக்க காலநேமி எனும் கொடிய அசுரனைத் தோற்றுவித்து அந்த யாகத்தை அழிக்கும்படி உத்தர விட்டான். ஆனால் அவனோ அந்த யாகத்தை அழித்ததோடு மட்டும் அல்லாமல் பூவுலகம் முழுவதிலும் எங்கெங்கு யாகம் நடக்கின்றதோ அங்கெ ல்லாம் சென்று அவற் றை நாசப் படுத்தி அனைவரையும் துன்புறு த்தத் தொடங்கி னான். அதிலிருந்து விடுபட அனைவரும் ஈசனை வேண்ட அவரும் அருள் புரிந்தார். வரேனியன் என்னும் மன்னரு க்கு மகனாகத் தாம் பிறக்கப் போவதாகச் சொல்லி அவ்விதமே யானை முக த்துடன் அவதரித்தார். அதைக் கண்ட ராணியும் மன்னனும் வருத்த மடைந்து சாமுத்ரிகா லட்சணங்களுடன், பிறக்காத இக்குழந்தையை எ டுத்துச்சென்று எங்காவது போட்டு விடு ங்கள் என்று கட்டளையிட்டனர். அவன து படைவீரர்கள் அக்குழந்தை யை எடு த்துக் கொண்டு போய் காட்டில் ஒரு குள த்தின் கரையில் வைத்து விட்டுச் சென் றுவிட்டனர். அவ்வழியே நீராடச் சென் ற பராசரர் அக்குழந்தையைக் கண்டு அதி சயித்து நம் பெருமாளே இந்தக் குழந் தையை நமக்கு அளித்துள்ளான் என்று அகமகிழ்ந்து வளர்த்து வந்தார். அக்குழ ந்தையும் நாளும் வளர்ந்து வரலானார்.

மூஷிகன் பராசரரின் குடிசைக்கு வந்து அட்டகாசம் செய்வது கண்டு கணேச பெருமான் தமது பரசு ஆயுதத்தை எடுத்து மூஷிகன்மேல் வீசி னார். பரசு அவனை நோக்கிப் பாய்வதைக் கண்டு பயந் தபடி இங்குமங் கும் ஓடினான். பூமியைக் குடைந்தபடி பாதாள லோகம் வரை சென்றா ன். அப்போதும் பரசு ஆயுதம் அவனைத் துரத்தி வருவதைக் கண்டு சோர்ந்து போனான். பரசும் அவனைக் கட்டி இழுத்து வந்து பெருமான் முன் பாக நிறுத்தியது. மூஷிகன் தன் முந்தைய வரலாற்றைக் கூறி தம்மை மன்னித்தருளும் படி வேண் டினான். விநாயகரும் அவனை அரவணை த்து அருளினார். அதன்பின் காலநேமியை அழிக்க எண்ணங்கொண்ட போது அவனா கவே விநாயக பெருமானின் பாதங்களில் விழுந்து சரண டைந்து நற்கதி பெற்றான். இவ்விதமாய் மூஷிகத்தை வாகன மாகப் பெற்ற விநாயகர் மூஷிக வாகனர் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப் படுகிறார்.

விநாயகர் சதுர்த்தியன்று கடைபிடிக்க வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகா லையி லேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன் மேல் தலை வாழையிலை யை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும் படி வைத்து அதில் அரி சியைப் பரப்ப வேண்டும். அரிசியி ன் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன் கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்து விளக் கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொரு ட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வல ஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட் டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளை யாருக்கு அரை யில் துண்டு கட்டி, பூமாலை, அறு கம்புல் மாலை அணிவித்து, மணை ப் பல கையில் இருத்த வேண்டும். குன்றி மணியால் கண்களைத் திற க்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜை யைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங் கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடி ந்ததைக் கொண்டு பூஜை செய் யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்ய வேண் டும். பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை (அல்) 51 முறை சொல்லி பூஜை யை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த தும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சண ங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக் குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயக ர் சதுர்த் தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும் படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற் கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வே ண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவரு க்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேத மடையாமல் பார்த்துக் கொள் ள வேண்டி யது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெ ருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.

கணபதிக்கு பிரியமான 21:

கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என் னும் எண்ணிக் கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங் கள் – 5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும் போது ஞானே ந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடா விட்டால் பலனில் லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21:

புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங் கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21:

தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்ச ள் பொடி, திரவியப் பொடி, பஞ்சக வ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்ப ஞ்சா மிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21:

மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந் தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாது ளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரி சங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21:

மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற் கண்டு, சர்க்க ரைப் பொங்கல், பாய சம், முக்கனிகள், விளாம்பழம், நாவ ற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

திதிக்குரிய கணபதி:

பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்கு மே அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறப்பு பலன் தரும் என்பர்.

பிரதமை- பாலகணபதி; துவிதியை- தருண கணபதி; திரிதியை- பக்தி கணபதி; சதுர்த்தி- வீர கணபதி; பஞ்சமி- சக்தி கணபதி; சஷ்டி-துவிஜ கணபதி; சப்தமி-சித்தி கணபதி; அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி; நவமி- விக்ன கணபதி; தசமி- க்ஷிப்ர கணபதி; ஏகாதசி-ஹேரம்ப கணபதி; துவாதசி- லட்சுமி கண பதி; திரயோதசி- மகாகணபதி; சதுர்த்தசி-விஜய கணபதி; அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. அந்தந்த திதிக்குரிய கணபதி நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால், நம் வாழ்வில் எதிர்ப்படும் விக்கினங்கள் விலகி சகல வளங்களும் கைகூடும்.

அருள்புரிவாய் ஆனைமுகா!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வண ங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்தி ருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்க ற்றையை உடைய சந் திரனை தலை யில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளை யாட்டாகச் செய்பவ னே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுர னை கொன்றவனே! அதர்ம த்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாய கனே!

உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களை க் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களு க்கெல்லாம் தேவனே! கருணைமிக்க வனே! யானை முகத்தோனே ! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே ! எல்லை யில்லாத பரம் பொருளே! விநா யகப் பெருமானே! உன் திருவடிகளை சர ணடைந்து வேண்டுகி றேன். உனக்கு என் நமஸ் காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்கு பவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங் களைக் கூட மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திரவடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப் புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத் தருபவனே! உலகத்தா ரால் புகழ்ந்து போ ற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம். திரிபுரம் எரித்த சிவ பெருமா னுடைய மூத்த புத்தி ரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருப வனே! உண் மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவ னே! மதநீர் பொழி யும் கஜமுகனே! முதலு ம் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தா ழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்க லத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவ னே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவ னே! துன்பங்களைப் போக் குபவனே! யோகிக ளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன் னை நினைத்து,வணங்கி வருகி றேன். வள் ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்க ளில் சரணம டைகிறேன். எங்களுக்கு இம்மை யில் சகல செல்வத்தையும், மறுமை யில் முக் தியையும் தந்தருள் வாயாக.

மஹா கும்பாபிஷேகப் பெருவிழா


ஜெர்மனி
13.08.2018
சாதனை தமிழ்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
2. September 2018 கிருஷ்ண ஜெயந்தி பாடல் ஹம் காமாட்சி அம்பாள் ஆலயகுரு .கலாநிதி” “ சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் அவர்கள் மென்மேலும் உலகிற்கு நன்மை புரிய பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்
உலகக்கோவில்
பி.எஸ். இராஜகருணா



Dienstag, 11. September 2018

வரலாற்று பிரசித்திபெற்ற அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம்

 இலங்கையில்


வரலாற்று பிரசித்திபெற்ற அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் 2018
09/09/2018.கொடியேற்றம்
10/09/2018.உள்வீதி உலா
11/09/2018.உள்வீதி உலா
12/09/2018.உள்வீதி உல
13/09/2018.உள்வீதி உலா
14/09/2018.உள்வீதி உலா
15/09/2018.வெளிவீதி உலா
16/09/2018.குருக்கட்டு விநாயகர் தரிசனம்
17/09/2018.வெண்ணைய்உற்சவம்
18/09/2018.துகில்உற்சவம்
19/09/2018.பாம்புஉற்சவம்
20/09/2018.கம்சன்உற்சவம்
21/09/2018.வேட்டைஉற்சவம்
22/09/2018.சப்பற உற்சவம்
23/09/2018.தேர்உற்சவம்
24/09/2018.சமுத்திர உற்சவம்
25/09/2018.கேணித்தீர்த்தம்

ஸ்ரீ ராஜேஸ்வரி அம்மாள் பாலஸ்தான கும்பாபிஷேக பெருவிழா

https://www.lankasri.com/events/100840

சங்கடம் தீர்க்கும் சதுர்த்தி விரதம்

https://youtu.be/wOFFzprQPvUசங்கடம் தீர்க்கும் சதுர்த்தி விரதம் தரும் நன்மைகள்
நம் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது. சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். விரதத்தில் பல வகை உண்டு. அதில் விநாயகர் சதுர்த்தி அன்று துவங்குகிற சதுர்த்தி விரதம் முக்கியத்துவம் வாய்ந்தது.
முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.
ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து வரவேண்டும். 11 சதுர்த்தி தினங்களில் விரதம் இருந்த பிறகு, அடுத்த ஆவணி யில், மீண்டும் விநாயக சதுர்த்தி அன்று விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். தடைபட்ட திருமணம், படிப்பு, வேலை, குழந்தைப் பேறு, வீடு கட்டுதல் என பல்வேறு காரணங்களுக்காக சதுர்த்தி விரதம் இருக்கலாம். வேண்டுதல் நிறைவேறும்.

Montag, 10. September 2018

நல்லூர் கந்தசுவாமி


குமரகுருபர சுவாமிகள்.

தாமிரபரணிக் கரையில் பிறந்து கங்கைக்கரையில் ஸித்தி பெற்றவர்..! குமரகுருபரர்

நவ திருப்பதி, நவ கயிலாயங்கள் அமையப்பெற்ற புண்ணிய நதியான தாமிரபரணியின் வடகரையில் தோன்றியவர் குமரகுருபர சுவாமிகள். ஸ்ரீ வைகுண்டம் எனும் கிராமத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் - சிவகாம சுந்தரி தம்பதிக்குத் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் மகனாகப் பிறந்தவர். குமரகுருபரர் வாய் பேச முடியாதவராக இருந்தார். பிறந்ததிலிருந்து ஐந்தாண்டுகள் வரை அவர் பேசாத காரணத்தால் வருத்தமடைந்த பெற்றோர் குழந்தை வரம் கொடுத்த திருச்செந்தூர் முருகனிடம் சென்று முறையிட்டார்கள்.
தங்கள் குழந்தைக்குப் பேச்சு வரவேண்டும் என்று 45 நாள்கள் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டினார்கள். விரதம் முடிந்த பிறகும் குமரகுருபரருக்குப் பேச்சு வரவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்ட பெற்றோர், குமரகுருபரரை செந்திலாண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு, கடலில் விழுவதற்குச் சென்றார்கள். சிறிது தொலைவுதான் சென்றிருப்பார்கள். குமரகுருபரர் பேசத் தொடங்கிவிட்டார். பேசத் தொடங்கினார் என்பதைவிட, பாடத் தொடங்கினார் என்பதே சரி. முருகனின் அருளால் பேசும் வரம் பெற்ற குமரகுருபரர், `கந்தர் கலிவெண்பா'வைப் பாடி கந்தக் கடவுளை வழிபட்டார்.
வாய் பேசுவானா என்று ஏங்கிய பெற்றோர்கள், குமரகுருபரர் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து கண்ணீருடன் முருகனைத் தொழுதார்கள்.
இறைவனின் திருவருளால் தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஞான சாத்திரங்கள் ஆகியவற்றை விரைவில் கற்றுத் தேர்ந்தார் குமரகுருபரர். இவற்றோடு பக்தி ஞானமும் இவரிடம் பெருகத் தொடங்கியது. ஸ்ரீ வைகுண்டத்தில் தங்கியிருந்த காலத்தில், அந்தத் தலத்திலிருந்த கயிலாசநாதர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், கயிலாசநாதரைப் போற்றி `கயிலைக் கலம்பகம்' எனும் பிரபந்த நூலை இயற்றினார்.
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர், குமரகுருபரரின் கடவுள் பக்தியையும், தமிழ்ப் புலமையைப் பற்றியும் கேள்விப்பட்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் சிறப்பித்தார். அரசரின் விருப்பத்துக்கிணங்க, குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றிக்கொண்டிருந்தபோது புலவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் பக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது மீனாட்சியம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகரின் மகள் உரிமையோடு வந்து திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்தாள். குமரகுருபரர் முத்தப் பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையைப் பரிசாக அவரது கழுத்தில் சூட்டிய குழந்தை, கோயில் கருவறையில் மீனாட்சியோடு கலந்து மறைந்தாள். குமரகுருபரரின் அருளால் மீனாட்சியையே நேரில் பார்க்கும் புண்ணியம் கிடைக்கப்பெற்ற மக்கள் அனைவரும் அவருக்கு நன்றி கூறினார்கள். இந்த அதிசயம் நடந்த பிறகு சில காலம் மதுரையில் தங்கியிருந்த குமரகுருபரர் மதுரை சொக்கநாதரைப் போற்றி, `மதுரைக் கலம்பக'த்தைப் பாடினார்.
அதன் பிறகு, சோழநாட்டு சிவத் தலங்களைத் தேடித் தேடி தரிசித்த குமரகுருபரர், திருவாரூர் தியாகராஜரைத் தரிசித்தபோது அவரைப் பற்றி `திருவாரூர் நான்மணிமாலை' எனும் நூலைப் பாடினார். திருவாரூர் தியாகராஜரை தரிசித்த பிறகு அவருக்கு `சிவ ஞான உபதேசம்' பெற வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்து உபதேசம் பெற்றார். மாசிலாமணி தேசிகரின் அறிவுரைப்படி சிதம்பரம் சென்றார் குமரகுருபரர். இடையில் அவர் ஸ்ரீ வைத்தீஸ்வரன்கோவில் தலத்தில் தங்கியிருந்தார். அந்தத் திருக் கோயிலில் அருள்புரியும் முருகப் பெருமானின் பெயர் முத்துக்குமார சுவாமி. அவர் மீது கொண்ட பக்தியால், `முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்' பாடினார்.
சிதம்பரம் சென்று நடராஜரை தரிசனம் செய்த வேளையில், நடராஜரின் அருளினால் தன்னிலை மறந்த பரவச நிலையில், `சிதம்பர மும்மணிக்கோவை'யை இயற்றினார். மேலும், `சிதம்பரச் செய்யுட் கோவை' என்ற நூலையும் இயற்றினார்.
நடராஜரின் தரிசனம் கிடைத்த பிறகு துறவறம் மேற்கொண்டு இறைவனின் பாதங்களைச் சரணடைய வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது. தனது குரு மாசிலாமணி தேசிகரிடம் தீட்சை பெற்றார். அப்போது பாடப்பட்டதுதான், `பண்டார மும்மணிக் கோவை.' அதிலிருந்து `குமரகுருபர சுவாமிகள்' என அழைக்கப்பட்டார். பிறகு காசி நோக்கிப் பயணம் செய்தார். காசி சென்ற குமரகுருபர சுவாமிகள், சுல்தான் பாதுஷாவைச் சந்தித்தார். சுல்தானுக்குத் தெரிந்த மொழி ஹிந்துஸ்தானி மட்டுமே. சுல்தானுடன் பேசும் வல்லமையைப் பெற சரஸ்வதி தேவியை நோக்கி, `சகலகலாவல்லி மாலை' எனும் பாமாலையைப் பாடினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி தேவி குமரகுருபரருக்குச் சுல்தான் பேசிய ஹிந்துஸ்தானி மொழியைப் பேசும் வல்லமையை அளித்தாள்.
அமர்வதற்கு இருக்கைகூட கொடுக்காமல் அவமதித்திருந்தான் சுல்தான். பராசக்தியிடம் வேண்டிய குமரகுருபரர் அவளது சிம்மத்தை வாகனமாகப் பெற்று சிம்மத்தின் மீதேறி அவனிடத்துக்குச் சென்றார். சிங்கத்தின் மீதேறி வந்த குமரகுருபரரை வணங்கிய சுல்தான் பாதுஷா அவருடன் நட்பு கொண்டு பழகினான். பிறகு மடம் அமைக்க இடம் கேட்டார் குமரகுருபர சுவாமிகள். சுல்தான், `காசியில் கருடன் சுற்றுவதில்லை. கருடன் சுற்றினால் அவன் சுற்றும் இடத்தில் உமக்கு மடம் அமைக்க இடம் கொடுக்கிறேன்' எனத் தெரிவித்தான்.
குமரகுருபரர் இறைவனை நோக்கிப் பாடினார். அவர் பாடத் தொடங்கியதும் கருடன் காசியில் வட்டமடிக்கத் தொடங்கியது. குமரகுருபரர் கேட்ட இடத்தை அவருக்குக் கொடுத்து சிறப்புச் செய்தான். அந்த இடத்தில் அமைக்கப்பட்டதுதான் காசி குமாரசுவாமி மடம். அங்கு முகம்மதியரால் மறைக்கப்பெற்ற கேதாரலிங்கத்துக்குக் கோயில் கட்டி பூஜை செய்தார். அந்தக் காலத்தில், `காசித் துண்டி விநாயகர் பதிக'மும், `காசிக் கலம்பக'மும் இவரால் இயற்றப்பெற்ற நூல்கள்.
அதன் பிறகு தமிழகம் திரும்பிய குமரகுருபரர், தனது குரு மாசிலாமணி தேசிகரைத் தரிசித்து வணங்கிவிட்டு மீண்டும் காசிக்கே சென்றுவிட்டார். காசியில் தங்கி இறைவனுக்குச் சேவை செய்து வந்தவர், வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் (1.6.18) இறைவனடி சேர்ந்தார். இந்த நாளில்தான் அவருக்குக் குருபூஜையும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, கங்கைக் கரையில் இறைவனடி சேர்ந்த மகான் குமரகுருபரரைப் போற்றி வணங்கி அவரது பாதம் பணிந்து அருள்பெறுவோம்!

Sonntag, 9. September 2018

நல்லூர் தீர்த்தம் 09.09.2018

நல்லூர் கந்தன் தீர்த்தத்திருவிழா ...
நல்லூரான் சக்தி நாடெங்கும் பரவட்டும்...














ஆசியன்

ஐரோப்பாவில்