Meine Blog-Liste

Dienstag, 4. Dezember 2018

பண்ருட்டி அருகே மலைக்கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு

ஆன்மீக களஞ்சியம்


பணருட்டி அருகே மலைக்கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்...
பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்துள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு.
கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழந்த பூமி என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிப்பாக பண்ருட்டி திருவதிகை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் வாழும் போது பல அற்ப்புதங்களை நிகழ்த்தியதோடு தற்போதும் பல அற்புதங்களை நிகழ்த்திவருகின்றனர். இந்த நிலையில் தற்போது பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் திருப்பணிக்கான பணி நடைபெற்றுவருகிறது. திருப்பணி வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது பூமிக்கடியில் சுரங்க அறை இருப்பது தெரியவந்தது. இதனால் பரவசமடைந்த பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திருப்பணி குழுவினர் அந்த சுரங்க அறை வழியாக சென்று உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்கு கீழே அற்பூதமான கட்டிட அமைப்புடன் நூற்று கணக்கான சதுர அடி கொண்ட கட்டிடம் இருப்பது தெரியவந்தது. இது சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மிகவும் பழமையான மற்றும் அற்புதமான அறை என தெரியவந்தது. இந்த அறைக்குள் முக்கிய பிரமுகர்கள் தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பாதாள அறைக்குள் சென்ற பார்த்தபோது மேலும் ஆச்சரியமூட்டும் அற்பூத காட்சி கிடைத்தது. அங்கு அந்த பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் சுவாமிகள் மூன்று பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலே முக்தி அடைந்த நிகழ்வு இருப்பதை உணர்ந்தனர். வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் இருந்த மூன்று சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி சுற்றுவட்டார பகுதியில் காட்டு தீ போல பரவியது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் குவிய தொடங்கினர். இதற்கிடையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் வாழ்ந்த சித்தர்கள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் நூல்களை தேடி கண்டுபிடித்து இவர்களை பற்றிய குறிப்பு சேகரித்துவருகின்றனர். இந்த சித்தர்களால் இந்த மலை மேலும் சிறப்படையும் என்று திருப்பணிக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து திருப்பணிக்குழு தலைவரும் கடலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்திலிங்கம் கணவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறியதாவது: இந்த புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெறுமைகளையும் கொண்ட மலையாகும். இந்த கோவிலில் தை பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் பெருமானின் திரு உருவத்தின் மீது சூரிய கதிர்கள் அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது பெரும் பெருமைக்குரியதாககும். வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர். வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவ சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வரலாற்று தடையங்களும் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.19ம் நூற்றாண்டுவரை பொலிவுடனும் புகழுடனும் விளங்கிய மிகப்பழமையான மற்றும் அற்புதமான இந்த மலைக்கோவிலில் நிம்மதியான இறை உணர்வு நிறைந்த வாழ்க்கைய மேற்கொண்டிருந்த மூன்று சித்தர்கள் பாதாள அறையில் தியான நிலையில் ஜீவ சமாதியான நிகழ்வை பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி மேலும் வளர்ச்சி அடைந்து நலம் பல பெறும் என நம்புகிறோம். வரும் 4ம்தேதி நடைபெறும் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டு அருள் பெற அன்புடன் அழைக்கிறோம் என்று அவர் கூறினார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU

🎉 Sri Kamakshi Ampal Temple Theerfestival Hamm, Germany 2025#தேர்த்திர...

ஐரோப்பாவில்