Meine Blog-Liste

Montag, 31. Dezember 2018

Worldkovil Kovil

உயர்சாதனை மனிதன் 
உயர்விருது பெற்றார் 
''செஞ்சொற்செல்வர்'' ஆறு.திருமுருகன்  ஐயா
உலகக்க்கோவில்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்
வாழ்க சிறப்புடன் -
உலகக்க்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
31.12.2018
உயர்சாதனை மனிதர் விருது
...............................................................
டாண் (DAN) தொலைக்காட்சி இவ்வாண்டு தொடக்கம் உயர்சாதனை மனிதன் விருதை வழங்கியிருக்குறது. அந்த வகையில் இவ்வாண்டிற்கான (முதலாவது )விருது கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களுக்கு வழங்கபெற்றது
வாழ்த்துக்கள்

happy new year 2019 ''எல்லோரு க்கும் மங்களம் உண்டாகட்டும் ''

happy2019

iyappa info 2018-2019 இலங்கை தகவல் சிவ ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சா...

Samstag, 29. Dezember 2018

WORLDKOVIL.COM:  உயர்சாதனை மனிதர் விருது உலகக்கோவில் பெரு மகிழ்...

WORLDKOVIL.COM:  உயர்சாதனை மனிதர் விருது

 உலகக்கோவில்
 பெரு மகிழ்...
:  உயர்சாதனை மனிதர் விருது  உலகக்கோவில்  பெரு மகிழ்வோடு வாழ்த்தி   வணங்குகின்றோம்  தமிழன்புடன் பி.எஸ்.இராஜகருணா 29.12.2018 உயர்சாதனை...

WORLDKOVIL.COM:  உயர்சாதனை மனிதர் விருது உலகக்கோவில் பெரு மகிழ்...

WORLDKOVIL.COM:  உயர்சாதனை மனிதர் விருது

 உலகக்கோவில்
 பெரு மகிழ்...
:  உயர்சாதனை மனிதர் விருது  உலகக்கோவில்  பெரு மகிழ்வோடு வாழ்த்தி   வணங்குகின்றோம்  தமிழன்புடன் பி.எஸ்.இராஜகருணா 29.12.2018 உயர்சாதனை...
 உயர்சாதனை மனிதர் விருது

 உலகக்கோவில்
 பெரு மகிழ்வோடு வாழ்த்தி   வணங்குகின்றோம்
 தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
29.12.2018

உயர்சாதனை மனிதர் விருது
...............................................................
டாண் (DAN) தொலைக்காட்சி இவ்வாண்டு தொடக்கம் உயர்சாதனை மனிதன் விருதை வழங்கவிருக்கின்றது. அந்த வகையில் இவ்வாண்டிற்கான (முதலாவது )விருது கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
.
நாவற்குழியில் திருவாசக அரண்மனையை நிறுவிய சாதனைக்காக இவ்விருது வழங்கப்படுவதாக டாண் தொலைக்காட்சியின் விருது தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
.
இது பற்றிய அறிவிப்பு இன்று 29.12.2018 இரவு வலம்புரி நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் விடுக்கப்பட்டது.
.
எதிர்வரும் 31.12.2018 யாழ் முற்றவெளியில் முன்னெடுக்கப்படவுள்ள பிரமாண்டமான புதுவருட வரவேற்பு விழாவில் விருது வழங்கப்படவுள்ளது.
.
விருது பெறும் நம்மண்ணின் நவீன நாவலருக்கு நல்வாழ்த்துக்கள்.

தகவல்... விரிவுரையாளர்...லலீசன் ஆசிரியர்....
                     நன்றி - கவிமாமணி குகதாஸ்


.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு !

சித்தர்களின் குரல்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு !
********************************
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கா
ல பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,
ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்,
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள்.
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது.
பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான்.
ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.
‘‘அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது’’
-(என்கிறது அகஸ்தியர் நாடி)
சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது அகஸ்திய நாடி.
சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த சட்டைநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, "தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்டை நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே" என்கிறார் அகஸ்தியர்.
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.
தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.
சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.
மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் சொர்ண பைரவ அஷ்டகத்தை படித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
வாரம் முழுவதும் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:
பைரவருக்கு செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் உண்டு. பைரவரை வணங்கும் பொழுது வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை:
பிரதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். மேலும் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் நலன் பெருகும்.
திங்கட்கிழமை:
திங்கட்கிழமை அன்று வில்வம் கொண்டு பைரவரை அர்ச்சித்தால் சிவனருள் கிடைக்கும். மேலும் சங்கடஹர சதுர்த்தி அன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாத்தினால் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகித் தெளிவான பார்வை கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வந்தால் நாம் இழந்த பொருளைத் திரும்பக் கிடைக்கும்படி அருள் புரிவார் பைரவர்.
புதன்கிழமை:
பூமி லாபம் கிடைக்க பிரதி புதன்கிழமை பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
வியாழக்கிழமை:
பைரவருக்கு பிரதி வியாழக்கிழமை அன்று மனமார விளக்கேற்றி வழிபட்டால் ஏவல், பில்லி மற்றும் சூனியம் விலகி மன நிம்மதி கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரங்களில் வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
சனிக்கிழமை:
சனி பகவானுடைய குரு பைரவர். ஆகவே சனிக்கிழமைகளில் இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம்.
இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களும் நாம் செய்யும் கால பைரவரின் வழிபாடு மற்றும் பைரவ அஷ்டக பாராயணம் நமக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி திருமணத் தடைகளை நீக்கி சகல நன்மைகளைத் தரும்.
ஸ்வானத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ; பைரவ ப்ரசோதயாத்:
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச்செல்வனாரே!... - திருநாவுக்கரசர்.
- தலம் திருச்சேறை ( நான்காம் திருமுறை. திருப்பதிக எண் : 73/6 )
தேவாரத்தில் வைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது.
திருச்சேறை என்னும் திருத்தலத்தில் திருநாவுக்கரசர் உழவாரப் பணி புரிந்து இறைவனைத் தரிசித்தனர். அப்போது பாடிப் பரவிய திருப்பதிகத்தில் கால வைரவரின் திருமேனியழகை வர்ணிக்கின்றார்..
''பற்பலவாய் விரிந்து எங்கும் பரவும் ஒளிக் கதிர்கள் பொருந்திய சூலத்தினையும் வெடியென முழங்கும் உடுக்கையையும் தம் திருக்கரங்களில் ஏந்திய திருக்கோலத்துடன் கால வைரவன் எனத் தோன்றி - தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து தம் மீது ஏவி விட்ட யானையைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்ட அருஞ்செயலைக் கண்டு, அச்சம் கொண்ட உமையவளை நோக்கி ஒளி பொருந்திய பெருஞ் சிரிப்புடன் அருள் செய்தாரே!... அந்த சிவபெருமான் செந்நெறிச் செல்வனாக இங்கே, திருச்சேறை எனும் இந்தத் திருத்தலத்தில் உறைந்து நமக்கும் புன்னகையுடன் அருள் புரிகின்றார் '' - என்பது திருக்குறிப்பு.
ஸ்ரீ கால வைரவ மூர்த்தியை தியானித்து, இத்திருப்பாடலை ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்து போற்றுவோர்க்கு பிணி, வறுமை, பகை முதலான துன்பங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு.
ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒரு சிறப்புப்பெயர் உண்டு. அவை:-
மார்கழி - சங்கராஷ்டமி
தை - தேவதேவாஷ்டமி
மாசி - மகேஷ்வரரஷ்டமி
பங்குனி - திரியம்பகாஷ்டமி
சித்திரை - ஸ்நாதனாஷ்டமி
வைகாசி - சதாசிவாஷ்டமி
ஆனி - பகவதாஷ்டமி
ஆடி - நீலகண்டாஷ்டமி
ஆவணி - ஸ்தழனு அஷ்டமி
புரட்டாசி - சம்புகாஷ்டமி
ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி
கார்த்திகை - காலபைரவாஷ்டமி (இது எமவாதனை நீக்கம் மகாதேவாஷ்டமி)
குறிப்பு: பைரவருக்கு அர்த்தசாமபூஜை மிகவும் விசேஷமானதாகும். நாகப்பட்டிணம் மாவட்டம், சீர்காழியில், சட்டைநாதராய் அருள்புரியும் எம்பெருமானுக்கு செய்யப்படும் பூஜை விசேஷமானதாகும்)
சந்தன காப்பு அபிஷேகம்:
****************************
பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் (சிவபுராணம்). பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.
பைரவ வழிபாடு:
*******************
காலையில் வழிபட்டால் - சர்வ நோய்கள் நீங்கும்.
பகலில் வழிபட்டால் - விரும்பியது கிட்டும்
மாலையில் வழிபட்டால் - அனைத்து பாவங்களும் விலகும்.
இரவு (அர்த்தசாமம்) வழிபட்டால் - எல்லா வளமும் பெருகும், மனம் ஒருமைப்படும், முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக்கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.
பைரவ தீபம்:
**************
சிறு துணியில் (வெள்ளை / சிவப்பு நிறம்) மிளகை (18 எண்ணிக்கை) சிறுமூட்டையாகக் கட்டி அக்ல்விளக்கில் வைத்து நல்லெண்ணை தீபத்தை ஏற்றி வழிபட்டால் எல்லா வளமும் பெருகும்.
தினமும் காலையில் "ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமக !", என்று உச்சரிப்பது நன்மை அளிக்கும்.
வைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
- சித்தர்களின் குரல் shiva shangar

Freitag, 28. Dezember 2018

nanthis அமிர்தானந்த சுரபி விருது ''அமிர்தானந்த சுரபி '' திரு .பாலகிருஷ...

திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)
* திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர்
அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு
தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு
தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார்.
அந்த அபூர்வமான பாடல்தான் இது.

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும் ... அங்கவடி, பேரழகான மணி,
பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும்
பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும்,
நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தின் நன்கு பூத்த
மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும்,
அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி
வேலும் ... அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன்
மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில்
உள்ள கூர்மையான வேலையும்,
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... திக்குகள் எட்டும்
மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும்,
ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ...
காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு
தோள்களையும்,
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு
என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே
வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று
எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.
இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு,
அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய்,
எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி,
அவல், துவரை, இள நீர், தேன்,
பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப
வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம்,
இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம்
எனக் கொள் ... பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள்,
சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக்
கொள்ளும்
ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற,
வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே,
கருணை மலையே,
குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த
சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான
அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே,
மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பு** உடைய
பெருமாளே.

Mittwoch, 26. Dezember 2018

நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட

சித்தர்களின் குரல்.
தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் வித்தியாசமானது.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த நவக்கிரக கோவில் கடலில் உள்ளது.
இந்துக்களின் நம்பிக்கையின் படி சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களும், இவ்வுலகில் வாழும் மக்
களின் விதியை தீர்மானிக்கின்றன. அந்த ஒன்பது கோள்களை வழிபட தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் இருந்தாலும், இந்த நவக்கிரக கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. வால்மீகி இராமயணத்தின் கதாநாயகனான ஸ்ரீராமபிரான் எழுப்பிய கோவிலாகும் இது.
ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டார்.
ராமபிரான் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் அவர். பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன. இதனாலேயே இன்றுவரை இங்கு கடல் அலைகள் அதிகம் காணப்படுவதில்லை என்று கூறலாம். இந்த இடத்தில்தான் ராமர் சனிதோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு.
இந்த கோவிலின் அருகே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். இந்தக் கோவிலுக்கு நவபாஷனக் கோவில் என்று ஓர் பெயரும் உள்ளது.
இங்கு நவதானியங்களை கொண்டு மக்கள் பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் ஏராளமானோர் குவிந்து அவர்களின் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர்.
இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கோவில் மூதாதையர்களை வழிபட மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது....நன்றி

Samstag, 22. Dezember 2018

Germany
22.12.2018
மதிப்புக்குரிய ஆலய பிரதம குரு.சிவஸ்ரீ சாமி தேவேந்திர குருக்கள் அருள் ஆசியுடன்
இன்று அதி காலைடோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில்ஆருத்ரா தரிசனத்திற்கு போது ஆரம்பித்த அபிசேகம் .பூசை மிகவும் சிறப்பாக நடைபெற்றது . எம்பெருமான் தேரேறி வரும் அழகு மிகு காட்சிகளுடன் மதிப்புக்குரிய ஆலய பிரதம குரு.சிவஸ்ரீ சாமி தேவேந்திர குருக்கள் .மற்றும் சந்தோஸ் சர்மா .ஸ்ரீலக்ஸ்மன் சர்மா அவர்கள் மற்றும் அடியவர்கள் . உலகக் கோவில் நிறுவனர் இராஜகருணா . ஜெர்மனியில் இருந்து வெளிவரும் .வெற்றிமணி ..சிவத்தமி ழ் பிரதம ஆசிரியர் .கலாநிதி மு..க.சு .சிவகுமாரன் அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது .
சிவத்தமி ழ் 15 ம் ஆண்டில் தடம் பதிக்கின்ற போது அதன் முதல் பிரதியை ஆலயகுரு முன்பாக ஆலய தலைவருமான தொழில் அதிபருமான ஜெகதிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்..இன்றும் .அன்று ஆரம்பித்திருந்த சிவத்தமிழ் செல்வி அப்பா
குட்டி தங்கம்மா அவர்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் . . அத்தோடு வெற்றிமணி 25 ம் ஆண்டில் தடம் பதிக்கின்றது .
உலகக்கோவில்
பி.எஸ். இராஜகருணா
22.12.2018
















Freitag, 21. Dezember 2018

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் தெரியுமா?

இறந்தவர்கள் படங்களை பூஜையில் தெய்வ படங்களுடன் மாட்டக் கூடாது. இறந்தவர்கள், தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.
தெய்வங்களுக்கு பொதுவாக நாம் எந்த மலரால் அர்ச்சனை செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் இப்பிறவியில் மட்டுமேயன்றி, மறுபிறவிக்கும் அது பயன் தரும். அலங்காரத்திற்காக பயன்படும் எதுவுமே பூஜையறையில் வைக்கக்கூடாது. ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும். தூசி, ஓட்டடை படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது.
பழைய படங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்கள் கண்டிப்பாக பூஜையறையில் வீட்டிலேயே இருக்கக் கூடாது. சிலபேர் முப்பாட்டனார் காலத்தில் உள்ள படங்கள், கடையில் விற்கும் சக்கரம், இயந்திரங்கள், உறவினர், நண்பர்கள் கொடுத்தார்கள் என்று பூஜையறை முழுவதும் படங்களை ஒட்டி அது பாதி கிழிந்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் படங்களை நாம் கடலில் போடுவது நல்லது.
வீட்டில் பூஜையறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, மண் அகல் மற்றும் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றினால் நல்லது. மூன்று அடுக்கு வைத்த விளக்கு மிகச் சிறப்பானது. விளக்கு பூஜை செய்பவர்கள். ஒரு குத்து விளக்கில் ஐந்து முகமும் ஏற்றி பூஜை செய்யலாம். விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது நல்லது. எக்காரணத்திலும் கடலெண்ணெய் தீபம் ஏற்றக் கூடாது.
பூஜை அறையாக இருந்தாலும் சரி, சுவரில் தெய்வ படங்கள் வைத்து பூஜை செய்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சுத்தமாக மனத் தூய்மையுடன் செய்தால் தெய்வம் நம்மில் குடிகொள்ளும். சுத்தமாக வீட்டை வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும் நம்மைத் தேடிவரும்.

iyappankovil சபரீசன் சித்தாசிரம டாக்டர் .பாண்டுரங்க சுவாமிகள் ஆன்மீகஞ...

Freitag, 14. Dezember 2018

விநாயகர் ஷ்ஷ்டி பெருங்கதை. பெரு நிகழ்வு

ஜெர்மனி
(பதிவு . எழுத்துருவாக்கம் உலகக்கோவில்
பி.எஸ். இராஜகருணா 14.12.2018)
விநாயகர் ஷ்ஷ்டி பெருங்கதை. பெரு நிகழ்வு
யூச்சின் ஶ்ரீ நவசக்தி விநாயகப்பெருமானின் திருவருளோடு இரண்டாம் முறை 13.12.2018 





ஆலயத்திற்கு வருகை தந்தத ஆ ன்மீக பேரொளி ஆசான்

கடந்த 36ஆண்டுகளில் 157 தடவை வைக்கும் மேலாக சபரிமலை புனிதயாத்திரை சென்று வரபவரும் 5100 சாமிமார்களுக்க மாலை அணிவித்து சபரிமலை புனிதயாத்திரைக்கு அழைத்துச் செல்பவரும் மலேசியா. சுவிஸ் யேர்மன் .பிரான்ஸ். லண் டன் .கனடா ஆகிய உலக நாடுகளில் ஐயப்பன் பூஜைகளையும் பஜையைகளையும் ஆன்மீக அருளுரைகளையும் நடத்தி வருபவருமான

"சர்வதேச இந்துமத குருபீடாதிபது”
"சபரிமலைக் குருமுதல்வர்"
"ஆன்மீக அருள்ஜோதி" "சிவாகம கலாநிதி"
சிவ ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். அவர்கள் தலைமையில் .சிவஶ்ரீ வாகீஸ்வரகுருக்கள்(Neuss) உபயமாக
சங்கா அபிஷேகமும் .

மாலை சிவ ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். அவர்களை மாலை அணிவித்து பாதபூசையின் பின் இரு கன்னி சாமிகளுடன் . ஊர்வலமா அழைத்துவரப்பட்டு ஐயப்பசுவாமிக்கு விஷேட பூஜையை தொடர்ந்தார் . ஆன்மீக அருளுரையும் ஐயப்ப பஜைனையும் இடம் பெற்று ஆலய பிரதம குரூ சிவஸ்ரீ . பாஸ்கரகுருக்கள் அவர்களுக்கு .ஐயப்ப சாஸ்தா பீடத்தால் சிவ ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட் டு பரிசும் வழங்கப்பட்டது டன் . ஆலய நிர்வாகிகளின் சேவையைப் பாராட்டி தலைவர் . பத்மநாதன் .வரதன் ஆலய நிர்வாகிகள் அனைவரும் பாராட்டி கெளரவம் வழங்கப்பட்ட்து . பிள்ளையார் பெரும் கதை படிக்கப்பட்டு . உள்வீதி வலம் வந்த விநாயகப் பெருமான் இனிதே பூசைகள் அனைத்து மிகவும் சிறப்பாக நடைபெற்றன நிறைவு பெற்றது .அனைத்து உலகக்கோவில் நிறுவனர் அனைத்து நிகழ்வுகளையு ம் வரலாற்று பதிவாக்கினர் .

Mittwoch, 12. Dezember 2018

ஜெர்மனி உலகக் கோவில்
வரலாற்று சிறப்புமிகு  பதிவு
தத்துவம்
சிவஸ்ரீ .சாமி .தெய்வேந்திர குருக்கள்  அருள் ஆசியுடன்
பிள்ளையார் பெரும் கதை"ஆன்மீக அருள்ஜோதி" "சிவாகம கலாநிதி"சபரிமலைக்குருமுதல்வர். மஹாராஜ ராஜகுரு
சிவ ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். ஆன்மீக  அருளுரை
நேற்று11.12.2018  சிறப்பாக  பதிவு செய்யப்பட்ட்து .
 சிவஸ்ரீ .சாமி .தெய்வேந்திர குருக்கள்
            சிவஸ்ரீ.ஜெயந்தி நாத குருக்கள்
           ஜெர்மனி  டோர்த்முன்  சிவன்  ஆலய
           அறங்காவலர்களுக்கு   எமது நன்றிகள்
பிள்ளையார் பெரும் கதை யின் தத்துவம்
மிகவும் சிறப்பான விளக்கத்துடன்
கடந்த 36ஆண்டுகளில் 157 தடவை வைக்கும் மேலாக சபரிமலை புனிதயாத்திரை சென்று வரபவரும் 5100 சாமிமார்களுக்க மாலை அணிவித்து சபரிமலை புனிதயாத்திரைக்கு அழைத்துச் செல்பவரும் மலேசியா சுவிஸ் யேர்மன் பிரான்ஸ் லன்டன் கனடா ஆகிய உலக நாடுகளில் ஐயப்பன் பூஜைகளையும் பஜையைகளையும் ஆன்மீக அருளுரைகளையும் நடத்தி வருபவருமான

"சர்வதேச இந்துமத குருபீடாதிபது”
"சபரிமலைக் குருமுதல்வர்"
"ஆன்மீக அருள்ஜோதி" "சிவாகம கலாநிதி"
சிவ ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்.
நன்றி . சிவஸ்ரீ .சாமி .தெய்வேந்திர குருக்கள்
            சிவஸ்ரீ.ஜெயந்தி நாத குருக்கள்
           ஜெர்மனி  டோர்த்முன்  சிவன்  ஆலய
           அறங்காவலர்கள்
தமிழன்புடன்
உலகக் கோவில்  நிறுவனர்
பி.எஸ். இராஜகருணா
12.12.2018




விநாயகர் பெருங்கதை ஆன்மீக அருளுரை ''சபரிமலைக்குருமுதல்வர்''pillayar kath...

Dienstag, 4. Dezember 2018

பண்ருட்டி அருகே மலைக்கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு

ஆன்மீக களஞ்சியம்


பணருட்டி அருகே மலைக்கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்...
பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்துள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு.
கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழந்த பூமி என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிப்பாக பண்ருட்டி திருவதிகை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் வாழும் போது பல அற்ப்புதங்களை நிகழ்த்தியதோடு தற்போதும் பல அற்புதங்களை நிகழ்த்திவருகின்றனர். இந்த நிலையில் தற்போது பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் திருப்பணிக்கான பணி நடைபெற்றுவருகிறது. திருப்பணி வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது பூமிக்கடியில் சுரங்க அறை இருப்பது தெரியவந்தது. இதனால் பரவசமடைந்த பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திருப்பணி குழுவினர் அந்த சுரங்க அறை வழியாக சென்று உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்கு கீழே அற்பூதமான கட்டிட அமைப்புடன் நூற்று கணக்கான சதுர அடி கொண்ட கட்டிடம் இருப்பது தெரியவந்தது. இது சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மிகவும் பழமையான மற்றும் அற்புதமான அறை என தெரியவந்தது. இந்த அறைக்குள் முக்கிய பிரமுகர்கள் தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பாதாள அறைக்குள் சென்ற பார்த்தபோது மேலும் ஆச்சரியமூட்டும் அற்பூத காட்சி கிடைத்தது. அங்கு அந்த பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் சுவாமிகள் மூன்று பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலே முக்தி அடைந்த நிகழ்வு இருப்பதை உணர்ந்தனர். வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் இருந்த மூன்று சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி சுற்றுவட்டார பகுதியில் காட்டு தீ போல பரவியது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் குவிய தொடங்கினர். இதற்கிடையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் வாழ்ந்த சித்தர்கள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் நூல்களை தேடி கண்டுபிடித்து இவர்களை பற்றிய குறிப்பு சேகரித்துவருகின்றனர். இந்த சித்தர்களால் இந்த மலை மேலும் சிறப்படையும் என்று திருப்பணிக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து திருப்பணிக்குழு தலைவரும் கடலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்திலிங்கம் கணவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறியதாவது: இந்த புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெறுமைகளையும் கொண்ட மலையாகும். இந்த கோவிலில் தை பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் பெருமானின் திரு உருவத்தின் மீது சூரிய கதிர்கள் அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது பெரும் பெருமைக்குரியதாககும். வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர். வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவ சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வரலாற்று தடையங்களும் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.19ம் நூற்றாண்டுவரை பொலிவுடனும் புகழுடனும் விளங்கிய மிகப்பழமையான மற்றும் அற்புதமான இந்த மலைக்கோவிலில் நிம்மதியான இறை உணர்வு நிறைந்த வாழ்க்கைய மேற்கொண்டிருந்த மூன்று சித்தர்கள் பாதாள அறையில் தியான நிலையில் ஜீவ சமாதியான நிகழ்வை பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி மேலும் வளர்ச்சி அடைந்து நலம் பல பெறும் என நம்புகிறோம். வரும் 4ம்தேதி நடைபெறும் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டு அருள் பெற அன்புடன் அழைக்கிறோம் என்று அவர் கூறினார்.

சிறுவனின் வாள் சாகசம் ''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' ஸ்ரீ ஐயப்பதாஸ ச...

Montag, 3. Dezember 2018

Hindu Samayam Gestern um 14:06 · கருடன் பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள். 1. ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும். 2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது. 3. ‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம். 4. காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம். 5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள். 6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது. 7. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். 8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி - பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார். 9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி. 10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர். 11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம். 12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது. 13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. 14. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். 15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம். 16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள். 17. குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது. 18. சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார். 19. உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான். 20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும். 22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும். 24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது. 25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது. 26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள். 27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார். 28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள். இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார். 29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார். 30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி. 31. கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும். 32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது. 33. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்! 34. கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்! 35. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். 36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம். 37. கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். 38. எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது. 39. கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது. 40. நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும். 41. எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும். 42. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது. 43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர். 44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர். 45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம். 46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர். 47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம். 48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர். 49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு. 50. சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும். 51. ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான். 52. வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது. 53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன். 54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார். 55. கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது. 56. திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார். 57. கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம். 58. கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். 59. ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான். 60. பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான். 61. கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன். 62. கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும். 63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும். 64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு. 65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள். 67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும். 68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள். 69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். 70. ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு. 71. கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும். 72. வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும். 73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள். 74. கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர். 75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது. 76. தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. 77. ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார். 78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள். 79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும். 80. கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார். 81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது. 82. பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். 83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும். 84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும். 85. அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே. 86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். 87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது. 88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது. 89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது. 90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா! ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும். 91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும். 92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார் 93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது. 94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது. 95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது. (குங்குமோங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச விஷ்ணுவாஹன நமஸ்துப்யம் * பக்ஷி ராஜாயதே * நமஹ) 96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது. 97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம், காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை. 98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது. 99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 100. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். Bala

Hindu Samayam
கருடன் பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள்.
1. ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.
2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
3. ‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.
4. காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.
7. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.
8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி - பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.
9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.
10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.
12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.
13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
14. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.
15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.
17. குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
18. சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.
19. உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.
20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.
22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.
24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.
25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.
26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.
27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.
28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள். இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.
29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.
30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி.
31. கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.
32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.
33. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!
34. கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!
35. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.
36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.
37. கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.
38. எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.
39. கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.
40. நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.
41. எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.
42. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.
43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.
44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.
45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.
46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.
47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.
48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.
49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.
50. சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.
51. ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.
52. வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.
53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.
54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.
55. கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.
56. திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.
57. கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்.
58. கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.
59. ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.
60. பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.
61. கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.
62. கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.
63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.
64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு.
65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.
67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.
68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.
69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
70. ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.
71. கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.
72. வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.
73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.
74. கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.
75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.
76. தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.
77. ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.
78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.
79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.
80. கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.
81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.
82. பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.
83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.
84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.
85. அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.
86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.
87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.
88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.
89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.
90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா!
ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.
91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.
92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்
93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது.
94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.
95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது.
(குங்குமோங்கித வர்ணாய
குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹன நமஸ்துப்யம்
* பக்ஷி ராஜாயதே * நமஹ)
96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.
97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம், காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை.
98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது.
99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
100. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.
Bala

Sonntag, 2. Dezember 2018

parath sivanesan bühne singe song செல்வன் பாரத் சிவநேசன் பாடும்போது

திருப்புகழ் பரவ வித்தாக அமைந்த பாடல்!

திருப்புகழ் பரவ வித்தாக அமைந்த பாடல்!
நாகப்பட்டினத்தை ஒட்டியுள்ள சிவத்தலம், திருச்செங்காட்டங்குடி. திருப்புகலூர், திருமருகல், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி ஆகிய நான்கு தலங்களும் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்துள்ளன. நான்கும் தேவாரப் பாடல்கள் பெற்றவை.
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு
முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர மணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்
பெருமாளே.
- என்னும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்தான், இன்று தமிழகத்தில் திருப்புகழ் பரவ, வித்தாக அமைந்தது என்று சொன்னால், வியப்பு மேலிடத்தான் செய்யும். ஆனால், அதுதான் உண்மை. திருப்புகழ்ப் பாடல்களை இந்த நூற்றாண்டில் பரப்பிய வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், முதன்முதலாக, இந்தத் திருப்புகழ்ப் பாடலைத்தான் பழநி திருக்கோயிலில் ருத்ர கணிகை ஒருத்தி (தேவரடியாள்) பாடி, ஆடக் கேட்டு, அது திருப்புகழ் என அறிந்தார். “இனி, திருப்புகழைப் பரப்புவதே எனது பிறவிப் பணி’’ எனக்கொண்டார். இவ்வாறு, இந்தத் திருப்புகழ்ப் பாடல், இன்று தமிழகமெங்கும் இசை பரப்ப, முதல் ஒலியாக விளங்கியது. இத்தகைய சிறப்புடைய திருப்புகழ், திருச்செங்காட்டங்குடி தலத்திற்குரியது என்பதை நினைக்கும்போது, திருவருளின் மாண்பினை நாம் மேலும் வியக்க வேண்டியதாகிறது. திருச்செங்காட்டங்குடி என்றவுடன் நமக்கு சிறுத்தொண்ட நாயனார் வரலாறு நினைவுக்கு வரும். தன் மகன் சீராளனைக் கறி சமைத்து, உத்திராபதியாக வந்த சிவபிரானுக்குப் படைத்த பெருமைமிக்க சிறுதொண்டர் கதை, சிவபக்தர்கள் அனைவரும் அறிந்த கதை. பின்னர் அந்தப் பிள்ளை பரமன் அருளால் உயிர் மீண்டு ஓடி வந்தான்.
திருச்செங்காட்டங்குடி எனப்பெயர் வரக்காரணம்?
சத்தியாஷாட முனிவரது தவத்தை ரத்தநாமுகி, ரக்தபீஜன் என்னும் அசுரர்கள் அழிக்க முயன்றபோது, சிவபெருமான் அவர்களை வதம் செய்து அருள் புரிந்தார். அவர்களது ரத்தம் சிந்திய இடமே ரத்தக் காடாகி, செங்காடு என்றாயிற்றாம். இது தலபுராணம் கூறும் செய்தி. மற்றொரு புராணக் கதையின்படி, கயமுகனை இத்தலத்தில் அழித்தபோது அவன் ரத்தம் பெருகி செங்காடு என்ற பெயர் வந்ததாம். அசுரனைக் கொன்ற பாவம் நீங்க, விநாயகர் இத்தலத்தில் சிவபிரானை வழிபட்டதால் கணபதீச்சுரம் என்ற பெயரும் ஏற்பட்டது. இங்குள்ள சிவனுக்கும் கணபதீச்சுரர், உத்திராபதீசுவரர் என்று பெயர்கள். இறைவி: சூளிகாம்பாள். சூளி என்றால் கூந்தல். அதனால் இவருக்கு ‘திருக்குழல் நாயகியம்மை’ என்று தமிழில் பெயர்.
உத்திராபதியார் திருவுருவம் இங்கே தனிச்சிறப்புடையது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இப்பதிக்கு வந்து இறைவனை வணங்கி, பதிகம் பாடியுள்ளனர். தல விருட்சம் - ஆத்தி. இத்தலத்திற்கு சம்பந்தர் வந்தபோது சிறுத்தொண்ட நாயனார் அவரை வரவேற்று உபசரித்ததாகப் பெரிய புராணம் தெரிவிக்கிறது. இத்தலத்தில், அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமான், இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம், பல்லாயிரம் பக்தர்கள் திரள, இங்கு நடைபெறும் அமுது படையல் திருவிழா, வெகு கோலாகலம்! திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.
ஆர்.சி. சம்பத்

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.
வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.
அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.
கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்

ஆசியன்

ஐரோப்பாவில்