அன்பின் சொரூபம் ஆகினாய்
ஈஸ்வரி
ஜெர்மனியில் 9ஆடி உயரமான ஓம் நவசக்தி நாயகிக்காக நான் எழுதிய
பாடல்
எழுத்துலகே வேண்டாம் என கமராவை கையில் எடுத்தேன்
ஆனால் மகா ஷக்தி அன்னை என்னை விடவில்லை
தனக்கு பாடல் எழுதும் படி பணித்தாள் .ஆலய ஆதீன கார்த்தா
பணமும் தந்து ஊக்குவித்தார் . அன்னையின் பெரும் கருணை
யால் பணிந்தேன். உயர்ந்தேன். சிறந்தேன் .
அன்னையின் பாதாரவிந்தங்களை பணிகின்றேன்
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா என்கிற
-
பல்லவி
பெண் குழு
அன்பின் சொரூபம் ஆகினாய்
ஈஸ்வரி
கருணை நம்மீது தூவினாய்
மகேஸ்வரி
சிந்தைக்குள் ஏற்றம் அருள்கிறாய்
கரம் கொண்டு மாற்றம் அளிக்கிறாய்
அல்லல்கள் யாவும் அழிக்கிறாய்
சாம்பவி
சிலையாக வீற்று இருக்கிறாய்
ஸ்லோகங்கள் சொல்ல நிமிர்கிறாய்
காலின் சிலம்பில் ஒலிக்கிறாய்
சைந்தவி
ஞானத்தில் வந்து பிறக்கிறாய்
ஞாலத்தில் பொங்கி எழுகிறாய்
நாதத்தில் இங்கு கேட்கிறாய்
மாலினி
செந்தமிழில் நீயும் இனிக்கிறாய்
ஏழிசையில் நின்று கலக்கிறாய்
மூவுலகும் வென்று நிறைகிறாய்
கமலினி
அன்பின் சொரூபம் ஆகினாய்
ரூபினி
கருணை நம்மீது தூவினாய்
காருணி
சரணம் 1
பெண் குழு
தெய்வீக கரத்தால் அணைத்தாய்
பக்தர்க்கு பலனை கொடுத்தாய்
நவசக்தி தாயே பார்வதி
விதி மாற்ற விரதம் தந்தாய்
நீ ஆதி அந்தம் கடந்தாய்
கிடந்தோமே நாங்கள் உன் கதி
எண்ணங்கள் மேன்மை ஆக்கினாய்
வர்த்தினி
ஏழைகள் துன்பம் நீக்கினாய்
வர்ஷினி
ஆண்
வரம் பெறும் தவம் யாசகம்
உமையும் சிவமும்
அடங்கும் தருணம் - அது
ஆன்மிகமே பரிபூரணம்
சாணம் 2
பெண் குழு
அபயம் தருபவள்
அன்புக்கு பணிந்தவள்
காருண்ய கற்பகம் நீ
பேரொளி ஆனவள்
மெய்மலர் அணிந்தவள்
அன்பு பவானியும் நீ
அசுரரை வென்றவள்
அன்பர்க்கு எளியவள்
கருணை காயத்ரி நீ
ஈடிணை அற்றவள்
இன்னருள் சுரப்பவள்
ஊழ்வினை தீர்ப்பவள் நீ
சிந்தைக்குள் ஏற்றம் அருள்கிறாய்
கரம் கொண்டு மாற்றம் அளிக்கிறாய்
அல்லல்கள் யாவும் அழிக்கிறாய்
பகவதி
ஞானத்தில் வந்து பிறக்கிறாய்
ஞாலத்தில் பொங்கி எழுகிறாய்
நாதத்தில் இங்கு கேட்கிறாய்
கோமதி
கடைசி துண்டு பல்லவி
பெண் குழு
அன்பின் சொரூபம் ஆகினாய்
ஆண்
வரம் பெறும் தவம் யாசகம்
பெண் குழு
கருணை நம்மீது தூவினாய்
தாரணி
ஆண்
மதம் தரும் சைவம் பூர்விகம்
பெண் குழு
தாரணி
Keine Kommentare:
Kommentar veröffentlichen