Meine Blog-Liste

Montag, 30. Oktober 2023

மாவீரர்கள் .தமிழ் ஈழமுருகதாசன்

 மாவீரர்கள்  

ஒரு நாட்டின் சுதந்திரமே 

அடுத்த தலைமுறை 

சுகந்திர காற்றை

சுவாசிப்பதற்கு 

மட்டுமே 

ஒவ்வொரு சொட்டு கண்ணநீரும் 

ஒவ்வொரு சொட்டு செந்நீரும் 

சிந்தியவர்களுக்காக 

தலை வணங்குகின்றேன் 

என்பிள்ளைகள்  

சுகந்திர காற்றை  சுவாசிக்க 

இந்த பிரபஞ்ச  சக்தியை 

இறஞ்சுகிறேன்

      .தமிழ் ஈழமுருகதாசன்  30.10.2023

 


விடிவு 
பொய்களை  அடுக்கி 
மெய்களை  அழித்து 
பெரும்பழி  சேர்த்தோம் 
இன்னும் பேராசையின் 
மோகம்  
பதவியின்  மோகம்  
தலைமுறை  அழவும் 
பார்த்தே  பேசுகின்றோம் 
இறை நாமத்தை சொல்லி 
தப்பித்துக்கொள்கின்றோம் 
தலைமுறை தடுமாற 
இன்னும் பின்னரும் 
பேசுகின்றோம் 
விடிவு வரும் என்று 
ஏமாற்றுகிறோம் 
சத்தியம் மறந்து 
வாழும்  தமிழன் 
எப்போ  உணர்வான் 
              -.தமிழ் ஈழமுருகதாசன்  30.10.2023 .23.37



Yosotha time -01#தன்நம்பிக்கை அழகியல் தொடர் யசோதாவின் நேரம்

Samstag, 28. Oktober 2023

திருவானைக்கா தல வரலாறு

 திருவானைக்கா :

ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளில் கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களையும் கொண்டது.
திருவானைக்கா எனப்படும், திருவானைக்கோவில் திருச்சிக்கு
அருகே அமைந்துள்ள மாபெரும்சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம்என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான #நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது.
தல வரலாறு:
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும் சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
திருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
தலச் சிறப்புகள்:
பஞ்சபூத தலம்: நீர்த்தலம்திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கடும் கோடை காலத்திலும், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம், நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி
என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க
ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
அம்பிகை வழிப்பட்ட லிங்கம்
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
குபேர லிங்கம்மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால், சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சந்னதியும் ஆகிப்போனது.
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கும், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமையவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும், இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் மனம் உருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
சிற்பங்கள்பல அரிய சிற்பங்களும் இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடது புரம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.
அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.
ஆலய பிரகாரம் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழி வரலாற்றுச் சிறப்புகள் கல்வெட்டுகள் பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிகவும் தொன்மையானவை.
அரசர், சான்றோர் திருத்தொண்டு இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டும் அன்றி போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளை சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.
ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் முதலாம் பிராகாரத்திலான துவார பாலகர் திருவுருக்களை செய்வித்தவர் இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள். நீலகண்ட நாயக்கர் நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகியின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளுச செய்தார். சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் இக்கோயிலின் உற்சவ மண்டபத்தை உருவாக்கினார்.முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத் தருளிய ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர். சந்தபேந்திரன் நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரத்தினை எழுப்பியருளினார்.வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். எம்பிரானின் திருவிளையாடல்களில் ஒன்றான திருநீறு தங்கமாக மாறிய அற்புதம் காலமும் இதுவேயாகும்.பெரும் சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சால மன்னன் இத்திருத்தலத்தில் கிழக்கில் ஒரு ஏழுநிலைக் கோபுரத்தை எழுப்பினான்.பாண்டிய அரசர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தமது பிறந்த நாளை ஒட்டி இத்திருத்தலத்திற்கு நிபந்தங்களை வழங்கியுள்ளனர். திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புற்ற இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன்) இருபத்தைந்து வேலி நிலத்தை இத்திருத்தலத்திற்கு இறையிலியாக அளித்தான்.திருத்தலப் பாடல்கள்
திருவானைக்கா நாயன்மார்கள்
மற்றும் தாயுமானவரின் பாடல் பெற்ற ஒரு தலம். திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரப் பதிகம் கீழே:
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.
மூலவர்: ஜம்புகேஸ்வரர்
பிறபெயர்கள்: திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்: வெண்நாவல்
தீர்த்தம்: காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
தொன்மை: 1000-2000 வருடங் களுக்கு முற்பட்டது.
சிறப்பு: நாயன்மார்கள் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றோரின் பாடல்கள் பெற்ற தலம்.
Ist möglicherweise ein Bild von 6 Personen und Tempel
Alle Reaktionen:
30

aatha unselai puthuvai siththan புதுவைசித்தன் ஆத்தா உன்சேலை.

#kumpapisegam france #பிரான்ஸ்# மஹாகும்பாபிஷேகம்#27.10.2023#

Freitag, 27. Oktober 2023

குமாரஸ்தவம் - மந்திரங்கள்,

 குமாரஸ்தவம் - மந்திரங்கள்,

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்
ஓம் ஷண்முக பதயே நமோநமஹ
ஓம் ஷண்மத பதயே நமோநமஹ
ஓம் ஷட்கிரீவ பதயே நமோநமஹ
ஓம் ஷட்கிரீட பதயே நமோநமஹ
ஓம் ஷட்கோண பதயே நமோநமஹ
ஓம் ஷட்கோச பதயே நமோநமஹ
ஓம் நவநிதி பதயே நமோநமஹ
ஓம் சுபநிதி பதயே நமோநமஹ
ஓம் நரபதி பதயே நமோநமஹ
ஓம் ஸூரபதி பதயே நமோநமஹ
ஓம் நடச்சிவ பதயே நமோநமஹ
ஓம் ஷடக்ஷர பதயே நமோநமஹ
ஓம் கவிராஜ பதயே நமோநமஹ
ஓம் தபராஜ பதயே நமோநமஹ
ஓம் இஹபர பதயே நமோநமஹ
ஓம் புகழ்முநி பதயே நமோநமஹ
ஓம் ஜயஜய பதயே நமோநமஹ
ஓம் நயநய பதயே நமோநமஹ
ஓம் மஞ்சுள பதயே நமோநமஹ
ஓம் குஞ்சரீ பதயே நமோநமஹ
ஓம் வல்லீ பதயே நமோநமஹ
ஓம் மல்ல பதயே நமோநமஹ
ஓம் அஸ்த்ர பதயே நமோநமஹ
ஓம் சஸ்த்ர பதயே நமோநமஹ
ஓம் ஷஷ்டி பதயே நமோநமஹ
ஓம் இஷ்டி பதயே நமோநமஹ
ஓம் அபேத பதயே நமோநமஹ
ஓம் ஸூபோத பதயே நமோநமஹ
ஓம் வ்வியூஹ பதயே நமோநமஹ
ஓம் மயூர பதயே நமோநமஹ
ஓம் பூத பதயே நமோநமஹ
ஓம் வேத பதயே நமோநமஹ
ஓம் புராண பதயே நமோநமஹ
ஓம் பிராண பதயே நமோநமஹ
ஓம் பக்த பதயே நமோநமஹ
ஓம் முக்த பதயே நமோநமஹ
ஓம் அகார பதயே நமோநமஹ
ஓம் உகார பதயே நமோநமஹ
ஓம் மகார பதயே நமோநமஹ
ஓம் விகாச பதயே நமோநமஹ
ஓம் ஆதி பதயே நமோநமஹ
ஓம் பூதி பதயே நமோநமஹ
ஓம் அமார பதயே நமோநமஹ
ஓம் குமார பதயே நமோநமஹ
குமாரஸ்தவம் - மந்திரபூர்வமானது என்பார்கள். இதில் முருகனின் மகிமையோடு வேல், மயில் மற்றும் தேவியரின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. ஆகவே, உள்ளம் உருக இந்தப் பாடலைப் பாடி வழிபடுவதன்மூலம் கந்தனின் கருணையோடு தேவியரின் அருட்கடாட்சத்தையும் பரிபூரணமாகப் பெறலாம். தெய்வானை தேவி நம் பிள்ளைச் செல்வங்களைக் காத்தருள்வாள்; வள்ளிப் பிராட்டி நம் வாழ்வில் வளம்சேர்ப்பாள். வேலும் மயிலும் நம் குடும்பத்துக்கு என்றென்றும் துணை நிற்கும்.
ஓம் ஷண்முக பதயே நமோ நம:
கருத்து: ஆறுமுகப்பெருமானே, தலைவனே உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷண்மத பதயே நமோ நம;
காணாபத்யம், சாக்தம், சைவம், வைணவம், கவுமாரம், சவுரவம் முதலான ஆறு வகை சமயங்களுக்கும் தலைவனாகத் திகழும் முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
எல்லா திசைகளையும் பார்க்கும் வண்ணம் உள்ள அழகான ஆறு திருக்கழுத்தை உடைய குகனே உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:
அழகான ஆறுமுகங்களுக்கு ஏற்றவாறு நல்ல அமைப்புடன் கூடிய ஆறு கிரீடங்களை அணிந்துள்ள, அழகே உருவான முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷட்கோண பதயே நமோ நம:
அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளி, அதில் அதிதெய்வமாக விளங்கும் குமரப்பெருமானே, உம்மை வணங்குகிறேன்.
ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஆறு விதமான தோத்திரங்களின் உட்பொருளாகவும் அதனால் உணர்த்தப்படுபவனாகவும் விளங்கும் நாயகனுக்கு நமஸ்காரம்.
ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஒன்பது விதமான செல்வங்களுக்கு உறைவிடமாகவும் அவற்றின் தலைவனாகவும் விளங்கும் சுவாமிக்கு நமஸ்காரம்.
ஓம் சுபநிதி பதயே நமமோ நம:
தன்னை வணங்குவோருக்கு மிகவும் பெரிய இன்பமான முக்தி இன்பத்தை வழங்கும் நாயகனுக்கு நமஸ்காரம்.
ஓம் நரபதி பதயே நமோ நம:
மக்களின் அரசனான கந்தவேலுக்கு நமஸ்காரம், மதுரை மீனாட்சி - சோமசுந்தரரின் மைந்தன் ஆதலால், முருகன் மன்னாதி மன்னன் ஆவான்.
ஓம் சுரபதி பதயே நமோ நம:
தேவராஜனான தேவேந்திரனுக்கு ஆட்சியைத் திருப்பி வழங்கிய தேவர்களின் நாயகனுக்கு நமஸ்காரம்.
ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
நடனமாடும் ஆறுமுகச் சிவனுக்கு நமஸ்காரம். தந்தை சிவ பெருமான் சிதம்பரத்தில் நடனமாடுவது போல முருகப்பெருமானும் தகராகாச நடனம் செய்பவர் ஆகவே, குகனும் கூத்தபிரான் ஆவார்.
ஓம் ஷடாக்ஷர பதயே நமமே நம:
ஆறெழுத்து மந்திரத்தின் இறைவனான முருகனுக்கு நமஸ்காரம்.
‘முக்தி தந்து அனுதினம் முழுபலன் நல்கச் சத்தியமாவது சரவண பவவே ’ என அருளியுள்ளார் பாம்பன் சுவாமிகள். ஆகவே, தினமும் சரவணபவனையும் சரவணபவ மந்திரத்தையும் துதித்துப் போற்ற வேண்டும்.
ஓம் கவிராஜ பதயே நமோ நம:
கவிராஜ ராஜனான முருகப்பெருமானுக்கு வணக்கம். திருஞான சம்பந்தரை முருகனின் அம்சம் என்பார்கள். முருகப் பெருமானே, கவிராஜ பெருமானாக - திருஞான சம்பந்தராக அவதரித்து வந்து சமணர்களை வென்று சிவனடியார்களின் துன்பம் தீர்த்தாராம்.
‘உபயகுல தீபதுங்க விருது கவிராஜ சிங்க
உரைபுகலி யூரிலன்று வருவோனே ’
எனும் பாடலும் பாடலும் முருகனைக் கவிராஜனாகப் போற்றுகிறது.
ஓம் தபராஜ பதயே நமோ நம:
தவம் புரிகின்றவர்களைக் காக்கும் இறைவனுக்கும், நமஸ்காரம்.
அகத்தியர், நக்கீரர், பராசரர், அருணகிரியார், சிதம்பரர், ராமலிங்கர், நாரதர் போன்ற தப ராஜர்க்களுக்குத் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம். மாதவம் புரியும் அடியார்களை முருகப்பெருமான் காத்தருள் செய்கிறார்.
ஓம் இகபர பதயே நமோ நம:
இகம் - இம்மை; பரம் - மறுமை. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனான முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.
முருகப்பெருமான் இம்மைக்குத் தேவையான அறம், பொருள், புகழ், போகம் ஆகியவற்றையும், மறுமைக்குத் தேவையான முக்தியையும் அருள்பவர். ஆகவேதான் அருணகிரிநாதர், ‘இகபர சவுபாக்கியம் அருள்வாயே ’ எனப் பாடுகிறார்.
ஓம் புகழ் முனி பதயே நமோ நம:
புகழ்முனியாம் திருப்புகழ் முனிவர் அருணகிரியாரின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.
ஓம் ஜய ஜய பதயே நமோ நம:
தன்னை வணங்கும் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியைத் தந்து வெற்றித் தலைவனாக இருக்கும் முருகனுக்கு நமஸ்காரம். தன் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியையே அருள்பவர் முருகுப்பெருமான். ஆகவே, அவர்கள் எதற்கும் அச்சம்கொள்ளத் தேவையில்லையாம். சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார். கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல் அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே. -எனப் பாடுகிறார் அருணகிரியார். அதாவது கந்தரலங்காரத்தின் பாடல் ஒன்றை தெரிந்துகொண்டால் போதும்; அந்த அடியவர் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்பது அருணகிரியாரின் வாக்கு. ஆக, அப்படியான அபயம் வழங்கும். வெற்றிகள் நல்கும் கந்தவேளுக்கு நமஸ்காரம் என்று போற்றுகிறது. குமாரஸ்தவத்தின் இந்த வரி.
ஓம் நயநய பதயே நமோ நம:
மிக்க இனிமையானவர்களான தம் பக்தர்களுக்கு, எப்போதும் இனிமை செய்யும் தலைவனுக்கு நமஸ்காரம்.
ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
அழகே உருவான தலைவனுக்கு வணக்கம். முருகன் என்றாலே அழகன் என்றுதானே பொருள் சொல்ல முடியும். அவனை நேரில் தரிசித்த பாக்கியம் பெற்றவர் அருணகிரியார். அவர் முருகப்பெருமானின் அழகை எங்ஙனம் போற்றுகிறார் என்று பாருங்கள். ‘மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை வானோர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினிம் சேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’-முருகனின் அழகைப்பருக கண்ணிரண்டு போதாது. அழகன் முருகனை ஆசைதீர தரிசித்து மகிழ வேண்டுமெனில் நாலாயிரம் கண்கள் தேவை, அதைக் கொடுக்கத் தவறிவிட்டாரே பிரம்மதேவன் என்று அங்கலாய்க்கிறார் அருணகிரியார். எனில், அழகுக்கு அதிபதி முருகன் என்பது உண்மைதானே?!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம:
தேவ குஞ்சரியான தெய்வானையின் நாயகனுக்கு வணக்கம். திருமால் வியர்வையில் உதிர்த்த அமுதவல்லி, முருகனை மணம் புரிய வேண்டி தவம் இருந்து, அதன் பலனாக குழந்தையாகப் பிறந்து தேவேந்திரனுக்கு மகளாகி, ஐராவத யானையால் வளர்க்கப்பட்டாள். அந்த தேவ குஞ்சரத்தால் வளர்க்கப்பட்டதால் அவளுக்கு தேவகுஞ்சரி - தெய்வ யானை என்று பெயர் வந்தது. சூரசம்ஹாரத்துக்குப் பிறகு முருகப்பெருமானுக்குத் தன் மகளான தேவகுஞ்சரியை மணம் செய்து வைத்தான் இந்திரன். இப்படி, தேவகுஞ்சரியின் தலைவனாகிவிட்ட முருகனை நாமும் நாளும் வணங்கி நலம் பெறுவோம்.
ஓம் வல்லீ பதயே நமோ நம:
வள்ளி அம்மையின் நாயகனாகிய முருகனுக்கு வணக்கம். திருமால் வியர்வையில் உதித்த சுந்தரவல்லி, முருகனை மணக்க வேண்டி நெடுங்காலம் தவம் இருந்தாள். அவளைப் பூலோகத்தில் பிறக்கப் பணித்தார். முருகப்பெருமான். அவளும் பூமியில் வள்ளிக் கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் குழந்தையாகத் தோன்றி, வேடன் நம்பிராஜனால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். தக்க தருணத்தில் முருகப்பெருமான் அருளாடல் புரிந்து அவளை மணந்துகொண்டார். அப்படி, செம்மான் மகளைக் கவர்ந்து மணந்த பெம்மான் முருகனை நாமும் வணங்கி வழிபட வேண்டும் என அறிவுறுத்துகிறது இந்த வரி.
ஓம் மல்ல பதயே நமோ நம:
மல்லர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். ஒருமுறை, பரசுராமரை மற்போரில் வெற்றி பெற்றாராம் முருகப்பெருமான். ‘பொங்கு வெங்குருதி மெத்த குதி கொள்ள வெம் சூரனைவிட்ட சுட்டியிலே குத்தி தரம்கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே (கந்தரலங்காரம் பாடல் 35).
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
வேலாகிய தெய்விகப் படையின் தலைவனுக்கு வணக்கம். அந்த வேல் நடுவில் விசாலமும் நுனியில் கூர்மையும் ஆனது. முருகனை வணங்குவோர் கூரிய அறிவு கொண்டவர் ஆவோர்.
‘வேலை வேண்டுவதே என் வேலை’
‘திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே ’ என தினமும் போற்றி வழிபடுவோம்.
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
சஸ்திரம் எனப்படும் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.
போரில் கரத்தில் இருந்து விடுபடும் (ஏவப்படும்) ஆயுதம் அஸ்திரம் எனப்படும். வாள் போன்ற கை விடாப் படைகளுக்கு சஸ்திரம் என்று பெயர். இத்தகைய கை விடாப் படைகளைத் தனது கைகளினால் மேன்மையுறச் செய்த தலைவன் முருகனே ஆவான்.
ஓம் சஷ்டி பதயே நமோ நம;
புகழ்பெற்ற சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத நாயகனுக்கு வணக்கம், ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாள்களுக்கு சஷ்டி விரதத்தை மக்கள் அனுஷ்டிப்பார். தீயதை வென்று நல்லதை நிலைநாட்டிய இந்த சஷ்டி விரதத்தை நாமும் கடைப்பிடித்தால் நம்மைப் பிடித்த தீயது அத்தனையும் ஒழியும். நன்மைகள் பல உண்டாகும். நாம் விரும்பியது எல்லாம் நடக்கும். இந்த சஷ்டி விரதத்தின்போது சஷ்டி நாயகனாம் முருகனை வழிபடுவதும், கந்த புராணத்தைப் படிப்பதும் கேட்பதும் மிகவும் நன்மை பயக்கும்.
ஓம் இஷ்டி பதயே நமோ நம:
சிவாகம நெறிப்படி செய்யும் யாகங்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். நம் இஷ்டங்கள் எல்லாம் இறைவனை முழு மனதுடன் உருக்கத்துடன் யாகம். செய்வதால் நிறைவேறுகின்றன என்பதால், வேள்விக்கு இஷ்டி என்று ஒரு பெயர் உண்டு.
ஓம் அபேத பதயே நமோ நம:
சத்தான சிவத்தினைச் சித்தான சக்தியினின்றும் வேறாக விளங்காமல் ஒன்றாய்க் காட்சியளிக்கும் இறைவனுக்கும் வணக்கம். வேற்றுமை அற்ற தலைவனான முருகனுக்கு வணக்கம். விருப்பு, வெறுப்பு, சிறிது, பெரிது, அகம், புறம், இல்லார், உள்ளார் போன்ற வேற்றுமை அற்ற குகனுக்கு - வேற்றுமை பார்க்காத குமரனுக்கும் நமஸ்காரம்.
ஓம் சுபோத பதயே நமோ நம:
மெய்ஞ்ஞானத்தை அளிக்கும் வள்ளலுக்கு வணக்கம்.
சத்து + சித்து + ஆனந்தம் = சச்சிதானந்தம், சத்தான சிவத்தையும் சித்தான சக்தியையும் ஆனந்தமாக உணரும் மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்குப் பிறவிப் பெருங்கடல் வராது. அத்தகைய மெய்ஞ்ஞானத்தை அளிக்கும் பரம்பொருளான முருகனுக்கு வணக்கம்.
ஓம் வியூஹ பதயே நமோ நம:
சேனைகளின் அணி வகுப்பான வியூகத்தின் படைத்தலைவனுக்கு வணக்கம்.
சூரனின் வதைபடலம் நடந்த போரில் பல வகையான வியூகத்துக்குப் படைத் தலைவனானத் திகழ்ந்த கந்தனுக்கு வணக்கம். கந்தன் என்றால் பகைவர் வலிமையை வற்றச் செய்பவன் என்று பொருள். தேவ சேனாதிபதிக்கு அரோஹரா!
ஓம் மயூர பதயே நமோ நம:
மூல மந்திர ரூபமான பிரணவ மயில், இந்திரனாகிய மயில், சூரனாகிய மயில் என்ற இந்த மூன்று மயில்களின் தலைவனான வேலனுக்கு வணக்கம். முருகன் காட்சி தரும். முன்பு மயில் காட்சி தென்படும். பாம்பன் சுவாமிகள் கால் முறிவு அடைந்தபோது முதலில் அவருக்கு மயில் காட்சி தெரிந்தது. பின் ஒரு குழந்தை அவர் பக்கத்தில் இருந்தது. அந்த மயில் அவருடைய கால் முறிவைச் சரிப்படுத்தியது. குழந்தையாக அவரருகில் நின்ற முருகனும் மயிலும் மறைந்தனர்.
ஓம் பூத பதயே நமோ நம:
பூத கணங்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம், முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தேவ சேனாதிபதியாகப் படையெடுத்துச் சென்றபோது, 1000 பூத கணங்களும் லட்சம் வீரர்களும் படையில் இருந்தனர். அவர்களின் தலைவனாக முருகன் இருந்து போரில் சூரன், தாரகன், சிங்கமுகனை வென்றார்.
ஓம் வேத பதயே நமோ நம:
வேதத்துக்குத் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம்.
ஓம் புராண பதயே நமோ நம:
பழம்பெரும் புராணங்களின் தலைவனான கந்தனுக்கு வணக்கம்.கந்தபுராணம் எல்லா புராணங்களிலும் சிறப்பு வாய்ந்த புராணம். இதைப் படிப்பவர்களுக்கு பல கோடி நன்மைகள் வரும். அவர்கள் நினைத்தது நடைபெறும். அத்தகைய புராணத்தின் தலைவனான முருகனை வணங்கச் சொல்கிறது. இந்த வரி.
ஓம் பிராண பதயே நமோ நம:
ஆன்ம நாதனாகிய முருகனுக்க வணக்கம். இந்த உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் முருகனே உயிர் நாடியாகத் திகழ்கிறார். அவரை வழிபட்டு வரம் பெற வேண்டும்.
ஓம் பக்த பதயே நமோ நம:
பக்தர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். முருகப்பெருமான் பக்தர்களின் பிரியமானவனாக இருந்து வருகிறான். அருணகிரியார், ராமலிங்க அடிகளார், நக்கீரர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலான பக்தர்களின் பிரியத்துக்கு உகந்தவனும், அவர்களின் தலைவனுமாகத் திகழும் முருகப் பெருமானை வணங்கிட, நாடி வந்து அருள்புரிவான் முருகன். ஆம்! முருகனை உள்ளமுருக தியானித்து அவன் புகழான திருப்புகழ் பாடி, ஆடி அவனை அடைய முடியும். அப்படிப்பட்ட பக்தர்களில் அருகில் வந்து அவர்கள் குறை தீர்ப்பான் குமரன்.
ஓம் முக்த பதயே நமோ நம:
முக்தியை தரும் முருகனுக்கு நமஸ்காரம்.
சதா சர்வ காலமும் முருகனுடைய பாதத்தை நம் மனதினில் ஏற்றி வழிபடுவோம்; அவரருளால் முக்தி வசப்படும். ‘முடியாப் பிறவிக் கடலில் புகார் ’ எனும் கந்தரலங்காரப் பாடல் வரிக்கேற்ப, மறுபிறவியில் சிக்கிக் கொள்ளாது. முருகனின் திருவடிப்பேற்றைப் பெறலாம்.
ஓம் அகார பதயே நமோ நம:
ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம:
ஓம் என்பது பிரணவ மந்திரம். இதில் அ, உ, ம என்று மூன்று எழுத்துக்கள் உள்ளன. ஓ- அகாரம் ஓ -உகாரம் ம- மகாரம்.
இந்த பிரணவத்தின் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம். பிரம்மதேவன் ஆணவத்துடன் முருகனை வணங்காமல் சென்றபோது, அவரது செருக்கை அடக்க முருகன் பிரணவத்தின் அர்த்தத்தை கேட்டான். அதற்கு விளக்கம் அளிக்க முடியாமல் பிரம்மன் விழித்தபோது “படைப்பதற்கு அடிப்பபடையாய் உள்ள பிரணவத்தை பற்றியே அறியாதபோது படைப்புத் தொழில் எங்ஙனம் செய்ய முடியும்” என்று கூறி அவர் தலையில் குட்டி, சிறை எடுக்குமாறு கணங்களிடம் கூறினார். அப்படிச் சிறையில் இருந்தபோது பிரம்மன் அறிவு தெளிந்து செருக்கு அகன்று முருகனை நோக்கி தவம் இருந்தார். பின்னர், திருமால் பிரம்மனை விடுவிக்கும்படி சிவபெருமானை வேண்டிக்கொள்ள, சிவனார் தன் தூதர்களை அனுப்பி பிரம்மனை விடுவிக்கும்படி கூறினார். முருகன் மறுக்க, பெரும் போர் அங்கே நிகழ்ந்தது. தேவர்கள் அத்தனை பேரும் தோற்க, அங்கே எல்லோரையும் ஒரு நொடிப்பொழுதில் முருகன் வீழ்த்தி விட்டார்.
பிரம்மன் படைப்புத் தொழில் செய்யாததால் இருந்த துன்பத்தைப் போக்க தானே படைப்புத் தொழிலைச் செய்தார். அவர் படைத்த உயிர்களின் மேன்மையை எப்படி சொல்லிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. பின் அவர் தொழிலுக்கு ஈடுகொடுக்க முடியமல் திருமாலும் ருத்ரனும் தவித்த்தால், முருகப்பெருமானே காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்து, ‘இவ்வுலகில் முத்தொழிலையும் செய்யும் பரமன் முருகனே ’ என்பதை சந்தேகம் இல்லாமல் நிரூபித்தார்.
பின் சிவபெருமானே நேரில் வந்து பிரம்மனை விடுவிக்கும்படி கூற, மறுகணம் பிரம்மனை விடுதலை செய்ய ஆணையிட்டார் முருகன். பின்னர் சிவனார், ‘பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன ’ என்று உரைக்கும்படி முருகனிடம் கேட்க, ஆசானைப் போல் அமர்ந்து பிரணவப் பொருளை உபதேசித்து, தந்தைக்கு உபதேசித்த ஞானகுரு ஆனார். இந்தக் காட்சியைக் கண்ட தேவர்கள் மெய்சிலிர்த்து ‘சம்போ மஹாவோ! ஞானகுருவே போற்றி!” எனப் பலவாறு இருவரையும் துதித்தனர். இந்த நடந்த இடம் சுவாமிமலை.
அகாரம், உகாரம், மகாரம் என்று பிரிந்த மூன்றும் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் என்று முத்தொழில்களையும், அதைச் செய்யும் மூர்த்திகளான அயன் அரி, அரன் என்பவர்களையும் உணர்த்தும். அவர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.
ஓம் விகாச பதயே நமோ நம:
எங்கும் நீக்கமற நிறைத்து இருக்கும் முருகனுக்கு நமஸ்காரம் இட எல்லை, கால எல்லை, பிறப்பு, இறப்பு, மூப்பு என்பவை இல்லாமல் எங்கும் நிறைந்துள்ள குருபதி விகாசி ஆகும். அதற்குத் தலைமையாக எப்போதும் பெரும் மகிழ்வோடு ஒளியகத் திகழும் ஓங்கார குருவுக்கு நமஸ்காரம்.
ஓம் ஆதி பதயே நமோ நம:
உலகில் எல்லா பொருள்களும் படைப்புகளும் தோன்ற காரணகர்த்தவாக விளங்கும் வேலனுக்கு வணக்கம். ‘ஆதி ஆம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாது அவிழ் கடப்பன் தாரன் தான் இருநுதலைக் காக்க காக்க சோதி ஆம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
கார்த்திகேயன் நாசியை காக்க ’ எனப் போற்றுகிறது சண்முகக் கவசம்.
ஓம் பூதி பதயே நமோ நம:
எல்லா ஐஸ்வர்யத்துக்கும் அண்டங்களுக்கும் நாயகனான முருகனுக்கு வணக்கம். அருட் செல்வம், பொருட் செல்வம், மக்கள் செல்வம் போன்ற பல்வேறு செல்வங்களை அள்ளி அள்ளி வழங்கும் வள்ளலுக்கு நமஸ்காரம் என்று சொல்லி முருகனை வழிபட, அனைத்தையும் அளவின்றி, வழங்குவார் முருகப்பெருமான்.
ஓம் அமார பதயே நமோ நம:
அழிவற்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ள குமரனுக்கு நமஸ்காரம்.
ஓம் குமார பதயே நமோ நம:
என்றும் குமரனாகிய முருகனுக்கும் வணக்கம். சத்தாகிய சிவத்துக்கும் சித்தாகிய சக்திக்கும் நடுவில் ஆனந்தமாய் சோமாஸ்கந்தராய் வீற்றிருக்கும் முருகனுக்கு நமஸ்காரம். வைகாசி விசாகம், சஷ்டி தினங்கள், தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாள்களில் இந்தக் குமாரஸ்தவம் துதியைப் பாடி முருகப் பெருமானை வழிபட்டால், சகல சுபிட்சங்களும் உண்டாகும்.
<1>.
Alle Reaktionen:
14

Mittwoch, 25. Oktober 2023

Va Nanba FriendshipSong#வா வா நண்பா#NATPUALBUM SONG#Dr.நாராயணன#தமிழ் ஈழம...

அன்பின் சொரூபம் ஆகினாய் ஈஸ்வரி ....தமிழ் ஈழமுருகதாசன்

 அன்பின் சொரூபம் ஆகினாய் 

ஈஸ்வரி 


ஜெர்மனியில் 9ஆடி உயரமான  ஓம் நவசக்தி நாயகிக்காக  நான் எழுதிய 

பாடல் 


எழுத்துலகே வேண்டாம் என கமராவை  கையில் எடுத்தேன் 

ஆனால்  மகா ஷக்தி  அன்னை என்னை விடவில்லை 

தனக்கு பாடல்  எழுதும் படி பணித்தாள்  .ஆலய  ஆதீன கார்த்தா 

பணமும் தந்து ஊக்குவித்தார்  . அன்னையின் பெரும் கருணை 

யால்  பணிந்தேன்.  உயர்ந்தேன்.  சிறந்தேன் .

அன்னையின் பாதாரவிந்தங்களை பணிகின்றேன் 

தமிழன்புடன் 

பி.எஸ்.இராஜகருணா   என்கிற 

          -

பல்லவி

பெண் குழு

அன்பின் சொரூபம் ஆகினாய் 

ஈஸ்வரி 

கருணை நம்மீது தூவினாய்

மகேஸ்வரி

சிந்தைக்குள் ஏற்றம் அருள்கிறாய்

கரம் கொண்டு மாற்றம் அளிக்கிறாய் 

அல்லல்கள் யாவும் அழிக்கிறாய் 

சாம்பவி   

சிலையாக வீற்று இருக்கிறாய்

ஸ்லோகங்கள் சொல்ல நிமிர்கிறாய் 

காலின் சிலம்பில் ஒலிக்கிறாய் 

சைந்தவி 

ஞானத்தில் வந்து பிறக்கிறாய் 

ஞாலத்தில் பொங்கி எழுகிறாய் 

நாதத்தில் இங்கு கேட்கிறாய் 

மாலினி    

செந்தமிழில் நீயும் இனிக்கிறாய்

ஏழிசையில் நின்று கலக்கிறாய் 

மூவுலகும் வென்று நிறைகிறாய் 

கமலினி

அன்பின் சொரூபம் ஆகினாய் 

ரூபினி  

கருணை நம்மீது தூவினாய்

காருணி 

சரணம் 1

பெண் குழு

தெய்வீக கரத்தால் அணைத்தாய் 

பக்தர்க்கு பலனை கொடுத்தாய் 

நவசக்தி தாயே பார்வதி 

விதி மாற்ற விரதம் தந்தாய் 

நீ ஆதி அந்தம் கடந்தாய் 

கிடந்தோமே நாங்கள் உன் கதி

எண்ணங்கள் மேன்மை ஆக்கினாய் 

வர்த்தினி  

ஏழைகள் துன்பம் நீக்கினாய்

வர்ஷினி 

ஆண்

வரம் பெறும் தவம் யாசகம்

உமையும் சிவமும் 

அடங்கும் தருணம் - அது

ஆன்மிகமே பரிபூரணம்

சாணம் 2

பெண் குழு

அபயம் தருபவள்  

அன்புக்கு பணிந்தவள்

காருண்ய கற்பகம் நீ 

பேரொளி ஆனவள் 

மெய்மலர் அணிந்தவள் 

அன்பு பவானியும் நீ

அசுரரை வென்றவள் 

அன்பர்க்கு எளியவள் 

கருணை காயத்ரி நீ 

ஈடிணை அற்றவள்

இன்னருள் சுரப்பவள் 

ஊழ்வினை தீர்ப்பவள் நீ

சிந்தைக்குள் ஏற்றம் அருள்கிறாய்

கரம் கொண்டு மாற்றம் அளிக்கிறாய் 

அல்லல்கள் யாவும் அழிக்கிறாய் 

பகவதி  

ஞானத்தில் வந்து பிறக்கிறாய் 

ஞாலத்தில் பொங்கி எழுகிறாய் 

நாதத்தில் இங்கு கேட்கிறாய் 

கோமதி 

கடைசி துண்டு பல்லவி

பெண் குழு

அன்பின் சொரூபம் ஆகினாய்

ஆண்

வரம் பெறும் தவம் யாசகம்

பெண் குழு

கருணை நம்மீது தூவினாய்

தாரணி

ஆண்

மதம் தரும் சைவம் பூர்விகம்

பெண் குழு

தாரணி

ஆசியன்

ஐரோப்பாவில்