Meine Blog-Liste

Samstag, 17. Dezember 2022

12 வருடத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்(திருக்குட முழுக்கு) ஏன்?

 12 வருடத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்(திருக்குட முழுக்கு) ஏன்?

மாமாங்கம் என்பது 12 வருடங்களைக் குறிக்கும். தேவதைகளை ஆராதனை செய்வதற்கு, குரு பகவானை பிரதானமாக கணக்கில் கொள்வார்கள். குரு பகவான் சராசரியாக ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிப்பார்.

12 ராசிகளையும் முழுமையாக ஒருமுறை சுற்றி வருவதற்கு 12 வருடங்களாகி விடும் குரு பகவானுக்கு! நாம் வாழ்கின்ற இந்த அண்டம்தான் 12 ராசி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்படி குருபகவான் இந்த அண்டத்தைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 12 வருடங்கள் என வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாமாங்கம் என்பது தேவதைகளை ஆராதனை செய்வதற்கான பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளும் கால அளவாக எடுத்துக் கொள்ளலாம்.


மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து என்பது 12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். சிதிலம் அடைந்திருந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு கும்பாபி ஷேகம் செய்யப்பட்டால் அதை புனருத்தாரணம் என்பார்கள்!

பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது என்பதே மிகவும் விசேஷமானது. 
Weniger anzeigen




Samstag, 26. November 2022

11ம் ஆண்டில் உலகக்கோவில் காலடி பதிக்கின்றோம்

 உலகக்கோவில்

26.12.2022
1 மில்லியன் தாண்டி
11ம் ஆண்டில் உலகக்கோவில்
காலடி பதிக்கின்றோம்
உலகமக்கள் அனைவருக்கும்
நன்றி
பி.எஸ்.இராஜகருணா
இராஜ .இலக்கியன்
26.12.2022

Mittwoch, 23. November 2022

Hattingen pillaiyar temple kumpa apisegam 03 .09. 2017மகா கும்பாபிசேகம்

லிங்காஷ்டக ஸ்லோகங்கள்:

 Hindu Tamil Kultural Center Dortmund e.V.

Adresse: Kieferstraße 24, 44225 Dortmund.Germany


1. ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 2. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம் காம தஹன கருணாகர லிங்கம் ராவண தர்ப்ப விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 3. ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 4. கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 5. குங்குமசந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம் ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம் பாவையர் பக்தி பிரேவச லிங்கம் தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகம் மிகவும் சக்தி வாய்ந்த பாடலாக கருதப்படுகிறது. இப்பாடலை தினமும் பாடி வந்தால் இறப்பின் போது சிவலோகத்தில் மோட்சத்தை அடையலாம் என்று கூறுகிறார். இப்பாடல் மகாவிஷ்ணு, நான்முக பிரம்மன் மற்றும் அத்துணை தேவர்களும் அர்ச்சித்து வழிபட்ட லிங்கமாக பக்தர்களுக்கு எடுத்துரைக்கிறார் எனவே இதில் இருக்கும் 8 லோகங்களையும் இடைவிடாமல் தினமும் உச்சரித்து வந்தால் நமக்கு இருக்கும் அத்தனை பிரச்சினைகளும் விரைவாக தீருமாம். மேலும் தீர பிணி தீரவும், சகல சௌபாக்கியங்களும் பெறவும், பாவங்கள் தீரவும் இப்படி தினமும் உச்சரித்து பயன் பெறலாம்.

''சைவத்தமிழ்கலைவாணர்'' விருது உலகக்கோவில் ஆசிரியருக்கு கம் முருகன் ஆலய...

Sonntag, 16. Oktober 2022

பி. உண்ணிகிருஷ்ணன் (P. Unnikrishnan

 உலகக்கோவில் 

16.10.2022

ஜெர்மனி - குமெர்ஸ்பாக் 

தமிழ் .டே (தமிழ்.de ) இணையத்தள  ஆதரவில்   அருள் மிகு  குறிஞ்சிக்குமரன்  ஆலயத்தில் ''கலைமாமணி'' 










; மலையாளம்: പി. ഉണ്ണിക്കൃഷ്ണൻ, பிறப்பு: 9 சூலை 1966) இந்தியாவின் கருநாடக இசைப் பாடகரும் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.  80 மேற்பட்ட சினிமா . பக்தி   பாடல்களையும்   பாடியவர். . 14.10.2022  அன்று 18.40 மணிக்கு வருகை தந்து  முருகனை வணங்கினார் .அவருக்கு  ஆலய நிர்வாக சபையினர்கள்   பொன்னாடை போர்த்தி .மாலையும் அணிவித்து கௌரவப்படுத்தினார்கள் . பி. உண்ணிகிருஷ்ணன் குறிஞ்சிக்குமரன்  ஆலயத்தில் சிறு  உரையும்  ஆற்றி இருந்தார் . அவர்களின்  கலைப்பயணம் 

சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம் .போட்டோ வீடியோ  உலகக்கோவில்  பி.எஸ். இராஜகருணா 

இராஜ .இலக்கியன் .குமெர்ஸ்பாக் சசி

தமிழன்புடன்   

உலகக்கோவில்

பி.எஸ். இராஜகருணா 

இராஜ .இலக்கியன்

16.10.2022

Dr Elangko Erambamoorthys# talk#meditaion #"இரண்டாவது மூளையும் உடல், உ...

Dienstag, 12. Juli 2022

 உலகக்கோவில்

10.07.2022
படம் .ஸ்ரீ நாகபூசணி ஆலயம்
ஜெர்மனியில் கிரேபில்ட் பதியில் எழுந்தருளி அருளாச்சி புரியும் ஸ்ரீ நாகபூசணி அன்னையின் அருள் பிரபாகம்
காட்சி ப் பதிவுகள் ஆலய குருவும் மகோற்ப்பவகுருவும் ஆகிய ''சத்தோஜாதசிவம்'' ''ரூபலங்காரமணி''சிவஸ்ரீ -கைலாஷ் கிருஷ்ணமோகன் குருக்கள் ஆலய அறங்காவலர்கள் சிவாச்சாரிய பெருமக்கள் .நாதஸ்வர கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
இராஜ .இலக்கியன்
10.07.2022






Freitag, 13. Mai 2022

ஜெர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி#அன்னை நாகத்தில் எழுந்தருளும் அ...

அராலி ஆவரம்பிட்டி முத்து மாரியம்மன் 13.05.2022 இன்றுகொடியேற்ற விழாவுடன்




 அராலி ஆவரம்பிட்டி முத்து மாரியம்மன் 13.05.2022 இன்றுகொடியேற்ற விழாவுடன்

அராலி ஆவரம்பிட்டி முத்துமாரி அம்மன் அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம், இலங்கை தொலைபேசி : 0094 212251466 : 0094 777110489 மின்னஞ்சல் : aralyamman@gmail.com இணையத்தளம் : www.aralyamman.com ------------------------------------------------------------------------------------- This video was a production from Worldkovil.com. Visit our website: http://worldkovil.com

alagen murugan malmarugan song. mulheim murugan ther அழகன் முருகன்முல்கை...

arali ammen13 .05 .2022#foto show&video #Shorts#kodiyerram#அராலி ஆவரம்ப...

அராலி ஆவரம்பிட்டி முத்து மாரியம்மன் 13.05.2022 கொடியேற்ற விழா#arali m...

Samstag, 23. April 2022

Sri Sithivinayagar Kovil e.V.#Hindu-Tempel in Stuttgart#Germany#shorts

#kumpaapisegam#Sri SithivinayagarKovil #03.04.2022#Part-03#மஹா கும்பாபிஷ...

ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருமறைக்காடு.# வேதங்கள் வணங்கிய திருத்தலம்

 #ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருமறைக்காடு

#வேதங்கள் வணங்கிய திருத்தலம்

#worldkovi.com

வேதங்கள் வணங்கிய திருத்தலம்

ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருமறைக்காடு
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

வேதங்கள் வணங்கிய திருத்தலம். சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஒன்று. தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார்.

இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள்.

துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.



இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது. இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் மேற்கு வெளிப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சந்நிதிக்கு கொடிமரமும் உள்ளது. இதற்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது.

இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.



இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம்.

கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் விசேஷமாக கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.



ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.



அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் தான்
திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

Samstag, 9. April 2022

ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் 2 இரண்டாவது மஹா கும்பாபிஷேக பெருஞ் சாந்தி பெருவிழா விஞ்ஞாபனம் 03.04.2022

 உலகக்கோவில் 

03.04.2022

எழுத்து பி.எஸ். இராஜகருணா worldkovil 

ஜெர்மனியில்# ஸ்ருட்கார்ட் தென்மேற்கு  மாநிலமான Baden-Württemberg இன் தலைநகரம் மற்றும் நன்கு அறியப்பட்ட உற்பத்தி இடமான . Mercedes-Benz மற்றும் Porsche ஆகிய இரண்டு நிறுவனங்களும் இங்கு தங்கள் தலைமையகத்தைக் கொண்டுள்ளன மற்றும் அவற்றின் சொந்த அருங்காட்சியகங்களை நடத்தி வருகின்றன. ஸ்ருட்கார்ட்டில் ஏராளமான பூங்காக்கள் உள்ளன, அவை நகர மையத்தில் பசுமையான பெல்ட்டாக இயங்குகின்றன. கோட்டை, தோட்டங்கள், ரோசென்ஸ்டைன் ,பூங்கா மற்றும் பூங்கா நதிகளும் ஓடுகின்ற  அழகான  வரலாற்று சிறப்பு மிக்க   #ஸ்ருட்காட்  பதியில் எழுந்தருளி  அருளாட்சி  புரியும் கௌரி புத்திரன் 





கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம சிவாச்சாரியார்  ''கிரிஜாக்ரமஜோதி'' ''சிவகாம பூஷணம்'' ''சிவகாம ரத்தினம்'' ''சிவாகம திலகம்'' சிவஸ்ரீ .சிவ .குமாரதாஸக் குருக்கள்  (கனடா )  

தலைமையில் . மற்றும் 

ஆலய குரு   பிரம்மஸ்ரீ .சிவகுமார சர்மா .

சிவஸ்ரீ . சண்முக ஸ்ரீகுமரக்குருக்கள் ( ஹனோவர் ஜெர்மனி) 

சிவஸ்ரீ .நடராஜ வேணுகோபால சிவாச்சாரியார்   (பக் நாங் ஜெர்மனி)

சிவஸ்ரீ . கிருஷ்ண பாலேந்திரக் குருக்கள்  (ஹம்  ஜெர்மனி )

சிவஸ்ரீ.இராம முரளிதரக்குருக்கள்  பிராங்பேர்ட்  ஜெர்மனி

பிரம்மஸ்ரீ .வாமதேவன் சர்மா  (நூரன் பேர்க் ஜெர்மனி )

பிரம்மஸ்ரீ.சந்தோஸ் சர்மா  (டோர்ட் முண்ட் ஜெர்மனி )

பிரம்மஸ்ரீ.ஸ்ரீ பவன் சர்மா (கைல்புரோன் ஜெர்மனி )

சிரஞ்சீவி பிரம்மஸ்ரீ. வேணுகோபால.சந்தோஸ் சர்மா (பக் நாங் ஜெர்மனி)

ஆலய மங்கள வைத்தியக்  கலைஞர்கள்  யோ.மாதவன் '' தவில் இசைமுரசு '' இ .முரளி 

ஆலய தொடர்பு . சைவத்திரு . சி. மகேஷ் . சைவத்திரு .சூட்டி  .ஆலயவர்ண வேலை கனகராஜா . ராஜபதி 

மற்றும் ஆலய அறங்காவலர்கள்  பக்தர்கள்  என கலந்து சிறப்பித்தனர் . வர்ணனை, எழுத்து . வீடியோ பதிவுஉலகக்கோவில் இராஜ.இலக்கியன்  . ''ஆன்மீக செல்வர்'' பி.எஸ். இராஜகருணா நேரலை உலகக்கோவில் இராஜ.இலக்கியன்

இனிதே  சிறப்பாக மஹா கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது .

தமிழன்புடன் 

பி.எஸ்.இராஜகருணா 

இராஜ .இலக்கியன் 

உலகக்கோவில் 

03.04.2022

ஆசியன்

ஐரோப்பாவில்