Meine Blog-Liste

Samstag, 17. Dezember 2022

12 வருடத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்(திருக்குட முழுக்கு) ஏன்?

 12 வருடத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்(திருக்குட முழுக்கு) ஏன்?

மாமாங்கம் என்பது 12 வருடங்களைக் குறிக்கும். தேவதைகளை ஆராதனை செய்வதற்கு, குரு பகவானை பிரதானமாக கணக்கில் கொள்வார்கள். குரு பகவான் சராசரியாக ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிப்பார்.

12 ராசிகளையும் முழுமையாக ஒருமுறை சுற்றி வருவதற்கு 12 வருடங்களாகி விடும் குரு பகவானுக்கு! நாம் வாழ்கின்ற இந்த அண்டம்தான் 12 ராசி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்படி குருபகவான் இந்த அண்டத்தைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 12 வருடங்கள் என வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாமாங்கம் என்பது தேவதைகளை ஆராதனை செய்வதற்கான பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளும் கால அளவாக எடுத்துக் கொள்ளலாம்.


மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து என்பது 12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். சிதிலம் அடைந்திருந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு கும்பாபி ஷேகம் செய்யப்பட்டால் அதை புனருத்தாரணம் என்பார்கள்!

பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது என்பதே மிகவும் விசேஷமானது. 
Weniger anzeigen




Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்