Meine Blog-Liste

Samstag, 22. Februar 2020

அழிவின் விளிம்பின் நிற்க்கும் ஆயிரம் ஆண்டு கடந்த சிவாலயம்


அழிவின் விளிம்பின் நிற்க்கும் ஆயிரம் ஆண்டு கடந்த சிவாலயம் 

Guruvayurappadhasan Sundararaman

ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாத நிலையிலும்,தனக்கு உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு இறைவிக்கு ஒரு வேளை நைவெத்தியமாவது செய்து வரும் அப்பாவி அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர்.
அரியலூருக்கு மிக அருகில் கிட்டதட்ட அழிவின் விளிம்பின் நிற்க்கும் ஆயிரம் ஆண்டு கடந்த சிவாலயம் ஒன்றின் தரிசனத்தில் அங்கிருந்த சிவாச்சாரியரிடம் பேசிய போது பிரமிக்க வைத்தார்.
யாராவது வருவார்களா என கிட்ட தட்ட 10 நூற்றாண்டு கடந்து பல பொக்கிஷங்களை தன்னுள் கொண்டு நம்மை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவாலயம்...
மத்திம வயதுடைய அர்ச்சகர்...
உடையில் மட்டும் வறுமை ..அவரின் பேச்சில் அல்ல..
அழகாக தெளிவாக விளக்கினார் கோவில் வரலாறு சிறப்பு பற்றி...
எவ்வளவு சாமி சம்பளம் என்றோம்...
மாதம் 400...அதுவும் எப்ப வரும் எனவும் தெரியாது,
கோவிலுக்கு மாத செலவு மின்சாரம், தீபம் ஏற்ற எண்ணெய், நைவேத்தியம் என 4000 முதல் 5000 வரை தொடும் என்றார்.. இவற்றை
எப்படி சமாளிக்கிறீங்க என்றோம்...
ஜோதிடம் தெரியும்...பார்ப்பேன்...அதுவும் இந்த குக்கிராமத்தில் எத்தனை பேர் வந்துடுவாங்க...கணபதி ஹோமம் மற்றும் திருமணம் என சில மாதங்களில் சிறப்பாக இருக்கும்...சில மாதங்களில் அதுவும் இல்லை..இழுத்துக்கோ பறிச்சுக்கோ என பகவான் நம்மை வழிநடத்துகிறார் என்றார்...
தொல்பொருள் துறை சேர்ந்த கோவில், அறநிலையத்துறை சார்ந்த கோவில் தானே எதுவும் உதவி??? என்றோம்...சம்பளமே தரவில்லை இதில் உதவியா என்றார்..
இவ்வளவு சிரமத்துடன் ஏன் இங்க இருக்கிங்க ,,வேறு கோவில்களில் உங்களை கூப்பிடலையா..போகலாமே வேறு கோவில்களுக்கு... என்றோம்.
நிறைய வந்தது...நான் போகவில்லை என்றார்..
ஏன் என்றோம்..
இந்த இறைவனும் இறைவியும் என் தாய் தந்தை...இந்த வயதான தாய் தந்தையரை அனாதையாக தவிக்க விட்டு விட்டு என்ன எப்படி போக சொல்றீங்க...எனக்கு நிச்சயம் தெரியும்...நான் சென்று விட்டால் அடுத்து யாரும் இங்கு பணிக்கு வரமாட்டார்கள் என..தெரிந்தும் சென்றால் என் மனசாட்சியே என்னை கொன்றுவிடும் என்றார்...
அவரிடம் அடுத்து என்ன பேசுவது...
அவரின் கைகளை பிடித்து கோடி கோடி நமஸ்காரங்கள் என கண்களில் ஒற்றி கொண்டு கனத்த இதயத்துடன் கிளம்பினோம்..
சனிபெயர்ச்சி குருபெயர்ச்சி என கூட்டம் கூட்டமாக ஒரே கோவிலை நோக்கி பிரபலமான கோவில்களை மட்டுமே குறிவைத்து கிளம்பாமல் இது போன்ற கோவில்கள் பக்கமும் உங்கள் பார்வைகளை திருப்புங்கள்...
தொழிலாளார் நலன் பேசும் இயக்கங்கள், அமைப்புகள் இது போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒரு சமூகம் தங்கள் கைங்கர்யத்தை இடைவிடாமல் செய்து வருகின்றனர் என தெரிந்து கொள்ளுங்கள்..
நம் தமிழ் வளர்த்த கோவில்கள் சிதிலம் சிதிலமாக சிதைந்து போவதையும், இறை தமிழ் வளர்த்து வரும் ஒரு சிறு கூட்டம் அடிப்படை வாழ்வாதாரமே இன்றி அல்லல்படுவதையும் தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் உணர்வு என பேசிவரும் அரசியல் கட்சிகள் அறிந்து கொள்வது எந்த காலமோ.
(#குறிப்பு : நல்ல ஆன்மீகவாதிகளாவது,அந்த அந்த பகுதியில் இது போன்ற பழமையான கோவில்கள் இருப்பதை அறிந்து அதை வெளிபடுத்துங்கள்.இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்று கூடுங்கள்.நல்ல நாட்களில்,வெள்ளி,செவ்வாய்யாவது இது போன்ற கோவில்களை தேடி சென்று தரிசியுங்கள்.குறிப்பாக ஜோசியர்கள் இது போன்ற பழமையான கவனிப்பார் இன்றி இருக்கும் கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்ய பரிந்துரையுங்கள். குருக்களும், கோவிலும் காப்பாற்றப்படும்.)
பணம்,, உதவி இவருக்கு செய்யலாம் என கேட்பர்களுக்கு... நிச்சயம் பணம் வாங்க மாட்டார். இவருடைய ஆசையெல்லாம் இப்பழம் பெருமை வாய்ந்த கோவிலை புதுப்பித்து பார்க்க வேண்டும் என்பதே.
இவர் ஒருவர் மட்டும் தான் என நினைக்கிறீர்களா...தமிழகம் முழுவதும் இதே தான்...இவர் ஒருவருக்கு மட்டும் உதவி செய்யுங்கள என பதிவிடவில்லை...பல கோவில்களுக்கு இதே நிலை தான்...அவர்கள் நோக்கம் பணமும் அல்ல..பணம் வேண்டும் என்றால் என்றோ கிளம்பி இருப்பார்கள்..நாம செய்ய வேண்டியது நேரம் கிடைக்கும் போது இது போன்ற கோவில்களை தேடி செல்வோம்...கொண்டாடுவோம் இறை ஆலயங்களை..இதை தான் அந்த சிவாச்சார்யர்கள் விரும்புவதும்..
#பராமரிப்பு இல்லாத கோவில் என்பதால் யாருமே வர மாட்டேங்குறாங்க என வருத்ததுடன் கூறினார். இது போன்ற கோவில்களுக்கு நாம் தொடர்ந்து செல்ல செல்ல கோவிலும் பொலிவு பெறும் அர்ச்சகர்களும் பலமடைவார்கள்..நாம் சென்று வந்ததை நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பரிந்துரைப்போம்...செல்லட்டும் அவர்களும் ...இது தான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும்..
#சிதலமடைந்த பழமையான கோவில்களுக்கு உங்களால் இயன்ற உதவியை ஆலயத்திருப்பணிக்கு செய்யுங்கள். உங்கள் குடும்பம் மேன்மேலும் தழைத்தோங்க ஈசன் அருள் புரிவார். ஓம் நமசிவாய.
இக்கோவிலானது திருச்சிராப்பள்ளி to ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில்,திருச்சிராப்பள்ளியில் இருந்து 54 கி.மீட்டர் தொலைவில் பழுவூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.பழுவேட்டையார்களின் தலைநகர்தான் இந்த பழுவூர்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்