ஈழத்து பஞ்சலிங்கம்.....(பஞ்சஈஸ்வரங்கள் )
*********************************************

சிவனின் ஐந்து திருமுகங்கள் . ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம்
1. நகுலேசுவரம்/ கீரிமலை, யாழ்ப்பாணம்.
சிவபெருமானால் சபிக்கப்பட்டு கீரிமுகமடைந்த யமதக்னி முனிவர் பின்னால் நகுல முனிவர் என்று அழைக்கப்பட்டார். இங்குள்ள புனிததீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டதினால், முகத்திலிருந்த குறை நிங்கப்பெற்றதினால் கீரிம லையெனப் பெயர் பெற்றது.காசி திருத்தலத்தைப் போன்று பிதிர்க்கடன் செய் ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது கீரிமலை கடல்.

2. திருக்கேதீச்சரமும்/ மன்னார்,
கேது பகவான் பூஜித்த ஸ்தலம்,இங்குள்ள புனிததீர்த்தம் பாலாவி, மூலவர் கேதீஸ்வரப்பெருமானுடன் கௌரியம்மை. ஈழத்து ஆதிகுடி மக்களான நாகர் களால் இத்தலம் பராமரித்து வழிபாடு செய்யபட்டதாக சொல்லப்படுகின்றது.

3. திருக்கோணேஸ்வரம்/ திருகோணமலை.
இலங்கையை ஆண்ட, மனுராசன் என்னும் மன்னன் கி.மு 1300 ஆம் ஆண்டு இந்த கோயிலைக் கட்டினான் . பின்னால் வந்த குளக்கோட்டு மன்னன் இதை புனருத்தாணம் செய்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.இங்கு மூலவர் கோணேசப்பெருமான்.......இந்தக் கோயிலை இராவணன் மனைவி மண்டோதரியின் தந்தை பிரதிஷ்டை செய்ததாக புராணக்கதைகள் சொல்கின்றன.

4. முனீஸ்வரம்/ சிலாபம்
இவரை அழகேஸ்வரம் என்றும் அழைப்பார்கள். வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இந்த ஆலயத்துக்க் உண்டு, திருவிழாக் காலத்தில் தினமும் காலையும் மாலையும் சோமஸ்கந்தமூர்த்தி வீதியுலா வருவார். சிவன் இரவலர் கோலம் பூண்டு, பிட்சாடணோற்சவத் திருவிழாவும் இங்கு நடை பெறுகின்றது. மூலவர் வடிவாம்பிகா சமேத முன்னைநாதர்.

இந்த கோயில் லிங்கம் தான் இலங்கையில் சிவனுக்காக அமைந்த முதல் ஈஸ்வரன் இது இராமர் காலத்துக்கு முற்பட்டது இங்கு வந்து இராவணன் பூசித்ததாக கூறப்படுகின்றது.
இராவணனைக் கொன்ற பிரமஹத்திதோஷம் விலக சிவபெருமானிடம் இராமர் வேண்டிய போது மானவாரி லிங்கம், திருக்கோணேஸ்வர லிங்கம், திருக்கேதீஸ்வர லிங்கம், ராமேஸ்வர லிங்கம் இந்த லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்க சொன்னார் இதில் முதல் லிங்கம் தான் இந்த மானவாரி லிங்கம் இன்று இதை ராமலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது.
5. தொண்டேஸ்வரம்/ மாத்தறை.
தென்னிலங்கையிலுள்ள தொண்டீஸ்வரம் ஆலயம் போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்ட பின்னர் இன்று விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டு சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர். இங்கு சிவலிங்கம் (தேவேந்திர மூலை,மூலவர்) இப்ப இல்லை. இதை திரும்ப பிரதிஷ்டை செய்தால்த்தான் இலங்கைக்கு விமோசனம் கிடைக்கும்.

நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முனீஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. திருஞான சம்பந்த மூர்த்தி,சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய ஆலயங்கள்.
இலங்கையின் நான்கு திசைகளிலும் இருந்து காவல் காத்தும் வருகின்றன. வடக்கே நகுலேஸ்வரமும், கிழக்கே திருக்கோணேஸ்வரமும், தெற்கே தொண்டீஸ்வரமும், மேற்கே முனீஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வரமும் என அவை நம் நாட்டை காவல் காத்து வருகின்றன . ....
- ஈழத்து வரலாற்று கோவில்களில் இருந்து.....
Keine Kommentare:
Kommentar veröffentlichen