Meine Blog-Liste

Samstag, 19. Januar 2019

விஷ்ணுவை வணங்குபவர்கள் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா மிக முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. அதே நேரத்தில் இந்த கோவில் தவிர்த்து மற்ற எந்த கோவில்களுக்கெல்லாம் செல்லலாம் என்பதையும் அப்படி சென்றால் என்ன பலன்கள் என்பதையும் இந்த பதிவில் காண்போம். சொக்கநாதசுவாமி கோவில் பெங்களூரில் மிகப் பழமையான கோவில்களில் ஒன்று இந்தக் கோவில். சோழர்களால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டொம்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேவுள்ள டிவீஎஸ் இரு சக்கர வாகன கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெருவின் கடைசியில் சத்தமேயில்லாமல் இருக்கிறது இந்த ஆயிரம் வருட பழமையான கோவில். சோழர்கள் கட்டிய கோவில் அதிகாரப்பூர்வமான தரவுகள் இல்லாததால் சோழர்களில் யார் கட்டியது என்று சரியாக கூறமுடியவில்லை. இருந்தும் ராஜ ராஜ சோழன் கட்டிய கோவில் என்று கோவிலை நிர்வகிக்கும் ட்ரஸ்ட் அமைப்பினர் கூறுகின்றனர். சோழர்கள், கிபி 10-12'ஆம் நூற்றாண்டில் தங்கள் சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விஸ்தரித்த போது பெங்களூரும் அதில் சேர்ந்தது. கடவுள் விஷ்ணு இப்போதுள்ள Yelahanka, அப்போது யெலஹன்க‌ நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் கட்டிய கோவில்தான் டொம்லூரில் உள்ள சொக்கநாதசுவாமி கோவில். சுவாரஸ்யமாக, சொக்கநாதசுவாமி என்று அழைக்கப்பட்டாலும் மூலஸ்தானத்தில் உள்ள கடவுள் விஷ்ணு. தமிழ் கல்வெட்டுக்கள் கோவிலின் புறச்சுவரை சுற்றி வரும்போது ஆயிரம் வருட பழமையான தமிழ் கல்வெட்டுக்களை நீங்கள் காணலாம். டொம்லூர், அப்போது தோம்பலூர், தேசிமாணிக்கபட்டினம் என்று இரு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது. 1992 ஆண்டில்தான் இந்த கோவிலின் பழமையான பெருமையறிந்து மறுசீரமைப்பு செய்திருக்கின்றனர். கோவிலின் சில குறிப்பிட்ட முனைகளில் தியானம் செய்தால் பிராண ஓட்டத்தை குணப்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் கூட்டம் பெருமாள் கோவில் என்பதால் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். மன அமைதிக்காக வர விரும்புவோர், கோவிலின் கட்டமைப்பை, கல்வெட்டுகளை ரசிக்க‌ விரும்பும் நபர்கள் ஞாயிறன்று வரலாம். ஆயிரம் வருட பழமையான நினைவுச் சின்னம், ஊருக்குள் இருந்தாலும், கோவிலுக்குள் இருக்கும் அமைதி, கல்வெட்டுகள் என எல்லாம் உங்களை தன்வசப்படுத்திவிடும். சார்ங்பாணி கோவில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோவில்களின் பூமியாக வர்னிக்கப்படுகிறது. இங்கே உள்ள 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் கோவில் உலகப் பிரசிதிபெற்றது. தாயார் விஜயவள்ளியுடன் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் திருமாள் அருள்பாலிக்கிறார். சார்ங்பாணி கோவில் காவேரியில் ஸ்ரீ சக்கரம் தோன்றிய இடத்தை இப்பொது சக்கரை தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பெயர்க்காரணம் சார்ங்கபாணி என்னும் பெயரில் உள்ள சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லைக் குறிக்கிறது. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தருகிறது. சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார்.பிரம்மாண்டத் தோற்றம் மூலவர் கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதாரச் சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இத்தல தேர் சக்கரம் பிரம்மாண்டத் தோற்றத்துடன் சுற்றுப்புற சுவர்களிலும் அழகிய கலைநயமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 11 நிலைகளையுடைய இது 150 அடி உயரம் கொண்டது. சித்திரைத் தேர்த்திருவிழா இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா பிரசித்திபெற்றது. இத்திருவிழாவின் போது வழிபடப்படும் தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே உள்ள கோவில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றுள்ளது. எப்படி செல்வது கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில். சென்னை, திருச்சி, மதுரை என மாநிலத்தின் எந்தப் பகுதிகளில் இருந்தும் ரயிலின் மூலம் கும்பகோணம் வந்தடையலாம். அருள்மிகு வரதராஜப் பெருமாள் கடலூர் மாவட்டம், கண்ணங்குடியில் உள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு பூஜை செய்து வர சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சேர் மார்க்கெட், பங்குதாரர்கள் உள்ளிட்டவை மூலம் நல்ல வரவு கிடைக்கும் வழிபாடு குரு, சனி, ராகு, கேது உள்ளிட்ட நட்சத்திர பெயர்சிகளாலும், கிரக இடமாற்றத்தாலும் ஏற்படும் தீமைகளில் இருந்த விடுபடவும், திருமணத் தடை நீங்கி, ஐஸ்வர்யம் உண்டாக மூலவருக்கு துளசி மாலை அணிவித்து, படையல் வைத்து வழிபடுதல் சிறப்பு. Adam Jones கும்பகோணம் கண்ணோட்டம்எப்படி அடைவதுஈர்க்கும் இடங்கள்வீக்எண்ட் பிக்னிக்வானிலைஹோட்டல்கள்படங்கள்பயண வழிகாட்டி இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்