Meine Blog-Liste

Mittwoch, 30. Januar 2019

1 - மாத்ரு புரம் - ரேணுகா பீடம்.
2 - கொல்லாபுரம் - லஷ்மி பீடம்.
3 - துளஜாபுரம் - சப்தச்ருங்க பீடம்.
4 - இங்குளை - ஜுவாலாமுகீ பீடம்.
5 - ஸ்ரீ காசி - அன்னபூர்ணா பீடம்.
6 - ரக்த தந்த்ரிகை - விந்த்யாசல பீடம்.
7 - ரக்த தந்த்ரிகை - துர்கா பீடம்.
8 - சாகம்பரீ - ப்ராமீரி பீடம்.
9 - மதுரை - மீனாட்ஷி பீடம்.
10 - நேபாளம் - ரஷய காளீ பீடம்.
11 - ஸ்ரீ நகரம் - சாம்பு நகேச்வரி பீடம்.
12 - நிலபர்வதம் - நீலாம்பரி பீடம்.
13 - ஸ்ரீ சந்திரகலை - கௌசிகீ பீடம்.
14 - ஸ்ரீ காஞ்சி - காமாஷி பீடம்.
15 - வைத்ய நாதம் - ஜ்வாலா பீடம்.
16 - சைனா - நீலசரஸ்வதி பீடம்.
17 - வேதாரண்யம் - ஏகாம்பர பீடம்.
18 - வேதாரண்யம் - சுந்தரீ பீடம்.
19 - மஹாசலம் - யோகேஸ்வர பீடம்.
20 - ஹிதய பர்வதம் - மாதேவீ பீடம்.
21 - மணித்வீபம் - புவனேஸ்வரி பீடம்.
22 - மணித்வீபம் - திரிபுரபைரவி பீடம்.
23 - அமரேசம் - சண்டிகா பீடம்.
24 - ப்ரபாஸம் - புஷகரேஷணி பீடம்.
25 - புஷ்கரம் - காயத்ரீ பீடம்.
26 - நைமிமீசம் - தேவி பீடம்.
27 - புஷ்காராஷம் - புருகாதா பீடம்.
28 - ஆஷாடம் - ரதி பீடம்.
29 - பாரபூதி - பூதி பீடம்.
30 - கண்ட முண்டம் - தண்டினீ பீடம்.
31 - நாமுலம் - நாகுலேஸ்வரி பீடம்.
32 - ஸ்ரீகிரி - சாரதா பீடம்.
33 - பஞ்ச நகம் - திரிசூல பீடம்.
34 - ஹரிச் சந்திரம் - சந்திரா பீடம்.
35 - ஆமரதகேஸ்வரம் - ஸீஷ்மபீடம்.
36 - மஹாகாளாஸ்தி - சாங்கீரீ பீடம்.
37 - மத்யாபீதம் - சர்வாணி பீடம்.
38 - கயை - மங்கள பீடம்.
39 - கேதாரம் - மார்க்கதாயினீ பீடம்.
40 - பைரவம் - பைரவீ பீடம்.
41 - குருஷேத்ரம் - தர்ணுப்பிரியை பீடம்.
42 - விபினாகுலம் - ஸ்வாயம் பலி பீடம்.
43 - கணகளம் - உக்ர பீடம்.
44 - விமகேஸ்வரம் - விஸ்வேஸ பீடம்.
45 - ஹடாஹாசம் - மதாந்தக பீடம்.
46 - பீமம் - பீமபீடம்.
47 - வஸ்த்ரம்பதம் - பவானி பீடம்.
48 - அவமுக்தம் - விசாலாஷி பீடம்.
49 - அர்த்த கோடிகம் - ருத்ராணி பீடம்.
50 - அவழுக்தம் - வராஹி பீடம்.
51 - மஹாலயம் - மஹாபாகாபீடம்.
52 - கோகர்ணம் - பத்ரகாளீ பீடம்.
53 - பத்ரகர்ணீகம் - பத்ரா பீடம்.
54 - ஸ்தாணும் - ஸ்தாண்வீசாபீடம்.
55 - ஸ்வர்ணாஷம் - உத்பலாஷி பீடம்.
56 - கமலாலயம் - கமலா பீடம்.
57 - சகமண்டலம் - ப்ரசண்ட பீடம்.
58 - மகேடெம் - மகுடேஸ்வரி பீடம்.
59 - குரண்டலம் - த்ரிசந்திரகா பீடம்.
60 - மண்டலேசம் - சரண்டகா பீடம்.
61 - ஸ்தூலகேஸ்வரம் - ஸ்தூல பீடம்.
62 - சங்க கர்ணம் - தீவனி பீடம்.
63 - கரவஞ்சம் - காளி பீடம்.
64 - ஞானிகள் இதயம் - பரமேஸ்வரி பீடம்.

Dienstag, 29. Januar 2019

கொடியேற்றம். 28.01.2019 மாத்தளை முத்துமாரியம்மன்

பத்திரகாளி அம்மன் மஹா கும்பாபிஷேகம் /மட் ட க்கிளப்பு



‎Acharya Babaji‎ an திருச்சிற்றம்பலம்தை அமாவாசை அற்புதம்…

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.
ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார். அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர் மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.
ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர்.
மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்... உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர் தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார். ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க... 
அதற்கு பட்டர் முடியும் என்றார்.
இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்’ என்று கூறி சென்றுவிட்டார்.
சூரியன் மறைந்தது… அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை. உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார்.
‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார். பின்பு, ‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடியும்போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.
உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச... அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.
‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.
மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.
ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்.. அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…
அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- 
1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள். 2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். 3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள். 4. உயர்பதவிகளை அடையலாம். 
5. மனக்கவலை தீரும். 6. மந்திர சித்தி பெறலாம். 7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும். 8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும். 9. அனைத்தும் கிடைக்கும். 10. மோட்ச சாதனம் பெறலாம். 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள். 12. தியானத்தில் நிலை பெறுவார்கள். 13. வைராக்கிய நிலை அடைவார்கள். 14. தலைமை பெறுவார்கள். 15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள். 16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும். 17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம். 18. மரணபயம் நீங்கும். 19. பேரின்ப நிலையை அடையலாம். 20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும். 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும். 22. இனிப்பிறவா நெறி அடையலாம். 23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும். 24. நோய்கள் விலகும். 25. நினைத்த காரியம் நிறைவேறும். 26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். 27. மனநோய் அகலும். 28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம். 29. எல்லா சித்திகளும் அடையலாம். 30. விபத்து ஏற்படாமல் இருக்கும். 31. மறுமையில் இன்பம் உண்டாகும். 32. துர் மரணம் வராமலிருக்கும். 33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும். 34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும். 35. திருமணம் நிறைவேறும். 36. பழைய வினைகள் வலிமை அழியும். 37. நவமணிகளைப் பெறுவார்கள். 38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள். 39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம். 40. பூர்வ புண்ணியம் பலன்தரும். 41. நல்லடியார் நட்புப்பெறும். 42. உலகினை வசப்படுத்தும். 43. தீமைகள் ஒழியும். 44. பிரிவுணர்ச்சி அகலும். 45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.46. நல்நடத்தையோடு வாழ்வார்கள். 47. யோகநிலை அடைவார்கள். 48. உடல்பற்று நீங்கும். 49. மரணத்துன்பம் இல்லா திருக்கும். 50. அம்பிகையை நேரில் காண முடியும். 51. மோகம் நீங்கும். 52. பெருஞ் செல்வம் அடைவார்கள். 53. பொய்யுணர்வு நீங்கும். 54. கடன்தீரும். 55. மோன நிலை கிடைக்கும். 56. அனைவரையும் வசப்படுத்தலாம். 57. வறுமை ஒழியும். 58. மன அமைதி பெறலாம். 59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள். 60. மெய்யுணர்வு பெறலாம். 61. மாயையை வெல்லலாம். 62. எத்தகைய அச்சமும் வெல்லலாம். 63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம். 64. பக்தி பெருகும். 65. ஆண்மகப்பேறு அடையலாம். 66. கவிஞராகலாம். 67. பகை வர்கள் அழிவார்கள். 68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும். 69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள். 70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம். 71. மனக்குறைகள் தீரும். 72. பிறவிப்பிணி தீரும். 73. குழந்தைப்பேறு உண்டாகும். 74. தொழிலில் மேன்மை அடையலாம். 75. விதியை வெல்வார்கள்.76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள். 77. பகை அச்சம் நீங்கும். 78. சகல செல்வங்களை யும் அடைவார்கள். 79. அபிராமி அருள்பெறுவார்கள். 80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும். 81. நன்னடத்தை உண்டாகும். 82. மன ஒருமைப்பாடு அடையலாம். 83. ஏவலர் பலர் உண்டாகும். 84. சங்கடங்கள் தீரும். 85. துன்பங்கள் நீங்கும். 86. ஆயுத பயம் நீங்கும்.87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள். 88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம். 89. யோக சித்தி பெறலாம். 90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். 91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள். 92. மனப்பக்குவம் உண்டாகும். 93. உள்ளத்தில் ஒளியுண்டாகும். 94. மனநிலை தூய்மையாக இருக்கும். 95. மன உறுதி பெறும். 96. எங்கு பெருமை பெறலாம். 97. புகழும் அறமும் வளரும். 98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம். 99. அருள் உணர்வு வளரும். 100. அம்பிகையை மனத்தில் காண முடியும். 🙋‍♂என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி வாட்சப் .8678915314, 
9840848127.

thirupathi திருப்பதி ஏழுமலையான் தரிசனம்,

ஈழத்து பஞ்சலிங்கம்.....(பஞ்சஈஸ்வரங்கள் )
*********************************************
சிவனின் ஐந்து திருமுகங்கள் . ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம்

1. நகுலேசுவரம்/ கீரிமலை, யாழ்ப்பாணம்.
சிவபெருமானால் சபிக்கப்பட்டு கீரிமுகமடைந்த யமதக்னி முனிவர் பின்னால் நகுல முனிவர் என்று அழைக்கப்பட்டார். இங்குள்ள புனிததீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டதினால், முகத்திலிருந்த குறை நிங்கப்பெற்றதினால் கீரிம லையெனப் பெயர் பெற்றது.காசி திருத்தலத்தைப் போன்று பிதிர்க்கடன் செய் ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது கீரிமலை கடல்.
2. திருக்கேதீச்சரமும்/ மன்னார்,
கேது பகவான் பூஜித்த ஸ்தலம்,இங்குள்ள புனிததீர்த்தம் பாலாவி, மூலவர் கேதீஸ்வரப்பெருமானுடன் கௌரியம்மை. ஈழத்து ஆதிகுடி மக்களான நாகர் களால் இத்தலம் பராமரித்து வழிபாடு செய்யபட்டதாக சொல்லப்படுகின்றது.
3. திருக்கோணேஸ்வரம்/ திருகோணமலை.
இலங்கையை ஆண்ட, மனுராசன் என்னும் மன்னன் கி.மு 1300 ஆம் ஆண்டு இந்த கோயிலைக் கட்டினான் . பின்னால் வந்த குளக்கோட்டு மன்னன் இதை புனருத்தாணம் செய்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.இங்கு மூலவர் கோணேசப்பெருமான்.......இந்தக் கோயிலை இராவணன் மனைவி மண்டோதரியின் தந்தை பிரதிஷ்டை செய்ததாக புராணக்கதைகள் சொல்கின்றன.
4. முனீஸ்வரம்/ சிலாபம்
இவரை அழகேஸ்வரம் என்றும் அழைப்பார்கள். வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இந்த ஆலயத்துக்க் உண்டு, திருவிழாக் காலத்தில் தினமும் காலையும் மாலையும் சோமஸ்கந்தமூர்த்தி வீதியுலா வருவார். சிவன் இரவலர் கோலம் பூண்டு, பிட்சாடணோற்சவத் திருவிழாவும் இங்கு நடை பெறுகின்றது. மூலவர் வடிவாம்பிகா சமேத முன்னைநாதர்.
இந்த கோயில் லிங்கம் தான் இலங்கையில் சிவனுக்காக அமைந்த முதல் ஈஸ்வரன் இது இராமர் காலத்துக்கு முற்பட்டது இங்கு வந்து இராவணன் பூசித்ததாக கூறப்படுகின்றது.
இராவணனைக் கொன்ற பிரமஹத்திதோஷம் விலக சிவபெருமானிடம் இராமர் வேண்டிய போது மானவாரி லிங்கம், திருக்கோணேஸ்வர லிங்கம், திருக்கேதீஸ்வர லிங்கம், ராமேஸ்வர லிங்கம் இந்த லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்க சொன்னார் இதில் முதல் லிங்கம் தான் இந்த மானவாரி லிங்கம் இன்று இதை ராமலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது.
5. தொண்டேஸ்வரம்/ மாத்தறை.
தென்னிலங்கையிலுள்ள தொண்டீஸ்வரம் ஆலயம் போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்ட பின்னர் இன்று விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டு சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர். இங்கு சிவலிங்கம் (தேவேந்திர மூலை,மூலவர்) இப்ப இல்லை. இதை திரும்ப பிரதிஷ்டை செய்தால்த்தான் இலங்கைக்கு விமோசனம் கிடைக்கும்.
நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முனீஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. திருஞான சம்பந்த மூர்த்தி,சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய ஆலயங்கள்.
இலங்கையின் நான்கு திசைகளிலும் இருந்து காவல் காத்தும் வருகின்றன. வடக்கே நகுலேஸ்வரமும், கிழக்கே திருக்கோணேஸ்வரமும், தெற்கே தொண்டீஸ்வரமும், மேற்கே முனீஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வரமும் என அவை நம் நாட்டை காவல் காத்து வருகின்றன . ....
- ஈழத்து வரலாற்று கோவில்களில் இருந்து.....



இறையின் நதிக்கரை ஓரத்திலே மார்கழி மகா உற்சவம்-12/ Episode 12 /12.01.2019

Sonntag, 20. Januar 2019

முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள் : முருகனின் திருவுருவங்கள்:

முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள் :
முருகனின் திருவுருவங்கள்:
1. சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.
2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.
murgen-kathiravan
4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.
6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.
9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:
1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.
10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.
11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.
12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.
13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.
14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் “கார்த்திகேயன்” என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.
15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.
16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.
17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.
18. “முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்” என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
21. முருகனைக் குறித்துக் “குமார சம்பவம்” என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.
22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.
24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.
25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.
26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.
27. பிரம்மசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.
30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.
31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.
32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.
33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.
34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.
35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.
37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.
38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.
39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.
40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.
42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.
43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.
44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.
45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.
46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கல் ஆகும்.
47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.
48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.
49. கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.
50. முருக வழிபாடு என்பது ஷண்மம் என்று சொல்லப்படுகின்றது.
51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.
52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.
53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
54. கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.
55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.
56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.
57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.
58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.
59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.
60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும். அன்புடன் செல்வம் மோஹி

Samstag, 19. Januar 2019

விஷ்ணுவை வணங்குபவர்கள் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா மிக முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. அதே நேரத்தில் இந்த கோவில் தவிர்த்து மற்ற எந்த கோவில்களுக்கெல்லாம் செல்லலாம் என்பதையும் அப்படி சென்றால் என்ன பலன்கள் என்பதையும் இந்த பதிவில் காண்போம். சொக்கநாதசுவாமி கோவில் பெங்களூரில் மிகப் பழமையான கோவில்களில் ஒன்று இந்தக் கோவில். சோழர்களால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டொம்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேவுள்ள டிவீஎஸ் இரு சக்கர வாகன கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெருவின் கடைசியில் சத்தமேயில்லாமல் இருக்கிறது இந்த ஆயிரம் வருட பழமையான கோவில். சோழர்கள் கட்டிய கோவில் அதிகாரப்பூர்வமான தரவுகள் இல்லாததால் சோழர்களில் யார் கட்டியது என்று சரியாக கூறமுடியவில்லை. இருந்தும் ராஜ ராஜ சோழன் கட்டிய கோவில் என்று கோவிலை நிர்வகிக்கும் ட்ரஸ்ட் அமைப்பினர் கூறுகின்றனர். சோழர்கள், கிபி 10-12'ஆம் நூற்றாண்டில் தங்கள் சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விஸ்தரித்த போது பெங்களூரும் அதில் சேர்ந்தது. கடவுள் விஷ்ணு இப்போதுள்ள Yelahanka, அப்போது யெலஹன்க‌ நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் கட்டிய கோவில்தான் டொம்லூரில் உள்ள சொக்கநாதசுவாமி கோவில். சுவாரஸ்யமாக, சொக்கநாதசுவாமி என்று அழைக்கப்பட்டாலும் மூலஸ்தானத்தில் உள்ள கடவுள் விஷ்ணு. தமிழ் கல்வெட்டுக்கள் கோவிலின் புறச்சுவரை சுற்றி வரும்போது ஆயிரம் வருட பழமையான தமிழ் கல்வெட்டுக்களை நீங்கள் காணலாம். டொம்லூர், அப்போது தோம்பலூர், தேசிமாணிக்கபட்டினம் என்று இரு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது. 1992 ஆண்டில்தான் இந்த கோவிலின் பழமையான பெருமையறிந்து மறுசீரமைப்பு செய்திருக்கின்றனர். கோவிலின் சில குறிப்பிட்ட முனைகளில் தியானம் செய்தால் பிராண ஓட்டத்தை குணப்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் கூட்டம் பெருமாள் கோவில் என்பதால் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். மன அமைதிக்காக வர விரும்புவோர், கோவிலின் கட்டமைப்பை, கல்வெட்டுகளை ரசிக்க‌ விரும்பும் நபர்கள் ஞாயிறன்று வரலாம். ஆயிரம் வருட பழமையான நினைவுச் சின்னம், ஊருக்குள் இருந்தாலும், கோவிலுக்குள் இருக்கும் அமைதி, கல்வெட்டுகள் என எல்லாம் உங்களை தன்வசப்படுத்திவிடும். சார்ங்பாணி கோவில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோவில்களின் பூமியாக வர்னிக்கப்படுகிறது. இங்கே உள்ள 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் கோவில் உலகப் பிரசிதிபெற்றது. தாயார் விஜயவள்ளியுடன் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் திருமாள் அருள்பாலிக்கிறார். சார்ங்பாணி கோவில் காவேரியில் ஸ்ரீ சக்கரம் தோன்றிய இடத்தை இப்பொது சக்கரை தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பெயர்க்காரணம் சார்ங்கபாணி என்னும் பெயரில் உள்ள சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லைக் குறிக்கிறது. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தருகிறது. சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார்.பிரம்மாண்டத் தோற்றம் மூலவர் கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதாரச் சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இத்தல தேர் சக்கரம் பிரம்மாண்டத் தோற்றத்துடன் சுற்றுப்புற சுவர்களிலும் அழகிய கலைநயமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 11 நிலைகளையுடைய இது 150 அடி உயரம் கொண்டது. சித்திரைத் தேர்த்திருவிழா இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா பிரசித்திபெற்றது. இத்திருவிழாவின் போது வழிபடப்படும் தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே உள்ள கோவில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றுள்ளது. எப்படி செல்வது கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில். சென்னை, திருச்சி, மதுரை என மாநிலத்தின் எந்தப் பகுதிகளில் இருந்தும் ரயிலின் மூலம் கும்பகோணம் வந்தடையலாம். அருள்மிகு வரதராஜப் பெருமாள் கடலூர் மாவட்டம், கண்ணங்குடியில் உள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு பூஜை செய்து வர சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சேர் மார்க்கெட், பங்குதாரர்கள் உள்ளிட்டவை மூலம் நல்ல வரவு கிடைக்கும் வழிபாடு குரு, சனி, ராகு, கேது உள்ளிட்ட நட்சத்திர பெயர்சிகளாலும், கிரக இடமாற்றத்தாலும் ஏற்படும் தீமைகளில் இருந்த விடுபடவும், திருமணத் தடை நீங்கி, ஐஸ்வர்யம் உண்டாக மூலவருக்கு துளசி மாலை அணிவித்து, படையல் வைத்து வழிபடுதல் சிறப்பு. Adam Jones கும்பகோணம் கண்ணோட்டம்எப்படி அடைவதுஈர்க்கும் இடங்கள்வீக்எண்ட் பிக்னிக்வானிலைஹோட்டல்கள்படங்கள்பயண வழிகாட்டி இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் 

Donnerstag, 17. Januar 2019


இன்று 60 அகவையில் காலடி எடுத்து வைக்கும்
சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர். ஆன்மீக அருள்ஜோதி ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்.
அழகு தமிழில் மனங்களை வெல்லும் சொல்லும் அல்லும் பகலும்
பாராது ஐயப்பன் தொண்டினை சிரமேற் தாங்கி உலக வலம்வரும்
ஆன்மீக பேரொளியே அகவை 60 இளைஞனே 
தங்கள் ஞான கருத்துக்களால் உலகம் சிறந்தது .
ஞானம் பிறந்தது இன்னும் மனங்கள் இருள் விலகட்டும்
போற்றுகின்றேன் வாழ்த்துகின்றேன்
வாழ்க பல்லாண்டு... பல்லாண்டு.... பல்லாண்டு ...
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
உலகக்கோவில்
17.01.2019

Freitag, 11. Januar 2019

``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தது. நேற்று ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அதற்கான சான்றிதழை வழங்கினர்.

சிவலிங்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியான உதயம்குளம்கரைப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க இந்த ஆலயத்தின் நிர்வாகம் முடிவு செய்தது. மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின் பல்வேறு சிவன் கோயில்களில் சென்று அந்தக் கோயில்களின் மாதிரியைக் கொண்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.


குமரி மாவட்ட ஆலயம்

111.2 அடி உயரத்தில் எட்டு அடுக்காக சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களைக்கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர், அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும், கடவுள்கள் சிற்ப வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும், மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடிகொண்டிருப்பது போன்று அழகிய சிலையுடன் சிறந்த கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது.
தற்போது 80 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ள இந்த சிலை உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகி, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையிலான அதிகாரிகள் நேற்று சிவலிங்கத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கேரள பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜகோபால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தச் சிலை வரும் மகா சிவராத்திரி அன்று திறக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.
உற்று -விகடன்
11.01.2019

Donnerstag, 3. Januar 2019

sivankovil 01. 01 .2019sivantempel-dortmund கலசாபிசேகம் / ஆலய குரு உரை ...

ஜெர்மனி 
: Sri Muthumariamman Tempel Hannover.
1. Januar um 19:16 · Hannover · 
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஆங்கில 2019.01.01 புத்தாண்டு விசேஷ பூசைகளின்போது,அனைவரும் 
வாழ்க வளமுடன் ஆங்கில புத்தாண்டு 
நல் வாழ்த்துக்கள்
படம் .Sothymaheswaran Kanagaratnam




ஆசியன்

ஐரோப்பாவில்