Meine Blog-Liste

Mittwoch, 20. Oktober 2021

குழுமாயி அம்மன் கோயில் வரலாறு

 

    குழுமாயி அம்மன் கோயில் வரலாறு


                     திருச்சி புத்தூர் சோழனூர் என்ற பகுதியில் தெய்வமாக அருள் பாலிக்கும் குழுமாயி அம்மன் கோயிலுடைய தல வரலாறைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

  இக்கோயிலின் ஒரு புறம் சலசலத்து ஓடும் உய்யக்கொண்டான் வாய்க்கால், மறுபுறம் பச்சை கம்பளம் விரித்தாற் போன்ற தென்னை, வாழை, செழுமையுடன் வயல்வெளி இப்படி பசுமை வளம் சேர்க்கும் இடமாக இக்கோயில் அமைந்துள்ளது.

                   முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருச்சி மாநகரை  மங்கம்மாள் என்ற ஒரு அரசி ஆண்டு வந்தாள். அவருடைய ஆட்சியில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். தற்போது கோவில் இருக்கும் பகுதியானது இந்த காலகட்டங்களில் ஒரு வயல் வெளியாக இருந்தது அந்த ஊர் மக்கள் விவசாயம் செய்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

            அந்த ஊரில் உள்ள ஒருவர் தன்னுடைய நிலத்தை சமன் செய்ய வெட்டியபோது, திடீரென ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது அப்போது அந்த ஊர் கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்தில் ஒன்று கூறினார்கள். அப்போது அங்கு இருந்த ஒரு பெண்ணுக்கு அருள்  வந்தது அந்த அருள் வந்த சிறுமி, நான் காளி , நான் இங்கே குடி கொண்டிருக்கிறேன் நான் காவல் தெய்வமாக இருந்து உங்களை நான் பாதுகாப்பேன் என்று அந்த அம்மன் கூறவே அந்த கிராம மக்கள் உடனே அங்கு ஒரு கோயிலை எழுப்பி ஒரு அம்மன் சிலையை நிறுவி அதனை தெய்வமாக வழிபட்டனர்.

                குழி வெட்டும்போது இந்த அம்மன் பிரசன்னமாகி அருள்பாலிப்பதால் அதனை குழுமாயி அம்மன் என்று அழைத்தனர்.

              இதுவே இந்தக் கோயில் உருவானது பற்றி கூறப்படும் செவிவழி வரலாறு ஆகும்.

                        அதன் பிறகு இந்த குழுமாயி அம்மனை ஒரு மலையாள மந்திரவாதி பில்லி ஏவல் சூனியம் செய்து அம்மனின் சக்தியை அடக்கி தன்வசப்படுத்தி இருந்தான் , அப்போது இரட்டைமலை ஒண்டி கருப்பு சாமி இந்த குழுமாயி அம்மனுக்கு துணையாக இருந்து, அந்த மந்திரவாதியை அழித்தார் அதன் காரணமாகவே இந்த குழுமாயி அம்மனுக்கு காவல் தெய்வமாக ரெட்டமளை ஒண்டி கருப்பு சாமி உள்ளார். மேலும் இக் காரணத்திற்காக இக்கோவிலில் ஒண்டி கருப்பு சாமிக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது அதன்பிறகு குழுமாயி அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

          அந்த மலையாள மந்திரவாதி அழிக்கப்பட்ட நாளை இன்றைய வரைக்கும் அந்த ஊர் மக்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாசி மாதம் முதல் வாரம் புதன்கிழமை அன்று காப்பு கட்டும் திருவிழா நடக்கும் செவ்வாய்க்கிழமை இரவு காளி  வட்டம் நடக்கும். புதன்கிழமை சுத்த பூஜையும் வியாழக்கிழமை குட்டிக் குடித்தல் வைபவம் நடக்கும்.

           இக்கோவிலில் நடக்கும் குட்டி குடித்தல் திருவிழாவானது மிக பிரபலமாக சொல்லப்படுகிறது. ஆட்டின் ரத்தத்தை மருளாளி குடிக்கும் நிகழ்ச்சிதான் குட்டிக் குடித்தல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு ஒன்று கூடுகிறார்கள் முதலில் ஆடு பலியிட்டு வழிபாடு செய்வார்கள். குட்டிக்குடித்தல் திருவிழா அன்று, முதலில் அம்மனுக்கு பூஜை நடைபெறும். பின்னர் ஆடு வெட்டப்படும் ஆட்டின் ரத்தத்தை மருளாளி குடிப்பார், அவரின் தோளில் இரு கிளிகள் இருக்கும் அந்த கிளிகள் தான் இரத்தத்தை குடிக்கின்றன என்பது ஐதீகம்.

          புல்லரிக்க செய்யும் இந்த குட்டி குடித்தல் திருவிழாவானது மிகப் பிரபலமாகும் மேலும் ஆட்டு ரத்தத்தை குடிக்கும் மருளிளியைத் தேர்ந்தெடுப்பது தான் இங்கு சுவாரசியமான ஒன்று,

                ஒரே பரம் பரம்பரையினர் தான் மருளாளியாக இருக்க வேண்டும் என்ற மரபு கிடையாது. யார் வேண்டுமானாலும் மருலாளி ஆகலாம் இக்கோவிலை பொறுத்தவரையில் திருவிழா காலத்தில்தான் மருளாளி தேர்ந்தெடுக்கப்படுவார் 

                           ஆடு வெட்டுவதற்கான அரிவாள், ரத்தத்தை பிடிக்கும் வெள்ளி கிண்ணம் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் ஓர் இடத்தில் மறைத்து வைப்பார்கள். பிறகு அருள் வந்த ஒருவர் அந்த அரிவாலும் அந்த கிண்ணமும் எங்கே இருக்கிறது என்று கண்டறிய வேண்டும். அப்படி யார் அருள் வந்து கண்டுபிடிக்கிறார்களோ!  அவர்கள் தான் மருளாளி போட்டிக்கு தகுதியானவர்கள்.

               இதோடு முடியாது அடுத்த கட்ட தேர்வும் நடக்கும், பெரிய அரிவாள் ஒன்றை வைத்திருப்பார்கள் மிகவும் கூர்மையாக அது இருக்கும் 3 1/2 அடி நீளம் கொண்ட அந்த அரிவாளியின் கூரிய முனையை மேல்நோக்கி இருக்கும்படிவைத்து அதன் இருபுறமும் ஆட்கள் பிடித்துக் கொள்வார்கள்.

                   மருளாளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த கூர்மையான அரிவால் மீது கால் வைத்துக்கொண்டு அருள் சொல்ல வேண்டும்.

                அப்படி இருப்பவர் தான் மருளாளியாக தேர்ந்தெடுக்கப்படுவார் இது இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேர்வாக கருதப்படுகிறது.

                  குழுமாயி அம்மனுக்கு உற்சவ அம்மன் சிலை கிடையாது. பனை ஓலையால் தான் உற்சவ அம்மன் செய்யப்படுகிறது ஆண்டுதோறும் திருவிழாவின் போது தான் உற்சவ அம்மன் செய்யப்படும் பனை ஓலைகளை அம்மன் உருவில் கத்தரித்து அதை கருப்பு துணியால் வைத்து அம்மன் உருவை தயாரிப்பார்கள்.

                சப்பரத்தில் வைத்துதான் அம்மன் திருவீதி உலா நடக்கும் சப்பரத்தில் உள்ள அம்மன் உருவத்துக்கு பின்பக்கத்தில் மற்றொரு அம்மன் உருவமும் இருக்கும் அது கடந்த வருடம் செய்யப்பட்டதாகும். அம்மன் இருபுறமும் பார்க்கிறாள என்பதற்காக இவ்வாறு இரண்டு உருவங்கள் செய்யப்பட்டுள்ளது இந்த திருவிழா முழுவதுமே புத்தூர் அக்ரஹாரம் அருகே தான் நடக்கும் முதலில் கோவிலில் இருந்து அம்மனை மந்தைக்கு கொண்டு வருவார்கள்.

               அதன்பிறகு மற்ற நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் நாலு கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது இந்த ஊர் மக்களுக்கு காவல் தெய்வமாக நின்று கருணை மழையை பொழிந்து,தம் மக்களை காத்து வருகின்றள்

                  இதுதாங்க திருச்சியில் உள்ள குழுமாயி அம்மன் கோயில் வரலாறு ஆகும்.

thx/

   https://www.agarams.com/

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்