திருஞானசம்பந்தர் குருபூஜை
ஆக்கம் . ஜெர்மனி பெர்லின் கௌரி
வெளியீடு உலகக்கோவில்
07.06.20
வைகாசி மூலம்🌹
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராயும்,சமயகுரவர்களில் ஒருவராயும்,தேவார முதலிகளில் ஒருவருமாய் விளங்கிடும் திருஞானசம்பந்தரின் குருபூஜை 07.06.20 ஞாயிற்றுக்கிழமை அன்றாகும்.
வாழ்க்கை குறிப்பு:🌹
இயற்பெயர் = ஆளுடையபிள்ளை
பெற்றோர் = சிவபாதஇருதயார், பகவதி அம்மையார்
ஊர் = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்)
மனைவி = சொக்கியார்
வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள்
மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்🌹
நெறி = மகன்மை நெறி
ஆட்கொள்ளட்பாட இடம் = சீர்காழி
இறைவனடி சேர்ந்த இடம் = பெருமணநல்லூர்
இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ்
படைப்புகள்:🌹
1,2,3 ஆம் திருமுறைகள்
முதல் மூன்று திருமுறைகள் =”திருகடைகாப்பு” எனப்போற்றுவர்
வேறு பெயர்கள்:🌹
ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
திருஞானம் பெற்ற பிள்ளை
காழிநாடுடைய பிள்ளை
ஆணைநமதென்ற பெருமான்
பரசமயகோளரி
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்
திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்யலகரி என்னும் நூலில்)
இன்தமிழ் ஏசுநாதர்
சத்புத்திரன்
காழி வள்ளல்
முருகனின் அவதாரம்
கவுணியர்
சந்தத்தின் தந்தை
காழியர்கோன்
ஞானத்தின்திருவுரு
நான் மறையின்தனித்துணை
கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
நிகழ்த்தியஅற்புதங்கள்:🌹
திருமறைக்காடு = மூடிய கோயில் கதவுகளைபாடித் திறக்க செய்தார்.
திருப்பாச்சிலாச்சிரமம் = மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்
திருமருகல் = பாம்பு தீண்டியவணிகனின்விடம்நீக்கினார்
திருவோத்தூர் = ஆண்பனையைபெண்பனைஆக்கினார்
மதுரை = தான் தங்கியிருந்தமடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்பு நோயாகப்பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, நீறு பூசி அவனின் வெப்பு நோய் நீக்கி, அவனின் கூன் நீக்கச் செய்து அவனை “நின்றசீர்நெடுமாறன்” ஆகினார்.
மதுரை = வாதத்துக்குஅழைத்தபுத்தநந்தியின் தலை துண்டாகுமாறு செய்தார்.
மயிலாப்பூர் = குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிருடன் வரச் செய்தார்.
திருஏடகம் = வைகையாற்றில்இட்ட ஏடு கரை ஏறியது.
திருப்பூந்துருத்தி = நாவுக்கரசர் இவரை சுமந்த இடம்.
இறைவனிடமிருந்துபெற்றவை:
திருகோலக்காவில் = பொற்றாளம்
திருவாடுதுறை = பொற்கிழி
திருவீழிமிழலை = படிகாசு
திருவாயிலறத்துறை = முத்துச்சிவிகை
பட்டீஸ்வரம் = முத்துப்பந்தல்
குறிப்பு:🌹
மூன்று வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு “ஞானப்பால்” ஊட்டினார். அன்று முதல் இவர் “ஞானசம்பந்தன்” எனப் பெயர் பெற்றார்.
இவர் தந்தையாரின் தோளில் அமர்ந்தவாறேசிவத்தலங்கள் சென்று பாடினார்.
இவரின் அனைத்துப் பதிகங்களிலும்எட்டாவது பாடல் “இராவணன்” பற்றியும், ஒன்பதாவது பாடல் “மாலும்அயனும்” காண இயலாத சிவபெருமானின்பெருமையும், பத்தாவது பாடல் “சமணபௌத்தசமயங்கள்” துன்பம் தரும் தீங்கினைஉடையன என்றும் பாடும் பாங்கினைகொண்டுள்ளன.
16 ஆண்டுகள் மட்டுமே இவர் உயிருடன் வாழ்ந்தார்.
அந்தணரானசம்பந்தர் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாணர் குளத்தை சேர்ந்த திருநீலகண்டயாழ்பாணரை அழைத்து செல்வார்.
இவர் தன்னை தானே “தமிழ் ஞானசம்பந்தன்” என அழைத்துக்கொள்வார்
மதுரையில்அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களைதோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமணமுனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
இவரின் தோழர் = சிறுத்தொண்டர்எனப்படும்பரஞ்சோதியார்
ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாகநம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.
கிடைக்கும் மொத்தப்பாடல்கள் = 4181
220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.
சம்பந்தரும்நாவுக்கரசரும் சந்தித்த இடம் = திருப்புகலூர்
சிறப்பு:🌹
தந்தை இல்லாமல் சென்ற இடங்களில் சிறுவனான இவரை, திருநாவுக்கரசர் தம் தோளில் சுமந்து சென்றுளார்.(இடம் = திருப்பூந்துருத்தி)
திருநாவுக்கரசரை “அப்பர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
இவரின் நெறி = மகன்மை நெறி
இவரின் மார்க்கம் = சத்புத்திர மார்க்கம்
சேக்கிழார் தமது பெரியபுராணத்தில், “வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க இவர் தோன்றினார்” எனப் பாராட்டினார்.
தம் பாடல்களில்23 பண் அமைத்துப்பாடியுள்ளார்.
ஏறத்தாழ 110 சந்தங்களை தன் பாடல்களில்அமைத்துப்பாடியுள்ளார். எனவே இவரை, “சந்தத்தின் தந்தை” என்று கூறுவர்.
யமகம், மடக்கு முதலிய சொல்லணிகட்கும், சித்திரகவிக்கும்முதன் முதலில் தொடங்கி வைத்தவர்சம்பந்தரே ஆவார்.
சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால் “பிள்ளை பாதி புராணம் பாதி” எனப்போற்றப்படுகிறது.
இவர் “முருகனின்அவதாரமாகவே” கருதப்பட்டார்.
யாழ முறி இவருக்கு மட்டுமே உரியது.
மேற்கோள்:🌹
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமைநன்னெறிக்குஉய்ப்பது
வேத நான்கினும்மெய்ப்பொருளாவது
நாதனாமநமச்சிவாயமே
சிறையாரும்மடக்கிளியே இங்கே வா தேனொடுபால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்குமிகவே🙏
ஆக்கம் . ஜெர்மனி பெர்லின் கௌரி
Meine Blog-Liste
Abonnieren
Kommentare zum Post (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...
Keine Kommentare:
Kommentar veröffentlichen