Meine Blog-Liste
Dienstag, 30. Juni 2020
Montag, 29. Juni 2020
Sonntag, 28. Juni 2020
Samstag, 27. Juni 2020
Freitag, 26. Juni 2020
Donnerstag, 25. Juni 2020
Dienstag, 23. Juni 2020
Montag, 22. Juni 2020
Sonntag, 21. Juni 2020
Samstag, 20. Juni 2020
*தீர்க்க சுமங்கலி பவா
*தீர்க்க சுமங்கலி பவா ...!
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*
*#தீர்க்க_சுமங்கலி_பவா என்றல் என்ன? - அறிந்துகொள்வோம*்.
*தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*
*திருமணத்தில் ஒன்று,*
*60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,*
*70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,*
*80 வயது சதாபிஷேகத்தில்* ஒன்று,
*96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று !*
*#இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:*
*ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.*
*பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.*
*இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.*
*சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.*
*உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.*
*நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.*
*பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.*
*இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு*
*சூரியனுக்கு ஓர் ஆண்டும்,*
*செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,*
*சந்திரனுக்கு ஒரு மாதமும்,*
*புதனுக்கு ஒரு வருடமும்,*
*வியாழனுக்கு 12 வருடங்களும்,*
*வெள்ளிக்கு ஒரு வருடமும்,*
*சனி பகவானுக்கு 30 வருடங்களும்,*
*ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,*
*கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.*
*இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.*
*மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.*
*ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.*
*பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.*
* அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.*
* பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.*
*அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?*
* தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.*
* இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...*
*அக்னி, சூரியன்,*
*சந்திரன்,. வாயு,*
*வருணன்,*
*அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,*
*அமிர்த கடேஸ்வரர்,*
* *நவநாயகர்கள்..*
*சேர்த்து* *குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.*
* பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,*
* சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,*
* ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,*
* பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..*
*அதிபதிகள் ஆவார்கள்.*
* தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.*
* தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.*
* தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். *
* காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.*
* 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். *
* ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.*
* அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.*
* இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.*
* இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.*
thx Sai Kodeeswaran

Abonnieren
Posts (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...