உலகக்கோவில்
நடேசர் அபிஷேகம்(சித்திரை மாதம்)
13.05.20
பெர்லின் கௌரி
நடராஜ சுவாமிக்கு வருடத்தில் ஆறு முறை மஹா அபிஷேகம் நடத்தப்படுகிறது.
மனிதர்களின் வாழ்வில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என ஆறு பொழுதுகள் இருக்கின்றது.
இதில் தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில்தான் ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறும்.
அதே போல் மாசி மாதமானது தேவர்களுக்கு காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை அபிஷேகம் நடைபெறும்.
உச்சி கால பொழுதானது தேவர்களுக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் உச்சிகால அபிஷேகமாக நடத்தப்படும்.
ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை நேர அபிஷேகம் செய்யப்படுகிறது. இதுவே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது.
அதே போல் ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். புரட்டாசி மாதம் அர்த்தஜாம வேளையாகும். எனவே ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகமும், புரட்டாசி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.
அந்த வகையில் சார்வரி வருட சித்திரை மாத நடேசர் அபிஷேகம் 12.05.20 புதன்கிழமை ஆகும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen