திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி
திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி எனும் பெயரில் பக்தர்கள் அனைவருக்கும் அருள் புரிகின்ற திருமலையாண்டவராகிய வெங்கடாசலபதியை தரிசிப்பதற்கு தினமும் ஆயிரம் அல்லது லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். உலகிலேயே ஒரு நாளில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்யும் ஒரு சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலமாக இந்த திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் இருக்கிறது. இந்த திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் சீராக நடைபெறுவதற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் என்கிற நிர்வாகக்குழு ஆந்திர பிரதேச அரசால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் லட்சக் கணக்கில் வருகின்ற பக்தர்களுக்கு தேவையான வசதிகள் முறையாக கிடைப்பதற்கு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, சிறந்த நிர்வாகத் திறமை பெற்ற ஒரு குழுவாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாகக் குழு புகழ் பெற்றுள்ளது. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் திருப்பதி திருமலை கோவிலுக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருப்பதால் திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனம் ஒன்றில் இருந்து அதிகபட்சம் 2 மணி நேரத்திற்குள்ளாக முடிந்துவிடும். மற்ற தினங்களில் பக்தர்கள் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய 3 முதல் 6 மணி நேரம் வரை ஆகிவிடும். புரட்டாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவ விழாவின் போது பல லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலை கோவிலுக்கு வருவதால் இலவச தரிசனம் மற்றும் டிக்கெட் தரிசனம் செய்யும் பக்தர்களும் கூட 12 மணி நேரத்தில் இருந்து அதிக பட்சம் 24 மணி நேரம் கூட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலை ஏற்படுகிறது.!!!
இப்படி பக்தர்களின் கூட்டத்தை சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று திருப்பதி பெருமாளை தரிசிக்க இயலாத நிலையில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கின்ற பிரமுகர்கள் மிக விரைவில் திருப்பதி திருமலை பெருமாளை தரிசனம் செய்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட முறை தான் வி.ஐ.பி தரிசனம் எனப்படும் முக்கிய பிரமுகர்களுக்கான பெருமாள் தரிசனம் அனுமதி வழங்கும் முறை. இத்தனை ஆண்டுகளும் இந்த வி.ஐ.பி தரிசனம் என்பது அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு கோயிலுக்குள் சென்று பெருமாளை வழிபாடும் சாமானிய பக்தர்களின் வருகின்ற வரிசை நிறுத்தப்பட்டு, முக்கியமான பிரமுகர்கள் இந்த மூன்று மணி நேர காலத்தில் திருமாலை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த வி.ஐ.பி தரிசன முறைக்கு பல ஆண்டு காலமாகவே பக்தர்கள் மற்றும் சில ஆன்மீக தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் வந்த வண்ணமே இருந்தன. இந்நிலையில் சமீபத்தில் ஆந்திர பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு புதிய முதல்வர் பதவி ஏற்றதும் திருப்பதி திருமலை கோயிலில் அனைத்து பக்தர்களும் சமமான வழிபாட்டு உரிமையை பெறுவதற்கு வசதியாக வி.ஐ.பி தரிசன முறையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிறகு கோயில் நிர்வாகிகளுடன் நன்கு ஆலோசித்து வி.ஐ.பி தரிசன முறை ரத்து ஆணை பின்வாங்கப்பட்டு, வி.ஐ.பி தரிசன நேரம் முன் 3 மணி நேரத்திலிருந்து 1.30 மணி நேரமாக குறைக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த புதிய முறை கடந்த ஜூலை 18 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த வி.ஐ.பி தரிசனம் ஒன்றரை மணிநேர அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் தினமும் கூடுதலாக 5,000 பக்தர்கள் திருப்பதி திருமலை ஏழுமலையானை வழிபடுவதற்கு வழிவகை செய்திருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த முறை பக்தர்கள் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது!!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Keine Kommentare:
Kommentar veröffentlichen