Meine Blog-Liste

Montag, 19. August 2019

அத்திவரதர் வைபவம் 2019

அத்திவரதர் வைபவம் 2019
Ganesan S


புராணத்தின் படி பிரம்மன் நடத்திய யாகத்தில் நெருப்பினால் ஏற்பட்ட வெப்பம் தகிக்க முடியாததால் தனது அத்தி வரதர் திருமேனிக்கு தினந்தோறும் 108 சங்கு தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும் என திருமால் கூறினார். அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாளுக்கு அவர் கூறியவாறே சிறிது காலம் மட்டும் அபிஷேகங்கள் செய்து, பிறகு அது முடியாமல் போக என்நேரமும் நீராழி சயனம் கொள்ளத்தக்க வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் அத்தி வரதரை அனந்த சயனம் கொள்ளும்படி செய்து, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து அத்தி வரதர் பெருமாளுக்கு வைபவம் நடத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டிற்கான அத்தி வரதர் வைபவம் தற்போது 48 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அப்போது நடைபெற்ற ஒரு அதிசய நிகழ்வு பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்!!!.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று நேற்று நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலம் காஞ்சிபுரம் நகரத்தில் கடுமையான வெப்பம் இருந்தது. அந்த கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தின் 47-வது நாள் இரவு முதலே காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியிருக்கும் மாவட்டப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வைபவத்தில் பங்கேற்ற காஞ்சிபுரத்தில் வசிக்கின்ற வைணவ பட்டாச்சாரியர் ஒருவர் மற்றும் அவரது மனைவியும் சில தகவல்களை தெரிவித்தனர். கடந்த 1979-ம் ஆண்டு நடை பெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெறும் சமயத்தில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே சயன கோலத்தில் வைக்கப்பட்ட அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்றும், அப்போது பக்தர்களிடம் கோயில் பணிகளுக்காக 50 பைசா முதல் ரூ.1 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் கூறினார். அதே போன்று 1979 ஆம் ஆண்டு அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் சயனிக்க சென்றது ஒரு சனிக்கிழமை தினம் தான் என்றும் அதே போல இம்முறையும் சனிக்கிழமையில் நீராழி மண்டபத்தில் அத்திவரதர் சயனிக்க சென்றது ஒரு ஆன்மீக ஆச்சர்யம் தான் எனக் கூறினார்!!!.
அத்தி வரதர் வைபவத்தில் பங்கேற்ற வைணவ பட்டாச்சாரியார் கூறும் போது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 1979 ஆம் ஆண்டு அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த பிறகு மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் சயனிக்க வைக்கப்பட்டார். அவர் சயனிக்க வைக்கப்பட்ட அன்றைய தினம் இரவு தொடங்கி தொடர்ந்து 2 நாட்களுக்கு காஞ்சிபுரம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது என கூறினார். இம்முறை ஒருநாள் முன்னதாகவே மழை பொழிய தொடங்கியுள்ளது. அத்தி வரதர் வைபவத்தின் 48 நாட்களை ஒரு மண்டல கணக்காக கொண்டு இத்தருணத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளது அத்தி வரதர் பெருமாளின் தெய்வீக கணக்கு என தெரிவித்தார். மேலும் அந்த அத்தி வரதரின் அருளால் இப்போது பெய்கின்ற இந்த மழையிலேயே அனந்த சரஸ் குளம் நிரம்புவதோடு, தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும் என்பது தன்னுடைய மற்றும் அனைத்து மக்களின் விருப்பம் எனக் கூறினார்!!!

சிவகங்கை கணேசன்.

Sonntag, 18. August 2019

சண்டி ஹோமம்:

சண்டி ஹோமம்:

சண்டி ஹோமம்:
சாண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சாண்டி. இந்த மகா சாண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகலும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும்.
சாண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சாண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சாண்டி.
சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது அனுபவம் வாய்ந்த 9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம். இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடா விட்டால் பயனுள்ளவையாக இருக்காது.
9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும். இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும். அதில் சில மந்திரங்கள்
கணபதி பூஜை:
கணபதியின் ஆசியில் தான் இந்த பூஜை வழி நடத்தப்படும். முதலில் கணபதியை வணங்கினாள் அனைத்து தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும். அதனால் முதலில் கணேஷனை வணங்க வேண்டும்
அனுக்கைய சங்கல்பம்:
இது ஒரு புதிய சடங்கு வேள்வி செய்ய கடவுளை அனுமதிக்க வேண்டி இந்த பூஜை வழி நடத்தப்படும். இதன் முலம் எங்கே வேள்வி நடத்தப்படவேண்டும் யாருக்காக நடத்த பட வேண்டும் என்பதை காட்டுகிறது
புண்ணியகவஞ்சனம்:
இதை ஆரம்பிபதற்கு முன்பு மனம் இடம் உடல் ஆகியவற்றை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வழிபடும் இடத்தை சுற்றி மா இலை கொண்டு மந்திர தண்ணீர் தெளிக்கவேண்டும்.
கலச சதப்பனம்:
கலச சதப்பனம் என்பது ஒரு பானையை குறிக்கும். இதில் உலோகம் மற்றும் தண்ணீர் மூழ்க மா இலை வைக்கவேண்டும். இந்த கலசம் தேவியின் அருளை வெளிக்கொணர்வதற்காக செய்யபட்டது.
ப்ரயாண சமர்ப்பணம்:
இது சிவனுடைய அவதாரமாக கொண்டு இந்த பூஜை வழி நடத்தப்படும்.
கணபதி பூஜை:
வேள்வியை தொடங்குவதற்கு முன் கணபதியை வழிபடவேண்டும்.
புண்ணியகவஜனம்:
இடம் மற்றும் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த வழிபாடு.
கோ பூஜை:
சமஸ்கிருத வார்த்தையான "கோ" என்பது மாடு என்று பொருள். இந்து மதத்தில் மாடு தெய்வீக குணம் கொண்டதாக கருதப்படுகிறது. பூஜை செய்வதற்கு வைக்கப்பட்ட பொருட்கள் ஆசிர்வாதம் பெறுவதற்காக பசுவிற்கு வைக்கபடுகிறது.
சுஹாசினி பூஜை:
கன்னி பெண்களிடன் ஆசீர்வாதம் வேண்டி செய்வது.
சுமங்கலி பூஜை:
திருமனமான சுமங்கலிகளிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக இந்த பூஜை செய்யபடுகிறது.
தம்பதி பூஜை:
இதில் பூஜை செய்து வயதான தம்பதிக்கு தான் வழங்கபடுவேண்டும் .வயதான தம்பதியிடம் ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படுவது.
பிரம்மச்சாரி பூஜை:
திருமணம் ஆகாத ஒரு ஆண்மகனை கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது. பூஜையில் அவரது ஆசி இந்த பூஜை நடத்தபடுகிறது
சாண்டி வேள்வி:
அக்கினி/ நெருப்பு சடங்கு மந்திரங்களைக் கொண்டு நெய்யை வார்த்து இந்த பூஜை நடத்தபடுகிறது.
பூரண ஹோதி:
வெற்றிலை, பாக்கு, பருப்புகள், நாணயம், தேங்காய், குங்குமம், மஞ்சள், பூக்கள் வஷ்த்திரம், கோமதிரவியங்கள் இந்த பூஜையில் வைக்கபடுகிறது.
மகா தீபாராதனை:
சடங்குகள் அனைத்தும் முடிக்கபட்டு பூஜை தீபாராதனையுடன் முடிவடையும்.
ஹோமம் பலன்கள்:
ஹோமம் நடைபெறும் போது யாகத் தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு. சண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம்
2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி
3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம்
4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி
5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம்
6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி
7. பூசணிக்காய் – சத்ருநாசம்
8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி
9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி
10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி
11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்)
12. நெல் பொரி – பயம் நீக்குதல்
13. சந்தனம் – ஞானானந்தகரம்
14. மஞ்சள் – வசீகரணம்
15. பசும்பால் – ஆயுள் விருத்தி
16. பசுந்தயிர் – புத்ர விருத்தி
17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி
18. நெய் – தனலாபம்
19. தேங்காய் – பதவி உயர்வு
20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி
21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம்
22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம்
23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.

london karpakpathi 17 08 2019

அத்திவரதர் வைபவம் தொகுப்பு2019+Sri #athi varadhar mahotsavam. Last day.

அத்திவரதர் வைபவம் தொகுப்பு2019+Sri #athi varadhar mahotsavam. Last day.

அத்திவரதர் வைபவம் தொகுப்பு2019+Sri #athi varadhar mahotsavam. Last day.

Mittwoch, 14. August 2019

#விரதங்களும் #அவற்றின்_பலன்களும்_பற்றி

நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம்.
கலைமகள் அலைமகள் மலைமகள்
இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.
#பிரதோஷம்
நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.
நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் : சித்திரகுப்தர்
விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் : குழந்தைப்பேறு
நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்
நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் : பார்வதி, பரமசிவன்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
பலன் : கல்வி அபிவிருத்தி
நாள் : பங்குனி உத்திரம்
தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு
நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
தெய்வம் : பார்வதி தேவி
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
பலன் : மாங்கல்ய பாக்கியம்
நாள் : தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : திருமண யோகம்
நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் : சிவன்
விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் : நிம்மதியான இறுதிக்காலம்
நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தெய்வம் : நடராஜர்
விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.
நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை
முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும்
முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்
தெய்வம் : கேதாரநாதர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள
வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள்
உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்
நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.
நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்
நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
தெய்வம் : பார்வதிதேவி
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.
பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்

#muththumari ammen ther #ஹனோவர்முத்துமாரியம்மன்#தேர்த்திருவிழா # 10.08.2019

Sonntag, 11. August 2019

#muththumariammenapisegam #அபிஷேகம் 10. 08 .2019#ஹனோவர் முத்துமாரியம்மன...

#SriGaneshHinduGemeinde1#ஸ்ரீநவசக்திஆலயம் #ஹனோவர்10.08.2019

புதிய ஸ்ரீ நவசக்தி ஆலயம் ஹனோவர்








 

புதிய  ஸ்ரீ நவசக்தி ஆலயம் ஹனோவர் Worldkovil Kovil




உலகக்கோவில்
ஜெர்மனி ஹனோவர்
10.08.2019 பதிவு
சிறப்புக்குரிய அழகிய விநாயகப்பெருமான்
புதிய 
ஸ்ரீ நவசக்தி ஆலயம் ஹனோவர்
12.09.2019 இல் ஆலய பிரதமகுரு ஆலயகர்த்தா சிவஸ்ரீ .கிருபாகரக்குருக்கள்
ஆரும் பெரும்
முயற்சியினால் விநாயகப்பெருமான் சொந்த வளாகத்தில்
கும்பாபிஷேகம்(12.09.2019இல் ) சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது அனைவரும் கலந்து கொண்டு விநாயகர் பெரும் கருணையைப்பெ
றுங்கள்
பதிவு - படம் - உலகக் கோவில் இராஜகருணா
நன்றி . '' சண்முகசேவகன் ''சிவஸ்ரீ ரவீந்திரநாதக்குருக்கள் ஆலன் ஜெர்மனி
Sri Ganesh Hindu Gemeinde e.V.
c/o S. Kirupakara kurukkal
Alter Damm 15
30419 Hannover
Germany
0174 7770661

ஆசியன்

ஐரோப்பாவில்