Bumi Nathan
சூலினி துர்க்கா :
துர்க்கம் என்றால் அகழி, கோட்டையை சுற்றியிருக்கும் அகழியானது, எதிரிகளை எப்படி உள்ளே நுழையவிடாதபடி பாதுகாக்கிறதோ, அதே போல பக்தர்களுக்கு பாதுகாப்பாக தீயவினைகள் நெருங்காமல் , அரணாக நின்று ( தேவையில்லா வாசனைகள் , நட்பு - துர்ஸங்கம் போன்றன சாதகனுக்கு நெருங்கா வண்ணம் ) காப்பவள் சூலினி துர்க்கா.
எப்படி ப்ரத்யங்கிரா மோக்ஷத்திற்கு உதவுகிறாளோ , அதேபோன்று மனிதர்கள் தம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் தினசரி கஷ்டநஷ்டங்களிலிருந்து விடுபட, அவற்றை ஒழித்துக்கட்ட, சூலினியின் அருள் எப்போதும் நமக்கு துணை நிற்கிறது.
ப்ரத்யங்கிராவிற்கு சற்றும் சளைக்காதவள்தான் சூலினி துர்க்கா. சரபேஸ்வரரின் இறக்கையில் ஒன்றில் சூலினியும் ப்ரத்யங்கிராவைப்போன்றே தோன்றி தன்னுடைய பக்தர்களை ஆபத்துகளிலிருந்து பொத்தி பொத்தி பாதுகாப்பதில் கருணையின் வடிவம், பேரருள் செய்வதில் முதன்மை தெய்வம். சிவபெருமானின் கைகளில் சூலமாக நின்று துஷ்டர்களை வதம் செய்வதால் இவள் ' சூலபாணி ' என்ற பெயரில் அழைக்கப்படுபவள் சூலினி.
எதிரிகளை நாசம் செய்பவள் , மற்ற எல்லா தெய்வங்களும் ஒவ்வொரு சக்தியைத் தருவர் எனில் இவள் ஒரே நேரத்தில் தர்மம் , காமம் , மோக்ஷம் என்ற அனைத்தையும் அளிக்கும் கருணோபகாரி நம்முடைய சூலினி துர்க்கா. ராட்சஸர்களை அழிப்பவள் என்பதால் இவளை ' ராக்ஷஸக்னி ' என்றும் அழைக்கப்படுபவள். நம்முள் எது ராட்சஸம் ?
குணங்களே ........இவற்றை அழிப்பவள். இறைவன் ஸம்ஹாரம் பண்ண உதவி செய்பவள். சிவமாய் நிற்க தேவையில்லா குணங்களை அழிக்க உதவுபவள் ஒரு உத்தம சாதகனுக்கே..............மொத்தத்தில் இவளைச் சரணடைய , மனத்தால் நினைத்துவிட்டாலே போதும் , அவர்கள் எவ்விதம் கீழான குணங்களில் கட்டுண்டு இருந்தாலும், அவர்களை காப்பவள் அன்னை சூலினி துர்க்கா.
( இன்னும் சிந்திப்போம் )
( இன்னும் சிந்திப்போம் )
Keine Kommentare:
Kommentar veröffentlichen