Meine Blog-Liste

Donnerstag, 30. Mai 2019

*நவகைலாயம்*

*நவகைலாயம்*
Keine Fotobeschreibung verfügbar.
நவகைலாயம் என்பது ஒன்பது திருத்தலங்களை குறிக்கும். ஒன்பது சிவன் கோயில்கள் பக்தர்களுக்கு உடல் நலம் மற்றும் செல்வத்தை அளிப்பவையாக உள்ளன.
ஒன்பது கோவில்களில் நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
1 *பாபநாசம்*
திருநெல்வேலியிலிருந்து 45கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தெய்வம் பாபாவினாசர் மற்றும் கைலாசநாதர். இந்த கோயிலின் நதி காட்சியாக தாமிரபரணி நதி உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். இங்கிருந்து 2கி.மீ தொலைவில் மிக முக்கியமான அகஸ்தியர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
2 *சேரன்மகாதேவி*
திருநெல்வேலியிலிருந்து 22கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.
3 *கோடகநல்லுர்*
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் 15கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள தெய்வழிபாடு கைலாசநாதர் மற்றும் சிவகாமியம்மை. இக்கோவிலுக்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.
4 *குன்னத்தூர்*
திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து 2கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவேங்கட
நாதபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய குன்றில் அமைந்துள்ளது. தெய்வ வழிபாடு கோதை பரமேஸ்வரன், சிவகாமசுந்தரி.
*தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாயங்கள்*
5 *முரப்பநாடு*
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 17கி.மீ. தொலைவிலும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 40கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – *கைலாசநாதர் இறைவி – *சிவகாமிஅம்மாள்*
6 *ஸ்ரீவைகுண்டம்*
திருநெல்வேலியிலிருந்து 30கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 40கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. முதல் நவதிருப்பதி கோவில் இங்கே அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – *கைலாசநாதர் இறைவி – *சிவகாமியம்மை*
7 *தென்திருப்பேரை*
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அழகிய தேவதாசி கோயில் ஒன்று உள்ளது.
இங்கு வணங்கப்படும் இறைவர் – *கைலாசநாதர்*
8 *இராஜபதி*
இக்கோயில் தென்திருப்பேரை நவகைலாயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – *கைலாசநாதர் இறைவி – *சிவகாமி அம்மாள், அழகிய பொன்னம்மாள்*
9 *சேந்தன்பூமங்கலம்*
தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 20கி.மீ தொலைவில் ஆத்தூர் மற்றும் புன்னகாயல் அருகில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் *கைலாசநாதர்* இறைவி – *சிவகாமி அம்மை.*

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்