Meine Blog-Liste

Donnerstag, 30. Mai 2019

கலாநிதி ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் சபரிமலை ஶ்ரீ சாஸ்தா பீடம் கொழும்பு

ஜெர்மனி
உலகக் கோவில் 30.05.2019
சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ,ஆன்மீக அருள்ஜோதி ஶ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் - ஆன்மீகம், கும்பாபிஷேக பிரதம சிவாச்சார்யார் ,சமய தத்துவார்த்த சொற்பொழிவாளர் ,பஜனைப் பாடகர், வேட்டைத்திருவிழா சக்கரவர்த்தி, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் , சுவிஸ் , ஜேர்மன் , லண்டன் , கனடா, பிரான்ஸ் ,டென்மார்க் ஆகிய உலகநாடுகளில் கடந்த 19ஆண்டுகளாக ஆன்மீக சொற்பொழிவு , ஐயப்பன் பூஜை பஜனை,கும்பாபிஷேகம் .சங்காபிஷேகம் ,மஹோற்சவ பிரதம சிவாச்சார்யார் ,கடந்த 1981ம் ஆண்டு முதல் ஐயப்பன் பூஜை வழிபாட்டுடன் , கடந்த 38.ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலை புனித யாத்திரைக்கு பக்தர்களுக்கு விரதமாலை அணிந்து சபரிமலை அழைத்துசெல்லும் மஹா குருஸ்வாமி ,சபரிமலைக் குருமுதல்வர் -சிவாகம கலாநிதி, பிரதிஷ்டா பூஷணம் , ஆன்மீக சக்கரவர்த்தி ,பிரதிஷ்டா சிரோமணி , சம்ஹார உற்சவ சக்கரவர்த்தி ,பிரதிஷ்டா ஞான பாஸ்கரன் ,கிரியா கலாபமணி, போன்ற மேலும் பல சிறப்பான கௌரவ பட்டங்கள் பெற்றவர் ,உலகிலேயே ஒரு வருடத்தில் 5,6, தடவைகள் சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் மஹா ராஜ ராஜகுரு (இதுவரை 157,தடவை சபரியாத்திரை சென்றுவந்துள்ளார்) கடந்த 20ஆண்டுகளாக “சிவாச்சாரியாரின்”அருள் ஜோதி என்னும் ஆன்மீக சஞ்சிகையின் ஆசிரியராகவும் , ஜனாதிபதிகளான J R. Jayawarthana, R Premadhasa, D P Wijethunga, Chandrika kumaratunga, MAHINDA RAJAPAKSHA ஆகிய 5.ஜனாதிபதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி ஆசீர்வதித்தவர் அமைச்சர்கள். நாடாளுமன்ற ,மாகாணசபை, மாநகரசபை உறுப்பினர்கள்,என 58.அரசியல் பிரமுகர்கள் உட்பட ஆன்மீகம் ,சமய சமூக ,கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் ஆசிரியர்கள் என 6480.பல்துறை சார்ந்தவர்களை பொன்னாடை போர்த்தி பட்டமளித்து கௌரவித்த பெருமைக்குரியவர் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் சமய இலக்கிய அறிவுப்போட்டிகளை 37.வருடங்களாக நடாத்திவருபவர் இலங்கை வானொலி ,ரூபவாஹினி , ITN ,நேத்ரா , வசந்தம் ரிவி ,சக்தி ரிவி, லங்காசிறி, ஐ பி சி , Dhan Tv, ஓம் ரிவி ,லண்டன் தீபம் தொலைக்காட்சி ,வசந்தம் FM ,சக்தி FM , Germany world kovil.com போன்ற ஊடகங்களில் ஆன்மீக உரை சைவநற்சிந்தனைகளை. கடந்த 37.வருடங்களாக செய்துவருபவர் ......சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குருமுதல்வர் ஆன்மீக அருள்ஜோதி கலாநிதி ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் சபரிமலை ஶ்ரீ சாஸ்தா பீடம் கொழும்பு . T P . (0094)077 99 30 140.,சிவாச்சாரியாரின் ஆன்மீகப்பணி உலகெல்லாம் பரந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அன்பர். ராஜகருணா உலக கோவில் இணையத்தளம் (world kovil .com)
உலகக் கோயில் நிறுவனர்
பி. எஸ். ராஜகருணா

30.05.2019

*நவகைலாயம்*

*நவகைலாயம்*
Keine Fotobeschreibung verfügbar.
நவகைலாயம் என்பது ஒன்பது திருத்தலங்களை குறிக்கும். ஒன்பது சிவன் கோயில்கள் பக்தர்களுக்கு உடல் நலம் மற்றும் செல்வத்தை அளிப்பவையாக உள்ளன.
ஒன்பது கோவில்களில் நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
1 *பாபநாசம்*
திருநெல்வேலியிலிருந்து 45கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தெய்வம் பாபாவினாசர் மற்றும் கைலாசநாதர். இந்த கோயிலின் நதி காட்சியாக தாமிரபரணி நதி உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். இங்கிருந்து 2கி.மீ தொலைவில் மிக முக்கியமான அகஸ்தியர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
2 *சேரன்மகாதேவி*
திருநெல்வேலியிலிருந்து 22கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.
3 *கோடகநல்லுர்*
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் 15கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள தெய்வழிபாடு கைலாசநாதர் மற்றும் சிவகாமியம்மை. இக்கோவிலுக்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.
4 *குன்னத்தூர்*
திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து 2கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவேங்கட
நாதபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய குன்றில் அமைந்துள்ளது. தெய்வ வழிபாடு கோதை பரமேஸ்வரன், சிவகாமசுந்தரி.
*தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாயங்கள்*
5 *முரப்பநாடு*
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 17கி.மீ. தொலைவிலும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 40கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – *கைலாசநாதர் இறைவி – *சிவகாமிஅம்மாள்*
6 *ஸ்ரீவைகுண்டம்*
திருநெல்வேலியிலிருந்து 30கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 40கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. முதல் நவதிருப்பதி கோவில் இங்கே அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – *கைலாசநாதர் இறைவி – *சிவகாமியம்மை*
7 *தென்திருப்பேரை*
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அழகிய தேவதாசி கோயில் ஒன்று உள்ளது.
இங்கு வணங்கப்படும் இறைவர் – *கைலாசநாதர்*
8 *இராஜபதி*
இக்கோயில் தென்திருப்பேரை நவகைலாயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – *கைலாசநாதர் இறைவி – *சிவகாமி அம்மாள், அழகிய பொன்னம்மாள்*
9 *சேந்தன்பூமங்கலம்*
தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 20கி.மீ தொலைவில் ஆத்தூர் மற்றும் புன்னகாயல் அருகில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் *கைலாசநாதர்* இறைவி – *சிவகாமி அம்மை.*

#BalMurugan & #Kumaran " " Thavil...#Senthil & #Vipoornan "

ஆசியன்

https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU

#S.P. balamurugan nathaswaram #senthil #ஜெர்மனி #wuppertal sri navathur...

ஐரோப்பாவில்