Meine Blog-Liste

Freitag, 22. März 2019

#108_லிங்கம்_போற்றி

1. ஓம் சிவ லிங்கமே போற்றி
2. ஓம் அங்க லிங்கமே போற்றி
3. ஓம் அபய லிங்கமே போற்றி
4. ஓம் அமுத லிங்கமே போற்றி
5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
6. ஓம் அனாயக லிங்கமே போற்றி
7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி
8. ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
9. ஓம் அப்பு லிங்கமே போற்றி
10. ஓம் ஆதி லிங்கமே போற்றி
11. ஓம் ஆதார லிங்கமே போற்றி
12. ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
13. ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
14. ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி
15. ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி
16. ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி
17. ஓம் ஆபத்பாண்டவ லிங்கமே போற்றி
18. ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
19. ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி
20. ஓம் உக்ர லிங்கமே போற்றி
21. ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி
22. ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
23. ஓம் ஓம்கார லிங்கமே போற்றி
24. ஓம் கனக லிங்கமே போற்றி
25. ஓம் காருண்ய லிங்கமே போற்றி
26. ஓம் காசி லிங்கமே போற்றி
27. ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
28. ஓம் காளத்தி லிங்கமே போற்றி
29. ஓம் கிரி லிங்கமே போற்றி
30. ஓம் குரு லிங்கமே போற்றி
31. ஓம் கேதார லிங்கமே போற்றி
32. ஓம் கைலாச லிங்கமே போற்றி
33. ஓம் கோடி லிங்கமே போற்றி
34. ஓம் சக்தி லிங்கமே போற்றி
35. ஓம் சங்கர லிங்கமே போற்றி
36. ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
37. ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி
38. ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
39. ஓம் சம்ஹார லிங்கமே போற்றி
40. ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி
41. ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி
42. ஓம் சாந்த லிங்கமே போற்றி
43. ஓம் தியான லிங்கமே போற்றி
44. ஓம் சித்த லிங்கமே போற்றி
45. ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
46. ஓம் சீதள லிங்கமே போற்றி
47. ஓம் சுத்த லிங்கமே போற்றி
48. ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
49. ஓம் சுவர்ண லிங்கமே போற்றி
50. ஓம் சுந்தர லிங்கமே போற்றி
51. ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
52. ஓம் சூக்ஷ்ம லிங்கமே போற்றி
53. ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
54. ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
55. ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
56. ஓம் ஜய லிங்கமே போற்றி
57. ஓம் ஜம்பு லிங்கமே போற்றி
58. ஓம் ஜீவ லிங்கமே போற்றி
59. ஓம் ஜோதி லிங்கமே போற்றி
60. ஓம் ஞான லிங்கமே போற்றி
61. ஓம் தர்ம லிங்கமே போற்றி
62. ஓம் தாணு லிங்கமே போற்றி
63. ஓம் தேவ லிங்கமே போற்றி
64. ஓம் நடன லிங்கமே போற்றி
65. ஓம் நாக லிங்கமே போற்றி
66. ஓம் நித்ய லிங்கமே போற்றி
67. ஓம் நிர்மல லிங்கமே போற்றி
68. ஓம் பர லிங்கமே போற்றி
69. ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
70. ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி
71. ஓம் பத்ரி லிங்கமே போற்றி
72. ஓம் பக்த லிங்கமே போற்றி
73. ஓம் பாபநாச லிங்கமே போற்றி
74. ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
75. ஓம் பிராண லிங்கமே போற்றி
76. ஓம் பீஜ லிங்கமே போற்றி
77. ஓம் பிரம்ம லிங்கமே போற்றி
78. ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி
79. ஓம் பிரகாச லிங்கமே போற்றி
80. ஓம் புவன லிங்கமே போற்றி
81. ஓம் பூத லிங்கமே போற்றி
82. ஓம் பூர்ண லிங்கமே போற்றி
83. ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
84. ஓம் மரகத லிங்கமே போற்றி
85. ஓம் மஹா லிங்கமே போற்றி
86. ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
87. ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
88. ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
89. ஓம் மிருத்யுஞ்சய லிங்கமே போற்றி
90. ஓம் முக்தி லிங்கமே போற்றி
91. ஓம் மூல லிங்கமே போற்றி
92. ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
93. ஓம் மேரு லிங்கமே போற்றி
94. ஓம் மோன லிங்கமே போற்றி
95. ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி
96. ஓம் யக்ஞ லிங்கமே போற்றி
97. ஓம் யோக லிங்கமே போற்றி
98. ஓம் ராம லிங்கமே போற்றி
99. ஓம் ராஜ லிங்கமே போற்றி
100. ஓம் ருத்ர லிங்கமே போற்றி
101. ஓம் வாயு லிங்கமே போற்றி
102. ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
103. ஓம் விசித்திர லிங்கமே போற்றி
104. ஓம் வீர்ய லிங்கமே போற்றி
105. ஓம் வேத லிங்கமே போற்றி
106. ஓம் வைத்ய லிங்கமே போற்றி
107. ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
108. ஓம் லிங்கோத்பவனே போற்றி

திருப்புல்லாணியில் பாண்டியர்கால கல்வெட்டுகள்... அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு!

திருப்புல்லாணியில் பாண்டியர்கால கல்வெட்டுகள்... அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு!

நன்றி -விகடன் 

இந்தக் கோயிலில், சதயத்திருநாள் கொண்டாடுவதற்கு வேண்டிய திருப்படி மாற்று உள்ளிட்ட பொருள்களுக்காக, நிலத்தை இவர் தானமாக வழங்கிய செய்தி ஒரு கல்வெட்டில் உள்ளது. தானமாக வழங்கப்பட்ட ஊர் பெயர் அதில் இல்லை.4

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில், புதைந்த நிலையில் இருந்த கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில கல்வெட்டுகளை திருப்புல்லாணி அரசுப் பள்ளி  மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருப்புல்லாணி, 108 திவ்ய தேசங்களில் 96-வது திவ்ய தேசம். ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம் இது. இந்த தலத்தின் மூலவர், ஆதி ஜகந்நாத பெருமாள். உற்சவர், கல்யாண ஜகந்நாதர். தாயாரின் திருப்பெயர் கல்யாணவல்லி. கருவறை விமானம் கல்யாண விமானம். இத்தனை மங்களகரமாகத் திகழும் இந்தத் தலத்துக்கு வந்த ராமபிரான், இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டவேண்டி கடலரசனின் அனுமதி கேட்டு மூன்று நாள்கள் காத்திருந்தார். அப்போது, அவர் தர்ப்பைப் புல்லின்மீது சயனித்திருந்தார். எனவே, இந்தக் கோயிலில் ஆதிசேஷன் மீது தர்ப்பைப் புல் விரித்து, அதில் சயனித்திருக்கும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தலத்தில்தான் பிள்ளை வரம் பெற தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார் என்கிறது தலவரலாறு. இந்தக் கோயிலில், ராமபிரான் பட்டாபிஷேக ராமராக கொடிமரத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார்.
திருப்புல்லாணி
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் உள்ள பட்டாபிஷேக ராமர் சந்நிதியின் தெற்கு வெளிப்புறச் சுவர், மூன்றாம் பிராகாரம் ஆகிய இடங்களில், சுவரின் அடிப்பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கல்வெட்டுகள் இருந்ததைத் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்தனர். இவை கி.பி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் ஆகும்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளருமான ராஜகுரு கூறுகையில், ''திருப்புல்லாணி கோயிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் துண்டுக் கல்வெட்டுகள் ஆகும். இதில் ஒன்று 'கோனேரி மேல் கொண்டான்' எனும் அரசாணைக் கல்வெட்டு. மூன்று கல்வெட்டுகளில் உலக முழுதுமுடையார் என்பவர் பெயர் உள்ளது. அவர் வீரபாண்டியன் சந்தி,  சதயத் திருநாள், தேவதானம் ஆகியவற்றிற்காக நிலங்களை இந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
திருப்புல்லாணி கோயிலில், வீரபாண்டியன் சந்தி எனும் ஒரு பூசைக் கட்டளையை  உருவாக்கி, அதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டு அமுதகுணமங்கலம் என்ற ஊரை அவர் தானமாகக் கொடுத்துள்ளார். உலகு சிந்தாமணி வளநாடு என்பது சாயல்குடி பகுதி ஆகும். சாயல்குடி அருகில் உள்ள திருமாலுகந்தான்கோட்டை சிவன்கோயில் கல்வெட்டுகளில், அவ்வூர் பெயர் அமுதகுணமங்கலம் எனவும், அளற்றுநாட்டில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இக்கல்வெட்டில் அவ்வூர் உலகு சிந்தாமணி வளநாட்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
திருப்புல்லாணி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்
இந்தக் கோயிலில், சதயத்திருநாள் கொண்டாடுவதற்கு வேண்டிய திருப்படி மாற்று உள்ளிட்ட பொருள்களுக்காக, நிலத்தை இவர் தானமாக வழங்கிய செய்தி ஒரு கல்வெட்டில் உள்ளது. தானமாக வழங்கப்பட்ட ஊர் பெயர் அதில் இல்லை. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள கல்வெட்டில், இந்தக் கோயில் பூஜைக்கு வேண்டிய நிபந்தங்களுக்கு, வரி நீக்கப்பட்ட நிலத்தை இவர் தேவதானமாக வழங்கியுள்ளதை அறியமுடிகிறது.
இந்தக் கல்வெட்டுகளில் சொல்லப்படும் உலகமுழுதுமுடையார் என்பவர், கி.பி.1253 முதல் கி.பி.1283 வரை ஆண்ட முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் பட்டத்தரசி ஆவார். மன்னன்  நலமாக  வாழ, அவன் பெயரில் ஒரு சந்தியும், அவன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பதால், அதை சதயத் திருநாளாக கொண்டாடவும் தேவையான தானங்களை இந்தக் கோயிலுக்கு அவர் வழங்கியுள்ளார். எனவே, இதில் உள்ள சில கல்வெட்டுகள் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது.
அந்தராயம், விநியோகம், தறி இறை, தட்டளிப்பாட்டம், செக்கிறை, அச்சு ஆகிய வரிகள் இந்தக் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.  திருமலை ரகுநாத சேதுபதி காலத்தில் இந்தக் கோயிலின் பல பகுதிகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளதாக தளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது. அந்தத் தருணத்தில், கோயில் மறுகட்டுமானத்தின்போது பல கல்வெட்டுகள் இடம் மாறியிருக்கலாம்'' என கல்வெட்டுகள் குறித்த செய்தியினை விளக்கினார். 
கல்வெட்டு படியெடுக்கும் நிகழ்ச்சியில், வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி, ராமநாதபுரம் சாந்தக்குமார், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த விசாலி, பிரவீணா, மனோஜ், தர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமேசுவரம் கோவில் உருவான கதை

Royce Rudran
ராமேசுவரம் கோவில் உருவான கதை
ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.
அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen
காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சிநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.
ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.
அகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார். வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி "ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்தது. இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார். சிவன் தாமதமாக தரிசனம் தந்தார். ஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார்.
ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார். ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார். ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.
ராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார். அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார். ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார்.
ஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும். அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார். ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது...
...ஓம் நம சிவாய

Montag, 18. März 2019

கணபதிக்கு ... பாரம்பரியமாக 32* உருவங்கள்

கணபதிக்கு ...
பாரம்பரியமாக 32* உருவங்கள் 
அவை; 
1.பாலகணபதி,
 2.தருணகணபதி,
 3.பக்திகணபதி
,4. வீரகணபதி,
 5. சக்திகணபதி,
 6.துவிஜகணபதி
 7.சித்திகணபதி,
 8.உச்சிஷ்டகணபதி,
 9.விக்னகணபதி,
 10.க்ஷிப்ரகணபதி, 
11.ஹேரம்பகணபதி, 
12.லக்ஷ்மிகணபதி, 
13.மஹாகணபதி,
 14.விஜயகணபதி,
 15.நிருத்தகணபதி,
 16.ஊர்த்துவகணபதி
,17. ஏகாக்ஷ்ரகணபதி,
 18.வரகணபதி,
 19.திரயாக்ஷ்ரகணபதி, 
20.க்ஷிப்ரப்ரசாதகணபதி, 
21.ஹரித்திராகணபதி, 
22.ஏகதந்தகணபதி, 
23.ஸ்ருஷ்டிகணபதி,
 24.உத்தண்டகணபதி, 
25,ரணமோசனகணபதி,
 26.துண்டிகணபதி, 
27.துவிமுக கணபதி,
28.த்ரிமுககணபதி, 
29.சிங்ககணபதி,
 30.யோககணபதி,
 31.துர்க்காகணபதி,
32  .சங்கடஹரகணபதி. 
Muthukumr Alayam Hauskam

கணபதியின் (16) வடிவங்கள்;-

கணபதியின் (16) வடிவங்கள்;-
*****************************************
கணபதி பல முகங்களைக் கொண்டு அனைவருக்கும் காட்சி தருபவர். அனைவருக்கும் நல்லதை அருளும் விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். அதை பற்றி இங்கு பார்ப்போம்.
🌠 #பாலகணபதி : 
மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர்.
🌠 #தருணகணபதி :
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடன் காட்சி தருபவர்.
🌠 #பக்தகணபதி :
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர்.
🌠 #வீரகணபதி :
தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரௌத்ர ஆகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர்.
🌠 #சக்திகணபதி :
பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர்.
#துவிஜகணபதி :
இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர்.
🌠 #சித்திகணபதி :
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியாக காட்சி தருபவர்.
🌠 #விக்னராஜகணபதி :
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிறமேனியுடன் பிரகாசமாக விளங்குபவர்.
🌠 #ஹேரம்பகணபதி :
பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார்
#லட்சுமிகணபதி :
பச்சைக்கிளி, மாதுளம்பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும், இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள் புரிபவர்.
🌠 #மஹாகணபதி :
பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர்.
🌠 #புவனேசகணபதி :
கஜமுகாசுரனை தன் வாகனமாக்கிக் கொண்டு செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருபவர்.
🌠 #நிருத்தகணபதி :
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் கணபதியாகக் காட்சி தருபவர்.
அனைவர்க்கும் அருள்புரிவாய்
ஆனைமுகத்தவனே!
அனைத்தும் நின்னருளன்றி
வேறுயார் வேழமுகத்தவனே! Muthukumr Alayam Hauskam

ஆசியன்

https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU

#S.P. balamurugan nathaswaram #senthil #ஜெர்மனி #wuppertal sri navathur...

ஐரோப்பாவில்