Meine Blog-Liste

Samstag, 13. Oktober 2018

ஓவியங்கள் திறப்பு விழா

Germany
13.10.2018
photoby. worldkovil rajakaruna
ஜெர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் எழுந்தருளி காட்சி தரும் கிருஷ்ணர் நூளைவா யில்
முன் அரங்கில் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த ஓவியக் கலைஞானி பாஸ்கரன் அவர்களின் அழகிய கைவண்ணத்தில் உருவான படங்கள் இன்று ஆலயகுரு .கலாநிதி” “ சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் அவர்களின் பெரும் முயற்சியில்




திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது . ஓவியங்கள் அனைத்தும்
எழிலுடன் காட்சி தருவதைப் பாருங்கள் அத்துடன் ஏனைய இனமக்களும் இணைத்து ஜெர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தனர் . இன் நிகழ்வுகளைப் பதிவு செய்ய அனுமதி வழங்கிய ஆலயகுரு .கலாநிதி” “ சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் அவர்களுக்கு உலகக் கோவில் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்
தமிழன்புடன்
உலகக் கோவில்
பி.எஸ்.இராஜகருணா

Donnerstag, 4. Oktober 2018

குருப்பெயர்ச்சி ஹோமம் 04.10.2018

Germany
04.10.2018
குருப்பெயர்ச்சி
இன்று ஸ்ரீ கனகதுர்க்கா அம்மாள் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்ற








குருப்பெயர்ச்சி ஹோமம் 04.10.2018
photoby -worldkovil rajakaruna

Mittwoch, 3. Oktober 2018

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தப்பான தீர்ப்பு’ சரியான விளக்கத்துடன் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் .J.P
https://youtu.be/_k13yRyObWI
''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் .J.P
உலகக்கோவில்
03.10.2018

Sonntag, 23. September 2018

வராஹி தேவி, ஒம் நவசக்தி நாயகி ஆலயத்தில்

photoby .worldkovil rajakaruna
 Ohm navasakthi nayaki ampal Germany Gartenbau Georg Reifig) Hohenhorst 98 . 48341 altenberge Germany
வராஹி தேவி,  ''சர்வம் சக்தி மயம்''  புகழ்   அருள் மிகு ஒம் நவசக்தி நாயகி ஆலயத்தில்   வராஹி தேவி  எழுந்தருளி  இருக்கிறாள் . புலம்பெயர் திரு தலங்களில் வராஹி தேவியை    ஒம் நவசக்தி நாயகி ஆலயத்தில்  வழிபட்டால்  உங்கள்  துன்பங்கள்  விலகி ஆனந்த வாழ்வு பெறலாம் .இன்று 23.09.2018 முதன் முதலாக  காட்சி தருகிறாள் உலக மக்களுக்கு  இந்த பதிவை தருவதில்
உலகக்கோவில் சிறப்பு பெறுகிறது .
வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.

எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.

வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள்.

Samstag, 22. September 2018

இந்து கடவுள்களின் அற்புதங்கள்

பலரும் அறியாத
இந்து கடவுள்களின் அற்புதங்கள்

1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )

8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.

23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.

25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

Freitag, 21. September 2018

புரட்டாதிச் சனி

கிருஸ்ணா சர்மா
புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிழமை அதிகாலையில் துயில் நீத்து,தூய நீராடி ஆசாரமாக சனிபகவானுக்கு எண்ணெய்சுட்டி, நீலமலர்மாலை என்பன சார்த்தி வழிபடுவர்.
புராணக்கதை தொகு
சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும்.
இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.
அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.
இராவணனின் மகன் இந்திரசித்து இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரசித்து பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.
விரதமுறை தொகு
சனீஸ்வரன் தானியம் எள், வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.
ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறு பதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்.

Donnerstag, 20. September 2018

நவகிரகங்களில் இருந்து சக்தி வெளிப்படுவது உண்மை தான்

நவகிரகங்களில் இருந்து சக்தி வெளிப்படுவது உண்மை தான் என நிரூபித்த விஞ்ஞானி
“சூரிய” குடும்பத்தில் 9 கோள்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நவ கோள்களும் இந்த பூமியில் இருக்கும் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற உண்மையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரத நாட்டின் சித்தர்களும், வானியல் அறிஞர்களும் அறிந்தனர். ஆனால் இந்த உண்மை பற்றி கடந்த நூற்றாண்டில் தான் மேலை நாட்டு ஆய்வாளர்கள் அறிந்தனர். அதைப் பற்றி இங்கு சிறிது காண்போம்.
இந்த நவகிரகங்களும் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக உண்டானது என்பது நமது நாட்டின் மெய்ஞ்ஞானிகளும் இன்றைய நவீன விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உண்மையாகும். ஆக இந்த நவகோள்கள் ஒவ்வொன்றும், ஓரு விதமான கதிர்வீச்சை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இந்த நவ கோள்களின் “கதிர்வீச்சு சக்தி” பல ஆயிரம், லட்சம் கிலோமீட்டர்கள் கடந்து, இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரின் மீதும் தனது ஆற்றலை செலுத்துகிறது. இது அந்த உயிரினத்தின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கிரகங்களை பற்றி 1920 ஆம் ஆண்டுகளில் “சிஜெவ்ஸ்கி” என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆராய்ந்து சில உண்மைகளைக் கண்டுபிடித்தார். அதன்படி சூரியனில் எந்த ஓரு வருடத்தில் வெடிப்பு ஏற்படுகிறதோ அந்த வருடங்களில் பூமியின் பல பகுதிகளில் மனிதர்களுக்கிடையே போர்கள் ஏற்படுகிறது எனவும், அது போல் “செவ்வாய் கிரகம்” ஓரு குறிப்பிட்ட அமைப்பில் வரும் வருடங்களில் உலகின் மிக சிறந்த “போர்வீரர்களும், தளபதிகளும்” பிறப்பதாக கண்டுபிடித்தார். சிஜெவ்ஸ்கியின் இந்த ஆய்வு முடிவு மறுக்க இயலாத படி இருந்தன.
ஆனால் அப்போது “ரஷ்ய” அதிபராக இருந்த “ஸ்டாலின்” சிஜெவ்ஸ்கியின் இந்த ஆய்வு முடிவு தங்களின் “கம்யூனிச” கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக கூறி, சிஜெவ்ஸ்கியின் ஆய்வு முடிவுகளை மறைத்து, சிஜெவ்ஸ்கியை ரஷ்யாவின் “சைபீரியா” பகுதியில் சிறையில் அடைத்தார்.
1953 ஆம் ஆண்டு ஸ்டாலின் இறந்த பிறகு விடுதலை செய்யப்பட்ட சிஜெவ்ஸ்கி சில மாதங்களிலேயே இறந்து போனார். பிறகு அவருடைய ஆய்வுகளை பற்றி ஆராய்ந்த பிற மேலை நாட்டு விஞ்ஞானிகள் அவரது முடிவுகள் உண்மை என்று ஏற்றுக்கொண்டனர்
நவகிரகங்களின் தாக்கம் மனிதர்களின் வாழ்வில் பிரதிபலிக்கிறது என்பதை தமிழர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து அதன் படி ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கினார். நவீன விஞ்ஞானமோ அதை சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளது. அறிவியலிலும் ஜோதிடத்திலும் மேலோங்கி இருந்த தமிழர்களின் அறிவாற்றல் மழுங்கடிக்கப்பட்டதா இல்லை எப்படி அந்த அறிவு தொடர்ச்சி அறுந்தது என்பதை இறைவன் மட்டுமே அறிவார்.

ஆசியன்

https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU

#S.P. balamurugan nathaswaram #senthil #ஜெர்மனி #wuppertal sri navathur...

ஐரோப்பாவில்