9 \ 7 செங்கைச் சிலையும் அம்பும்
அபிராமி அந்தாதி ஒன்பதாம் பாடலில் ஏழாவதுபகுதி விளக்கம் காணலாமா
சிலையும் \ கரும்புவில்லும்
மலர் அம்பும் வைத்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம் என்று பொதுவாக கூறப்படுகிறது
மன்மதன் தன் காதல் துணைவி ரதி தேவியுடன் இரும்புவில்லுக்கு பதிலாக
எறும்புகள் விரும்பும்
இனிப்பான கரும்பை
வில்லாக ஏந்திக் கொண்டு வில்லனாக வருகிறான்.
நிம்மதியாகத் திரியும் பல ஆண்பெண்கள்
வாழ்வில் காதலை
இனக்கவர்ச்சி ஆசையை கிளப்பி
பல பல சம்சாரச்சிக்கல்களில்
மாட்டிவிடும் வில்லனாக வருகிறான்!
மீன் கொடி தேரில்
மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின்
பூஜையில் நாளினில்
மீன் கொடி தேரில்
மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றா...ன்
இந்த கரும்பு வில்லுக்கு நாண் கயிறு எது தெரியுமா
நாண் தேன் வண்டுகள்தான்
வளைந்த கரும்பு வில்லின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையில்
குறுக்காக வண்டுகள் நாண் மாதிரி வரிசையாகச் சேர்ந்திருக்கின்றன.
இதைச் கொண்டு
உயிரினங்கள் மீது மலர்க்கணைகளை வீசிக்
காதல் மயக்கத்தை உருவாக்கி
உலகத்தில் இனப் பெருக்கம் செய்ய உதவுகிறான் என்று கூறப்படுகிறது.
எதுக்கு உயிர் உற்பத்தி நடக்கவேண்டும்.
ஜனங்கள் எல்லாரும்
ஸநகாதி முனிவர்களைப்போல் ஞானிகளாக இருந்துவிட்டால்,
பெண்களை திரும்பிப்பாக்காவிட்டால்
பெண்கள்
ஆண்களிடம் மயங்கி சிக்காவிட்டால்
பலபிறவி பாவபுண்ணியம் செய்து மறைந்த
ஏராளமான கர்மா பாக்கியோடுஇருக்கும்
உயிர்கள்
இன்னமும் ஜனனம் எடுக்காமல் இருக்கிற ஜீவாத்மாக்கள்
மறுபடி பிறக்க முடியாமல் ஆகி,
பெரிய கஷ்டம் உண்டாகும்.
அவர்கள் மறுபடியும்
புல்லாக புழுவாக பூண்டாக பல மிருகங்களாக
பறவையாக பாம்பாக அசுரராக மனிதராக தேவராகபலப்பல
ஜன்மா எடுத்தால்தான்
பலஜென்ம
கர்மாவை தீர்த்துவிட்டு எப்போதாவது
முக்தி பெறமுடியும்.
இதற்காகத்தான் லோகத்தில் பிரஜா உற்பத்தி நடக்க வேண்டுமென்று
அவனுக்குச் சக்தி தந்து காம இலாகா மந்திரியாக
அம்பிகை மன்மதராஜனுக்கு
பொறுப்பு தந்துள்ளாள்.
அப்புறம் எதுக்கு
ஆதிபராசக்தி அம்பிகை எதற்காக இந்த கரும்பு வில்லையும் அம்பையும் தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ளாள்.
காமத்துக்காகவே ஏற்பட்ட மன்மதனுக்கு அவள் தந்த கரும்பு வில்லையும், மலர் அம்பையும் ஒரு சமயம் அவளே அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளும்படியாகி விட்டது.
பரம காருண்யத்தால் அவள் அப்படிச் செய்தாள்.
வெளி நினைப்பே இல்லாத பிரம்ம ஸ்வரூபம் லோகத்திடம் கருணை கொண்டு கடாக்ஷிக்க வேண்டும். லோகத்துக்குத் தர்மத்தையும் ஞானத்தையும் அநுக்கிரகிக்க வேண்டும் என்றே,
அம்பாள் காமனுக்குத் தந்த தனுஸையும் பாணங்களையும் எடுத்துக்கொண்டு காமாக்ஷியானாள்.
அது பரமேசுவரன் தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்துவிட்ட சந்தர்ப்பம்.
ஒரே ஞானமயமான மூர்த்தியாக, பரம சாந்த ஸ்வரூபமாக, நிச்சலனமாக உட்கார்ந்துவிட்டார் தக்ஷிணாமூர்த்தி.
எல்லாம் ஒன்றாகியிருக்கிற அத்வைத வடிவமாக அவர் இருக்கிறார்.
ஆனால் அவர் இப்படி ஞான ஸ்வரூபமாய் பரதத்துவமாய் இருந்தால் ஜீவராசிகள் என்ன ஆவது
ஜீவராசிகளைக் கை தூக்கி விடுவது யார்
இந்த ஞான ஸ்வரூபி கருணைக் கடலாகி, எல்லோரையும் கடாக்ஷிக்க வேண்டும் என்று ஜகன்மாதா திருவுள்ளம் கொண்டாள்.
இவள் தன் கடாக்ஷத்தாலேயே ஸர்வ லோகத்தையும் ரக்ஷித்து விடலாம்தான்.
ஆனாலும் ஜனங்களுக்கு கணவன் பெருமையை காட்ட நினைத்து, ஈசுவரனுக்கும் பெருமை கொடுக்க உத்தேசித்தாள்.
அவள் வேறு, அவர் வேறு அல்ல, ஒன்றேதான். அதாவது தன்னுடைய ஞானத்திலேயே காருண்யமும் பொங்கியிருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
அப்போது சந்தர்ப்பமும், அவள் கரும்புவில், மலர்ப்பாணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காமேசுவரியாவதற்கு அநுகூலமாக ஆயிற்று.
தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள் மூன்று லோகங்களையும் ஹிம்ஸித்து வந்த சந்தர்ப்பம் அது.
இவர்கள் நிரம்பத் தபஸ் பண்ணி எல்லையில்லாத பலம் பெற்றிருந்தார்கள்.
சாக்ஷாத் பரமேசுவர தேஜஸிலிருந்து உண்டாகும் குமாரர்தான் தங்களை வதம் செய்ய முடியுமென்று இவர்கள் வரம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பரமேசுவரனோ இப்போது பரம ஞான மூர்த்தியாக, எந்தக் காரியமும் இல்லாமல், ஆத்மானந்தத்தில் முழுகி, தக்ஷிணாமூர்த்தியாக உட்கார்ந்துவிட்டார்.
இவரை எப்படிப் புத்திரோத்பத்தி செய்ய வைப்பது
அசுரர்களால் ஹிம்ஸிக்கப்பட்ட தேவர்களுக்கு ஒரே வழிதான் தெரிந்தது.
அப்போது ஹிமயபர்வத ராஜனுக்குப் புத்திரியாகப் பிறந்திருந்த பார்வதி தேவி, இந்த தக்ஷிணா மூர்த்திக்குக் கைங்கரியம் செய்து வந்தாள்.
காமத்துக்கு அதிதேவதையான மன்மதன், பார்வதியிடம் பரமேசுவரனின் மனஸைத் திருப்பிவிட்டால்,
பிறகு சிவகுமார ஜனனம் ஏற்பட்டுவிடும் என்று தேவர்கள் எண்ணினார்கள்.
மன்மதனிடம், ‘உன் சக்தியைப் பரமேசுவரனிடம் காட்டு’ என்று ஏவி விட்டார்கள்.
லோகம் முழுக்க ஸ்வாதீனம் பண்ணிக் கொள்கிற ஆற்றலை, மனமதனுக்குத் தந்ததே பரமேசுவர சக்திதான்.
இவன் அந்தப் பரமேசுவரனிடம் பக்தியோடு போய்த் தன் சக்தியை அவரிடம் அர்ப்பணம் பண்ணியிருந்தாலே போதும்.
கருணா மூர்த்தியான அவர் காரியத்தை முடித்துத் தந்திருப்பார்.
ஆனால் இவனோ அப்படிப்பட்ட சமர்ப்பண புத்தி இல்லாமல், அகங்காரத்தோடு போனான்.
பரமேசுவரனையே தன்னால் வசப்படுத்தி பார்வதியிடம் மோகிக்கச் செய்ய முடியும் என்று அகம்பாவப்பட்டுக்கொண்டு போனான்.
குருவிடமே கற்ற வித்தையைக் காட்டுவதுபோல் பரமேசுவரன் மேல் மலர் அம்புகளை விட்டான்.
சட்டென்று ஸ்வாமிக்கு ஒரு சலனம் உண்டாகிறாற்போலிருந்தது.

அக்கினி மயமான நெற்றிக் கண்ணை மட்டும்தான் துளித் துளி திறந்தார்.
அவ்வளவுதான்! மன்மதன் அக்னி ஜ்வாலையான அந்தத் திருஷ்டியில் அப்படியே எரிந்து பஸ்பமாகிவிட்டான்.
‘தான் மகா அழகன்’ என்ற கர்வம் அவனுக்கு உண்டு.
உடம்பின் அழகு
ஞானாக்னியின் முன்னால் நிற்க முடியாது என்று காட்டுகிற மாதிரி,
இப்போது பரமேசுவரன் முன்னால் சாம்பல் குவியலாகி விட்டான்.
எவன் சர்வாங்கசுந்தரன் என்று பேர் பெற்றிருந்தானோ,
அவனுக்கு இப்போது அங்கமே இல்லாததால் ‘அனங்கன்’ என்ற பேர் ஏற்பட்டது.
மன்மதனின் பத்தினியான ரதி புலம்பினாள். பார்வதி தேவி அவளுக்கு அபயம் தந்து, அவள் கண்ணுக்கு மாத்திரம் மன்மதன் தெரியும்படியாக அநுக்கிரகித்தாள்.
அவனுக்குத் தந்திருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் தானே கையில் எடுத்துக் கொண்டாள்.
ஈஸ்வரனிடத்தில் போய் நின்றாள்.
அன்புமயமாக அவரைப் பார்த்தாள்.
கரும்பு வில்லும், மலரம்பும் தரித்து, இப்படி அன்பு பொங்கப் பார்த்தபோதுதான் அவளுக்கு காமாக்ஷி என்று பேர் வந்தது.
காம – அன்பு; அக்ஷி – கண்;
“காமாக்ஷி”
“காமாக்ஷி”
முதலில் மன்மதன் பரமேசுவரன் மேல் பாணப்பிரயோகம் செய்தான். எதிரியாகப் போர் செய்தான்.
எரிந்து போனான்.
அம்பாளோ வில் கரும்பையும் அம்பு புஷ்பங்கள் தரும் தன் திருக்கரங்களில்
ஏந்திக்கொண்டுகொண்டு போய்
ஈஸ்வரனுடைய பாதத்தில் அர்ப்பணம் செய்து, நமஸ்கரித்தாள்.
அவர் தன்னையே அவளுக்கு ஸ்வாதீனப் படுத்திவிட்டார்.
அன்புக்கு அடக்கத்துக்கு உள்ள சக்தி இது!
இவளுடைய அன்பு ததும்புகிற கண்களை, கண்டவுடனேயே அவருக்கும் அன்பு சுரந்தது.
பஞ்ச இந்திரியங்களாலும், மனஸாலும் ஜீவ சமூகத்தை எல்லாம் ஆட்டிப் படைத்து விளையாடும் மகாசக்தி படைத்த இவள்,
அந்தச் சக்திக்கு அடையாளமான ஐந்து பூக்களையும் கரும்பையும் அவர் முன் போட்டு சமர்ப்பணம் பண்ணி நமஸ்காரம் செய்தவுடன் ஈசுவரனுக்குப் பிரேமை பொங்கியது.
பிறகு பார்வதி கல்யாணம் – அதன்பின் குமார ஸம்பவம் அதாவது முருகக் கடவுளின் உற்பத்தி, அப்புறம் சுப்பிரமணியரால் தாரகன், சூரபத்மா ஆகியோரின் சம்ஹாரம் எல்லாம் நடந்தன.
எந்தக்கண்களால்ஈசுவரனுக்குக் காமத்தை உண்டாக்கி காமாக்ஷியானாளோ,
அதே கண்களின் கடாக்ஷம் நம்மேல் துளி விழுந்தால்போதும்.
நமக்கு எந்த விதமான காமமும் பறந்துவிடும். நாம் பார்ப்பதை எல்லாம் அவளுடைய பல வேஷங்களாகவே பார்ப்போம்.
அம்பிகை
நம்முடைய காமத்தைக் கட்டுக்குள்
வைத்திருக்க உதவுகிறாள்.
அக்னி போல மின்சாரம் போல
காமத்தை ஆசையை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கும்போது மட்டுமே
மிகுந்த அளவில் பலன்கள் தரும்.
காமன் பஞ்ச புஷ்ப பாணங்களையும் கரும்பு வில்லையும் பிரயோகித்து நம்முடைய பஞ்ச இந்திரியங்களையும் மனசையும் தடுமாறிப் போகச் செய்கிறான்.
ஆனால்
அம்பிகை தர்மத்தின் தலைவி
பரதேவதை இந்தப் பஞ்ச பாணங்களைத் தன் திருக்கரங்களில் பிடித்துக் கொண்டிருப்பதாலே,
நம்முடைய இயந்திரங்கள் தறிகெட்டு
முறைகெட்டு
ஓடாமல் தன் பிடிப்பில் வைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறாள்.
அவளுடைய கையில் மனோரூபமான இக்ஷு (கரும்பு) இருப்பதால்
நம் சித்தத்தின் விவகாரங்கள் எல்லாம்
நசிக்கின்றன.
சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் என்று ஐம்புலன்கள் அநுபவிக்கிற அழகுகள் எல்லாம் அவளுடைய அழகுதான்.
இவற்றை அநுபவிக்கிற நம் மனசும் அவள் கையில் வசப்பட்டதுதான் என்று உணர்த்துவதற்காகக் கரும்பு வில்லும்,
மலரம்புகளும் வைத்துக்கொண்டு, காமாக்ஷியாக திவ்ய ரூபம் கொண்டிருக்கிறாள்.
கரும்பின் இனிமையும்
புஷ்பங்களின் நறுமணமும் மென்மையும் கொண்டவளாக இருக்கிறாள்.
செங்கை நாள் அல்லது சிவப்புக் கை நாள் என்று உள்ளது
அதுவும் ஏன் செங்கைச்சிலையும் அம்பும் என்று அபிராமி பட்டர் பாடுகிறார்.
செங்கை என்றால் சிவந்த கை மட்டுமல்ல வள்ளல் தன்மை
வரங்களை நன்மைகளை
பக்தர்களுக்கு வாரிவாரிக்கொடுக்கும் தன்மையுள்ள கை
செங்கை = செம்மை + கை
செம்மையான கை
செம்மை என்றால் இரக்க சுபாவம் நீதிதவறாத நெறிமுறைகள் நியாயம் தர்மம் ஒழுங்கு காக்கும் குணங்கள் நிறைந்தவள் அம்பிகை
ஏன் அம்பாள் சிவப்பாக மட்டும் தான் இருப்பாளா என்று நினைக்கக் கூடாது.
மாரியம்மன் கருமாரியம்மன் மீனாட்சி அம்மன் என்று பல நிறங்களில் காணப்படுவாள்.
கருங்கை என்றால்
வலிமையான கை
கருமையான கை
அரககர்ளை கொல்லும் கை
தவறுசெய்பவர்களுக்குத்
தவறாமல் தண்டனை வழங்கும் கைகள்
அங்கை
உள்ளங்கை
அழகியகைநெடுங்கை
நீளமான கை
நீளமான கைப்பிடிகொண்ட யானை என்று பலவிதமான கைகள் உள்ளன.
பல நிறங்கள் இருந்தால் கூட
சிவப்பு நிறம் மங்களகரமான நிறமாக கருதப்படுவதன் ரகசியம் என்ன.
சிவப்பு மற்றும் மஞ்சள் என்பது மங்களகரமான நிறங்களாக கருதப்படுகிறது.
நம் மரபில் நிகழும், பண்டிகை, விழாக்கள், சடங்குகளில் சிவப்பு நிறம் பிரதானமாக இருப்பதை நாம் காண முடியும்.
பொருட்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம்
அதிகமாக நம் மக்கள் சிவப்பு சார்ந்த நிறத்தை அதிமாக தேர்வு செய்வதை காண முடியும்.
சிவப்பு என்பது அன்பின் நிறம் என பலர் கூறுகிறார்கள்.
பொதுவாக சிவப்பு நிறம் என்பது சுப மங்களமான நிறம்.
இதனாலயே இன்றும் பிராமணப்பெண்கள் அவர்களின் திருமணத்தின் முகூர்த்தத்தின்போது,
புடவை
துவங்கி அணிகிற அணிகலன் வரை பெரும்பாலானவை சிவப்பு நிறத்தில் இருப்பதை காணமுடியும்.
இது உண்மையை உணர்த்துகிற நிறம் அதுமட்டுமன்றி பார்வதி தேவியின் அம்சமாக இந்த சிவப்பு நிறம் கருதப்படுகிறது.
அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் நல்ல அதிர்வுகளையும் ஈர்க்கும் நிறமாக சிவப்பு இருக்கிறது.
இந்த சிவப்பு நிறத்தை நம்முடைய அமைந்திருக்கக் கூடிய நெற்றிப் பகுதியில் அணிவதால் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் அரணாக இந்த சிவப்பு நிறம் விளங்குகிறது.
சிவப்பு நிறம் என்பது ஒரு நேர்மறையான அதிர்வை நமக்குள் செலுத்தி நம்மை நல்ல பாதையில் இயக்கும் ஊக்கு சக்தியாக அமைகிறது.
பிப்ரவரி 12
இந்நாள் சிறுவர்களை இராணுவத்தில் அல்லது போர்களில்பயன்படுத்துவதற்கு எதிரான நாள் ஆகும்.
பல நாடுகளில் சிறுவர்கள் போர்வீரர்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநடவடிக்கைக்கு எதிராக, 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைப் பொதுக்கூட்டத்தில் செங்கைநாளாக பிரகடனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
பரம கருணைகொண்ட அம்பாள் எப்படியிருக்கிறாள்!
செங்கைச்சிலையும் அம்பும்
கரும்பு வில்லும் (இக்ஷுசாபம்) மலரம்பும் (புஷ்பபாணம்) வைத்திருக்கிறாள்.
என்று அபிராமி பட்டர் பாடுகிறார்!
இந்த இரண்டும் இன்னொருத்தருக்கும் உண்டு. மன்மதன் என்கிற காமன்தான் காமன் காமாக்ஷி
இருவருக்கும் கரும்பு வில், புஷ்ப பாணம் ஆகியன
காமன் பொது.
மன்மதன் கரும்புவில்லை வைத்துக்கொண்டிருக்கிறான்.
இந்தக் கரும்பு வில்லில் ஐந்து மலர் அம்புகளைத் தொடுத்துத்தான் சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தையும் மன்மதன் ஆட்டிவைக்கிறான்.
உலகத்தில் உள்ள தித்திப்பு பக்ஷணங்கள் அத்தனையும் வெல்லம், சர்க்கரையில் செய்ததுதான்.
வெல்லம், சர்க்கரைக்கு ஆதாரம். கரும்பு தித்திப்புச்சுவை மன்மதனுக்கு
வில். சுகந்தத்துக்கும் மென்மைக்கும் ரூப ஸெளந்தர்யத்துக்கும் புஷ்பங்கள் பெயர் போனவை.
இப்படிப்பட்ட புஷ்பங்களில் ஐந்து அவனுக்குப் பாணங்களாக இருக்கின்றன. காதுக்கு சுகமான ரீங்காரம்
வண்டிடமிருந்து வருகிறது.
இப்படியாக தன் வில், அம்பு, நாண் இவற்றால் நம் பஞ்சேந்திரியங்களுக்கான
அத்தனை விதமான அழகுகளையும் காட்டி, லோகத்தை காமத்தில் கட்டிப் போடுகிறான் என்று அர்த்தம்.
அம்பாள்தான் அவனுக்கு இப்படி இரும்பு வில்லுக்கும் பாணத்துக்கும் பதிலாகக் கரும்புவில்லையும்
புஷ்ப பாணங்களையும் தந்து,
எல்லா உயிரனங்களையும் கவர்ந்து இழுத்து ஆட்டி வைக்கிற சக்தியை அநுக்கிரகிக்கிறாள்.
சிருஷ்டி லீலை நடக்க வேண்டும் என்பதற்காகக் காமனுக்கு இந்த அதிகாரம் தந்திருக்கிறாள்.
ஆனால் ஜீவப் பிரபஞ்சம் முழுவதும் எப்போதும்
இந்திரிய சுகங்கள் என்கிற துக்கத்திலேயே சிக்கிக்கொண்டு கிடப்பதையும் அம்பாள் விரும்பவில்லை.
லோக ரீதியாக வாழ்க்கை நடத்துகிறவர்களும் காமத்தினால் தர்மத்தை விட்டுவிடக்கூடாது; அர்த்த காமங்களையும் (பொருள் ஈட்டுதலையும்) ஆசைகளை அநுபவிப்பதையும்) கூட தர்மத்துடனேயே இணைத்து ஒழுங்கோடு வாழ வேண்டும்.
மனசும் இந்திரியமும் போன போக்கில் விட்டுவிடாமல் அவற்றை தர்மத்தில் கட்டுப்படுத்த வேண்டும்.
லோக விவகாரத்தை முழுதும் விடாமலே இப்படி கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பது முதல் நிலை.
அப்புறம் மனசு, இந்திரியம் இவை கொஞ்சம்கூடச் சலனமே இல்லாமல் இருக்கிற ஞான நிலை சித்திக்கும்.
அந்த நிலை வந்துவிட்டால் அப்புறம் ஜன்மமே இல்லை.
சிருஷ்டி லீலைக்கு சகாயம் செய்கிற மன்மதனுக்கு இங்கு வேலையே இல்லை.
மன்மதனுக்கு காமத்தை உண்டாக்குகிற சக்தியைத் தந்த அம்பாளேதான்,
காம விகாரத்தைக் கட்டுப்படுத்த தர்மத்தையும் முடிவாக அவளுடைய சிருஷ்டி லீலையிலிருந்து விடுபடுகிற ஞானநிலையான மோக்ஷத்தையும் ஏற்படுத்தியிருக்கிறாள்.
காமனுக்கு அநுக்கிரஹம் செய்து, பரமேசுவரனைக் காமேசுவரனாக்கிய அந்த சிவகாம சுந்தரியைத் தியானித்தால்,
நம்முடைய ஆசைகள், காமங்கள் எல்லாமே கடைசியில் அழிந்து போகும்.
அவளுடைய கடாக்ஷம் கிடைத்துவிட்டால்
அதன்பின் எவ்வளவு ஆசையை உண்டு பண்ணக்கூடிய வஸ்துவும், நமக்கு ஆசை உண்டாக்காது.
காமம், குரோதம், லோபம் (பணத்தாசை), மோகம், மதம், மாத்சரியம் (பொறாமை) ஆகிய துர்குணங்களில்
ஒன்றும் இல்லாமல் நம் சித்தம் பரிசுத்தம் ஆவதற்கு அவளையே பிரார்த்திக்க வேண்டும்என்று
அபிராமி அந்தாதி கூறுகிறது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen