Meine Blog-Liste

Mittwoch, 27. März 2024

*பங்குனி உத்திரம் பற்றிய அற்புத சிறப்பான 35 தகவல்கள்*

 *பங்குனி உத்திரம் பற்றிய அற்புத சிறப்பான 35 தகவல்கள்*

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன. பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
1. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
2. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்
3. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.
4. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.
5. சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
6. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்
7. பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.
8. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
9. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
10. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.
11. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.
12. தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.
13. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
14. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.
15. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
16. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.
17. பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
18. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.
19. 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும்.
20. இந்த திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும், திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும் ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று சுந்தபுராணம் கூறுகிறது.
21. திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், திருமணஞ்சேரி, கேரளத்தின் ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.
22. திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. இக்கோல சுதைச் சிற்பம்தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது.
23. சிவ-பார்வதி திருமணக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை தரிசித்தாலும், ஆலயங்களில் திருமண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழலாம். கன்னிகள் விரதமிருந்து இப்படி தரிசித்தால் விரைவில் திருமணம் கூடுவதுடன் நல்ல கணவன் கிடைத்து இனிமையான வாழ்வும் அமையும்.
24. பங்குனி உத்திரவிரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.
25. இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவி யான சரஸ்வதியையும் பெற்றார்.
26. பங்குனி உத்திரம்
நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.
27. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற உள்ளது.
28. அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.
29. உவமையற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு பல்குணன் என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.
30. ஊன் உறக்கமின்றி கண் இமையால் நம்மைகாக்கும் இமையவர்கள் என ஸ்ரீதாயாரும், பாற்கடல் பள்ளி கொண்டோனும் போற்றும் நாள் பங்குனி உத்திரம். உத்திரம், தாயாரின் திருநட்சத்திரம்.
31 பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்னன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.
32. பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன.
33. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான்.
34. கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.
35. திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
Ist möglicherweise ein Bild von Tempel
Alle Reaktionen:
45

மஹாகும்பாபிஷேகம்#மட்டக்களப்பு - கிரான்#ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்

Montag, 25. März 2024

பங்குனி உத்திரம் தோன்றிய வரலாறு.

 பங்குனி உத்திரம்.. ஏன் இவ்வளவு சிறப்பு? அதன் வரலாறு என்ன?





அசுரனை வீழ்த்திய நாள் :

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாளே, பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.

குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி முருகனிடம் கூறினார்.

இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரியும் தீய சக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்துகொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டு சென்று, தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். முருகனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிபட்டினத்திற்குள் நுழைந்தன.

கடும் போர் நடைபெறுதல் :

இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். அவர்கள் இருவருக்கும் கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து வீழ்ந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான்.

இதைக்கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாடினான். உடனே அங்கிருந்த முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத்தனமாக தாக்கினான்.

எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் புகுந்துக் கொண்டான். வீரபாகுவும், அவனை தொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.

பங்குனி உத்திரம் :

இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன், சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்

யோகர் சுவாமிகள்

 


யோகர் சுவாமிகள் வைகாசி 29 1872 முதல் பங்குனி 24 1964 வரை ஈழத்தில் வாழ்ந்த சைவத் துறவியும் திருக்கயிலாய பரம்பரையில் நந்திநாத சம்பிரதாயத்தில் வந்த குருபரம்பரையின் 161ஆவது சற்குருவும் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் அம்பலவாணர் - சின்னாச்சியம்மை தம்பதிக்கு மே 29 1872 இல் (தமிழ் நாட்காட்டியில் ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திர நாலாம் பாதத்தில்) ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இளம் வயதிலேயே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையாரால் வளர்க்கப்பட்டார்.
சுவாமிகளுக்கு ஐந்து வயதானது தமது மகனுக்குக் கல்வி கற்பிக்கும் பொறுப்பை தனது தம்பியார் சின்னையரிடம் ஒப்படைத்தார். அக்காலத்தில் சுவாமிகளின் தகப்பனாரின் சகோதரி 'முத்துப்பிள்ளை' என்பவர் கொழும்புத்துறைக்கு அருகிலுள்ள 'பாண்டியன் தாழ்வு' என்னும் குறிச்சியில் வாழ்ந்து வந்தார். அவர் சைவப்பற்று மிக்கவர். தம்மிடம் மருமகன் வரும் பொழுது சைவ நூல்களையும் இதிகாசங்களையும் படிக்க வசதி செய்து கொடுத்தார். அவருடைய சைவப்பற்றுக்கு வித்திட்ட பெருமை முத்துப்பிள்ளையையே சாரும். கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் மேற்படிப்பும் கற்றார்.
கல்வி முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராகப் பணியில் இணைந்து, கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார். கடமையைக் கண்ணாகக் கருதும் சுவாமிகள் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றார். கிளிநொச்சியில் வேலை பார்க்கும் பொழுது ஓய்வு நேரங்களைத் தியானத்தில் கழித்து வந்தார். மற்றவர்கள் உறங்கும் பொழுது சுவாமிகள் வெகுநேரம் தியானத்தில் ஈடுபட்டு இருப்பது வழக்கம்.
சுவாமிகள் இந்தக் காலத்தில் நூற்றுக்கணக்கான தோத்திரப் பாடல்களை மனனஞ் செய்து கொண்டார். இப்படி ஏராளமான தேவாரம், திருவாசகம், திருமந்திரம், அருணகிரிநாதர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் முதலியவற்றை மனப்பாடஞ் செய்தார். தாயுமாவர் பாடல்களிலும் சுவாமிகளுக்கு ஈடுபாடு அதிகம். அவற்றைத் தமது நற்சிந்தனைகளிலும் திருமுகங்களிலும் எடுத்தாண்டுள்ளார். சுவாமிகளின் நற்சிந்தனை வசனப்பகுதியில் காணப்படும் பின்வரும் வரிகள் 'சிவதொண்டன்' நிலையத்தின் இலட்சியங்களை விளக்குகின்றன. 'சொல்லெல்லாம் மோனம் - தொழிலாதியும் மோனம் எல்லாம் தன் மோன நிறைவே'
செல்லப்பா சுவாமிகள்
நல்லூர்த் தேரடியில் முதன்முதலாக செல்லப்பா சுவாமியைக் கண்ட நாளிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. சதாசிவத்தை ஆழமான கண்களால் ஊடுருவி, யாரடா நீ என்று கேட்டு, ஒரு பொல்லாப்பும் இல்லை!' என்ற வார்த்தைகளை செல்லப்பா சுவாமிகள் உதிர்த்த கணம், சதாசிவத்தின் மனம் லௌகிக வாழ்க்கையை உதறியதாகச் சொல்லப்படுகின்றது. பின் ஐந்து ஆண்டுகள் அவரிடம் சீடனாக வாழ்ந்த சதாசிவம், செல்லப்பரால் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு அனுப்பப்பட, கொழும்புத்துறையில் ஒரு இலுப்பை மரத்தடியில் அவர் யோகசாதனைகளில் திளைத்ததாகச் சொல்லப்படுகின்றது. செல்லப்பா சுவாமிகள் சமாதியடையச் சில நாள் முன்வரை, யோகர் சுவாமிகள் அவரை மீண்டும் சந்திக்கவில்லை.
பின் அங்கேயே ஆச்சிரமமொன்றமைத்த அவர், இலங்கையெங்கணும் யாத்திரை செல்வதும், நற்சிந்தனைகளை வழங்குவதுமாக இருந்தார். 1940இல் இந்தியப் பயணம் மேற்கொண்ட அவர், திருவண்ணாமலையில் இரமண முனிவரையும் சந்தித்தார். 1934 மார்கழியில், அவரால் துவக்கப்பட்ட சிவதொண்டன் இதழ் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
பங்குனி 24, 1964ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் சிவ சமாதியடைந்தார்
நான்கு மகாவாக்கியங்கள்
சுவாமிகளின் திருக்கையெழுத்து செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய மாணிக்கமணியனைய வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். மேலும் இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். யோகசுவாமியின் அடியார்களால் 'மகாவாக்கியங்கள்' என்று கூறப்படும் அவை வருமாறு எப்பவோ முடிந்த காரியம் , நாம் அறியோம், ஒரு பொல்லாப்பும் இல்லை, முழுதும் உண்மை
அருளிய நூல்கள் - யோகர் சுவாமிகள் பாடிய பாடல்கள், கவிதைகள், அருண்மொழிகள் என்பன, அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்போரால் தொகுக்கப்பட்டு, தமிழில் 'நற்சிந்தனை' எனும் நூலாகவும், ஆங்கிலத்தில் 'வுhந றுழசனள ழக ழுரச ஆயளவநச' என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன
சீடர்கள் - யோகர் சுவாமிகளின் நேரடிச் சீடர்களாக, மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமிகள் ஆகியோர் சொல்லப்படுகின்றனர். இவர்களில் சந்தசுவாமி, இலங்கையின் கடைசி ஆங்கிலேய ஆளுநர் சோல்பரி பிரபுவின் மகன் ஆவார். ஹவாய் சைவ ஆதீனத்தில் 162ஆவது நந்திநாத பரம்பரை சற்குருவாக அமர்ந்திருந்த சிவாய சுப்ரமணியசுவாமியும் யோகர் சுவாமிகளது சீடரே! இவர்களைவிட, கௌரிபாலா (யேர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலியா) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் ஆவர்.
யோகசுவாமிகள் இந்நிலவுலகில் உலவிய காலத்தில் ஆயிரக்கணக்கான பல்சமய, பல்மொழி அடியவர்கள் அவரது அணுக்கத் தொண்டர்களாக இருந்தனர். ஆனால் அவர்களில் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றி துறவுச்சீடராகப் பரிணமித்தவர்கள் மூவரே.
மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் கைதடியில் தென்னோலைக் கொட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தவர் சந்த சுவாமி. இவர் இலங்கையின் கடைசி ஆங்கிலேய தேசாதிபதி சோல்பரி பிரபுவின் மகன். யோக சுவாமிகளைப் போலவே வேட்டி துண்டுடன் யாழ்ப்பாணக் கோவில்களில் உலாவியவர் செல்லத்துரை சுவாமி, இவர் சுவாமிகளின் பணிப்பிற்கிணங்க சுமார் அரை நூற்றண்டு காலம் யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு சிவதொண்டன் நிலையங்களில் இருந்து பணியாற்றி 2006 ஆம் ஆண்டு சமாதியடைந்தார்
இவர்களைவிட சிவாய சுப்ரமணியசுவாமி, கௌரிபாலா (ஜெர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலிய இளைஞர்) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் எனப் பின்வந்தோரால் போற்றப்படுகின்றனர்
சாமி என்றிருக்கிறவர் தானும் மற்றவர்களை போலென்று எண்ணவேண்டும்' என்பதும் 'நீங்களும் சுவாமி பண்ணவேண்டாம், மற்றவர்களையும் சுவாமி பண்ண விடவேண்டாம்' என்பதும் சுவாமிகளின் வாக்குகள்
சிவயோக சுவாமிகள் அருளிய திருப்பாடல்கள் நற்சிந்தனை என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் வெளியான சிவதொண்டன் இதழில் மாதாந்தம் வெளிவந்தன. இவை தொகுக்கப் பெற்று நூலுருவில் 1959இல் முதலில் வெளியிடப்பெற்றது. நற்சிந்தனைச் செய்யுட்கள் ஞானப் பொக்கிஷங்களாகவும், வேதோபநிடத ஆகமசாரமாகவும் விளங்குவன. முன்னைய பதிப்புக்களில் இடம்பெறாத செய்யுள்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இந் நாளில் சிவயோக சுவாமிகள் அருளை பெற்று இன்மை மறுமைப் பயன்களை பெற்று உய்வோமாக
பிரசங்கபூசணம் சைவசின்மயர் செஞ்சொற்காவலன் சொல்லின்பநாயகன் சைவநெறிச் சன்மார்க்கர் சித்தாந்த வித்தகர் சொல்லருவி சிவத்தமிழ்ச் செல்வர் சிவநெறிக்காவலன் கலைமாமணி இளஞ்கலைஞர் செஞ்சொற்வேந்தர் பண்டிதர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன்
செயலாளர்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்

Freitag, 1. März 2024

VEERAMANI RAJU # SINGER#கலைமாமணி வீரமணி ராஜு # பக்தி பரவசம்#

108 அகர லிங்கம் போற்றி 2 அக லிங்கம்போற்றி


 

🙏சிவனை 🙏
🙏வணங்கி அருள்பெறுவோம்🙏
🙏
1 அகர லிங்கம் போற்றி
2 அக லிங்கம்போற்றி
3 அகண்ட லிங்கம்போற்றி
4 அகதி லிங்கம்போற்றி
5 அகத்திய லிங்கம்போற்றி
6 அகழ் லிங்கம்போற்றி
7 அகில லிங்கம்போற்றி
8 அகிம்சை லிங்கம்போற்றி
9 அக்னி லிங்கம் போற்றி
10 அங்கி லிங்கம்போற்றி
🙏
11 அங்கு லிங்கம் போற்றி
12 அசரிய லிங்கம் போற்றி
13 அசுர லிங்கம்போற்றி
14 அசை லிங்கம்போற்றி
15 அசோக லிங்கம் போற்றி
16 அச்சு லிங்கம்போற்றி
17 அஞ்சா லிங்கம் போற்றி
18 அட்ட லிங்கம்போற்றி
19 அட்ச லிங்கம்போற்றி
20 அட்சதை லிங்கம்போற்றி
🙏
21 அட்டோ லிங்கம்போற்றி
22 அடிமுடி லிங்கம்போற்றி
23 அடி லிங்கம் போற்றி
24 அணணா லிங்கம் போற்றி
25 அண்ட லிங்கம்போற்றி
26 அணி லிங்கம் போற்றி
27 அணு லிங்கம்போற்றி
28 அத்தி லிங்கம் போற்றி
29 அதழ் லிங்கம்போற்றி
30 அதிபதி லிங்கம்போற்றி
🙏
31 அதிர்ஷ்ட லிங்கம்போற்றி
32 அதிய லிங்கம் போற்றி
33 அதிசய லிங்கம்போற்றி
34 அதீத லிங்கம்போற்றி
35 அந்தார லிங்கம்போற்றி
36 அந்தி லிங்கம்போற்றி
37 அநந்தசாயி லிங்கம்போற்றி
38 அநலி லிங்கம்போற்றி
39 அநேக லிங்கம் போற்றி
40 அப்ப லிங்கம்போற்றி
🙏
41 அப்பு லிங்கம்போற்றி
42 அபய லிங்கம்போற்றி
43 அபி லிங்கம்போற்றி
44 அபிநய லிங்கம்போற்றி
45 அபிஷேக லிங்கம்போற்றி
46 அம்பல லிங்கம்போற்றி
47 அம்பி லிங்கம் போற்றி
48 அம்புசி லிங்கம்போற்றி
49 அம்ம லிங்கம் போற்றி
50 அமல லிங்கம் போற்றி
🙏
51 அமர லிங்கம்போற்றி
52 அமராவதி லிங்கம்போற்றி
53 அமிர்த லிங்கம் போற்றி
54 அர்ச்சனை லிங்கம்போற்றி
55 அர்ச்சுண லிங்கம் போற்றி
56 அர்த்த லிங்கம்போற்றி
57அரச லிங்கம்போற்றி
58 அரவ லிங்கம் போற்றி
59 அரங்க லிங்கம்போற்றி
60 அரம்பை லிங்கம்போற்றி
🙏
61 அரளி லிங்கம் போற்றி
62 அரி லிங்கம் போற்றி
63 அரிணி லிங்கம் போற்றி
64 அரிமா லிங்கம்போற்றி
65 அருக லிங்கம்போற்றி
66 அருணை லிங்கம் போற்றி
67 அருமணி லிங்கம்போற்றி
68 அரும்பு லிங்கம்போற்றி
69 அருளி லிங்கம் போற்றி
70 அரூப லிங்கம்போற்றி
🙏
71 அல்லி லிங்கம் போற்றி
72 அலை லிங்கம்போற்றி
73 அவைய லிங்கம்போற்றி
74 அழகு லிங்கம்போற்றி
75 அளத்தி லிங்கம்போற்றி
76 அற லிங்கம் போற்றி
77 அறிவு லிங்கம் போற்றி
78அன்பு லிங்கம்போற்றி
79 அன்புரு லிங்கம் போற்றி
80 அன்ன லிங்கம்போற்றி
🙏
81 அனுதாபி லிங்கம்போற்றி
82 அனுபூதி லிங்கம்போற்றி
83 அஷ்ட லிங்கம்போற்றி
84 ஆக்கை லிங்கம் போற்றி
85 ஆகம லிங்கம்போற்றி
86ஆகாய லிங்கம் போற்றி
87 ஆசான லிங்கம் போற்றி
88 ஆசிரிய லிங்கம்போற்றி
89 ஆசி லிங்கம்போற்றி
90 ஆட லிங்கம் போற்றி
🙏
91 ஆடரி லிங்கம்போற்றி
92 ஆண் லிங்கம்போற்றி
93 ஆண்டி லிங்கம்போற்றி
94 ஆணுரு லிங்கம் போற்றி
95 ஆத்ம லிங்கம் போற்றி
96 ஆதார லிங்கம்போற்றி
97 ஆதி லிங்கம்போற்றி
98 ஆதிரி லிங்கம்போற்றி
99 ஆதிசேவி லிங்கம்போற்றி
100 ஆதிரை லிங்கம்போற்றி
🙏
101 ஆதினா லிங்கம்போற்றி
102 ஆபேரி லிங்கம்போற்றி
103 ஆமிர லிங்கம்போற்றி
104 ஆமை லிங்கம்போற்றி
105 ஆய லிங்கம் போற்றி
106 ஆயதி லிங்கம்போற்றி
107 ஆர்த்தி லிங்கம் போற்றி
108 ஆரண்ய லிங்கம் போற்றி
🙏
சிவனின் 108 திருப்பெயர்களை கூறி பூசையறையில் பூசை செய்து சிவனை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் யரவும் அகன்று வீடும்
🙏ஓம் நமசிவாய🙏

ஆன்மீக தரிசனம் #2024. 02 .16#ஒருவர் இறந்தால் ஏன் ஒருவருடம் கோவிலூக்கு ...

ஆசியன்

ஐரோப்பாவில்