Meine Blog-Liste

Sonntag, 6. März 2022

வாரணாசி எனப்படும் காசியில் கங்கை நதிக்கரையில்

 கங்கா ஆரத்தி 


 வாரணாசி எனப்படும் காசியில் கங்கை நதிக்கரையில் காட்டப்பெறும்     தீபாராதனை கங்கா   ஆரத்தி  என   என அழைக்கப்படுகிறது. இது ஒரு முக்கிய நிகழ்வாகும். தினமும் மாலை வேளையில் சூரியன் மறைந்த பிறகு இரவு 7 மணிக்கு தசவசுவமேத படித்துறை அருகே நடைபெறுகிறது. சுமார் 30 நிமிடங்கள் நடைபெறும் இதில் சிவன் .கங்கா மாதா, (அக்கினி)  தீப வழிபாடு நடைபெறுகிறது

 20 முதல் 25 வயது வரையுள்ள 9  ஆடவர்களால் ஒரே மாதிரி  பட்டாடை அணிந்து ,வேட்டியை வரிந்து கட்டி  ( தார்  பாச்சா) கங்கை ஆற்றை நோக்கி தீப வழிபாட்டை ஆரம்பிக்கின்றனர்.

நம் நகர விடுதியிலிருந்து காசி விஸ்வநாதர் நுழைவாயில் உள்ள சாலையில்  நேரே கங்கைக்கரை செல்லும் பிரதான சாலையில் உள்ள படிக்கட்டில் இருந்து பார்த்தால் 9 தீபங்கள் தெரியும் .இடையில் விலகி    காய்கறி விற்கும் வழியாக சென்று அந்த படிக்கட்டில் இருந்து பார்த்தால் 7 தீபாராதனை தெரியும்


       முதலில் சாம்பிராணி ஆரத்தி மற்றும் 

 ஊதுவத்திகளைக் கொளுத்தி கங்கா ஆரத்தி நிகழ்வினை ஆரம்பிக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து அந்த 9 பேரும் ஒரே மாதிரியாக சங்கு ஊதுகின்றனர். அடுத்தபடியாக சாம்பிராணியை ஆரத்தியாகக் காட்டுகிறார்கள். பெரிய தூவக்காலில் சாம்பிராணி இடப்பட்டுள்ளது. அதிக அளவிலுள்ள அந்த சாம்பிராணி வெளியே கொட்டிவிடாதபடி தூவக்காலின் வாயில் கம்பித் தகட்டினைப் பொருத்தியுள்ளனர். தலைக்கு மேலே (கிட்டத்தட்ட தலைகீழாக) தூவக்காலைத் தூக்கி அவர்கள் ஆர்த்தி காட்டும்போது புகை வெளியே வருவதைப் பார்க்க அழகாக உள்ளது. புகை அதிகமாகி நெருப்பு வெளிவர ஆரம்பித்தால் ஒருவர் வந்து அந்த தூவக்காலில் சிறிதளவு நீரைத் தெளித்து தீ ஜுவாலை வெளிவராமல் ஆக்கிவிடுகின்றார்.


அதைத் தொடர்ந்து கற்பூரக் கட்டிகளை வைத்து ஆரத்தி எடுக்கிறார்கள். கற்பூரம் கொளுத்தும் அந்த தூவக்கால் ஐந்து தலை நாகத்தினைக் கொண்டு அமைந்துள்ளது. சாம்பிராணி தூவக்காலும், சூடம் ஏற்றப்படும் தூவக்காலும் பார்ப்பதற்கு சற்று கனமாகவே தோன்றுகின்றன.


தொடர்ந்து அவர்கள் கங்கையை நோக்கிப் பாடுகின்றார்கள். அதையடுத்து மயிலிறகை ஆட்டி கங்கையைப் போற்றுகின்றனர். அடுத்த நிகழ்வாக வெண் சாமரம் கங்கையை நோக்கி விசிறப்பட்டு ஆர்த்தி விழா நடைபெறுகிறது. நிறைவாக தனித்தனிக் கற்பூரங்களாக அடுக்கு தட்டில் வைத்து ஆர்த்தி இடுகிறார்கள். இவ்வாறாக ஆரத்தி எடுக்கும்போது முதலில் கங்கையாற்றின் திசையை நோக்கி ஆரம்பித்து, தத்தம் வலப்புறமாகக் கடிகாரச் சுற்றாகத் திரும்பி நான்கு திசைகளிலும் அவ்வாறு செய்துவிட்டு இறுதியாக ஆரம்பித்த திசை நோக்கித் திரும்புகின்றனர்.

இதற்கு கட்டணம் ஏதுமில்லை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி இருந்து இரவு விளக்கொளியில் காணும் இந்நிகழ்வு  அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய நிகழ்வாகும் கங்கைக் கரையில் இருந்து பார்ப்பது சிரமம் என்பதால் பலர் பணம் கொடுத்து கங்கை நதியில் படகில் அமர்ந்து பார்ப்பதும்  உண்டு. ஒலிபெருக்கியில் பாடல்  இசை  ஒளிபரப்பப்படுகிறது இதைக் கேட்டு தீப அலங்காரத்தைப் பார்த்து பக்தர்கள்  பரவசம் அடைகின்றனர்.



Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்