சிவபூமி எனப்படும் புண்ணிய பிரதேசமாகிய இவ்விலங்காபுரியில் அகண்டாகார சச்சிதானந்த பிழம்பாகிய பரமகருணாநிதியாகிய இறைவன் ஆன்மாக்கள் வழிபட்டுய்யும் பொருட்டு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் பிரம்மாதி தேவர்கள் , ஸ்ரீ வியாசமகாமுனிவர் , ஸ்ரீ ராமச்சந்திரன் முதலியோர் பூஜித்துப்பெரும்பேறு பெற்றதும் , சித்தமிருதகூபம் சிவதீர்த்தம் முதலிய பதிஎண் சிவதீர்த்தங்களால் சூழப்பெற்றதும் , ஸ்ரீ சங்கபோதி பராக்கிரமபாகு , கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க முதலான இலங்காதிபதிகள் வழிபட்டு பெரும்பேறு பெற்றதுமான ஸ்ரீ முன்னேஸ்வர க்ஷேத்திரத்தில் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மாசி மாதம் 6 ம் நாள் ( 18-02-2021 ) வியாக்கிழமையும் ஷஷ்டி திதியும் , பரணி நக்ஷத்திரமும் கூடிய நன்னாளில் துவஜாரோகணமாகி மாசிமாதத்து பௌர்ணமி தினமான ( 27-02-2021 ) மாசி மாதம் 15 ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் வரையாக பத்துத்தினங்கள் பிரமோற்சவம் நடைபெறுவதனால் சிவநேயச் செல்வர்கள் அனைவரும் வந்து தரிசித்துப்பெருவாழ்வைப் பெற்றுய்வார்களாக .
Meine Blog-Liste
Abonnieren
Kommentare zum Post (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...
Keine Kommentare:
Kommentar veröffentlichen