Meine Blog-Liste

Donnerstag, 11. November 2021

hamm murugan sooran poor part-02 #10. 11 .2021#திரு நல்லூர் ஆறுமுக வேலழக...

hamm murugan sooran poor part-01 #10. 11 .2021#வசந்தமண்டபப் பூஜா

Meditation in Tamil info Uk#world peace#spech #உலகசமாதனம்

முருகனே காண ஆயிரம் கண் வேண்டும்#ஜெர்மனி ஹம் முருகன் #சூரன் போர்#10.11.2021

Rega Sivakugananthan Canada#ரேகா சிவகுகானந்தன் கனடா #அழகிய தமிழ் மகள் ம...

முருகனே காண ஆயிரம் கண் வேண்டும்#ஜெர்மனி ஹம் முருகன் #சூரன் போர்

Mittwoch, 20. Oktober 2021

anmega gnanakalaisiyam -19#ஆன்மீக​​​ ஞானக்களஞ்சியம்# ஶ்ரீஐயப்பதாஸ சாம்பச...

குழுமாயி அம்மன் கோயில் வரலாறு

 

    குழுமாயி அம்மன் கோயில் வரலாறு


                     திருச்சி புத்தூர் சோழனூர் என்ற பகுதியில் தெய்வமாக அருள் பாலிக்கும் குழுமாயி அம்மன் கோயிலுடைய தல வரலாறைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

  இக்கோயிலின் ஒரு புறம் சலசலத்து ஓடும் உய்யக்கொண்டான் வாய்க்கால், மறுபுறம் பச்சை கம்பளம் விரித்தாற் போன்ற தென்னை, வாழை, செழுமையுடன் வயல்வெளி இப்படி பசுமை வளம் சேர்க்கும் இடமாக இக்கோயில் அமைந்துள்ளது.

                   முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருச்சி மாநகரை  மங்கம்மாள் என்ற ஒரு அரசி ஆண்டு வந்தாள். அவருடைய ஆட்சியில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். தற்போது கோவில் இருக்கும் பகுதியானது இந்த காலகட்டங்களில் ஒரு வயல் வெளியாக இருந்தது அந்த ஊர் மக்கள் விவசாயம் செய்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

            அந்த ஊரில் உள்ள ஒருவர் தன்னுடைய நிலத்தை சமன் செய்ய வெட்டியபோது, திடீரென ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது அப்போது அந்த ஊர் கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்தில் ஒன்று கூறினார்கள். அப்போது அங்கு இருந்த ஒரு பெண்ணுக்கு அருள்  வந்தது அந்த அருள் வந்த சிறுமி, நான் காளி , நான் இங்கே குடி கொண்டிருக்கிறேன் நான் காவல் தெய்வமாக இருந்து உங்களை நான் பாதுகாப்பேன் என்று அந்த அம்மன் கூறவே அந்த கிராம மக்கள் உடனே அங்கு ஒரு கோயிலை எழுப்பி ஒரு அம்மன் சிலையை நிறுவி அதனை தெய்வமாக வழிபட்டனர்.

                குழி வெட்டும்போது இந்த அம்மன் பிரசன்னமாகி அருள்பாலிப்பதால் அதனை குழுமாயி அம்மன் என்று அழைத்தனர்.

              இதுவே இந்தக் கோயில் உருவானது பற்றி கூறப்படும் செவிவழி வரலாறு ஆகும்.

                        அதன் பிறகு இந்த குழுமாயி அம்மனை ஒரு மலையாள மந்திரவாதி பில்லி ஏவல் சூனியம் செய்து அம்மனின் சக்தியை அடக்கி தன்வசப்படுத்தி இருந்தான் , அப்போது இரட்டைமலை ஒண்டி கருப்பு சாமி இந்த குழுமாயி அம்மனுக்கு துணையாக இருந்து, அந்த மந்திரவாதியை அழித்தார் அதன் காரணமாகவே இந்த குழுமாயி அம்மனுக்கு காவல் தெய்வமாக ரெட்டமளை ஒண்டி கருப்பு சாமி உள்ளார். மேலும் இக் காரணத்திற்காக இக்கோவிலில் ஒண்டி கருப்பு சாமிக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது அதன்பிறகு குழுமாயி அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

          அந்த மலையாள மந்திரவாதி அழிக்கப்பட்ட நாளை இன்றைய வரைக்கும் அந்த ஊர் மக்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாசி மாதம் முதல் வாரம் புதன்கிழமை அன்று காப்பு கட்டும் திருவிழா நடக்கும் செவ்வாய்க்கிழமை இரவு காளி  வட்டம் நடக்கும். புதன்கிழமை சுத்த பூஜையும் வியாழக்கிழமை குட்டிக் குடித்தல் வைபவம் நடக்கும்.

           இக்கோவிலில் நடக்கும் குட்டி குடித்தல் திருவிழாவானது மிக பிரபலமாக சொல்லப்படுகிறது. ஆட்டின் ரத்தத்தை மருளாளி குடிக்கும் நிகழ்ச்சிதான் குட்டிக் குடித்தல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு ஒன்று கூடுகிறார்கள் முதலில் ஆடு பலியிட்டு வழிபாடு செய்வார்கள். குட்டிக்குடித்தல் திருவிழா அன்று, முதலில் அம்மனுக்கு பூஜை நடைபெறும். பின்னர் ஆடு வெட்டப்படும் ஆட்டின் ரத்தத்தை மருளாளி குடிப்பார், அவரின் தோளில் இரு கிளிகள் இருக்கும் அந்த கிளிகள் தான் இரத்தத்தை குடிக்கின்றன என்பது ஐதீகம்.

          புல்லரிக்க செய்யும் இந்த குட்டி குடித்தல் திருவிழாவானது மிகப் பிரபலமாகும் மேலும் ஆட்டு ரத்தத்தை குடிக்கும் மருளிளியைத் தேர்ந்தெடுப்பது தான் இங்கு சுவாரசியமான ஒன்று,

                ஒரே பரம் பரம்பரையினர் தான் மருளாளியாக இருக்க வேண்டும் என்ற மரபு கிடையாது. யார் வேண்டுமானாலும் மருலாளி ஆகலாம் இக்கோவிலை பொறுத்தவரையில் திருவிழா காலத்தில்தான் மருளாளி தேர்ந்தெடுக்கப்படுவார் 

                           ஆடு வெட்டுவதற்கான அரிவாள், ரத்தத்தை பிடிக்கும் வெள்ளி கிண்ணம் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் ஓர் இடத்தில் மறைத்து வைப்பார்கள். பிறகு அருள் வந்த ஒருவர் அந்த அரிவாலும் அந்த கிண்ணமும் எங்கே இருக்கிறது என்று கண்டறிய வேண்டும். அப்படி யார் அருள் வந்து கண்டுபிடிக்கிறார்களோ!  அவர்கள் தான் மருளாளி போட்டிக்கு தகுதியானவர்கள்.

               இதோடு முடியாது அடுத்த கட்ட தேர்வும் நடக்கும், பெரிய அரிவாள் ஒன்றை வைத்திருப்பார்கள் மிகவும் கூர்மையாக அது இருக்கும் 3 1/2 அடி நீளம் கொண்ட அந்த அரிவாளியின் கூரிய முனையை மேல்நோக்கி இருக்கும்படிவைத்து அதன் இருபுறமும் ஆட்கள் பிடித்துக் கொள்வார்கள்.

                   மருளாளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த கூர்மையான அரிவால் மீது கால் வைத்துக்கொண்டு அருள் சொல்ல வேண்டும்.

                அப்படி இருப்பவர் தான் மருளாளியாக தேர்ந்தெடுக்கப்படுவார் இது இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேர்வாக கருதப்படுகிறது.

                  குழுமாயி அம்மனுக்கு உற்சவ அம்மன் சிலை கிடையாது. பனை ஓலையால் தான் உற்சவ அம்மன் செய்யப்படுகிறது ஆண்டுதோறும் திருவிழாவின் போது தான் உற்சவ அம்மன் செய்யப்படும் பனை ஓலைகளை அம்மன் உருவில் கத்தரித்து அதை கருப்பு துணியால் வைத்து அம்மன் உருவை தயாரிப்பார்கள்.

                சப்பரத்தில் வைத்துதான் அம்மன் திருவீதி உலா நடக்கும் சப்பரத்தில் உள்ள அம்மன் உருவத்துக்கு பின்பக்கத்தில் மற்றொரு அம்மன் உருவமும் இருக்கும் அது கடந்த வருடம் செய்யப்பட்டதாகும். அம்மன் இருபுறமும் பார்க்கிறாள என்பதற்காக இவ்வாறு இரண்டு உருவங்கள் செய்யப்பட்டுள்ளது இந்த திருவிழா முழுவதுமே புத்தூர் அக்ரஹாரம் அருகே தான் நடக்கும் முதலில் கோவிலில் இருந்து அம்மனை மந்தைக்கு கொண்டு வருவார்கள்.

               அதன்பிறகு மற்ற நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் நாலு கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது இந்த ஊர் மக்களுக்கு காவல் தெய்வமாக நின்று கருணை மழையை பொழிந்து,தம் மக்களை காத்து வருகின்றள்

                  இதுதாங்க திருச்சியில் உள்ள குழுமாயி அம்மன் கோயில் வரலாறு ஆகும்.

thx/

   https://www.agarams.com/

Kuzhumayi Amman Temple (ஸ்ரீ குழுமாயி அம்மன் கோவில்)

Montag, 18. Oktober 2021

ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய விஜயதசமி பெருவிழா பூஜா

கௌரிக் காப்புத் தோத்திரம்


தேவி துணை
ஓம் சக்தி ஓம்
காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.
வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே
காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே
காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்
பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்
உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக
என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்
காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்
காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே
அரியை உடையவளே அம்மா காளிதாயே
கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே
அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்
பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்
அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்
சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்
ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்
விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே
வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்
நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்
காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு
நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு
வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு
காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே
காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே
நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா
வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா
நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா
அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா
பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா
பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே
நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா
செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா
வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!
ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே
காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா
பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்
நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா
காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே
வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே
எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே
காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்
ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே
காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்
ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்
நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்
நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்
சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே
குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா
காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று
ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்
நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்
பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்
காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்
ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்
காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்
ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்
தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே
காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை
இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு
பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு
சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்
முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு
எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்
சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே
அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்
கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்
முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர
ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர
தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்
ஓம் சக்தி ஓம்

Sonntag, 17. Oktober 2021

குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ மாப்பாணமுதலியார்15.01.1929 - 09.10.2021

Mother Teresa tamil song Lyrics P.S.Rajakaruna

ஜெர்மனியில் வூ ப்பெற்றால் நகரில் எழுந்தருளி அருள்தரும் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய விஜயதசமி பெருவிழா

 உலகக்கோவில்

15.10.2021 மானம்பூ







மிகவும் சிறப்பாக நடைபெற்றது .புலம் பெயர்ந்த தேசத்தில் இப்படி ஒரு பெருவிழா அதுவும் வெள்ளி சிங்கவாகனத்தில் சிம்மாசனம் அமர்ந்து அன்னை நவதுர்க்கா தேவி எழுந்தருளிய காட்சி அழகு. இந்த சிங்க வாகனத்தை நெதர்லாந்தில் வசிக்கும் மாவை கமல் அன்பளிப்பு செய்து கொடுத்து இருந்தார். நேரலையாக திரு .சக்திவேல் அவர்கள் வர்ணனை செய்து இரு ந்தார் .மேலும் ஆலய அறங்காவலர்கள் அனைவருக்கும் .மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் .சைவத்திரு . அமரன் ஸ்ரீ அவர்களுக்கும் . ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .சோ ,இராஜா குருக்கள் பிரம்மஸ்ரீ ஆகாஷ் சர்மா அவர்களும் சிறப்பாக நடாத்தி இருந்தனர். அடியவர்களுக்கும் .நமது நாதஸ்வர கலைஞர்கள் பகீரதன் குகேஸ்வரன் இசையுடன் .உலகக்கோவில் இராஜ .இலக்கியன் நேரடியாக ஒளி பரப்பு செய்து இருந்தார் .மேலும் உலக மக்கள் அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்க வேண்டு கின்றேன் தமிழன்புடன் பி.எஸ். இராஜகருணா இராஜ இலக்கியன் 15.10.2021 Sri Navathurgadevi Tempel e.V. Adresse: Hünefeldstraße 63B, 42285 Wuppertal Germany Telefon: 0202 4796017

manampoo#மானம்பூ #விஜயதசமி பெருவிழா

 

Worldkovil Kovil 9 Min. · Mit Öffentlich geteilt உலகக்கோவில் 15.10.2021 மானம்பூ ஜெர்மனியில் வூ ப்பெ

ற்றால் நகரில் எழுந்தருளி அருள்தரும் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய விஜயதசமி பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .புலம் பெயர்ந்த தேசத்தில் இப்படி ஒரு பெருவிழா அதுவும் வெள்ளி சிங்கவாகனத்தில் சிம்மாசனம் அமர்ந்து அன்னை நவதுர்க்கா தேவி எழுந்தருளிய காட்சி அழகு. இந்த சிங்க வாகனத்தை நெதர்லாந்தில் வசிக்கும் மாவை கமல் அன்பளிப்பு செய்து கொடுத்து இருந்தார். நேரலையாக திரு .சக்திவேல் அவர்கள் வர்ணனை செய்து இரு ந்தார் .மேலும் ஆலய அறங்காவலர்கள் அனைவருக்கும் .மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் .சைவத்திரு . அமரன் ஸ்ரீ அவர்களுக்கும் . ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .சோ ,இராஜா குருக்கள் பிரம்மஸ்ரீ ஆகாஷ் சர்மா அவர்களும் சிறப்பாக நடாத்தி இருந்தனர். அடியவர்களுக்கும் .நமது நாதஸ்வர கலைஞர்கள் பகீரதன் குகேஸ்வரன் இசையுடன் .உலகக்கோவில் இராஜ .இலக்கியன் நேரடியாக ஒளி பரப்பு செய்து இருந்தார் .மேலும் உலக மக்கள் அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்க வேண்டு கின்றேன் தமிழன்புடன் பி.எஸ். இராஜகருணா இராஜ இலக்கியன் 15.10.2021 Sri Navathurgadevi Tempel e.V. Adresse: Hünefeldstraße 63B, 42285 Wuppertal Germany Telefon: 0202 4796017

ஆசியன்

ஐரோப்பாவில்