Meine Blog-Liste
Montag, 30. März 2020
Samstag, 28. März 2020
Freitag, 27. März 2020
Donnerstag, 26. März 2020
Mittwoch, 25. März 2020
Montag, 23. März 2020
Sonntag, 22. März 2020
Samstag, 21. März 2020
Freitag, 20. März 2020
Donnerstag, 19. März 2020
Mittwoch, 18. März 2020
Montag, 16. März 2020
இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?
*இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?*
தெரிந்து கொள்வோம்_
33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்
திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின்
மிகப் பெரிய கோயிலாகும்!
9 ராஜ கோபுரங்கள்,
80 விமானங்கள்,
12 பெரிய மதில்கள்,
13 மிகப்பெரிய மண்டபங்கள்,
15 தீர்த்தக்கிணறுகள்,
3 நந்தவனங்கள்,
3 பெரிய பிரகாரங்கள்,
365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
86 விநாயகர் சிலைகள்,
24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.
*திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*
தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,
கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,
சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை
நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.
ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும்.
திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது
அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
*கோயில் ஐந்து வேலி,*
*குளம் ஐந்து வேலி,*
*செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி*
என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).
கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும். அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்
இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
திருசிற்றம்பலம்.!. திருசிற்றம்பலம்.!.
ஓம் நமச்சிவாய போற்றி.. போற்றி..
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!!
ஓம் நமசிவாய !! ஓம் சிவாய நம !!
ஸம்போ மஹாதேவா !!
ஓம் தத் புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
தென்னாடுடைய சிவனே போற்றி !!i
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ போற்றி !!போற்றி !!..
திருவாரூர் ஸ்ரீ கமலாம்பிகையே போற்றி !!போற்றி !!
திருவடிகள் சரணம்.!..
மஹேஸ்வரன் நல்லாசியுடன் எனது இனிய வணக்கம்.
3737
16 Mal geteilt
Gefällt mir
Kommentieren
Sonntag, 15. März 2020
Samstag, 14. März 2020
Freitag, 13. März 2020
நடராஜரின் திருநடனத்தை காண்பதற்காக, பதஞ்சலிமுனிவராக மாறிய ஆதிசேஷன் பற்றிய ஓர் பதிவு :-

நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேறினைப் பெற்றவர் பதஞ்சலி முனிவர். பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன் தான் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் என்று புராணம் கூறும்.
ஒருசமயம் மஹாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தபோது, திடீரென்று அவரது கனம் அதிகரித்ததைக் கண்டு வியந்து அவரது முகத்தைப் பார்த்தார். ஆதிசேஷனின் ஐந்து திருமுகங்களும் மஹாவிஷ்ணுவின் திருமுக மண்டலத்தைப் பார்த்தவண்ணமிருந்தன.
மஹாவிஷ்ணு முகம் மலர்ந்து புன்னகை பூத்துக்கொண்டிருந்தார். "துயில் கொண்டிருக்கும் வேளையிலும் புன்னகைப்பதேன்?" என்னும் அடுத்த சந்தேகமும் ஆதிசேஷனுக்கு ஏற்பட்டது. "இதை எப்படி பகவானிடம் கேட்பது?" என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, "ஆதிசேஷா! என்ன என் முகத்தைப் பார்த்த வண்ணம் யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.
அதிசயித்த ஆதிசேஷன், "பகவான் துயில் கொண்டிருந்தாலும், எல்லாருடைய நிலையையும் அறிந்து அருள் பாலிப்பவரல்லவா" என்று தெளிந்து, "ஸ்வாமி, என் மீது துயில் கொண்டிருக்கும் தாங்கள், திடீரென்று கனப்பதற்குக் காரணமென்ன? மேலும், தாங்கள் முகம் மலர்ந்து புன்னகை புரிந்ததன் காரணத்தையும் இந்த அடியேனுக்கு அருள வேண்டும். தங்களுக்கு இடையூறு செய்ததற்கு பொறுத்தருள்க ஸ்வாமி'' என்று பணிவுடன் வேண்டினார்.
அதற்கு மஹாவிஷ்ணு, "ஆதிசேஷா, தில்லையம்பதியில் ஆடலரசன் கூத்தபிரான் நடனமாடும் காட்சியைக் கண்டு ரசித்தேன்; மகிழ்ந்தேன்; புன்னகைத்தேன். அதனால் என்னுடல் சற்று கனத்துவிட்டது. அது இப்போது சமநிலை அடைந்திருக்குமே'' என்றார்.
"ஆம் ஸ்வாமி. தாங்கள் அருளியதன் பொருளறிந்தேன் ஸ்வாமி. தாங்கள் கண்ட தில்லைக்கூத்தரின் திருநடனக்காட்சியை தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் கிட்ட தாங்கள் அருளவேண்டும்'' என்று ஆதிசேஷன் இறைஞ்சினார்.
"ஆதிசேஷா, அதற்கு நீ சில காலம் தவமியற்றினால் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்'' என்றார் திருமால். "தங்களை விட்டு என்றும் பிரியாமலிருக்கும் என்னால் எப்படி ஸ்வாமி தவம் மேற்கொள்ள முடியும்?''
"கவலைப்படாதே. நீ மாயஉருவம் கொள்ள அருள்கிறேன். தவம் மேற்கொள்'' என்றார் மஹாவிஷ்ணு. மஹாவிஷ்ணுவின் அனுமதியுடன் அருளாசி பெற்ற ஆதிசேஷன் மாயத்திருவுரு கொண்டு தவமியற்றினார். பலகாலம் தவம் மேற்கொண்ட ஆதிசேஷன் முன் தோன்றிய ஈசன், "ஆதிசேஷா, எது குறித்து இத்தகைய கடுந்தவம்?'' என்று கேட்டார்.
சிவபெருமானை நேரில் கண்டதில் பேருவகை கொண்ட ஆதிசேஷன், "ஐயனே, தங்களின் திருநடனத்தை இந்த அடியவன் காண அருள்புரிய வேண்டும்'' என்று பணிந்தார்.
"உன் எண்ணம் நிறைவேறும். நீ பூலோகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. காஸ்யப முனிவரும் கத்ருதேவியும் என்னை நோக்கித் தவமிருந்து, ஆதிசேஷனாகிய நீயே அவர்களுக்கு மகனாக அவதரிக்க வேண்டுமென்று வரம் கேட்டுள்ளார்கள். எனவே, பாம்பாக கங்கை வழியாகச் சென்று அவர்களுக்கு மகனாகப் பிறப்பாய். பதஞ்சலி என்று பெயர் பெறுவாய்.
யோக சாஸ்திரங்கள் பல கற்று, உலகிற்கு பல வியாக்கியானங்களை வழங்குவாய். நீ பதஞ்சலியாக அவதரித்ததும், நீ அவதரித்த வியாக்ரபுரத்தில் உன் வருகைக்காக புலிக்கால்களுடனும் புலிக்கைகளுடனும் வியாக்ரபாத முனிவர் காத்துக்கொண்டிருப்பார். அவருடன் சேர்ந்து என்னை வழிபட்டு, என் ஆனந்த நடனத்தை தரிசிப்பாய்'' என்று அருளினார்.
ஆதிசேஷன், சிவனின் பாதம் வணங்கி ஆசிபெற்றார். பிறகு வியாக்ரபுரத்தில் காசிப முனிவருக்கும் கத்ருதேவிக்கும் மகனாக அவதரித்தார். அந்த நாள் பங்குனி மாத மூல நட்சத்திரம் என்று புராணம் கூறுகிறது.
வியாக்ரபுரத்தில் அவதரித்த ஆதிசேஷன், பதஞ்சலி என்ற பெயருடன் விளங்கினார். அவருக்கு வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவரின் நட்பு கிடைத்தது. இருவரும் சேர்ந்து தில்லை வந்தார்கள். அங்கே, அவர்கள் விரும்பிய ஆனந்த நர்த்தனத்தைக்கண்டு மெய்ம்மறந்து நின்றார்கள்.
"ஐயனே, உம் ஆனந்த நர்த்தனத்தைக் காணும் பேறு பெற்றோம். தங்களின் திருநடனத்தை என்றென்றும் தரிசிக்கும் பாக்யம் கிட்ட அருளவேண்டும். மேலும், தங்களின் திருவடி தரிசனத்தை பக்தர்கள் யாவரும் காண வகை செய்யவேண்டும்'' என்று பதஞ்சலியும் வியாக்ரபாதரும் வேண்டினார்கள்.
"உங்கள் பரந்த மனப்பான்மையை அறிந்து மகிழ்கிறோம். நீவிர் இருவரும் ஸ்ரீபுரம் செல்லுங்கள். (ஸ்ரீபுரம் என்பது திருவாரூர்). அங்கே எம் நடனங்களையும், எம் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள்'' என்று அருளினார் இறைவன்.
இறைவன் அருளியதுபோல் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமாகவே இருக்கவே, பதஞ்சலி தன் இடுப்புக்குக்கீழே பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் இடுப்புக்குக்கீழே புலிக்கால்கள் மற்றும் புலிவால் தோற்றத்துடன் சென்று அன்னை கமலாம்பாளை வழிபட்டார்கள்.
அம்பாள், அவர்கள் பக்தியைப் போற்றி, மண்ணால் லிங்கத்தை அமைத்து வழிபட அருளாசி வழங்கினாள். விமலாக்க வைரம் என்கிற அந்த தேவலோக மண்ணால் விளமல் என்ற இடத்தில் பதஞ்சலி லிங்கத்தை அமைக்க, இருவரும் வழிபட்டார்கள். அப்போது, சிவபெருமான் அங்கே காட்சி கொடுத்தார். இறைவன் அஜபா நர்த்தனம் ஆடும் போது தன் ருத்ர பாதத்தைக் காட்டினார். இந்தக் காட்சியை மஹாவிஷ்ணு, பிரம்மன், முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் என அனைவரும் கண்டு ரசித்தார்கள்.
பதஞ்சலி முனிவருக்கு, திருவாரூர் அருகிலுள்ள விளமல் திருத்தலத்தில் தியாகராஜர் ருத்ரபாத தரிசனம் காட்டிய தினம் பங்குனி உத்ரத் திருநாள் என்று புராணம் கூறுகிறது. சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்துநின்ற இத்தல சிவாலயத்தில், பதஞ்சலி முனிவருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பர்.
பதஞ்சலி முனிவர், நந்திதேவரிடம் உபதேசம் பெற்றார். அதன் விளைவாக யோக சூத்ரங்களையும், பாணினி சூத்ரத்திற்கு "பாஷ்யம்' என்ற இலக்கண விவரங்களையும் மற்றும் பல நூல்களையும் இயற்றினார்.
விளமல் திருத்தலத்தில் பங்குனி உத்திரத் திருநாளில் பாத தரிசனம் கண்டதுபோல, பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் ஈசனுக்குரிய திருவாதிரைத் திருநாளில் ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டு பேறுபெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.
ஸ்ரீ நடராஜரின் தாண்டவத்தின்போது பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இருபக்கங்களிலும் நின்று வணங்கி, சிவதாண்டவத்தில் முழுவதுமாகக் கலந்தார்கள். பதஞ்சலி முனிவர் சமாதி அடைந்ததாக சில திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று திருப்பட்டூர் ஸ்ரீ ப்ரம்மபுரீஸ்வரர் கோவில். இவ்வாலயத்தில் ப்ரம்மன் சந்நிதிக்கு அருகில் பதஞ்சலி சமாதி உள்ளது. தவிர, ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் கோவிலில் மூன்றாவது பிராகாரத்தில் பதஞ்சலி முனிவர் சமாதியும் தனிச்சந்நிதியும் உள்ளது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலிலும் பதஞ்சலி சமாதி உள்ளதாகக் கூறப்படுகிறது.
பல திருத்தலங்களில் சிவபெருமானின் திருநடனத்தை தரிசித்த பதஞ்சலி முனிவர், பல யோகக்கலை நூல்களையும், சூத்ரங்களையும் இயற்றியபின் வைகுண்டம் சென்று, தன் மாய உருவினைக் களைந்து மஹாவிஷ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்குத் துணையாகச் செயல்பட்டார் என்று புராணம் கூறுகிறது.
சம்போ மஹாதேவா🙏🙏
Krishnan Iyer

ஆன்மீக ஒலி worldkovilfm இங்குகெல்லாம் கேட்கலாம்
ஆன்மீக ஒலி worldkovilfm
இங்குகெல்லாம் கேட்கலாம்
1.Worldkovilfm | Podcast on Spotify
2.Worldkovilfm on RadioPublic
3.Worldkovilfm | Breaker
4.Worldkovilfm on Apple Podcasts
5.Worldkovilfm | Podbay
6.
Worldkovilfm podcast - Raaga.com - A World Of Musicwww.raaga.com › program › worldkovilfm-6763-pd
7.https://phenopod.com/charts/religion-YaOYpd
Donnerstag, 12. März 2020
Dienstag, 10. März 2020
Montag, 9. März 2020
Sonntag, 8. März 2020
Samstag, 7. März 2020
WORLDKOVIL.COM: மங்களமான உலக மகளிர் தின வாழ்த்துக்கள் 2020
WORLDKOVIL.COM: மங்களமான உலக மகளிர் தின வாழ்த்துக்கள் 2020: உலகக்கோவில் 8.03.2020 உலககோவில் அனைத்து சகோதரிகள் அனைவருக்கும் அனைவருக்கும் மங்களமான உலக மகளிர் தின வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிற...
மங்களமான உலக மகளிர் தின வாழ்த்துக்கள் 2020
உலகக்கோவில்
8.03.2020
உலககோவில் அனைத்து சகோதரிகள் அனைவருக்கும் அனைவருக்கும்
மங்களமான உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் சிறப்புடன் நலமுடன்
தமிழன்புடன்
உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
07.03.2020

Freitag, 6. März 2020
Donnerstag, 5. März 2020
Dienstag, 3. März 2020
தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நம்மில் சிலர் இருக்கிறார்கள், தமது சொந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு ,தமக்கு விரும்பிய நேரத்தில் ஆலயத்துக்கு வருவார்கள். அந்த நேரம் ஆலயம் சாத்தப் பட்டிருக்கும். சலித்துக் கொள்வார்கள். தமது தவறை மறந்து விட்டு '' ஐயர் கோவிலை சாத்திவிட்டு போய் விட்டார் என்றோ அல்லது இண்டைக்கு நேரத்துக்கு கோயில் சாத்திவிட்டார்கள்'' என்ற முணுமுணுப்புடன் திரும்பி செல்வதை பார்த்திருக்கிறோம். எல்லா நேரமும் ஆலயம் திறந்திருக்கும் என்று எண்ணுவது தவறானது.
ருத்து தவறானது. ஒவ்வொரு ஆலயமும் ஒரு ஆகம விதியின் அடிப்படையில் அமைந்திருக்கும். எந்த விதியின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டதோ அந்த விதியை தவறாமல் பின்பற்றுவார்கள்.
பொதுவாக சிவாகம விதியின்படி ஆறு கால பூஜை என்பது உண்டு. உஷக்காலம், காலசந்தி, உச்சிகாலம், சாயரக்ஷை, சாயரக்ஷை இரண்டாம் காலம், அர்த்தஜாமம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. உஷக்காலம் என்பது சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னதாக அதாவது ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.
சூரிய உதயம் ஆறு மணிக்கு என்று எடுத்துக்கொண்டால் அதிகாலை நான்கரை மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியைக் கொண்டு வந்து சந்நதியைத் திறந்து பூஜை செய்வார்கள். கால சந்தி என்பது சூரிய உதயத்தில் இருந்து ஏழரை நாழிகைக்குள் நடத்தப்பட வேண்டும். அதாவது காலை ஒன்பது மணிக்குள்ளாக இந்த பூஜையானது நடத்தப்படுகிறது. உச்சிகால பூஜையானது நண்பகலில் நடக்கும். சாயரக்ஷை என்பது சூரிய அஸ்தமனத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக அதாவது மாலை நான்கரை மணியிலிருந்து துவங்கும். இரண்டாம் கால சாயரக்ஷை பூஜையானது தோராயமாக இரவு ஏழரை மணியளவில் நடைபெறும்.
அர்த்தஜாம பூஜையானது சுமார் பத்து மணியளவில் நடைபெற்று பள்ளியறை பூஜை என்பது நடைபெறும். இந்த நடைமுறை எல்லா ஆலயங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. நண்பகலில் உச்சிகால பூஜை முடிந்தவுடன் சந்நதியை மூடிவிட்டு மீண்டும் சாயரக்ஷை பூஜைக்கு முன்பாகத்தான் திறப்பார்கள். அதே போல இரவினில் அர்த்தஜாம பூஜை முடிந்தவுடன் சந்நதியினை பூட்டி சாவியை பைரவர் சந்நதியில் வைத்துவிட்டு ஆலயத்தையை பூட்டிவிடுவார்கள். இது சரியான நடைமுறையே.
நமது வசதிக்காக 24 மணிநேரமும் ஆலயங்கள் திறந்திருக்கவேண்டும் என்று எண்ணக்கூடாது. ஒவ்வொரு கால பூஜையிலும் அபிஷேகம் முடிந்து அலங்காரம், நைவேத்யம் நடைபெறும் சமயங்களில் திரையிடப்பட்டிருக்கும். அந்த நேரங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையும் சரியானதே. இறைவனின் தரிசனத்தைக் காண நாம் காத்திருப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. அவ்வாறு காத்திருந்து தரிசனம் செய்யும்போது கிடைக்கும் உணர்வே அலாதியானது என்பது நாம் அனைவரும் அனுபவித்து உணர்ந்த உண்மைதானே.
Montag, 2. März 2020
சிலையை செதுக்கி திருக்கோயில்களில் பிரதிஷ்டை செய்யும் போது கடைபிடிக்கப்படும்
ஶ்ரீ சனாதன தர்மபீடம்
சிலையை செதுக்கி திருக்கோயில்களில் பிரதிஷ்டை செய்யும் போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகளும்
ஆகமசாஸ்திரத்தின்அற்புதம் :
********************************
கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.

சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.
ஜலவாசம் :
************
அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும்.
அறிவியல் படி ஜலவாசத்தில்48நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது.
குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

தான்ய_வாசம்:
****************
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது #சிலைமூழ்கும்அளவுக்குநவதானியங்களைகொட்டிவைக்கிறார்கள். இதுவே #தான்ய_வாசம். இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.

ரத்ன வாசம்:
**************
ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.

தன வாசம் :
************
பின்னர் சிலைகளை #பொற்காசுகளில்மூழ்கவைப்பர்இதுதன_வாசம்.
வஸ்திர வாசம் :
****************
பின்னர் வஸ்திர வாசம், அதில் #பட்டாடைகளில் அந்தகடவுள்சிலைவாசம்_செய்யும்.

சயன வாசம் :
***************
இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகாமஞ்சம் எனப்படும் அன்னத்தின்சிறகுகளால் ஆன படுக்கையில் மான்தோல்விரித்து அதன்மீது கடவுள்சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும்.

இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும்.
48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.
அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தினவாசத்தில் வக்கிரகங்களின் அம்சமான ரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.
அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள்தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வசிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்.
அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வசிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது.
நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே_பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.
தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்கஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.
அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.
ஸ்பரிசாகுதி .
**************
**************
இந்த கடைசி வாசத்தில் சுவாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார்.
ஒருசிலையை செய்வதற்கு இத்தனை காரண காரியங்களை செய்யப்படுவதைப்போன்று ஒரு மனிதன் பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.

Abonnieren
Posts (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...