ஜெர்மனியில் Saxony யில் பிறந்தவள்.
என்னுடைய வாழ்க்கை ஒரு சாதாரண வாழ்வாகத்தான் சென்றுகொண்டிருந்தது .
எனக்கு இருபது வயதை இருக்கும்போது ஒரு கார்விபத்தில் நான் பலத்த காயத்தை அடைந்தேன் .
தலையில் பெரிய அடி .
உடனடியாக நானும் என் சக தோழிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம்.
.ICU வில் வைத்து சிகிச்சை நடைபெற்றுகொண்டிருந்தது.
அரைமயக்கத்தோடு நான் கண் விழித்து பார்த்தேன்.
பின்பு மயக்க நிலைக்கு சென்றேன்.
இப்படியாக நான்கு நாட்கள் சென்ற நிலையில் கண் விழித்தேன் .
உடலெல்லாம் சொல்லமுடியாத அளவிற்கு வலி.
அப்போது மருத்துவர்கள் என்னுடைய அம்மாவிடம் ,
உங்க மகள் Serious condition ல இருக்காங்க . So 10% பிழைக்க வாய்ப்பிருக்கு. உங்கள் ஆண்டவரிஇடம் வேண்டி கொள்ளுங்கள்
நாங்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறோமென்று சொல்வதை கேட்டேன்.
இதை கேட்டதும் அதிர்ந்தேன்.
அதிர்ச்சியில் யாராவது என்னை காப்பாற்ற மாட்டார்களா என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். மயக்கமுற்றேன்
அப்போது மருத்துவமனைக்கு ஜெர்மனியை சேர்ந்த ஒரு Hindu sister அந்த வழியாக வந்தார்.
அவர் எனக்கு பழக்கமானவர்.
அவர் வந்து என் நிலை கண்டு என் அம்மாவிடம் சென்று விசாரித்தார்.
நடந்ததை அறிந்து விரைவாக என் அருகில் வந்து , என் தலைக்கு மேலே கையை வைத்து கண்களை மூடி ,
இந்து வேதத்தில் சொல்லப்படும் மிருத்யுஞ்சய மஹாமந்திரமான சிவமந்திரத்தை சொல்லி ஜெபிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து எனக்காக 108 முறை அந்த மந்திரஜெபத்தை செய்து முடித்தார்.
என்னால் சரியாக பேசக்கூட முடியவில்லை.
அன்றிரவு அவர் சென்ற பின்பு,
என் கனவில் ஒருவர் வந்தார் .
என் கனவில் ஒருவர் வந்தார் .
நெற்றியில் திருநீறு அணிந்து என் தலையில் கைவைத்தார் .
மறுநாள் காலையில் என்னுள் ஓர் மாற்றம் வந்தது .
மருத்துவ பரிசோதனையில் நான் உடல்நல முன்னேற்றம் அடைந்து வருவதாக சொல்லப்பட்டது.
எனக்கு மறுவாழ்வு கொடுத்தவர் Lord shiva
அவருடைய மேன்மைமிகு புகழையும் சிறப்பையும் உலகமெங்கிலும் பரப்புவதே என் லட்சியம்.
ஓம் நமசிவாய........
Keine Kommentare:
Kommentar veröffentlichen