மகாபிரபு ரமணன்
பகவான் எனக்கருளிய (M.G.சண்முகம்)சில வழி முறைகள் இதோ:-
1. நீ உன் சுவாசத்தை ஒருமுனைப்பாகக் கவனித்தால், அது தானாகவே கும்பகத்தில் (நிறுத்தல்) உன்னைக் கொண்டு சேர்த்து விடும். இதுபிராணாயாமம்.
2. நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கிப் பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லா விதத்திலும் உனக்கு நல்லது.
ம் எந்தச் சூழ்நிலையிலும் இருக்கலாம்.
4.உலகைக் கனவாக மாத்திரமே கருத வேண்டும்.
5.மனதை நீ வெளி விஷயங்களிலும் எண்ணங்களாலும் திசை திருப்ப விடக்கூடாது.வாழ்வில் உனக்குக் கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே.
6. யாருக்கும் இம்மியும் தடையோ,தொந்தரவோ விளைவிக்காதே. தவிர உன் வேலைகளையெல்லாம் நீயே செய்துகொள்.
7.விருப்பும், வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத் தக்கவை.
8.எண்ணங்களனைத்தையும் குவித்து ஒருமுகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல் 'நான் யார்' விசாரணை செய்யவேண்டும். ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே அடங்கும்.இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம், மனம் தீடீரென்று கிளம்பும். அதனால் மிகக் கவனமாக விசாரத்தைத் தொடர வேண்டும்.
'நான் யார்' என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை
'நான் யார்' என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்.
'நான் யார்' என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்
'நான் யார்' என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்
அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே பரிபூரண நிலையாகும் - இது நிஜம்.
ஶ்ரீரமண நினைவலைகள் என்னும் நூலில்இருந்து திரு வே.கணேசன் அவர்கள் எழுதியது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen