Meine Blog-Liste

Samstag, 28. September 2019

**நவராத்திரி பண்டிகை


**நவராத்திரி பண்டிகை 
         Mu Dhana Lakshmi Chandaran
29-09-2019 நவராத்திரி ஆரம்பம்,
07-10-2019 சரஸ்வதி பூஜை,
8-10-2019 நவராத்திரி முடிவு
சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.
*நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும்.*
நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.
*விஜய தசமி 
----------------------
வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்தாளப்படும். அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு ‘பிரம்மோற்சவம்’ என்று கூட சொல்லலாம். நவராத்திரி சமயத்தில் வீட்டில் “கொலு” என்னும் அமைப்பில், மூன்று, ஒன்பது அல்லது பனிரண்டு படிகள் அமைத்து, அதில் பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்க லோகம் போல காட்சியளிக்கும். நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரிகள் கொண்டாடப்படும்
*காலங்கள் 
-------------------
சித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி.
ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும்.
தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரியாகும்.
*புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு 
-----------------------------------------------------------
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைகூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நவராத்திரியை வழிபடுவார்கள். தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
*நவகன்னிகா வழிபாடு 
----------------------------------------
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
அதன்படி,
முதல் நாளில்
2 வயதுக் குழந்தை - குமாரி
இரண்டாம் நாள்
3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
மூன்றாம் நாள் -
4 வயதுக் குழந்தை - கல்யாணி
நான்காம் நாள் -
5வயதுக் குழந்தை - ரோஹிணி
ஐந்தாம் நாள் -
6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் -
7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் -
8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் -
9 வயதுக் குழந்தை - துர்கா
ஒன்பதாம் நாள் -
10 வயதுக் குழந்தை - ஸுபத்ரா
என்று வணங்கப்படுவார்கள்.
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.
முதல் (1,2,3) மூன்று நாட்கள்
ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு.
இடை மூன்று (4,5,6) நாட்கள்
அன்னை ஸ்ரீ மஹாலட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் (7,8,9)
அன்னை சரஸ்வதி தேவி வழிபாடு.
*ஸ்ரீ துர்க்கையம்மன் :"*
-----------------------------------
இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ‘கொற்றவை’’, ‘’காளி’’ என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபடும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘ நவராத்திரி ‘ எனப்படும்.அவனை வதைத்த பத்தாம் நாள் ‘விஜயதசமி’ [ விஜயம் மேலான வெற்றி].
*ஸ்ரீ மஹாலட்சுமி 
------------------------------
இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
*அஷ்ட லட்சுமிகள் 
-------------------------------
ஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி . இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.
*ஸ்ரீ சரஸ்வதி தேவி 
----------------------------------
இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, “ஆற்றங்கரைச் சொற்கிழத்தி” என்று குறிப்பிடுகிறது.
*சரஸ்வதி பூஜை 
----------------------------
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.
*விஜய தசமி 
----------------------
ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.
*அஷ்ட சரஸ்வதி 
----------------------------
வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதிஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
ஸ்ரீ துர்க்கை :
1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.
ஸ்ரீ லட்சுமி :
4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.
சரஸ்வதி தேவி :
7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
*புராணங்களில் நவராத்திரி 
-----------------------------------------------
வால்மீகி ராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று ராமன், ராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்து கொண்டான்.
*நவராத்திரி புராணம் 
------------------------------------
முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது.
பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?
வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.
ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.
மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.
பக்தி whatsapp 9442705560
மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான். எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான்.
அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன். மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.
மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.
தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.
அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.
இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும். சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும். இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.
நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.

Bild könnte enthalten: 2 Personen, Text

#நவராத்திரிவிரதம் ஆன்மீக தெளிவுரை- 03+#' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சா...

#Kamshajini Gunaratnam speech #kasayini#ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்ஷாஜி...

28/09/2019.#கொடியேற்றம்#வல்லிபுர ஆழ்வார்#vallipuram-alvar-temple -kodiye...

#tamil #தமிழ்மொழி #கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழி...

#நவராத்திரிவிரதம் ஆன்மீக தெளிவுரை- 02#' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சா...

#நவராத்திரிவிரதம் ஆன்மீக தெளிவுரை- 04#' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார...

Donnerstag, 26. September 2019

#நவராத்திரிவிரதம் ஆன்மீக தெளிவுரை- 02#' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சா...

#நவராத்திரிவிரதம் ஆன்மீக தெளிவுரை- 02#' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சா...

#புரட்டாதிமாதவழிபாடுகள் #ஆன்மீக தெளிவுரை #சைவசித்தாந்த பண்டிதர்

அபிஷேக நீரின் மகிமைகள்


(சேமிக்கவேண்டிய பதிவுகள்)
அபிஷேக நீரின் மகிமைகள்
தமிழ்நாட்டில் இன்றைக்கு 45,000 ஆலயங்கள் இருக்கின்றன;கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களை மட்டுமே இப்படிப்பட்ட பட்டியலில் சேர்த்திருக்கின்றோம்;மற்ற புதிய கோவில்களை சேர்த்தால் 10,00,000 க்கும் மேலாக இருக்கும்;
Keine Fotobeschreibung verfügbar.
தினமும் இந்த ஆலயங்களில் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;அபிஷேகம் மூலஸ்தானமாகிய கருவறையில் இருந்து வெளிவரும் பாதைக்கு கோமுகம் என்று பெயர்/ கோமுகம் வழியாக வெளிவரும் இடத்தில் பிரம்மா கோஷ்டமாக (பக்கவாட்டு தெய்வம்) அருள்புரிந்து வருகின்றார்;
சைவத்தின் தலைநகரமாக விளங்கும் திருவண்ணாமலை (விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது)யில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே உள்பிரகாரத்தில் உள்ள கோமுகத் தொட்டியில் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் இடைக்காட்டு சித்தரும்,மலப்புழு சித்தரும் தோன்றினார்கள்;
இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீரில் சந்தனம்,இளநீர்,பால்,தண்ணீர் என்று எது வந்தாலும் அதை நமது தலையில் தெளிக்கும் பழக்கம் இன்றும் இருக்கின்றது;இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீர் தொட்டிக்குள் விழும் முன்பாக நமது கைகளால் பிடித்து நமது தலையில் தெளித்தால் 200% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த 90 நிமிடங்களுக்குள் எடுத்து அதை நமது தலையில் தெளித்தால் 100% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் தெளித்தால் 50% பலனையும் பெறலாம்;(ஏனெனில்,இந்த அபிஷேக நீரானது கங்கை நீரை விடவும் 100 கோடி மடங்கு உயர்வானது)
ஒரு வேளை இன்று அனுஷம் நட்சத்திர நேரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை சிறிது பயன்படுத்தினாலும், பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலும் மீதி நீரை வீட்டில்/வீட்டுக்கு அருகில் இருக்கும் துளசிச் செடி மீது ஊற்றி விட வேண்டும்;அல்லது வில்வ மரத்தின் மீது ஊற்ற வேண்டும்; அல்லது வேறு ஏதாவது ஒரு செடியின் மீது ஊற்றிவிடலாம்;
ஒவ்வொரு நட்சத்திரம் நிற்கும் அன்றும் இந்த அபிஷேகத் தண்ணீரை எப்படி,எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அகத்திய மகரிஷி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துவிட்டார்;அவரது வம்சாவழியைச் சேர்ந்த இடியாப்ப சித்தர், தமது சீடராகிய சத்குரு வேங்கடராம சுவாமிகளுக்கு 1950 களில் தமிழ்நாட்டில் அண்ணாமலையில் நேரடியாக உபதேசம் செய்திருக்கின்றார்;
நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகள் நமக்கு உபதேசம் செய்ததை இங்கே உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளுக்கு இக்கணத்தில் நாம் நன்றிகள் தெரிவித்துவிட்டு இந்த ஆன்மீக உபதேசத்தை பின்பற்றிட ஆரம்பிப்பதுதான் முறை!
பரணி நட்சத்திரம்,மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிடிக்கும் அபிஷேகத்தண்ணீர் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,அதன் தெய்வீகத் தன்மையை இழக்காமல் இருக்கும்;
வீட்டில் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடுவதன் மூலமாக அவர்கள் இப்பிறவியில் எவ்வளவு பெரும் பாவம் செய்திருந்தாலும் அது இந்த ஒரு சிறு செயலால் மன்னிக்கப்பட்டு,அவர்கள் புண்ணிய ஆத்மாவாகி விடுகின்றார்கள்;ஒருவேளை,வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்துவிட்டால்,இறந்த 6 மணி நேரத்திற்குள் இவ்வாறு செய்யலாம்;அப்படி இறந்த பின்னர் கூட,அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடலாம்;
இவை அனைத்தும் சித்தர் பெருமக்களால் ஆராய்ந்து நமக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியம் ஆகும்;
அசுபதி நட்சத்திரம்; கடுமையான கண்திருஷ்டி விலகிவிடும்;கெட்ட கனவுகள் வராது;கனவில் புலம்புபவர்கள் இனிமேல் புலம்பமாட்டார்கள்;தூக்கத்தில் உளறுபவர்களின் உளறல்கள் நின்று விடும்;
பரணி நட்சத்திரம்: மரண பயம் நீங்கும்;
கார்த்திகை நட்சத்திரம்:பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவர்;பிரிந்திருக்கும் ரத்த உறவுகள் ஒன்றாக வாழ வழிமுறை கிடைக்கும்;
ரோகிணி;குழந்தைகளின் பயம் நீங்கும்;அனுசுயா தேவி இந்த நட்சத்திரத்தில் பிடித்த அபிஷேக நீரைக் கொண்டு பல யுகங்கள் முறைப்படி பூஜை செய்து வந்தாள்;அதனாலேயே,மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீதத்தாத்தரேயரை மகனாகப் பெற்றாள்;
மிருகசீரிடம்:பேய்/கருப்பு சேஷ்டைகள் நீங்கும்;
திருவாதிரை:இறப்பதற்கு முன்பு இந்த நட்சத்திரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை அருந்தினால் சிவப்பதவி நிச்சயமாக கிடைக்கும்;
புனர்பூசம்:திருமணத் தடங்கல் விலகிவிடும் ;மாங்கல்ய பலம் மேம்படும்;திருமணம் செய்யும் போது(தாலி கட்டும் சுபவேளையில்) தம்பதி மீது தெளிப்பது மிகவும் நன்று;
பூசம்:பசுவின் மீது தெளித்தால் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும்;
ஆயில்யம்:ஆயுதங்கள்,பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;
மகம்:இயற்கையான முறையில் உயிர் பிரியும்;விபத்தினால் உயிர் பிரியாது;ஆக,வாழும் போது ஒவ்வொரு மகம் நட்சத்திர தினத்தன்றும் நம் மீது தெளிக்க விபத்தில் இருந்து தப்பிவிடுவோம்;
பூரம்:வைத்தியர்கள் செய்யும் தொழில் இடையூறு வராமல் இருக்க உதவும்;நாக தோஷம் விலகிவிடும்;
உத்திரம்:கடன்கார்களின் தொல்லை படிப்படியாக நீங்கும்;
அஸ்தம்;ருது தோஷங்கள் விலகிவி
டும்;எதிர்பாராத உதவி,சிக்கலான நேரத்தில் கிடைக்கும்;
சித்திரை:அறுவடைக்கு முன்பு,இந்த நட்சத்திர நாளன்று பிடித்த அபிஷேக நீரை வயல்களில் தெளிக்க வேண்டும்;
சுவாதி:புதிய புடவை,ஆடைகள் மீது தெளித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்;உறவுகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;அதன் பிறகு,எப்போது வேண்டுமானாலும் அன்பளிப்பாக தரலாம்;
விசாகம்;கடைகள்,நிறுவனங்களில் இருக்கும் கஜானாவில் தெளிக்க வேண்டும்;தொழில் அமோகமாக இருக்கும்;
அனுஷம்:திருமணத் தடை நீங்கும்;நிச்சயித்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தமது தலையில் தெளிக்க வேண்டும்;
கேட்டை:பரிட்சை காய்ச்சல்,போட்டி காய்ச்சல் என்று அவதிப்படும் குழந்தைகளுக்கு தெளிக்க அவர்கள் அளவற்ற மனோதைரியம் பெறுவார்கள்;
மூலம் :வாகனங்களின் சாவி மீது தெளிக்க விபத்தை தடுக்கலாம்;
பூராடம்:கஜானாக்களிலும்,எழுதுகோல்களிலும் தெளிக்க நன்மை உண்டாகும்;பேனா,பென்சில் மீது தெளிக்க துன்பம் இல்லாத வாழ்க்கை உண்டு;
உத்திராடம்:விஷகடிகள் இராது;தூக்கத்தில் பயந்து அலறவோ,கீழே விழவோ மாட்டார்கள்;
திருவோணம்;உணவுப்பஞ்சம் வராது;
அவிட்டம்:கல்லூரி/அலுவலகம் போன்ற இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடம் கிடைக்கும்;பதவிக்கு ஆபத்து வராது;
சதயம்:எதிரிகளின் கூட்டத்தில் சிக்கவே மாட்டோம்;எதிரிகளின் துன்பம் குறையும்;
பூரட்டாதி:விமானப் பயணமோ,வெளியூர்/தொலைதூரப்பயணமோ துன்பம் தராது;விமானப் பயணம் செல்வோர் இதை தம்முடன் கொண்டு செல்லலாம்;
உத்திரட்டாதி:சிவில்,ஆர்கிடெக்,சிவில் காண்டிராக்டர்கள் தெளிக்க நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்;
ரேவதி;தினசரி வாழ்க்கையில் தீ விபத்தில் சிக்க மாட்டார்கள்;
குறிப்பு:விநாயர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹா பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
சிவபெருமானின் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அங்காள பரமேஸ்வரி ஆலயமாக இருந்தாலும் சரி;
பழமையான ஆலயமாக இருந்தால் உடனடியான பலனைப் பெறலாம்;புதிய (100 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆலயமாக இருந்தால்) சிறிது மெதுவான பலனைப் பெறலாம்;
உங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து,உங்களுக்கு தேவையான நட்சத்திரம் வரும் நாளன்று அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து,அந்த நட்சத்திரம் மறையும் முன்பு (நட்சத்திர நேரம் முடியும் முன்பு) வீட்டில் உள்ள அனைவரும் தமது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறிது அருந்தலாம்;
இது முடியாதவர்கள்,தினமும் காலையில் குளித்துவிட்டு,அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அபிஷேகத் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு,வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம்;
கோமுகத்தின் முன்பாக நின்றாலே அவரது உடலுக்குள் ஈசன் புகுந்துவிடுகின்றார்;பிறகு,ஒரு போதும் பிரிவதில்லை;இதையே,ஸ்ரீமாணிக்க வாசகர்,திருவெம்பாவையில் ‘புகுந்து கலந்து பிரியாமல் இருக்கும் ரகசியம்’ என்று பாடியிருக்கின்றார்;
சிவசிவ

Donnerstag, 5. September 2019

பல்லி என்பது ஒரு




பல்லி என்பது ஒரு ஊர்வன வகை விலங்காகும். பல்லிகள் பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் காணப்படுகின்றன ஒரு உயிரினமாகும். நமது வீட்டிற்குள்ளாக வரும் கொசு, நச்சு தன்மை கொண்ட பூச்சிகளை தின்று நமக்கு நன்மையை செய்யும் ஒரு தெய்வீக விலங்கு பல்லியாகும். நமது புராணங்களிலும் பல்லி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் ஒரு நபரை படாதபாடு படுத்தும் என்பது அனுபவ வாக்கு. அத்தகைய பல்லி நமது உடலின் மீது விழுவது தோஷமாக கருதப்படுகிறது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்!!!
பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவானாவார். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடும் வட இந்தியாவில் தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. வீட்டில் தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் அதிகம்!!!
பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம்!
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்!
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி!
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்!
வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி!
வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் !
முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை!
முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்!
கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்!
கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்!
தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி!
தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி!
பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்!
பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்!
கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு!
கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு!
கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்!
கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு!
மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை!
மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி!
மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி!
மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை!
தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்!
நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்!
நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு!
காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்!
காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்!
மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்!
மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்!
கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி!
கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை!
கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது. இதனாலேயே ஊர்வன வகையான உயிரினங்களில் ஒலியை எழுப்பும் சிறப்பு சக்தியை பல்லிக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளார். பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் இதிகாசங்கள் கூறுகின்றன. பல சிறப்புக்கள் மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று கூறுவதும் இதனாலேயே. அதுபோல பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு.!
பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் இதன் சிறப்பை பாருங்கள். அது தான் கௌளி சாஸ்திரம். பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது!!
பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என பழைய சாஸ்திரங்கள் கூறுகின்றன உங்கள் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே தெய்வங்களின் படத்திற்கு முன்பாக திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் நல்லது!!!
சிவபெருமானுக்குரிய ம்ரித்யுன்ஜெய மந்திரத்தை ஜெபிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலான பரிகாரமாக இருப்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கின்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவம். மேலும் அந்த பல்லி உருவத்தோடு சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காண முடியும். தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவத்தை தொடுவதால் நம் மீதுள்ள ராகு – கேது, சனி போன்ற கிரகங்களின் தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கும்!!!

சிவகங்கை கணேசன்.

01-09-2019# பரீஸ்மாணிக்கப்பிள்ளையார்தேர்த்திருவிழாகாவடிகள்

மகாபிரபு ரமணன்

மகாபிரபு ரமணன்
பகவான் எனக்கருளிய (M.G.சண்முகம்)சில வழி முறைகள் இதோ:-
1. நீ உன் சுவாசத்தை ஒருமுனைப்பாகக் கவனித்தால், அது தானாகவே கும்பகத்தில் (நிறுத்தல்) உன்னைக் கொண்டு சேர்த்து விடும். இதுபிராணாயாமம்.
2. நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கிப் பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லா விதத்திலும் உனக்கு நல்லது.
3. மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலுBild könnte enthalten: eine oder mehrere Personen
ம் எந்தச் சூழ்நிலையிலும் இருக்கலாம்.
4.உலகைக் கனவாக மாத்திரமே கருத வேண்டும்.
5.மனதை நீ வெளி விஷயங்களிலும் எண்ணங்களாலும் திசை திருப்ப விடக்கூடாது.வாழ்வில் உனக்குக் கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே.
6. யாருக்கும் இம்மியும் தடையோ,தொந்தரவோ விளைவிக்காதே. தவிர உன் வேலைகளையெல்லாம் நீயே செய்துகொள்.
7.விருப்பும், வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத் தக்கவை.
8.எண்ணங்களனைத்தையும் குவித்து ஒருமுகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல் 'நான் யார்' விசாரணை செய்யவேண்டும். ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே அடங்கும்.இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம், மனம் தீடீரென்று கிளம்பும். அதனால் மிகக் கவனமாக விசாரத்தைத் தொடர வேண்டும்.
'நான் யார்' என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை
'நான் யார்' என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்.
'நான் யார்' என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்
'நான் யார்' என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்
அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே பரிபூரண நிலையாகும் - இது நிஜம்.
ஶ்ரீரமண நினைவலைகள் என்னும் நூலில்இருந்து திரு வே.கணேசன் அவர்கள் எழுதியது.

Mittwoch, 4. September 2019

2. Sept 2019#ஆவணி சதுர்த்தி#Ganesatemplefrance #speech-rajkumar

விநாயக சதுரத்தி விக்னேஷ்வர பூஜை

கவிஞர்வாலி*

Guruvayurappadhasan Sundararaman
கவிஞர்வாலி*
நான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன்.
எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை.
ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும்.
காரணம், நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு, கடன்கள் பட்டு பல வருடங்களாக வாழ்ந்த நேரம் அது.
ஒருநாள் மதியம் திருவானைகா சிவன் கோவிலில் ( ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிரே உள்ளது.) கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட நடந்தே சென்றுவிட்டேன்.
சாப்பிட்டுவிட்டு அகிலாண்டேஸ்வரி சன்னதியில் வெளியே உள்ள மண்டபத்தில் "அம்மா நீ ஒருத்தி தான் எனக்கு உதவ முடியும்" என்று மனதில் கூறி அவளை வெளியில் இருந்தவாறே வேண்டி கும்பிட்டுவிட்டு களைப்பாற அமர்ந்தவன் எப்படியோ படுத்து உறங்கிவிட்டேன்.
அன்னையின் மடியில் படுத்து உறங்கியது போன்ற உணர்வு அன்று எனக்கு ஏற்பட்டது.
கனவிலே முருகன் வந்து 'என்னைப் பற்றி பாடு' என்றான்.
அன்னையின் எச்சில் என் உதட்டிலும், நாவிலும் பட்டு தெறித்தது.
'திடுக்'கிட்டு விழித்துக்கொண்டேன்.
'அம்மா, முருகா' என்று சொல்லி வணங்கிவிட்டு நடையாகவே வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டில் அனைவரும் 'எங்கே சென்றுவிட்டாய்? சாப்பிட்டாயா?' என்று கேட்டார்கள்.
'நண்பன் வீட்டில் அம்மா சாப்பாடு கொடுத்தார்கள்' என்று சமாளித்து விட்டேன்.
வீட்டில் சொல்ல முடியாது.
'அதுவும் சிவன் கோவிலுக்கு போனியா?' என்று வேற கேள்வி வரும். நண்பர்களிடம் மெதுவாக சொன்னேன்.
அங்கு கொடுத்ததோ ஒரு கையளவு பிரசாதம் தான், ஆனால் எனக்கு வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு,
பிறகு சாப்பிட்ட களைப்பு போல அங்கேயே தூங்கியதையும் சொன்னேன். கிண்டல் அடித்தார்கள், கற்பனை, கற்சிலை என்று எல்லாம் என்னிடம் நகையாடினார்கள்.
ஆனால் என் உள்ளுணர்வு சொல்லியது இது உண்மை என்று.
.
எனக்கு TMS அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும். அவரின் விலாசத்தை கஷ்டப்பட்டு வாங்கிவிட்டேன். நண்பர்கள் சொன்ன வரிகள் என்னை உறுத்தியது.
அதன் வரியில் முருகன் மேல் பாடல் புனைந்து TMS க்கு போஸ்ட் கார்டு லே எழுதி அனுப்பிவிட்டேன். அகிலாண்டேஸ்வரி தாயே நீயும் உன் மகனும் தான் இனி எனக்கு துணை என்று வேண்டிக்கொண்டேன்.
.
TMS இருக்கும் பிஸியில் என் போஸ்ட் கார்டை எங்கு பார்ப்பார் என்று நினைத்து மறந்துவிட்டேன்.
ஆனால் என் தாயின் அருள், முருகனின் கருணை TMS என் கார்டை பார்த்து, அவரே அதற்க்கு மெட்டும் போட்டு பாடிவிட்டார்.
பிறகு எனக்கு அவரிடம் இருந்து கடிதம் வந்தது, 'என் முருகன் பாடலை நீ எழுதி கொடுத்தாய், மிகவும் நன்றாக இருந்தது, நானே இசை அமைத்து பாடி உள்ளேன், வரும்
திங்கள் அன்று வானொலியில் காலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகும், கேட்டுவிட்டு உன் கருத்தை அனுப்பு, மெட்ராஸ் க்கு வா, உனக்கு நான் சன்மானம் தரணும், இது போன்று பாடல்கள் நிறைய நீ எழுது' என்று போட்டு இருந்தார்.
எனக்கு நம்ப முடியவில்லை, சந்தோசத்தில் 'தாயே, முருகா' என்று வீட்டிலேயே உரக்க கூவிவிட்டேன். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம், கோபம், என்னது என்று கோபமாக கேட்டார்கள்.
நான் பதில் பேசவில்லை, கடிதத்தை கொடுத்தேன். அனைவரும் வாங்கி படித்தார்கள்.
அவர்களுக்கும் சந்தோசம் தான்.
முகத்தில் தெரிந்தது, ஆனால் வெளியில் காட்டி கொள்ளாது இருந்துவிட்டார்கள்.
அப்பா மட்டும் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.
பதில் சொல்லவில்லை.
ஆனால் எனக்கு உற்ச்சாகம் அளித்தார், அப்போதும் அவர்
ரெங்கநாதனை பற்றி ஒரு பாட்டு எழுதி TMS பாடணும்
என்றார்.
எனக்கு உள்ளூர சிரிப்பு, இதுவரை சாப்பாடு போடாத ரெங்கநாதனை பற்றி நான் என்ன எழுதணும் என்று நினைத்தேன்.
அப்பா மெட்ராசுக்கு செல்ல உத்தரவு கொடுத்துவிட்டார்.
நண்பர்கள் தான் அதிக அளவு சந்தோஷப்பட்டார். மெட்ராஸ் சென்றேன், TMS சை பார்த்தேன், பாடலுக்குண்டான அன்பளிப்பாக சின்ன தொகையை கொடுத்து என்னை 'நீ ஏன் சீனிமாவுக்கு பாடல் எழுத கூடாது?' என்று கேட்டார்.
'நான் என்ன வர மாட்டேன் என்றா சொன்னேன்? கூப்பிடுங்கள் உடனே உங்கள் பின்னால் ஓடி வருகிறேன்' என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
.
ஒருநாள் அவர் என்னை விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்தி இவனை சரியாக பயன்படுத்து, நன்றா எழுதுகிறான் என்று சொல்லி வைத்தார்.
என் மனதில் தோன்றியது காசி விஸ்வநாதர் தான். அம்மையும் அப்பனும் எனக்கு கருணை புரிந்து விட்டார்கள் என்றே நினைத்தேன்.
ஆம் விஸ்வநாதன் உதவியால் நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த நான், சாப்பாட்டில் கை வைக்க நேரமில்லாமல் எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தேன்.''
- கவிஞர் வாலி.
வாலியின் முதல் முருகன் பாடல்:-
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
.
- கற்பனை என்றாலும்
.
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்

ஆசியன்

ஐரோப்பாவில்