Meine Blog-Liste

Dienstag, 2. April 2019

"ஸ்ரீ துர்கா ஸப்தசதி"

"ஸ்ரீ துர்கா ஸப்தசதி" என்று சொல்ல கூடிய தேவீ மஹாத்ம்யமானது 13 அத்யாயங்களை கொண்டது, அதிலே மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளது. அந்த 700 ஸ்லோகங்களிலும் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் ஒரு சக்தி வாய்ந்த பீஜாக்க்ஷரம் அடங்கியுள்ளது.
ப்ரதம சரித்ரம் 104 ஸ்லோகங்களை உடையது அதிலே 104 சூக்ஷ்ம ரஹஸ்ய பீஜங்கள் அடங்கியுள்ளது. மத்யம சரித்ரம் 113 ஸ்லோகங்களை உடையது அதிலே 113 சூக்ஷ்ம பீஜங்கள் அடங்கியுள்ளது, உத்தம சரித்ரம் 483 ஸ்லோகங்களை உடையது, அதிலே 483 சூக்ஷ்ம ரகஸ்ய பீஜங்கள் அடங்கியுள்ளது. ஆகமொத்தம் 700 ஸ்லோகங்களில் 700 பீஜ மந்த்ரங்கள் மறைவாக புதைந்துள்ளது. நித்யமும் தேவீ மஹாத்ம்யத்தை பாராயணம் செய்பவர்கள் இகலோகத்தில் பரம ஸௌக்யத்தயும், உடல் ஆரோக்யமும், மன நிம்மதியும், செல்வ செழிப்பும் பெற்று விளங்குவதுடன் பர கதியும் முக்தியும் இறுதியில் பெற்றிடுவார்கள்.
அம்பிகை யுத்தகளத்தில் போரிடும்பொழுது அவள் நிகழ்த்திய அஸுர வதங்களையும் அவளின் பராக்ரமத்தின் பெருமையையும் விளக்கும் "ஸப்தஸதி" 'ஸ்ரீ வித்யா' உபாஸகர்களின் பொக்கிஷமாக விளங்குகிறது. துர்கா ஸப்தஸதி "சாக்த கீதை" எனப்படுகிறது. இந்த மந்த்ரங்களை கொண்டு வருடம் 1 முறையாவது தர்பணம் மற்றும் ஹோமங்களை அந்தந்த ஊர்களில் உள்ள க்ராம தேவதைகளின் ஆலயங்களில் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்வதினால் விவசாயம் தழைக்கும், ஊர்களில் பரவும் தொற்றுநோய்கள் தடுக்கப்படும், சரியான காலத்தில் தேவைக்கேற்ற மழைப்பொழிவு இருக்கும், பெரும் இயற்க்கை சீற்றங்கள் மற்றும் அழிவுகள் நிகழாமல் காக்கும், தனிமனித ஒழுக்கம் மேம்படும் ஒற்றுமை நிBild könnte enthalten: 1 Person, steht, Himmel, im Freien und Natur
லைக்கும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்