Meine Blog-Liste

Sonntag, 29. Dezember 2019

Walthamstow Katpaga Vinayakar temple - London#விநாயகர் விரதம் .#ஆஞ்சநேயர...

#பிள்ளையார் பெரும் கதையின்சிறப்பு 2019#அருள் உரை -4 #சிவஸ்ரீ .கனக.பாலசந...

ஜெர்மனியில் ஜெய வீர ஆஞ்சேநேயர் ஆலயத்தில் ஆஞ்சேநேயர் ஜெயந்தி

#Chennai Girl#கறு ப்பா பிறந்தா அழகில்லையா---#Beautiful black blonde girls

#Chennai Girl#கறு ப்பா பிறந்தா அழகில்லையா---#Beautiful black blonde girls

17 .11. 2019# ஜெர்மன் சிவநெறிப்பேரவை சைவத்தமிழ் கலைவிழா 17.11.2019 12ம் ...

Donnerstag, 26. Dezember 2019

26. 12 2019#ஜெர்மனியில் ஜெய வீர ஆஞ்சேநேயர் #சங்காபிஷேகம்

உயிருள்ள நாக பாம்பிற்கு பாலபிஷேகம்#Balabhishekam for a living snake

26. 12 2019#ஜெர்மனியில் ஜெய வீர ஆஞ்சேநேயர் #சங்காபிஷேகம்

26. 12 2019#ஜெர்மனியில் ஜெய வீர ஆஞ்சேநேயர் #சங்காபிஷேகம்

26. 12 2019#ஜெர்மனியில் ஜெய வீர ஆஞ்சேநேயர் #சங்காபிஷேகம்

26. 12. 2019#ஆஞ்சேநேயர் ஜெயந்தி#ஜெய வீர ஆஞ்சேநேயர் ஆலயத்தில்# சங்காபிஷேகம்

26. Dezember 2019#ஆஞ்சேநேயர் ஜெயந்தி#ஜெய வீர ஆஞ்சேநேயர் ஆலயத்தில்# ஊஞ்சல...

Mittwoch, 25. Dezember 2019

25 12 2019#ஆஞ்சேநேயர் ஜெயந்தி - 04 # மங்களம் ....ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள...

25. Dezember 2019#ஆஞ்சேநேயர் ஜெயந்தி - 03#ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயம்

25. Dezember 2019#ஆஞ்சேநேயர் ஜெயந்தி 01 #ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயம்

25. Dezember 2019#ஆஞ்சேநேயர் ஜெயந்தி #ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயம்

2019 12 25 speech-Mr. Thaneswaran Gnanasandraபேச்சு தன்னம்பிக்கை திரு.தன...

2019 12 25 speech-Mr. Thaneswaran Gnanasandraபேச்சு தன்னம்பிக்கை திரு.தன...

2019 12 25 speech-Mr. Thaneswaran Gnanasandraபேச்சு தன்னம்பிக்கை திரு.தன...

Swamy Ayyappan World ConferenceSri lanka 2020#Ayyappen Ther

Sonntag, 22. Dezember 2019

21. Dezember 2019#super singer nirujan live song #பாடும் நானே பாவ........

21. Dezember 2019#super singer nirujan live song #பாடும் நானே பாவ........

சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடம் நடத்திய #விஷேடஐயப்பன் #அபிஷேகம் # பூஜை

சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடம் நடத்திய விஷேட பால்குட பவணி

சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடம் நடத்திய விஷேட பால்குட பவணி

சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடம் நடத்திய விஷேட பால்குட பவணி

21.12.2019 #The story of the dance#நடனக்கதை sivan நடனம்

21. Dezember 2019#நடனக்கதை2 #The story of the dance2

அருள்மிகு சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீட பால்குட பவனி விழா#Sabarimala Palguda B...

21. Dezember 2019#speech Sathiakumar.திரு ,சத்தியகுமார்

21. Dezember 2019#speech Sathiakumar.திரு ,சத்தியகுமார்

21. Dezember 2019S speech #சிறப்பு விருந்தினர் ருக்மணி. விஜயகுமார்#Rukmi...

21. Dezember 2019 #speech #சிவஸ்ரீ.கிரிதரக்குருக்கள் # ஜெர்மனி ஆடற் கலால...

Freitag, 8. November 2019

#Switzerland Zürich. Iyappan Dewastanam#ஶ்ரீ ஐயப்பன் தேவஸ்தான மஹா கும்பா...

முருகன் பெருமானின் 108 போற்றிகள்

முருகன் பெருமானின் 108 போற்றிகள்
ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மருதமலை இறைவா போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்ªபன் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் மருதமலை ஆண்டவா போற்றி
ஓம் போற்றி... போற்றி... மருதமலை வேலவா போற்றி

Freitag, 1. November 2019

விக்கினினங்கள் தீர்க்கும் விநாயகப்பெருமான்# ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச...

குறிஞ்சிக்குமாரன் கந்தசஷ்டி 5ம் நாள் பெருவிழா#Kurinjikumarn 5th day o...

விநாயகருக்கு தேங்காய் உடைப்பது ஏன் #ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார...

INUVIL KANTHASWAMY TEMPLE இணுவில் கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரதம் 5...

விநாயகருக்கு தேங்காய் உடைப்பது ஏன் #ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார...

''சபரிமலைக்குருமுதல்வர்#2020 தமிழ்ப்புத்தாண்டு தேதி மாற்றமும் அதற்கான த...

''சபரிமலைக்குருமுதல்வர்#2020 தமிழ்ப்புத்தாண்டு தேதி மாற்றமும் அதற்கான த...

''சபரிமலைக்குருமுதல்வர்#2020 தமிழ்ப்புத்தாண்டு தேதி மாற்றமும் அதற்கான த...

''சபரிமலைக்குருமுதல்வர்#2020 தமிழ்ப்புத்தாண்டு தேதி மாற்றமும் அதற்கான த...

#கந்தசஷ்டி விரத மகிமை 01 .11. 2019#' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரிய...

#ஆன்மபலன்தரும் ஆடிமாதம் #''மஹாராஜ ராஜகுரு''#' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சி...

#Kanda sasti kavasam #kavacham song & photo #கந்தசஷ்டிகவசம் ./#உலகமுருகன...

Donnerstag, 31. Oktober 2019

#kethariswara r #poojaa #speech 27.10. 2019கேதாரீஸ்வரர் நிறைவு நாள் ...

#பாலாம்பிகை




பல்லவி
அவனியில் நடந்திடும் செயல்களனைத்துமே
சிவசக்தியாலென்று அறிந்திடுவோமே
அனுபல்லவி
புவனம் போற்றும் கேசவன் சோதரி
அவளின்றி ஓரணுவும் அசைந்திட இயலாது
சரணம்
அவளருளாலே அவள் புகழ் பாடி
அவளையே அனுதினம் சரணடைந்திடுவோம்
அவளே அனைத்துமென்று உணர்ந்த பின்னாலே
புகழ் பெருமையெல்லாம் அவளுக்கே கொடுப்போம்

சிவசக்தி இல்லாத நமதுடல் புவியில்
சவமென்றே அறிந்து செயல் பட வேண்டும்
பவக்கடல் கடந்திட நம் அனைவருக்கும்
அவளருலொன்றே என்றும் வேண்டும்
* * * * * * *
ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி !
கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து. கூப்பிட்டவுடன் உங்களை கை தட்டி கொண்டு உங்களை சுற்றி சுற்றி வரும் சின்ன குழந்தை தெய்வம் தான் பாலா என்கின்ற பால த்ரிபுரசுந்தரி.
நித்ய கல்யாணத்தை நமக்கு அளிக்கும் பாலாவின் அழகோ , அழகு.அவள் கருணை பார்வை நம்மை பார்த்து அருள, அவளின் திரு உருவை நாம் பார்த்து மகிழ, அவள் எப்படி இருப்பாள் , எத்தனை அழாகாக இருப்பாள் என்று பார்ப்போமா!!
அருண கிரண ஜாலை: அஞ்ஜிதாவகாசா
வித்ருத, ஜபவடீகா புஸ்தகா பீதி
ஹஸ்தா இதரகர வராட்யா, புல்ல கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா
இளஞ்சிவப்பு ஒளி வெள்ளத்தில் கையில் புஸ்தகம், ஜபமாலை ஆகியவற்றோடு அபயமும் வரமும் அருளுபவளாய் ப்ரகாசிக்கின்ற புன்னகையோடு வெண்மையான கல்ஹார புஷ்பத்தில் (அல்லி மலரில்) அமர்ந்திருப்பவளாக அவள் தியானிக்கப்படுகின்றாள்.
பாலா த்ரிபுரசுந்தரியின் த்யான ஸ்லோகம் “புல்ல கல்ஹார ஸம்ஸ்திதா” என்று சொல்லியிருப்பதாலும், சம்ப்ரதாயத்தில் பாலையின் சித்திரங்களில் அவள் அல்லி மலரின் மேல் அமர்ந்திருப்பதாகவே சித்திரித்திருப்பதாலும், “அமர்ந்த திருக்கோலத்திலேயே” சிற்பம் வடிக்கப்பட்டது. இளவரசிக்குள்ள சிறிய நெற்றிப் பட்டயம் (அரசிக்குரிய பெரிய கிரீடமல்ல), மலர்ந்த சிரிக்கும் கண்கள், சிறுமிக்கே உரிய பூரித்த கன்னங்கள், அற்புதப் புன்னகை, புத்தகம், ஜபமாலை, அபய வரத ஹஸ்தங்கள், வீராசனம்.
தனக்கு அன்னியமாய் ஏதுமில்லாததும், நாம-ரூப-குணங்களற்றதும், நித்ய ஸத்யமானதுமான ஸச்சிதானந்தத்தையே “பரப்ருஹ்மம்” என்று ஞானிகள் அறிகிறார்கள். அதே பரப்ருஹ்மம் ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரமாகிய கார்யங்களில் ஈடுபட்டிருப்பதாக வ்யவஹரிக்கும்போது “பராசக்தி” என்பதாக மறைகளால் கொண்டாடப்படுகிறது.
விபூதியென்றறிவது பக்தி மார்க்கம். இருப்பும் இயல்பும் இருப்பதும் இயல்வதும் அவனுக்கே என்று ஒப்படைத்து ஆட்பட்டிருப்பது கர்ம மார்க்கம். “ஸ்ரீ வித்யை” ஜகன்மாதாவை அழகின் எல்லையாக - லலிதையாக - அறியச் செய்கிறது. அவளது ஸ்ருஷ்டியாகிய இந்தப் பிரபஞ்சம் ஒவ்வோர் அணுவிலும் அவனது அழகின் ப்ரதிபிம்பமாக இருப்பதையும், ஒவ்வோர் அசைவிலும் அவளையே சித்திரிப்பதையும், அதன் ப்ரம்மாண்டமும்கூட அவளது பாததூளியைப் போலிருப்பதையும் தன் ஞானக்கண்களால் மட்டுமன்றி, நியமங்களாலும், தவத்தாலும், உபாசனையாலும் புடமிடப்பட்ட தன் ஊனக்கண்களாலும் கூடப் பார்க்கப் பழகுபவனே ஸ்ரீலலிதையின் உபாசகனாக முடியும்.
இந்த மஹாவித்யையின் ஆரம்ப நிலையில் - ஸ்ரீ வித்யையின் தோரண வாயிலில் - சாதகன் முதலில் தரிசிப்பது “பாலா த்ரிபுரசுந்தரியை”த்தான்.
மந்திரம் -யந்திரம் - தந்திரம் ஆகியமூன்றினாலும் அம்பிகையை உபாசிப்பது “ஸ்ரீ வித்யை” வழி. அதன் முதல் படி “பாலை” என்று குறிக்கப்படும் “பாலா த்ரிபுர சுந்தரி” உபாசனை. இது மந்திர ரூபம் மட்டுமே கண்ட உபாசனையாக மந்திர ஜபத்தையே ப்ரதானமாகக் கொண்டிருப்பதே மரபு.
ஆயினும் சாஸ்திரங்களில் “பாலா”வுக்கான ப்ரத்யேகமான யந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.
லலிதா பரமேஸ்வரியாகிய ஜகன்மாதாவின் புத்ரியாக முதிராத கன்னிகையாக பாலாவை வர்ணிக்கிறது லலிதோபாக்யானம். பண்டாசுர யுத்தத்தில் அன்னையின் சேனையில் பங்கேற்று “பண்ட புத்ரர்களை வதம் செய்து தன் விக்ரமத்தால் அன்னையை மகிழச் செய்தவள்” (லலிதா ஸஹஸ்ரநாமம் - 74ஆம் நாமம்”) மற்றும் ஸ்ரீபாலாயி நம: (965ஆம் நாமம்) என்று அவளை லலிதா பரமேஸ்வரியாகவே ஸ்துதிக்கிறது.
ஸ்ரீ வித்யோபாசனையின் முதல் படியாக “பாலா” இருப்பதாலும் அவள் “அருண கிரண ஜாலா” வாக இருப்பதாலும் தானோ என்னவோ 

31. 10. 2019 இணுவில் கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத4ம் நாள் இரவு #Kand...

canada varasithi vinayagar தேவஸ்தான கந்தசஷ்டி 29.10.2019

தமிழ்நாடு திருக்கோவிலூர் வீரட்டானம் ஸ்ரீ வெற்றி வேலாயுத பெருமான்

தமிழ்நாடு திருக்கோவிலூர் வீரட்டானம் ஸ்ரீ வெற்றி வேலாயுத பெருமான்

கனடா ஶ்ரீவரசித்தி விநாயகர் ஸ்கந்தசஷ்டி விரதம்2 ம்நாள்

இணுவில் கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத4ம் நாள் #Kandasashti fast 4 day

Mittwoch, 30. Oktober 2019

speech 20 10 2019“சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திந...

jeya jey jeya sakthi song 30 10 2019#ஜெய ஜெய ஜெய ஷக்தி

கனடா ஶ்ரீவரசித்தி விநாயகர் ஸ்கந்தசஷ்டி விரதம்2 ம்நாள்

முருகன் கந்த சஷ்டி பூஜா 2ம் நாள் #Murugan kanda sashti Pooja

முருகன் கந்த சஷ்டி அபிஷேகம் 2ம் நாள் #Murugan kanda sashti apisegam

சஷ்டியன்று சொல்ல வேண்டிய கந்தன் துதி!

சஷ்டியன்று சொல்ல வேண்டிய கந்தன் துதி!
---------------------------------------------------------------------
எந்த வேளையும் தொழவேண்டிய கந்தவேளை, கந்தசஷ்டி தினத்தில் கீழ்வரும் துதியைச் சொல்லிப் போற்றுங்கள். சர்வமங்களமும் தருவான் ஷண்முகநாதன்.
ஓம் அழகா போற்றி
ஓம் அனல் ரூபா போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் மாயவன் மருகா போற்றி
ஓம் சக்தி உமை பாலா போற்றி
ஓம் முக்தி அருள் வேலா போற்றி
ஓம் பன்னிருகை பாலகா போற்றி
ஓம் பக்தர்க்கருள் சீலா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோளா போற்றி
ஓம் ஆறெழுத்து அமலா போற்றி
ஓம் இடும்பனை வென்றோய் போற்றி
ஓம் இடர் களையும் இறைவா போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலகநாபன் மருகா போற்றி
ஓம் ஐயம் தீர் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார ரூபனே போற்றி
ஓம் ஓதிடும் வேதப்பொருளே போற்றி
ஓம் ஓதுவோர் மனதுக்கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் தீதிலா நன்மை புரிவோய் போற்றி
ஓம் குருவே திருவே குமரா போற்றி
ஓம் குறமகள் மனமகிழ் கோவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் மனதுறை செவ்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கருளும் மணியே போற்றி
ஓம் தண்ணருள் தந்திடும் தண்டபாணியே போற்றி
ஓம் மண்டலம் சுற்றிடும் மயில் வாகனா போற்றி
ஓம் வேதப்பொருளே வேலவா போற்றி
ஓம் நாதவடிவான நாயகா போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயனே போற்றி
ஓம் நறுந்தவ முனிவர் தலைவா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்தனே போற்றி
ஓம் பரங்குன்றம் உறை பாலகா போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பரமனே போற்றி
ஓம் இருளிடர் போக்கும் இறைவா போற்றி
ஓம் இதயக் குகை உறை குகனே போற்றி
ஓம் அன்பின் உருவமே அறுமுகா போற்றி
ஓம் ஒளவைக்கருளிய அன்பனே போற்றி
ஓம் சேயோனே குறிஞ்சி மேவுவோய் போற்றி
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி
ஓம் கருணை நிறைந்த கடவுளே போற்றி
ஓம் அறுபடை வீடமர் ஆண்டவா போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சுப்ரமண்யா போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் ஆறுதனில் தோன்றிய அறுமுகா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே கந்தனே போற்றி
ஓம் சஷ்டியில் மகிழும் ஷண்முகா போற்றி
ஓம் உதயச் சுடரே உமைபாலா போற்றி
ஓம் இதயத்துள் உறை இனியனே போற்றி
ஓம் பக்தர்தம் வினை தீர்ப்போய் போற்றி
ஓம் மாசிலா மனத்துறை மைந்தா போற்றி
ஓம் மாமயில் வாகனா மங்களா போற்றி
ஓம் வடிவேல் தாங்கி வருவாய் போற்றி
ஓம் அடியார் அல்லல் களைவாய் போற்றி
ஓம் வளமுள வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி குஞ்சரி நாயகா போற்றி
ஓம் செஞ்சுடரில் உதித்த செல்வனே போற்றி
ஓம் பார்வதி உளமகிழ் பாலனே போற்றி
ஓம் அமுதென தமிழை அளிப்போய் போற்றி
ஓம் தருநிழல் தமிழின் இறைவா போற்றி
ஓம் ஆடும் பரிவேல் அரசே போற்றி
ஓம் உடன் வந்தருளும் உமாசுதனே போற்றி
ஓம் கலியுக தெய்வமே கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்திரம் உரைத்த சரவணா போற்றி
ஓம் சிந்தைக்குள் உறைவாய் சிங்காரவேலா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ குக சண்முகா போற்றி
ஓம் வேடர்குல மகள் மணாளா போற்றி
ஓம் பாடற்கினிய பவகுமரா போற்றி
ஓம் அசலத்தில் ஆண்டியாய் நின்றவா போற்றி
ஓம் சகலத்தையும் தரும் சேயோன் போற்றி
ஓம் தெவிட்டா இன்னருள் தெய்வமே போற்றி
ஓம் தேவர் மூவர் பணி தேவனே போற்றி
ஓம் போகர் நாடிய மெய்ப் பொருளே போற்றி
ஓம் ஆகமம் போற்றும் அழகோனே போற்றி
ஓம் பாதகம் பாவம் போக்குவோனே போற்றி
ஓம் சித்திகள் அருளும் சிவபாலா போற்றி
ஓம் பக்தியில் மனமகிழ் பாலகா போற்றி
ஓம் ஆவினன் குடியுறை ஆறுமுகா போற்றி
ஓம் தணிகை மலைவாழ் தலைவா போற்றி
ஓம் தந்தைக்கு உரைத்த தயாபரா போற்றி
ஓம் சேயோனே செந்தில் நாதனே போற்றி
ஓம் சோலைமலை வளர் சுந்தரா போற்றி
ஓம் குன்றத்து குகை அருள் குமரா போற்றி
ஓம் கருணை மழை பொழி கந்தா போற்றி
ஓம் அருணகிரிக்கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலத்துக் குழந்தாய் போற்றி
ஓம் குறுமுனி போற்றிடும் குருவே போற்றி
ஓம் திருப்போரூர் திகழ் திருவே போற்றி
ஓம் மறுப்போர் இல்லாமாதவே போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் வெற்றிக் கடம்ப மாலை அணிவோய் போற்றி
ஓம் பற்றுவோர் பாவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் குமரகுரு புகழ் குழந்தாய் போற்றி
ஓம் துதிபுரி அன்பர்தம் துணையே போற்றி
ஓம் மதியணி இறைவன் மைந்தா போற்றி
ஓம் நிதி மதி அருளும் நின்மலா போற்றி
ஓம் ஞானபண்டித சுவாமி போற்றி
ஓம் தீனருக்கருள் தெய்வமே போற்றி போற்றி
Muthukumr Alayam Hauskam

இணுவில் கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத இரண்டாவது நாள் இரவு காட்சி

இணுவில் கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத இரண்டாவது நாள் இரவு காட்சி

Montag, 14. Oktober 2019

nathaswaram 15 .07 .2018 .கலைச்செல்வன்/கீதலாயன்/சுகந்திரன்/சசிதரன்/திர...

ஜெர்மன் தேசத்தை சேர்ந்த Lena (லீனா) எனும் நான்

ஜெர்மன் தேசத்தை சேர்ந்த Lena (லீனா) எனும் நான்
Bild könnte enthalten: 1 Person
ஜெர்மனியில் Saxony யில் பிறந்தவள்.
என்னுடைய வாழ்க்கை ஒரு சாதாரண வாழ்வாகத்தான் சென்றுகொண்டிருந்தது .
எனக்கு இருபது வயதை இருக்கும்போது ஒரு கார்விபத்தில் நான் பலத்த காயத்தை அடைந்தேன் .
தலையில் பெரிய அடி .
உடனடியாக நானும் என் சக தோழிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம்.
.ICU வில் வைத்து சிகிச்சை நடைபெற்றுகொண்டிருந்தது.
அரைமயக்கத்தோடு நான் கண் விழித்து பார்த்தேன்.
பின்பு மயக்க நிலைக்கு சென்றேன்.
இப்படியாக நான்கு நாட்கள் சென்ற நிலையில் கண் விழித்தேன் .
உடலெல்லாம் சொல்லமுடியாத அளவிற்கு வலி.
அப்போது மருத்துவர்கள் என்னுடைய அம்மாவிடம் ,
உங்க மகள் Serious condition ல இருக்காங்க . So 10% பிழைக்க வாய்ப்பிருக்கு. உங்கள் ஆண்டவரிஇடம் வேண்டி கொள்ளுங்கள்
நாங்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறோமென்று சொல்வதை கேட்டேன்.
இதை கேட்டதும் அதிர்ந்தேன்.
அதிர்ச்சியில் யாராவது என்னை காப்பாற்ற மாட்டார்களா என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். மயக்கமுற்றேன்
அப்போது மருத்துவமனைக்கு ஜெர்மனியை சேர்ந்த ஒரு Hindu sister அந்த வழியாக வந்தார்.
அவர் எனக்கு பழக்கமானவர்.
அவர் வந்து என் நிலை கண்டு என் அம்மாவிடம் சென்று விசாரித்தார்.
நடந்ததை அறிந்து விரைவாக என் அருகில் வந்து , என் தலைக்கு மேலே கையை வைத்து கண்களை மூடி ,
இந்து வேதத்தில் சொல்லப்படும் மிருத்யுஞ்சய மஹாமந்திரமான சிவமந்திரத்தை சொல்லி ஜெபிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து எனக்காக 108 முறை அந்த மந்திரஜெபத்தை செய்து முடித்தார்.
என்னால் சரியாக பேசக்கூட முடியவில்லை.
அன்றிரவு அவர் சென்ற பின்பு,
என் கனவில் ஒருவர் வந்தார் .
நெற்றியில் திருநீறு அணிந்து என் தலையில் கைவைத்தார் .
மறுநாள் காலையில் என்னுள் ஓர் மாற்றம் வந்தது .
மருத்துவ பரிசோதனையில் நான் உடல்நல முன்னேற்றம் அடைந்து வருவதாக சொல்லப்பட்டது.
எனக்கு மறுவாழ்வு கொடுத்தவர் Lord shiva
அவருடைய மேன்மைமிகு புகழையும் சிறப்பையும் உலகமெங்கிலும் பரப்புவதே என் லட்சியம்.
ஓம் நமசிவாய........

கேதார கௌரீஸ்வர விரத மகிமை ,#ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்

Montag, 7. Oktober 2019

வேதாரண்யம் திருமறைக்காடு திருக்கோயில் சரஸ்வதி

வேதாரண்யம் திருமறைக்காடு திருக்கோயில் சரஸ்வதி

வேதாரண்யம் திருமறைக்காடு திருக்கோயில் சரஸ்வதி மிக பெரிய திருமேனி கையில் வீணையின்றி காட்சி தருகின்றார் சகல கலா வல்லி மாலை பாடல் வரிகள் பொருளுரை இன்று 7/10/2019 திங்கள் சரஸ்வதி பூஜை அன்று பதிவு செய்து வணங்குகின்றோம் .படித்த பொருளுரை பதிவு செய்துள்ளோம் .நன்றி பொருளுரை உரைத்தவர்க்கே !வேதாரண்யம் திருமறைக்காடு திருக்கோயில் சரஸ்வதி திருவடிகளே சரணம்

ஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக இருந்த தாரா ஷிக்கோஹ் என்பவரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. கொடுங்கோல் ஆட்சி செய்த அவர்களிடம் அனுமதி பெறுவதென்பது முயல் கொம்பு காரியம் என அனைவரும் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அவரிடம் சென்று ஹிந்துஸ்தானி மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் சென்று காசியில் ஆலயம் அமைக்க நிலம் கேட்டபோது ஹிந்துஸ்தானி தெரியாத காரணத்தினால் அவமதிக்கப்பட்டார். கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது! எனினும் சிந்தை கலங்காது, கலைவாணியைத் துதித்து சகலகலாவல்லி பாமாலை இயற்றிச் சூட்டி ஹிந்துஸ்தானி , உருது மொழியாற்றல்களை ஒரேநாளிலேயே பெற்றுக்கொண்டார்.

தனது தவச்சிறப்பால் சிங்கத்தை தன்வசப்படுத்தி அதன்மேல் அமர்ந்து தாரா ஷிக்கோஹ்யின் அவைக்குச் சென்று தனது கோரிக்கையை ஹிந்துஸ்தானியில் கேட்டு, ஹிந்துஸ்தானியிலே அவனுடன் சரளமாக கதைத்து நாணச்செய்து அவனிடம் இருந்து இடத்துக்குரிய அனுமதியைப் பெற்று காசிமடம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார்.

இவையாவும் கலைவாணியின் அருள்மழையால் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளுக்கு கைகூடியது.எனவே, நாமும் கலைவாணியின் அருள்மழையைப் பெற்றிட இயற்றிய தமிழ்மழையை கலைவாணிமேல் பொழிகின்ற சகலகலாவல்லி பாமாலையை பாடுவோமாக!

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து' என்று மாணிக்கவாசகப் பெருமான் பொருளுணர்ந்து பாட வேண்டியதன் சிறப்பை திருவாசகத்தின் சிவபுராணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே பொருளுணர்ந்து பாடுவோமாக!

சகலகலாவல்லி மாலை பாடல்கள் -பொருளுரை

1)வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்

தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்

துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்

தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

சகலகலாவல்லியே -

எல்லாக் கலைகளையும் அளிக்கின்ற வல்லமை உடையவளே

சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க -

காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக அவற்றை உண்டு, (ஆலிலைமேல்) துயின்றான்.

ஊழிக் காலத்தில் உலகங்கள் அனைத்தையும் உண்டு காத்த வண்ணம் ஆல் இலைமேல் துயில்வார் என்பது புராணச்செய்தி.

ஒழித்தான்பித் தாக - அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான்.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே - உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே!

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ - உனது திருவடிகளைத் தாங்கும் பேறு வெண்தாமரையைத் தவிர்த்து எனது உள்ளமாகிய வெண்தாமரைக்கு வாய்க்கப்பெறாதது முறையா?

காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா?

"வெள்ளைநிற மல்லிகையோ?

வேறெந்த மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல!

வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!" - என்ற சுவாமி விபுலானந்த அடிகளின் பாடலையும்

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வர்' என்னும் திருக்குறளின் மலர்மிசை ஏகினான் என்பதன் பொருளையும் இங்கு பொருத்து உணர்க!

2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்

காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.

பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே- தாமரை மலராகிய ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பசும்பொன்கொடி போன்றவளே!

கனதனக் குன்றும்-குன்றுபோன்ற பெரிய தனங்களை உடையவளே!

ஐம்பால்- ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை

ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - ஐந்து பகுதிகளாக பகுத்து ஒப்பனை செய்யப்பட்ட காடுபோல் அடர்ந்த கூந்தலை தாங்கியுள்ளவளே! கருப்பாக இனிப்பவளே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் - அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருள் சுவையும் சொல் சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிகளையும் ( ஆசுகவி,மதுரகவி,சித்திரக்கவி,வித்தாரக்கவி)

பாடும் பணியில் பணித் தருள்வாய்- இடையறாது பாடும் பணிக்கு எளியேனை பணித்து அருள் செய்வாயாக!

ஆசுகவி - யாரும் இதுவரை பாடியிராத வகையில் யாரும் பாடியிராத பொருளின்பத்தை தரும் வண்ணம் புதிய புதியதாக பாடல்களை இயற்றும் கலை

மதுரகவி- இசைநடையில் கவி எழுதும் கலை

சித்திரக்கவி - தேர் போன்ற சித்திரத்தில் அடுக்கி வைக்கலாம் போன்ற அமைப்பில் சொற்களை அழகுற அடுக்கி பாடுகின்ற கலை

வித்தாரக் கவி - பலவிதமான அமைப்புகளில் அமைத்து பாடுவது

வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள் பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அழங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!

3)அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்

குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்

குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே -

எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!

உளம் கொண்டு - விருப்பம் கொண்டு

களிக்கும் கலாப மயிலே - மகிழ்ச்சியடையும் மயில் போன்றவளே

சிந்தக்கண்டு - பொழியக்கண்டு

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து -நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக

உன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும் கொலோ - உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா?

எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!

நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேறை அருளுவாயாக!

4)தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந்

தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று

காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே - கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

செந்நாவில் நின்று - நல்ல நாவினின்று

தூக்கும் பனுவல் - அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும்

துறைதோய்ந்த கல்வியும் - எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும்

சொற்சுவை தோய் வாக்கும் - சொற்சுவை நிரம்பிய வாக்கும்

பெருகப் பணித்துஅருள் வாய்- பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக

கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ்செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!

5)பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்

நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்

தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்

கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என்

நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து

அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே.

நெடுந் தாள் கமலத்து - (திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த) நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும்

அஞ்சத்துவசம் உயர்த்தோன்- அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனும்

செந்நாவும் - சிறந்த நாவினையும்

அகமும் -மனதினையும்

வெள்ளைக் கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய்- ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே!

பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய - செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும்

பொற்பாத பங்கேருகம் - பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே - எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?

தாள் - கால், கயிறு, முயற்சி,படி,காகிதம்,வைக்கோல்,கடையாணி,தாழ்ப்பாள்,திறவுகோல் (கழகத் தமிழ்க்கையகராதி) சிலர் நீண்ட இதழை உடைய தாமரை என்று பொருள் சொல்கின்றனர். அது பொருந்துமா என்று தெரியவில்லை! கழக அகராதிப்படி தாள் என்பது தாமரையின் தண்டையே பெரிதும் குறிக்கும்!

திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!

செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?

பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும் உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.

6)பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்

எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்

விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்

கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

எழுதா மறையும் - எழுதாமறையாகிய வேதத்திலும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் -வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று

அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் - அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே!

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் - பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்)

எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய் - விரும்பும் காலத்தில் எளிதில் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக

வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே! பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!

7)பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்

கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்

தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்

காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!

உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் - அடியார்கள் விரும்பி எண்ணிப் புனைகின்ற முத்தமிழ்க் கலை நூல்களில் காணப்படுகின்ற தீம்பால் அமுதம் (போன்ற மெஞ்ஞானத்தை) தெளிவிக்கின்ற

ஓதி/ ஓதிமம்-அன்னம்

பேடு -பெண்

பாட்டும் பொருளும் - பாட்டும் பாட்டுக்குரிய பொருளும்

பொருளால்பொருந்தும் பயனும்- பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும்

என்பால் கூட்டும்படி - எளியேனிடத்து வந்தடையும் வண்ணம்

நின்கடைக்கண் நல்காய் - உனது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

அடியார்கள் நல்மனதால் எண்ணிப் புனைகின்ற நூல்களில் காணப்படுகின்ற வீடு பேற்றின்பமாகிய பாலையும் உலகியல் இன்பமாகிய நீரையும் தனித்தனியாக பிரித்தறிகின்ற தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும் வெண்மையான பெண் அன்னம் போன்றவளே!

சகல கலாவல்லியே! பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும் எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் எளியேனுக்கு கலைமகளே.....உமது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

8)சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல

நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்

செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல

நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர்

செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

நளினஆசனம்சேர் செல்வி- செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்

ஒருகாலமும்- எக்காலத்திலும்

சிதையாமை நல்கும் -காலத்தால் அழியாத

கல்விப் பெருஞ்செல்வப் பேறே- கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே!

சொல் விற்பனமும்-சொல்வன்மையும்

அவதானமும்-அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி)

கவி சொல்லவல்ல நல்வித்தையும் - சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்

தந்து அடிமைகொள் வாய்நளின - அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் நமக்கு வாய்க்கப்பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாவண்ணம் காலத்தால் அழியாத கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே!

சொல்வன்மையும், அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்

எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

9)சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை

நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை

கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை

கற்கும் பதாம்புயத் தாளே! சகலகலா வல்லியே!

நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடி - நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானை

அரசன்னம்- அரச அன்னமும்

நாண-நாணும்படி

நடை கற்கும் பதாம்புயத் தாளே-அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே

சொற்கும் பொருட்கும் -சொல்லுக்கும் பொருளுக்கும்

உயிராம் மெய்ஞ்ஞானத்தின் - உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவத்தின்

தோற்றம் என்ன நிற்கின்ற - (தோற்றமென நிற்கின்ற) - தோன்றி நிற்கின்ற

நின்னை நினைப்பவர் யார் - நினைப்பவர்கள் யாரும் இல்லை

நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக!

10) மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்

பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்

விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.

பதம் பிரித்து அமைந்த பாடல்:

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

படைப்போன் - படைக்கும் தெய்வம் நான்முகன்

முதலாம் விண்கண்ட தெய்வம் - முதலாக சிறப்புடைய தெய்வங்கள்

பல்கோடி உண்டேனும் - பலகோடி இருந்தாலும்

விளம்பில்- தெளிந்து கூறில்

உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ - உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை

மண்கண்ட வெண்குடைக் கீழாக- மண்ணுலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ்

மேற்பட்ட மன்னரும்- சிறப்புடைய மன்னரும்

பண்கண்ட அளவில் - பாடலைக் கேட்ட மாத்திரத்தில்

பணியச் செய்வாய்- பணிந்து வணங்க அருள்செய்வாயாக!

படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!

மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக

முறையான பொருளுரையுடன் கூடிய சகலகலாவல்லி மாலை என்ற அவா எளியேனின் நெஞ்சுள் பெருக்கெடுத்து."சகலகலாவல்லி மாலை-பொருளுரை" ஆகியுள்ளது! இங்கு ஏதேனும் இலக்கணக்குற்றம் இருக்கும் என்றால் எளியேனுக்கு எடுத்தியம்புக. இருந்தால் திருத்த வேண்டியது கடமையல்லவா?

வேதாரண்யம் திருமறைக்காடு திருக்கோயில் சரஸ்வதி திருவடிகளே சரணம்





Samstag, 28. September 2019

**நவராத்திரி பண்டிகை


**நவராத்திரி பண்டிகை 
         Mu Dhana Lakshmi Chandaran
29-09-2019 நவராத்திரி ஆரம்பம்,
07-10-2019 சரஸ்வதி பூஜை,
8-10-2019 நவராத்திரி முடிவு
சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.
*நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும்.*
நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.
*விஜய தசமி 
----------------------
வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்தாளப்படும். அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு ‘பிரம்மோற்சவம்’ என்று கூட சொல்லலாம். நவராத்திரி சமயத்தில் வீட்டில் “கொலு” என்னும் அமைப்பில், மூன்று, ஒன்பது அல்லது பனிரண்டு படிகள் அமைத்து, அதில் பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்க லோகம் போல காட்சியளிக்கும். நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரிகள் கொண்டாடப்படும்
*காலங்கள் 
-------------------
சித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி.
ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும்.
தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரியாகும்.
*புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு 
-----------------------------------------------------------
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைகூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நவராத்திரியை வழிபடுவார்கள். தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
*நவகன்னிகா வழிபாடு 
----------------------------------------
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
அதன்படி,
முதல் நாளில்
2 வயதுக் குழந்தை - குமாரி
இரண்டாம் நாள்
3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
மூன்றாம் நாள் -
4 வயதுக் குழந்தை - கல்யாணி
நான்காம் நாள் -
5வயதுக் குழந்தை - ரோஹிணி
ஐந்தாம் நாள் -
6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் -
7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் -
8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் -
9 வயதுக் குழந்தை - துர்கா
ஒன்பதாம் நாள் -
10 வயதுக் குழந்தை - ஸுபத்ரா
என்று வணங்கப்படுவார்கள்.
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.
முதல் (1,2,3) மூன்று நாட்கள்
ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு.
இடை மூன்று (4,5,6) நாட்கள்
அன்னை ஸ்ரீ மஹாலட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் (7,8,9)
அன்னை சரஸ்வதி தேவி வழிபாடு.
*ஸ்ரீ துர்க்கையம்மன் :"*
-----------------------------------
இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ‘கொற்றவை’’, ‘’காளி’’ என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபடும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘ நவராத்திரி ‘ எனப்படும்.அவனை வதைத்த பத்தாம் நாள் ‘விஜயதசமி’ [ விஜயம் மேலான வெற்றி].
*ஸ்ரீ மஹாலட்சுமி 
------------------------------
இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
*அஷ்ட லட்சுமிகள் 
-------------------------------
ஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி . இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.
*ஸ்ரீ சரஸ்வதி தேவி 
----------------------------------
இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, “ஆற்றங்கரைச் சொற்கிழத்தி” என்று குறிப்பிடுகிறது.
*சரஸ்வதி பூஜை 
----------------------------
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.
*விஜய தசமி 
----------------------
ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.
*அஷ்ட சரஸ்வதி 
----------------------------
வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதிஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
ஸ்ரீ துர்க்கை :
1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.
ஸ்ரீ லட்சுமி :
4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.
சரஸ்வதி தேவி :
7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
*புராணங்களில் நவராத்திரி 
-----------------------------------------------
வால்மீகி ராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று ராமன், ராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்து கொண்டான்.
*நவராத்திரி புராணம் 
------------------------------------
முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது.
பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?
வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.
ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.
மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.
பக்தி whatsapp 9442705560
மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான். எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான்.
அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன். மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.
மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.
தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.
அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.
இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும். சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும். இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.
நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.

Bild könnte enthalten: 2 Personen, Text

ஆசியன்

ஐரோப்பாவில்