தர்மம் தலை காக்கும்!
(gowrybala Kirusna Kurukal
17/11/2018
தர்மம் செய்; அது, உன்னைக் காப்பாற்றும் என்பர். பயிரை காப்பாற்ற வேலி போடுகிறோம்; பயிர் நம்மை காப்பாற்றி, வாழ வைப்பதைப்போன்று, எவன் ஒருவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறானோ, அவனை தர்ம தேவதை கைவிடாது என்பதை விளக்கும் கதை இது:
பவனா என்ற ஊரில், கவுதமன், மணிகுண்டலன் எனும் இருவர் வாழ்ந்து வந்தனர்.
கவுதமன், ஏழை; ஆனால், வஞ்சக மனம் கொண்டவன். மணிகுண்டலன் பெரும் செல்வந்தரின் மகன்; மிகவும் நல்லவன்.
இவ்விருவரும் வெளியூர் சென்று, வியாபாரம் செய்து, பொருளீட்ட தீர்மானித்தனர். முதலீடு தன்னுடையது என்றாலும், கிடைத்த வருவாயில் பாதியை கவுதமனுக்கு கொடுத்தான், மணிகுண்டலன். ஆனால், மணிகுண்டலனின் செல்வத்தை முழுமையாக கவர திட்டமிட்ட கவுதமன், 'நண்பா... தர்மத்தை பற்றி என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டான். அதற்கு, மணிகுண்டலன், 'தர்ம வழியில் செல்வதே சிறந்தது; எந்நிலையிலும், தர்மம் தவறக் கூடாது...' என்றான்.
உடனே கவுதமன், 'தர்மமாவது, புண்ணியமாவது... எப்படியாவது சம்பாதித்து, பணக்காரனாக வாழ்வது தான் புத்திசாலித்தனம். வேண்டுமானால், உன் கருத்தை பொதுமக்கள் சிலரிடம் கேட்கலாம்; அவர்கள், நீ சொல்வதுதான் சரி என்று கூறினால், நீ எனக்கு தந்த பணத்தை தந்து விடுகிறேன்; மாறாக, நான் சொல்வது தான் சரி என்றால், உன் செல்வம் முழுவதையும் எனக்கு தந்து விட வேண்டும்...' என்று பந்தயம் கட்டினான்.
கவுதமனின் வஞ்சனையை அறியாத மணிகுண்டலன், அதற்கு ஒப்புக் கொண்டான். வழியில் செல்லும் சிலரிடம், இதுகுறித்து கேட்டனர். தர்மம் அறியாத அவர்களோ, 'கவுதமன் சொல்வதே சரி...' என்றனர். பந்தயப்படி மணிகுண்டலன் செல்வம் முழுவதையும் எடுத்துக் கொண்டான், கவுதமன்.
சில மாதங்களில், மீண்டும் வியாபாரம் செய்து, பெரும் பொருள் ஈட்டினான் மணிகுண்டலன். பொறாமை கொண்ட கவுதமன் மறுபடியும் அதே பந்தயத்தை கட்டினான்; இம்முறையும் மணிகுண்டலன் தோல்வியுற, அவன் கைகளை வெட்டினான் கவுதமன்.
நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை கூட, வெற்றியில் தான் முடியும் என்பதற்கு சான்றாக, மணிகுண்டலன் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்க, அவனுக்கு பெருஞ் செல்வம் சேர்ந்தது.
'இதற்கு மேல் இவனை விட்டு வைக்கக் கூடாது...' என்று தீர்மானித்த கவுதமன், 'தோற்பவர், கண்களை இழக்க வேண்டும்...' என்ற நிபந்தனையுடன், மறுபடியும் பந்தயம் போட்டான். இப்போதும், தோற்று, கண்களை இழந்த, மணிகுண்டலன், பல இடங்களில் சுற்றித் திரிந்து கடைசியில், கங்கைக் கரையில் இருந்த விஷ்ணு கோவிலுக்கு வந்து சேர்ந்தான்.
நள்ளிரவு பூஜைக்கு இலங்கையிலிருந்து வந்திருந்தார், விபீஷணர். அவர் மணிகுண்டலனின் நிலையைப் பார்த்து இரங்கி, அவனை பற்றி விசாரித்து அறிந்தார்.
பின், தன் காவலர்களிடம், 'ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வரும் போது, விசல்யகரணி எனும் அற்புத சக்தி வாய்ந்த மரத்தின் ஒரு பகுதி இங்கு விழுந்து விட்டது; தேடிப் பார்த்து எடுத்து வாருங்கள்...' என்று கட்டளையிட்டார்.
ஓர் இடத்தில், விசல்யகரணி பெரும் மரமாக வளர்ந்திருப்பதை கண்டனர், காவலர்கள். அதிலிருந்து ஒரு கிளையை ஒடித்து வந்தனர். அதை, மணிகுண்டலன் மீது தடவினார், விபீஷணர்.
உடனே, இழந்த கைகளையும், கண்களையும் பெற்றான், மணிகுண்டலன்.
இந்நிலையில், அப்பகுதியை ஆண்டு வந்த சிற்றரசரின் மகளுக்கு பார்வை பறி போனதால், அவளுக்கு யார் பார்வையை திரும்ப வரச் செய்கிறாரோ, அவரை தன் மகளுக்கு மணமுடித்து தருவதுடன், தன் நாட்டுக்கு அரசனாக முடிசூட்டுவதாக அறிவித்தார் அரசர்.
விபீஷணர் வழிகாட்டுதலின்படி, விசல்யகரணியின் மூலம், மன்னன் மகளுக்கு பார்வை கிடைக்குமாறு செய்து, இளவரசியை மணந்து, அந்நாட்டுக்கு அரசனானான் மணிகுண்டலன்.
சில காலம் கழித்து, காவலர்கள், 'மன்னா... இவன் கொலை, கொள்ளைகளில் தேர்ந்தவன்...' என்று கூறி, கவுதமனை இழுத்து வந்து மணிகுண்டலன் முன் நிறுத்தினர்.
தன்னை அழிக்க நினைத்தவன் என்ற போதிலும், அவனை மன்னித்து, பொருளுதவி செய்து அனுப்பி வைத்தான், மணிகுண்டலன்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen