Meine Blog-Liste

Mittwoch, 24. Mai 2023

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்

 கல்லை வணங்குகிறார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்யும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்!!!!

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்
கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.
கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.
கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.
சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம். இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.
ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும். இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.
அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.
அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.
6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார்.
தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள். இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.
பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.
தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.
அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.
பின்னர், கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.
ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.
கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.
அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.
மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.
Ist möglicherweise ein Bild von Tempel und Denkmal
Alle Reaktionen:
Du und 14 weitere Personen

Dienstag, 16. Mai 2023

ஸ்ரீ நவதுர்க்காதேவி அம்பாள் ஆலய# 3m thiruvila#மாலைத்திருவிழா # 3 ம் தி...

ஜெர்மன் முதல் இராஜகோபுர சிவன் ஆலயம்


 ஜெர்மனியில் நடைபெற்ற 

உலகக்கோவில் 

14.05.2023

படம்- எழுத்து  .பி.எஸ்.இராஜகருணா 

நேரலை .இராஜ .இலக்கியன் 

வரலாற்றுச் சிறப்பு மிகு ஜெர்மன்  முதல் இராஜகோபுர சிவன் ஆலயம் 

  ஜெர்மனி  டோர்ட்முண்ட்  அருள்மிகு  

சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர்  ஆலய  வரலாற்றுச் சிறப்பு மிகு இராஜகோபுர 

 மகா கும்பாபிஷேக பெருவிழா 14.05.2023  சிறப்பாக நடைபெற்றது.

உலகக்கோவில்  12.13.14.05.2023 திகதிகளில் இருந்து  பெருவிழா அன்று 16.00 மணிவரை நிழல்  படம். காட்சிப் பதிவுகளாகவும் நேரலையாகவும் 

292 k m  தூரம்  பயணித்து பதிவுசெய்தோம் . லண்டன் .கனடா . சுவிஸ் 

ஜேர்மன் .இலங்கை  நாடுகளில் இருந்து  வருகை தந்த சிவாச்சாரிய 

பெருமக்கள் . மற்றும்  டோர்ட்முண்ட் ( Hombruch )நகரபிதா  காவல்துறை அதிகாரி.  ஆலய  அறங்காவலர்கள் . நாதஸ்வரக்கலைஞர்கள் 

அடியவர்கள்  தொண்டர்கள்  என  அனைவரின் பெரும் அர்ப்பணிப்போடு ஈழத்தமிழர்கள் கலைநயத்துடன் தமிழ் வரலாற்றில் பெருமை சேர்த்த  முதல் இராஜகோபுர சிவன் ஆலயம் என்பது மிகவும் சிறப்பு . ஜெர்மன் 

அரசு, ஜெர்மன்  மக்கள் , எல்லா மதங்களையும்  மனிதர்களையும் மதித்து  அனுமதி தந்து  இப்படி    மனிதகுலம் மேன்மையுற  செய்த  அனைவருக்கும்   வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக 

தமிழன்புடன் 

பி.எஸ்.இராஜகருணா 

இராஜ .இலக்கியன்

14.05.2023









Sonntag, 14. Mai 2023

SRI Nagapoosani Ampal Hindu Temple- New Adresse: Elisabeth Str . 103-105

ஜெர்மனி  கிரேபெல்ட்  நாகபூசணி அம்பாள் 

கும்பாபிஷேகம்  01.06.2023

SRI  Nagapoosani  Ampal Hindu Temple  New



47799 Krefeld  Germany 


Temple - 02151-5650045

Alayakuru-0157 84665894

Alaya arankavalar 0163 2607975

Temple - 02151-5650045

Alayakuru-0157 84665894

Alaya arankavalar 0163 2607975


Montag, 8. Mai 2023

பாலஸ்தாபன கும்பாபிஷேகம்# 06.05.2023 #பாலாலயமாக எழுந்தருளும் காட்சி

Kanaka Durga Ambal Unter neuer Adresse ab 6.05.2023#Beckenkamp-7 58239 Schwerte.Germany

 ஜேர்மனி சுவேற்றா கனக துர்க்கா அம்பாள்

6ம் திகதியிலிருந்து புதிய முகவரியில் Sri Kanakathurka Aampal Tempel Schwerte e.V. Beckenkamp -7 58239 Schwerte
Kanaka Durga Ambal
Unter neuer Adresse ab 6.05.2023
Sri Kanakathurka Aampal Tempel Schwerte e.V.






Sonntag, 7. Mai 2023

ஆன்மீக சுருதி #சிவஸ்ரீ. நா .பாலச்சந்திரக்குருக்கள் B.com#our duty to gi...

பெண்கள் கருத்தரித்தல் சிற்பத்தை அன்றே 6000 ஆண்டுகள் பழமையான

 Worldkovil Kovil

P.s.Rajakaruna
தமிழரின் ஆலயத்தில் ஆச்சரியம் தரும் பெண்கள்
கருத்தரித்தல்
சிற்பத்தை அன்றே 6000 ஆண்டுகள் பழமையான
கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தல்
பகிர்ந்துள்ளார் இரு பதிவும்
உங்களுக்காக
The stone carvings on the walls of the Varamurthyeswarar temple in Tamil Nadu (India, naturally) depict the process of human conception and birth.
If the different stages of pregnancy surprise no one, the depiction of fertilization is simply unthinkable. Thousands of years before the discovery of these very cells, before ultrasound and the microscope, a detailed process of how cells meet, merge and grow in a woman's womb is carved on a 6000-year-old temple.
THX-ALPHA
தமிழ்நாட்டின் (இந்தியா, இயற்கையாகவே) வரமூர்த்தீஸ்வரர் கோயிலின் சுவர்களில் உள்ள கல் சிற்பங்கள் மனிதனின் கருத்தரித்தல் மற்றும் பிறப்பு செயல்முறையை சித்தரிக்கின்றன.
கர்ப்பத்தின் வெவ்வேறு நிலைகள் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை என்றால், கருத்தரித்தல் சித்தரிப்பு வெறுமனே சிந்திக்க முடியாதது. இந்த செல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணோக்கிக்கு முன், ஒரு பெண்ணின் வயிற்றில் செல்கள் எவ்வாறு சந்திக்கின்றன, ஒன்றிணைகின்றன மற்றும் வளர்கின்றன என்பது பற்றிய விரிவான செயல்முறை 6000 ஆண்டுகள் பழமையான கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது.
THX-ALPHA
Keine Fotobeschreibung verfügbar.
Gefällt mir
Kommentieren
Teilen

சிவஸ்ரீ .ஜெயந்திநாதக்குருக்கள் #பாலஸ்தாபன # கும்பாபிஷேக #சர்வபோதகம்

ஆசியன்

ஐரோப்பாவில்