Meine Blog-Liste

Mittwoch, 29. April 2020

Sri Mahalakshmim bhajeham #Rag PARAS Mysore Vasudevachar by Nanthin...

கேள்வி பதில் FAQ 1 சின்ன சின்ன தவறுகள்#AGS. Swaminathan Sharma& m...

Sri Mahalakshmim bhajeham #Rag PARAS Mysore Vasudevachar by Nanthin...

கேள்வி பதில் FAQ 1 சின்ன சின்ன தவறுகள்#AGS. Swaminathan Sharma& m...

Urumpirai Saiva Tamil Vidyalayam - " Sports Meet

hamm murugan Akshaya Tritiya -4#அட்சய திருதியையும் சங்காபிஷேகமும்26.04.2020

hamm murugan Akshaya Tritiya -4#அட்சய திருதியையும் சங்காபிஷேகமும்26.04.2020



Samstag, 25. April 2020

அட்சய திருதியை பற்றி தங்கத்தை தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான...

WORLDKOVIL.COM: சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்ட...

WORLDKOVIL.COM: சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்ட...: நன்றி .விகடன் 1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் சி.வெற்றிவேல் 1,080 ஆண்டு சோழர்காலக் கோயி...

சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி .விகடன்

1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்


1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
சோழர்கள்


திருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முனையும் பார்த்திபன், முருகன், வினோத் ஆகியோர் கண்டுபிடித்து அளித்த தகவலின் அடிப்படையில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் பேராசிரியர் இராஜவேல் குழுவினர் இச்செய்தியை உறுதி செய்திருக்கிறார்கள். 
திருச்சி - கரூர் புறவழிச் சாலையில் பெட்டைவாய்த் தலைக்கு அருகே காணப்படுகிறது தேவஸ்தானம் எனும் கிராமம். அங்கு 1,080 வருட காலம் பழைமையான பராந்தகச் சோழனது காலத்தில் கட்டப்பட்ட `பொன்னோடை பரமேஸ்வரம்' எனும் திருக்கோயில் தற்போது பெட்டைவாய்த் தலை கலிங்குப் பாலத்தில் கற்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழிந்த `பொன்னோடை பரமேஸ்வரம்' திருக்கோயிலின் 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கலிங்குப் பாலத்தின் உட்சுவர் முழுவதும் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுகளில்தான் `பொன்னோடை பரமேஸ்வரம்' என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்பகுதி `உத்தம சோழ சதுர்வேதி மங்கலம்' என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் நிர்வாகத்தைச் சபையோர் இத்திருக்கோயிலில் இருந்துதான் கவனித்து வந்திருக்கிறார்கள். 
அவற்றுடன் அழகான முற்காலச் சோழர் கலை அமைப்புடன் கூடிய கோயிலின் அங்கங்களாக விளங்கும் அடித்தளப் பகுதியான ஜகதி, குமுத வரிகள் மற்றும் சுவரில் புடைப்பாக விளங்கும் அரைத்தூண் வரிசை அழகுடன் அமைக்கப்படும் வியாழ மற்றும் கணபூத குள்ள உருவச் சிற்பங்கள் வரிசைகள் காணப்படுகின்றன. கோயிலின் முழுமையான கற்களை எடுத்து இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூத உருவங்கள் பல்வேறு இசைக்கருவிகளை ஏந்தி இசையமைக்கும் நிலையில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
முதலாம் பராந்தகச் சோழனது கல்வெட்டே இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைமையானது. மேலும் உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கச் சோழன் கால கொடையளித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இத்தனை கல்வெட்டுகள், இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புமாக வழிபாடு நடந்ததையே தெரிவிக்கின்றன.
இந்தக் கலிங்குக் கால்வாயில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் மூலம் ஸ்ரீ விக்கிரம சோழ வாய்க்கால், அருமொழி தேவ வாய்க்கால், குந்தவை வடிகால், வீர ராஜேந்திர சோழ வாய்க்கால் போன்றவை இருந்தது தெரியவருகிறது. இக்கோயிலுக்கு இவ்வூரில் நிலங்கள் இருந்துள்ளன. அவற்றின் எல்லைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வூரிலிருந்த நிலங்கள் காவிரியில் வெள்ளம் ஏற்படும் பொழுது நீர் நிறைந்து வேளாண்மை செய்ய இயலாமல் இருந்ததையும், காவிரிக் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததையும், அதனைத் தடுத்து நீர்நிலைகளையும் கால்வாய்களையும் ஊராரும், அரசும் பராமரித்து வந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 
மேற்கொண்ட தகவல்களை அளித்த பேராசிரியர் ராஜவேலிடம் மேற்கொண்டு கேட்கையில், ``காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுக் கரை உடைந்து வேளாண்மை செய்ய முடியாமல் இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இன்று இந்தப் பகுதி காவிரியில் நீர் வராமல் வறண்டு போய் கிடக்கிறது. சோழர்கள் காலத்தில் காவிரி நீரை வாய்க்கால், கலிங்குகள் வழியாகத் திருப்பி ஏரிகளில் நிரப்பி விவசாயம் செய்து கோயில்களையும், வாய்க்கால்களையும் பராமரித்தனர். ஆனால், இன்று `பொன்னோடை பரமேஸ்வரம்' கோயில் கற்கள் வழியாகச் சாக்கடை சென்றுகொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இனியாவது இவ்வூரும், அரசும் இணைந்து செயல்பட்டு இப்பாலத்தில் உள்ள எல்லாக் கல்வெட்டுகளையும் அழியாமல் பெயர்த்தெடுத்து புதிய பாலத்தைக் கட்டி ஊரிலேயே கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கவேண்டும். நம் வரலாறும், தொன்மையும் காக்கப்பட வேண்டும்" என்று வருத்தத்துடனும், ஆதங்கத்துடனும் தெரிவித்தார்.


Samstag, 18. April 2020

margazhi maha utsavam 2020 #இறையின் நதிக்கரை ஓரத்திலே மார்கழி மகா உற்சவம...

திருவண்ணாமலை அம்மணி அம்மாள் கோபுரம்.


அம்மணி அம்மாள் கோபுரம்.
ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.
Bild könnte enthalten: Himmel und im Freienஅந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.
அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.
ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.
இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.
குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.
அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.
பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.
அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.
இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.
பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.
அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.
மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.
171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.
திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.
பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார். திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.
அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருவமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய..
நன்றி,விஜய் ஆனந்த்

பிரான்சில் கொரோனாவின் பாசப்போராடடம் உறவுகளே உணருங்கள்




பிரான்சில் கொரோனாவின்
பாசப்போராடடம்
உறவுகளே உணருங்கள் 18.04.2020
thx Maichal S C Malisanthy fb
4otuSSp ioSsnnsortlde.dn · Öffentlich
“அப்பா இனி வரமாட்டார்” 3 பெண் குழந்தைகளின் அழுகுரலால் நிரம்பியது பிரான்ஸ் மருத்துவமனை
"மருத்துவமனையில் அதிர்ச்சியான செய்தியை மருத்துவர்கள் கூறுகின்றார்கள், மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள், அப்பா இனி திரும்பி வரமாட்டார் "
ஜந்துபேர் அடங்கிய குடும்பத்தில் குடும்பத்தலைவனுக்கு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அறைக்குள் ஒருகிழமையாக மருந்து எடுத்துக் கொண்டு தனிமையில் இருக்கிறார்.
அவருக்கு கதவைத்திறந்து சாப்பாடு மனைவியினால் மூன்று வேளையும் வழங்கப்படும். அப்பொழுது பிள்ளைகள் கதவின் இடைவெளிஊடாக ஏக்கத்துடன் அப்பாவைப் பாப்பார்கள்.
மேலும் அவருக்கு நிலமை மோசமடைய உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு எடுத்து நிலைமையை கூறினார்கள். உடனே அம்புலன்ஸ் அழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
(29 .03 2020) மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அப்பொழுது அவருக்கோ மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தெரியாது இனி திரும்பி வீட்ட வரமாட்டார் என்று.
மருத்துவமனையில் நிலமைமோசமடைந்தது அதனைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பெடுத்து அழைத்து உடனே வரச்சொன்னார்கள்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற பொழுது கணவரைக் காட்டினார்கள். நிலைமை மோசமாக இருந்தது. உங்கள் உறவினர்களை அழைத்து வருமாறு கூறினார்கள். மதியம் உறவினர்கள் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டுபோனார்கள்.
"நீங்கள் அப்பாவுக்கு ( ஒவ்வா )சொல்ல வந்திருக்கிறீர்கள். அப்பாவை வழியனுப்ப வந்திருக்கிறீர்கள். அப்பாவுக்கு நீங்கள் என்ன கொடுத்துவிட போகின்றீர்கள்" பிள்ளைகளை தனியாக அறை ஒன்றினுள் அழைத்து பிள்ளைகளோடு மூன்று மனோதத்துவ வைத்தியரகள் அவர்களுக்கு தந்தையின் நிலமையை விளக்கினாரகள்.
"உங்கள்அப்பா திரும்பி வரமாட்டார் என்றும், நீங்கள் நல்லபடியாக வாழவேண்டும் என்றும் அப்பாவுக்கு ஏதும் கொடுத்து விடப்போறீங்களா என்று கேட்டாரகள்"
மூன்று பிள்ளைகளும் தங்கள் கைப்பட ஓவியம் வரைந்து கொடுத்தார்கள். அந்த ஓவியம் அப்பா, அம்மா தங்களுடன் நிற்பது போன்றும் மற்றும் அரண்மனை போன்றும், தங்கள் வீடுபோன்றும் வரைந்து கொடுத்தார்கள். பிள்ளைகள் தங்கள் அப்பாவரமாட்டார் என்று தெரிந்து கொள்ளமுடியாத வயதினர்கள் ஆவர்.
அப்பாவைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் அழைத்துச் செல்கின்றார்கள். முழுமையாக மூடப்பட்ட சீருடை அணிந்துகொண்டு கண்ணால் மட்டும் பார்க்க முடியும் உள்ளே செல்கிறார்கள். படுக்கையில் ஒரு நபர் முகங்குப்புற படுத்திருந்தார். இதுதான் உங்கள் அப்பா பாருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகள் பார்த்துவிட்டு, இது எங்கள் அப்பா இல்லை, இது எங்கள் அப்பா இல்லை என்று சத்தமாக கத்தினார்கள் குழந்தைகள். மருத்துவமனையே அதிர்ந்தது.
மருத்துவமனையில் இருந்து அப்பா கோலமே மாறிவிட்டார். குழந்தைகளின் நினைவெல்லாம் அப்பா வீட்டில் இருந்து போகும் போதும் புன்னகை முகத்தோடு நடந்து போயிருந்த அப்பா அங்கே தங்களை கண்டவுடன் கட்டி அணைப்பார் என்ற எதிர்பார்ப்போடு குழந்தைகள் நுழைந்தார்கள்.
அங்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. அவர்கள் எதிர்பார்த்து போன அப்பா அங்கு இல்லை. அய்யோ அப்பா எங்கள் அப்பா எங்கே இவர் எங்கள் அப்பா இல்லை.
ஒருபக்கம் உறவினர்கள் கண்ணீரோடு. எதிர்முனையில் மனைவி கண்ணீரோடு கணவர் திரும்பி வரமாட்டார். மூன்று குழந்தைகளோடும் நான் என்ன செய்வேன் எப்படி என்னால் வழியனுப்பி வைக்க முடியும் ஐயோ. மூச்சுத்திணறி அழுது கொண்டே இருக்கின்றார்.
மருத்துவர்கள் வாயடைத்துப்போய் நிற்கின்றார்கள், ஐயோ நான் எப்படி உங்களை வழியனுப்பி வைப்பேன், கண்ணீரோடு மனைவி மயக்கம் போட்டு விழுந்தார். அம்மா, அம்மா என்று குழந்தைகள், இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்கள், வைத்தியர்களினதும் இதயத்தை நொருக்கியது.
இலங்கையில் நடந்த யுத்தத்தில் தப்பித்துக் கொள்வதற்காக புலம்பெயா்ந்து பிரான்ஸ் நாட்டில் குடிபுகுந்த அந்த ஜீவன், கொரோனா எனும் கோரப் பிடிக்குள் சிக்கி உயிரிழந்தது.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52) கடந்த (15.04.2020) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் .
இவா் மட்டுமல்ல கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் உயிரிழந்த இலட்சக் கணக்கானவா்களின் பின்னால் இவா்களைப் போன்றதொரு பாசப் போராட்டம் நிறைந்த கதை நிச்சயம் இருக்கும்.
0
Erreichte Personen
0
Interaktionen

Montag, 13. April 2020

Anandkumar Dakshinamoorthy#இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்#கணபதி ...

WORLDKOVIL.COM: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

WORLDKOVIL.COM: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்  வாழ்க வளமுடன்   உலகக்கோவில்  தமிழன்புடன்  பி.எஸ்.இராஜகருணா  (தமிழ் ஈழமுருகதாசன் ) 13.04....

WORLDKOVIL.COM: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

WORLDKOVIL.COM: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்  வாழ்க வளமுடன்   உலகக்கோவில்  தமிழன்புடன்  பி.எஸ்.இராஜகருணா  (தமிழ் ஈழமுருகதாசன் ) 13.04....

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்



சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்  வாழ்க வளமுடன்  
உலகக்கோவில் 
தமிழன்புடன் 
பி.எஸ்.இராஜகருணா 
(தமிழ் ஈழமுருகதாசன் )
13.04.2020





worldkovil 1500 வீடியோ Youtube ல்


ஆசியன்

ஐரோப்பாவில்