Meine Blog-Liste

Samstag, 31. Oktober 2020

 

வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்
==================================
வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் இறைவனான சிவபெருமான் இளைஞராக வந்து வேதத்தின் பொருளினை எடுத்து உரைத்ததைப் பற்றி விளக்கிக் கூறுகிறது.
வேதமும் சிவலிங்கமும் ஒன்றே என்றும், வைதிக சைவம் சிறந்தது என்றும், விரதமுறைகள் மேற்கொள்ள மதுரைபதி சிறந்தது என்றும் இப்படலம் எடுத்து உரைக்கிறது.
வேதங்கள் தோன்றிய விதமும், அவற்றின் பொருளும் இப்படலத்தில் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக் காண்டத்தின் பதினாறாவது படலம் ஆகும்.
உலகம் அழிந்து தோன்றுதல்
ஒரு சமயம் ஊழிக்காலம் உண்டானBild könnte enthalten: 2 Personenது. அதனால் பதிநான்கு உலகங்களும் அடங்கின. மறைகள் ஒடுங்கின.
பின்னர் சிவந்த கதிர்களை உடைய சூரியனின் முன்னால் மலரும் தாமரை மலர் போல சிவபெருமானின் முன்னர் மீண்டும் எல்லாமும் தோன்றின.
அப்போது இறைவனின் திருவாக்கில் இருந்து ஓம் என்னும் பிரணவம் தோன்றியது. அப்பிரணவத்திலிருந்து வேதங்கள் தோன்றின.
நைமிசாரணியத்தில் இருந்த கண்ணுவர், கருக்கர் உள்ளிட்ட முனிவர்கள் வேதங்களை பயின்றனர். ஆனாலும் அவ்வேதங்களின் உட்பொருளை உணராது மனம் கலங்கி முகம் வாடி இருந்தனர். அப்போது அங்கே ஆணவ மலத்தை வென்ற அரபத்தர் என்ற முனிவர் வந்தார்.
அரபத்தரின் வழிகாட்டல்
முகம் வாடியிருந்த முனிவர்களை நோக்கிய அரபத்தர் “நீங்கள் பாசம் நீக்கப்பட்டு விருப்பு வெறுப்பற்ற தன்மையை உடையவராய் இருந்தும், மனம் வேறுபட்டு முகம் வாடியிருக்க காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அம்முனிவர்கள் “ஐயனே, மும்மலங்களையும் இயல்பாகவே நீக்கக்கூடிய இறைவன் அருளிய வேதத்தின் பொருளை அறிய இயலாமல் அஞ்ஞான மனத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம். ஆதலால் இதற்கு தங்களின் ஆலோசனை யாது?” என்று கேட்டனர்.
அதற்கு அரபத்தர் “வேதத்தினை அருளிய சிவபெருமானால் மட்டுமே அதற்குரிய விளக்கத்தினைத் தெரிவிக்க இயலும். ஆதலால் நீங்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வேதத்தின் பொருளினை அறிந்து கொள்ளுங்கள். தவம் இயற்ற சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரைப்பதி சிறந்தது” என்று முனிவர்களுக்கு வழிகாட்டினார்.
முனிவர்களின் தவம்
அரபத்தரின் வழிகாட்டுதலின்படி கண்ணுவர் உள்ளிட்டோர் வேதத்தின் பொருளினை அறியும்பொருட்டு மதுரை சென்று அடைந்தனர்.
பொற்றாமரைக் குளத்தில் நீராடி முறைப்படி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டனர். பின்னர் கல்லாமரத்தின் கீழ் குருவாகிய தென்முகக்கடவுளை வணங்கி தங்களுக்கு குருவாகி வேதத்தின் பொருளினை எடுத்துரைக்குமாறு வேண்டினர்.
இவ்வாறு அவர்கள் ஒரு வருடக்காலம் முறைப்படி வழிபட்டனர். ஒருநாள் இறைவன் பதினாறு வயது நிரம்பிய சர்வலட்சணங்கள் பொருந்திய வேதிய இளைஞனாக முனிவர்களின் முன்னர் தோன்றினார்.
வேதத்தின் பொருள் விளக்கம்
முனிவர்களிடம் “குற்றமற்ற தவத்தினை உடையவர்களே, உங்கள் விருப்பம் யாது?” என்று இறைவனார் கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஒப்பற்ற சிறப்பினை உடைய மறைகளின் பொருளினை அருள வேண்டும்” என்று விண்ணபித்துக் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு இறைவனார் லிங்கத்தின் முன்சென்று “வேதங்களின் பொருளினை அறிதலே இம்மையின் போக பேற்றிற்கும், பாசபந்தத்தை அறுக்கும் வீடுபேற்றிற்கும் கருவி ஆகும்.
இச்சிவலிங்கமும், வேதமும் ஒன்றே. ஆதியாகி, அந்தமாகி, என்றும் குன்றாத ஒளிவடிவாய் இருப்பவர் இச்சொக்கலிங்கம்.
இறைவனின் திருவாக்கிலிருந்து உருவாகிய பிரணவத்திலிருந்து, விரும்பிய பொருளை அடைவதற்குரிய சமட்டி, வியட்டி என்னும் இரண்டு வேற்றுமைகளை உடைய காயத்ரி தோன்றியது.
இந்த காயத்ரியானது சொக்கலிங்கரின் திருவருளால் நான்கு வேதங்களைத் தந்தன. பின்னர் இறையருளால் நான்கு வேதங்களும் அளவற்றனவாய் விரிந்தன.
சொக்கநாதரின் நடுமுகத்தில் இருந்து சிவாகம நூல் தோன்றியது. தற்புருட முகத்திலிருந்து இருபத்தொரு சாகைகளோடு இருக்கு வேதம் தோன்றியது.
அகோர முகத்திலிருந்து நூறு சாகைகளோடு யசுர் வேதம் தோன்றியது. வாமதேவ முகத்தில் ஆயிரம் சாகைகளோடு சாமவேதம் தோன்றியது.சத்தியோசாத முகத்தில் நாட்டப்பட்ட ஒன்பது சாகைகளோடு அதர்வண வேதம் தோன்றியது.
வேதங்கள் கரும காண்டம், ஞான காண்டம் என இருவகைப்படும். கருமகாண்டம் சொக்கலிங்கமூர்த்தியின் பூசனைக்குரிய வினைகளை அறிவிக்கும். ஞானகாண்டம் இறைவனின் சச்சிதானந்த வடிவத்தை அறிவிக்கும்.
நீங்கள் கருமகாண்டத்தில் கூறியபடி இச்சிவலிங்கத்தை வழிபட்டு ஞானகாண்டத்தின் வழிகாட்டுதலின்படி இறைவனின் உண்மைவடித்தை உணர்ந்து தெளிக.
வைதிகத்துள் சுத்த சன்மார்க்கமாகிய வைதிகம் சைவம். அதனை உறுதியுடன் பற்றிடுக. யாம் கூறிய இப்பொருள்கள் அனைத்தும் உங்களின் மயக்கத்தினை தீர்ப்பதாக அமைக.” என்று கூறி முனிவர்களின் முதுகில் தமது திருக்கரத்தால் தடவிக் கொடுத்து சிவலிங்கத்துள் சென்று மறைந்தார்.
இப்படலம் கூறும் கருத்து
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதற்கு ஏற்ப நம் வாழ்வில் திக்கு தெரியாமல் தவிக்கும்போது இறைவனை வேண்டினால் அவர் முனிவர்களின் கவலைப் போக்கியதுபோல் நம்மைக் காப்பாற்றுவார்

நவராத்திரி வாழைவெட்டு மானம்பூ உற்சவம் 2020

சர்வதேச சபரிமலை குருசாமிகள் சமாஜம் ஆரம்ப நிகழ்வு..#ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசி...

Mittwoch, 21. Oktober 2020

 

மகாபாரதம்
......................
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.
தோற்றம்
இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.
இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.
"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கBild könnte enthalten: 1 Personத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மகாபாரதம்" என அழைக்கப்பட்டது.

இந்து மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும்#Explaniere t...

Sonntag, 16. August 2020

mülheim murugan16 .08. 2020# #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசாமி தேர்த்தி...

16. August 2020#பால் அபிஷேகம் #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசாமி தேர்த்த...

16. August 2020# காலை பூஜா ஆரம்பம் #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசாமி தே...

16. August 2020#பச்சை சார்த்துதல் #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசாமி தேர...

16. August 2020#பச்சை சார்த்துதல் #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசாமி தேர...

16. August 2020#பச்சை சார்த்துதல் #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசாமி தேர...

16. August 2020#பச்சை சார்த்துதல் #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசாமி தேர...

16. August 2020#காலை அபிஷேகம் #apisegam #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசா...

16. August 2020#காலை அபிஷேகம் #apisegam #ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசா...

16. August 2020 ஜெர்மனி முல்கைம் முத்து குமாரசாமி தேர்த்திருவிழா வர்...

Sonntag, 2. August 2020

2. August 2020#Sivasree Vasanthan Gurukkal speech #சிவஸ்ரீ.பா.வசந்தன் கு...

2. August 2020#Sri Sithivinayagar Kovil #தேர்த்திருவிழா l#சித்திவிநாயகர்...

2. August 2020#Sri Sithivinayagar Kovil #தேர்த்திருவிழா l#சித்திவிநாயகர்...

2. August 2020#Sri Sithivinayagar Kovil #தேர்த்திருவிழா l#சித்திவிநாயகர்...

2. August 2020#Sri Sithivinayagar Kovil #தேர்த்திருவிழா l#சித்திவிநாயகர்...

2. August 2020#Sri Sithivinayagar Kovil #தேர்த்திருவிழா l#சித்திவிநாயகர்...

Montag, 6. Juli 2020

கொரோனா இடரிலும் பொன்தேரில் எழுந்தருளி காட்சி சிவன் பார்வதி

உலகக்கோவில்
06.07.2020
எழுத்து .படம்
பி.எஸ் .இராஜகருணா
கொரோனா இடரிலும் பொன்தேரில் எழுந்தருளி காட்சி சிவன் பார்வதி









நேற்று நேரலையாகவும் 05.07.2020 டோர்ட்முண்ட் ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திர மௌலீஸ்வரர் ஆலய 10வது ஆண்டு அலங்காரத்திருவிழாவில் 9ம் நாள் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக வசந்தமண் டபப்பூசை .பால்காவடி .பால்செம்பு .கற்பூரச்சட்டி அர்ச்சனை என ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திர மௌலீஸ்வரர் பொன்தேரில் எழுந்தருளி பக்தர்கள் மனங்களில் நிறைந்தார். .உலகக்கோவில் 1650பதிவுகளுக்கு மேலே பதிவு செய்து இருப்பது எல்லம் சிவனின் பெரும் கருணையே ஆகும் காரணம் எங்கள் முதல் சிவன்பதிவே எல்லாம் சிவமயம்
நன்றி ஆலய அறங்காவலர்கள்.ஆலய குரு ஆலய பிரதம சிவாச்சாரியார்
சிவஸ்ரீ தெய்வேந்திரகுருக்கள்
அடியவர்கள் அனைவருக்கும் நன்றி
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
இராஜ.இலக்கியன்
06.07.2020

P.S.Balamurugan Nathaswaram .speechபி .எஸ் .பாலமுருகன் நாதாஸ்வரக்கலைஞன்

Sivan Temple 2020# ther vasanthamandapa pooja 05.07 2020#LIve#வஸந்தமண்டப...

Montag, 22. Juni 2020

jothidam 22- 06- 2020-28-06-2020#இராசிபலன் #Programme#Horoskop#சிவஸ்ரீ....

அராலி ஆரம்பிட்டி முத்துமாரி அம்மன் இராஜ கோபுர கும்பாபிஷேகம் 01.09.2019 ...

ஹம் காமாட் க்ஷிஅம்பாள் தெய்வீகப் பாடல் #குரல்வளம்-பாடல்வரிகள் மீனா உத...

#பன்நாட்டுகவியரங்கம் 21. 06 .2020#Kaviyarangam 2020#பன் நாட்டு கவிஞர்கள்

| Worldkovil Music �� ♫-25#Arali Avarambitti Muthukari Amman#பாடல்

#பன்நாட்டுகவியரங்கம் 21. 06 .2020#Kaviyarangam 2020#பன் நாட்டு கவிஞர்கள்

Samstag, 20. Juni 2020

நயினை அன்னையின் கொடியேற்றம்_20_06_2020#song

Nainativu Nagapoosani Amman Kovil kodi 2020 (நயினாதீவு நாகபூஷணி அம்மன் க...

*தீர்க்க சுமங்கலி பவா

*தீர்க்க சுமங்கலி பவா ...!

thx    Sai Kodeeswara


என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

*#தீர்க்க_சுமங்கலி_பவா என்றல் என்ன? - அறிந்துகொள்வோம*்.

🌼 *தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

🌼 *திருமணத்தில் ஒன்று,*
🌼 *60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,*
🌼 *70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,*
🌼 *80 வயது சதாபிஷேகத்தில்* ஒன்று,
🌼 *96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று !*

*#இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:*

🌼 *ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.*

🌼 *பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.*

🌼 *இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.*

🌼 *சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.*

🌼 *உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.*

🌼 *நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.*

🌼 *பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.*

🌼 *இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு*

⚜ *சூரியனுக்கு ஓர் ஆண்டும்,*
⚜ *செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,*
⚜ *சந்திரனுக்கு ஒரு மாதமும்,*
⚜ *புதனுக்கு ஒரு வருடமும்,*
⚜ *வியாழனுக்கு 12 வருடங்களும்,*
⚜ *வெள்ளிக்கு ஒரு வருடமும்,*
⚜ *சனி பகவானுக்கு 30 வருடங்களும்,*
⚜ *ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,*
⚜ *கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.*

🌼 *இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.*

🌼 *மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.*

🌼 *ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.*

🌼 *பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.*

*🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.*

*🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.*

🌼 *அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?*

*🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.*

*🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...*

*⚜அக்னி, ⚜சூரியன்,*
*⚜சந்திரன்,. ⚜வாயு,*
*⚜வருணன்,*
*⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,*
*⚜அமிர்த கடேஸ்வரர்,*
*⚜ *நவநாயகர்கள்..*
*சேர்த்து* *குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.*

*🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,*

*🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,*

*🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,*

*🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..*
*அதிபதிகள் ஆவார்கள்.*

*🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.*

*🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.*

*🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். *

*🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.*

*🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். *

*🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.*

*🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.*

*🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.*

*🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.*🌺🌻💐🥀🌼

ஆசியன்

ஐரோப்பாவில்